Thursday, November 26, 2009
ராம்மோஹன் - கொஞ்சம் பெரிய குட்டிக்கதை
சுதாகரை மூன்று நாட்களாக காணவில்லை.
நாங்களா ? ப்ரெண்ட்ஸ்...நான், ராம்மோஹன், சுதாகர் மூவரும். சுதாகரின் மொழியில் ஈயும் பீயூமாக. ஒற்றை வார்த்தையில் நட்புக்கு அர்த்தம் சொல்ல என்னால் முடியாது. நாங்கள் சந்தித்தது பணிக்காக சென்னை வந்து வாழ குறைந்த விலை கூரை தேடியபோது கிடைத்த ஒரு இட நெருக்கடி மேன்ஷனில் தான் என்றாலும், நாங்கள் ரொம்பவே ப்ரெண்ட்ஸ். இப்போது நாங்கள் மூவரும் சிட்டிக்கு வெளியே தனியாக வீடு பிடித்து தங்கிவிட்டாலும், எங்கள் ராசி மேன்ஷன் அறையை காலி செய்யாமல் வைத்திருக்கிறோம்..
ராம்மோஹன் மருத்துவப்படிப்பு முடித்து ஹவுஸ் சர்ஜன். அவனது ஹாபி, காட்டு விலங்குகள், காட்டுவாசிகள், அவர்களின் உணவுப்பழக்கங்கள். அடிக்கடி பழனி ஹில்ஸ், கொடைக்கானல், முதுமலைக்காடுகள், நீலகிரி, சங்கராபுரம் மலைப்பகுதிகளில் ட்ரெக் அடிப்பான். பயல் கொஞ்சநாட்களாக மூட் அவுட். விசாரிக்கவேண்டும்.
மற்றபடி இன்னொரு ப்ரெண்ட் சுதாகர்.இப்போதைக்கு வெட்டி. ஒரு அனாதை இல்லத்தில் வளந்தவன். அப்புறம் வளர்ந்த இடம் பிடிக்காமல் வெளியேறியவன் நாங்கள் தங்குமிடம் கொடுத்து அரவணைக்க எங்கள் நட்பானான்..விளம்பர படங்கள் எடுக்கிறேன் என்று கேமராவை தூக்கிக்கொண்டு அலைந்துகொண்டிருக்கிறான். ராம்மோஹனுக்கு கம்பெனி அவன்தான்..
கம்மிங் பேக் டு த பாய்ண்ட். சுதாகரை மூன்று நாட்களாக காணவில்லை. எங்கே போனாலும் கேமரா இல்லாமல் போகமாட்டான். அவனுடைய ஷெல்பில் கேமரா அப்படியே இருந்தது. சொல்லாமல் போக அவனுக்கு போக்கிடமில்லை.
எங்கே போயிருப்பான் ? அதுவும் எந்த உடையும் எடுத்துக்கொள்ளாமல்..எனக்கு வேலையே ஓடவில்லை...எல்லோரிடம் இருப்பதுபோல அவனிடமும் வீட்டின் ஒரு சாவி இருக்கிறது. இன்றைக்கு அலுவலகம் முடிந்துவரும்போது வீட்டை திறந்து அவன் அமர்ந்திருக்கமாட்டானா என்று ஏங்கியதென்னவோ உண்மை.
போன் ரிங்கியது...
ராம்மோஹன்..
என்னடா..சுதாகர் ஏதும் போன் பண்ணானா ?
என்னது வீடியோ அனுப்பியிருக்கியா ? எப்போ ? அதுல க்ளூ இருக்கா ? என்னடா கொழப்பற ? சரி நீ சீக்கிரமா வீட்டுக்கு வந்துசேரு..
ராம்மோஹனிடம் இருந்து மின்னஞ்சல் எதுவும் வந்திருக்கிறதா என்று பார்த்தேன்.
வந்திருக்கிறது...
ஒரு வீடியோ பைல்...
ராம்மோஹன் காமிராவை பார்த்து மையமாக பார்த்து சிரித்தபடி பேசிக்கொண்டிருக்கிறான்.
அது ஒரு கிச்சன்..
அவன் ஹவுஸ் சர்ஜன் செய்யும் ஹாஸ்பிட்டலாக இருக்குமோ ??
படம் கட்டாகி இடையில் இருந்து ஓடுவது போல இருக்கிறது..
இப்போது நாம் ஏற்கனவே மிளகாய் தூளில் பிரட்டி வைத்திருக்கும் துண்டுகளை, எண்ணையில் போட்டு பொறித்து எடுக்கவேண்டும்..நியாபகம் இருக்கட்டும், தீயை அதிகம் வைக்கவேண்டாம். அப்போதுதான் மென்மையாக வரும்.
சிக்கனோ மட்டனோ, ஏதோ ஒரு செய்முறையை புன்முறுவலுடன் சொல்லிக்கொண்டிருக்கிறான்.
அந்த ப்ளேட்டை மேசை மேல் வைக்கிறான் ராம்மோஹன். அப்போது தான் கவனித்தேன். அங்கே பக்கத்தில் ஒரு கை, வெட்டப்பட்ட கை, அதன் விரல்கள் அய்யோ. அதில் சுதாகர் அணிந்திருந்த ஒற்றைக்கல் மோதிரம்....
என் காது மடல்கள் சில்லிட்டது போன்றிருந்தது. உண்மையில் சில்லிடுகிறது.
ஏதோ கூர்மையான ஒன்று காதை வருடுகிறது. பின்னால் நின்றுகொண்டு கூரிய கத்தியொன்றை பிடித்துக்கொண்டு சிரித்தபடி..
ராம்மோஹன்.
..
..
Subscribe to:
Post Comments (Atom)
டயபட்டீஸ் ப்ரோட்டக்கால்
டயபட்டீஸ் ப்ரோட்டக்கால் டயபட்டீஸ் / நீரிழிவு / சர்க்கரை நோயை விரட்ட நியான்டர் செல்வனால் ஆரம்பிக்கப்பட்ட இந்த குழுமத்திற்கு ( https://www....
-
ஆனந்த விகடனில் தி.மு.க / அ.தி.மு.க ரெண்டு கட்சிக்காரங்களும் அயோக்கியர்கள் என்பது போல பேசிய விஜியகோந்துவை பகரைனில் இருந்து சுரேஷ் என்ற வாசகர்...
-
நித்யானந்தா விவகாரம் ஆரம்பித்தவுடன் எல்லோரும் எங்கே எங்கே என்று இணையத்தில் தேடியது அந்த வீடியோவைத்தான்...!! ட்விட்டரில், பேஸ்புக்கில்...
-
வலையுலகில் காமெடியில கலக்கிய / கலக்கிக்கிட்டு இருக்கிற மக்கள்ல எனக்கு தெரிஞ்ச பட்டாசுகள் லக்கிலுக், இளவஞ்சி , கைப்புள்ள , வெட்டிப்பயல் , கொங...
10 comments:
ஒண்ணுமே புரியலயே தோழரே...
வார்த்தைப் பிரயோகங்களில் நாகரீகம் வேண்டுகிறேன்... //ஈயும்,..........//
குமட்டிக் கொண்டு வருகிறது....
எப்பா என்னா கொல வெறி?
ஆமாம் ஏன் இந்த கொலை?
எனக்குதான் புரியவில்லையா?
நரமாமிசம்???
மோட்டிவ் இல்லாததால் மொக்கையாய் போய்விட்டது தலைவரே
கேபிள் சஙக்ர்
நன்றி மோகனன்.
நன்றி வரதராஜலு.
ஜ்யோவ். அதே அதே. சரியா வரலைன்னு நினைக்கறேன்
என்ன சொல்ல வர்ற தலைவா?????
:-)
சில்லிடவைத்தது...அருமை.
அகோரி!!!
Post a Comment