Friday, November 20, 2009

தாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே!

மொழியாகி எங்கள் மூச்சாகி நாளை முடிசூடும் தமிழ்மீது உறுதி!
வழிகாட்டி எம்மை உருவாக்கும் தலைவன் வரலாறு மீதிலும் உறுதி!
விழிமூடி இங்கே துயில்கின்ற வேங்கை வீரர்கள் மீதிலும் உறுதி!
இழிவாக வாழோம்! தமிழீழப்போரில் இனிமேலும் ஓயோம் உறுதி!

தாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே!
தாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே!
இங்குகூவிடும் எங்களின் குரல்மொழி கேட்கிதா? குழியினுள் வாழ்பவரே!

உங்களைப் பெற்றவர் உங்களின் தோழிகள் உறவினர் வந்துள்ளோம்!

அன்று செங்களம் மீதிலே உங்களோடாடிய தோழர்கள் வந்துள்ளோம்!

எங்கே! எங்கே! ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள்!

ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள்!
ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள்!
தாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே!
வல்லமை தாருமென்றுங்களின் வாசலில் வந்துமே வணங்குகின்றோம்!

உங்கள் கல்லறை மீதிலும் கைகளை வைத்தொரு சத்தியம் செய்கின்றோம்!

சாவரும்போதிலும் தணலிடைவேகிலும் சந்ததி தூங்காது!

எங்கள் தாயகம் வரும்வரை தாவிடும்புலிகளின் தாகங்கள் தீராது!

எங்கே எங்கே ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள்!
எங்கே எங்கே ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள்!
ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள்!
ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள்!
தாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே!
உயிர்விடும் வேளையில் உங்களின்வாயது உரைத்தது தமிழீழம்!

அதை நிரைநிரையாகவே இன்றினில் விரைவினில் நிச்சயம் எடுத்தாள்வோம்!

தலைவனின் பாதையில் தமிழினம் உயிர்பெறும் தனியர சென்றிடுவோம்!

எந்தநிலைவரும் போதிலும் நிமிருவோம் உங்களின் நினைவுடன் வென்றிடுவோம்!
எந்தநிலைவரும் போதிலும் நிமிருவோம் உங்களின் நினைவுடன் வென்றிடுவோம்!
எங்கே எங்கே ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள்!
எங்கே எங்கே ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள்!
ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறுங்குங்கள்!
ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறுங்குங்கள்!
தாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே!
இங்குகூவிடும் எங்களின் குரல்மொழி கேட்கிதா? குழியினுள் வாழ்பவரே!
தாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே!

10 comments:

சில்க் சதிஷ் said...

அருமை

ரவி said...

நன்றி சதீஷ் குமார்

Anonymous said...

இது புதுவை ரத்தினதுரை அவர்களால் எழுதப்பட்டு வர்ணராமேஸ்வரனால் பாடப்பட்ட மாவீரர் நாள் பாடல்.
மாவீரர் நாள் தவிர வேறு நாட்களில் பாடப்படுவதில்லை.நன்றி

பிரபாகர் said...

வரிகளை தந்ததற்கு நன்றி ரவி.

பிரபாகர்.

Anonymous said...

intha paadalin pothu naangal manathul aluvom.....vaayathu avarkalin veeram uraikkum.

vanathy said...

இந்தப் பாடலை ஒவ்வொரு முறையும் கேட்கும்போதும் நெஞ்சில் துயரமும் கண்களில் கண்ணீரும் உருவாகும் ,இந்த ஆண்டு இதைக்கேட்கும் போது அடங்காத சோகத்தில் இதயத்தில் இரத்தக்கண்ணீர் வடிகிறது .
ஈழபோராட்டத்தில் உயிர் நீத்த முப்பதாயிரம் மாவீரருக்கும் ஒரு லட்சத்துக்கும் மேலான பொதுமக்களுக்கும் எமது வணக்கத்தையும் அஞ்சலியையும் செலுத்துவோம்.
--வானதி

ராஜ நடராஜன் said...

வீரமும் தேசிய கனவும்....நெஞ்சு பொறுக்குதில்லையே...

ரவி said...

மாவீரர் நாள் தவிர வேறு நாட்களில் பாடப்படுவதில்லை---------------

தகவலுக்கு நன்றி.

Anonymous said...

சாவினை தழுவிய சந்தனபேழைகளே என்று போட்டுவிட்டு பிரபாகரன் படத்தை போட்டிருப்பதால் பிரபாகரன் மரணமடைந்து விட்டதாக நீங்கள் நம்புகிறீர்கள் என்று எடுத்துக்கலாமா.

Anonymous said...

http://enrenrumthamil.blogspot.com/2008/11/blog-post_27.html

இந்த சுட்டியில் மாவீரர் தினத்தில் நேரடியாக எடுக்கப்பட்ட வீடியோ பாடல் இருக்கிறது.
பார்த்து , கேட்டு விட்டு கருத்தை சொல்லுங்கள்.

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால்

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால் டயபட்டீஸ் / நீரிழிவு / சர்க்கரை நோயை விரட்ட நியான்டர் செல்வனால் ஆரம்பிக்கப்பட்ட இந்த குழுமத்திற்கு ( https://www....