தேடுங்க !

Thursday, November 19, 2009

சிகரெட். இன்னொரு ஒரு பக்க கதை.என்னுடைய காதலியின் முறைப்பின் சூடு தாங்காமல் இரண்டடி பின்னேறினேன்.

டேய் ? ஏன்டா இப்படி பண்ண ? எங்கிட்ட செய்துகொடுத்த சத்தியம் என்னாச்சு ?

ஹோல்ட் ஆன். கூல். சொல்றேன்மா. சொல்றேன்...

நான் செய்தது என்ன என்று உங்களுக்கும் சொல்லிவிடுகிறேன். ஒரு ரெண்டு நிமிடம் முன்னால்.

அவள் அற்புதமான அழகி. எங்களைப்போலவே பார்க் பெஞ்சில். தனியாக. பாக்கெட்டில் இருந்து ஒரு சிகரெட் எடுத்து பற்றவைத்தாள்.

நான் தடாலென எழுந்தேன். பத்தே வினாடிகளில் அவளை சமீபித்தேன். அவளிடம்..

மேம். ஒரு சிகரெட் கிடைக்குமா ? என்றேன்.

அவள் பெரிதாக யோசித்ததாக தெரியவில்லை. பாக்கெட்டை நீட்டினாள். ஒன்றை உருவிக்கொண்டு, ஒரு தாங்யூ உதிர்த்துவிட்டு, அவளது ஸ்மைலியை பெற்றுக்கொண்டு என் இடத்துக்கு திரும்பினேன்..

இப்போ மறுபடி நிகழ்காலத்தில். முறைப்பு கொஞ்சமும் குறையாமல் மீண்டும் என்னவள் கடித்தாள்..

டேய் ? ஏன்டா இப்படி பண்ண ? எங்கிட்ட செய்துகொடுத்த சத்தியம் என்னாச்சு ?

நான் கொஞ்ச நாளா இதைத்தான்மா பண்றேன். யாராவது ஸ்மோக் பண்ணா அவங்கக்கிட்ட அப்ரோச் பண்ணி, ஒரு சிகரெட் கேட்பேன். அதை கொடுத்தால் வாங்கிக்கிட்டு வந்திடுவேன். நான் அதை ஸ்மோக் பண்ணமாட்டேன். உன்னோட பெயரை ஒருமுறை மனசுல நெனைச்சுக்கிட்டே தூக்கி எறிஞ்சுடுவேன்.

அதான் ஏன் ??? இப்போது ஆச்சர்யக்குறியான கண்களுடன் என்னவள்.

ஸ்மோக் பண்றதால வர்ர கெடுதல் எல்லாம் நீ எனக்கு புரியவெச்ச. ஆனா உன்னை மாதிரி தங்க கட்டி எல்லோருக்கும் கிடைக்குமா ? ஆனா அவங்க ஸ்மோக் பண்றதை பார்த்தால் அவங்க இதயமும் நுரையீரலும் காயப்படுறதை நினைச்சு வருத்தப்படுவேன். அப்புறம் இந்த ஐடியா தோனுச்சு. அவங்கக்கிட்ட ஒரு சிகரெட் வாங்கி, அதை தூக்கி எறிஞ்சுடுவேன். அட்லீஸ்ட் அவங்களோட சாவை ஒரு நாளைக்காவது தடுக்கலாம் இல்லையா ?

அதற்குமேல் நாங்கள் எதுவும் பேசவில்லை. நச் நச். இச்.இச்..

30 comments:

சென்ஷி said...

சூப்பர் :)

சென்ஷி said...

ஓட்டு போட்டாச்சு :)

வால்பையன் said...

எனக்கு ஆம்லெட் வாங்கும் பழக்கம் மட்டும் தான்!

கீழயெல்லாம் போடமாட்டேன்!

Pot"tea" kadai said...

இதெல்லாம் ஒரு பொழப்பு!

பிரபாகர் said...

இந்த அப்ரோச் நல்லாருக்கு. சிகரெட் பிடிக்கிற பொண்ணும்.... ஹி...ஹி....

பிரபாகர்.

செந்தழல் ரவி said...

நன்றி சென்ஷி.

செந்தழல் ரவி said...

ஓக்கே வால்ஸ்.

செந்தழல் ரவி said...

பொட்டீ. வாட் த ஹெல்

செந்தழல் ரவி said...

பிரபா. மின்னஞ்சல் வேண்டுமா

வா.மணிகண்டன்/Vaa.Manikandan said...

நல்லா இருக்கு...ஆனா ஓவர் செண்டிமெண்ட்.

பின்னோக்கி said...

போட்டா நல்லாயிருக்குங்க.
கதையா ?.. ஒரு நிமிஷம்.
..
..
படிச்சுட்டேன். கதையும் நல்லாயிருக்குங்க.

பீர் | Peer said...

voted :)

செந்தழல் ரவி said...

நன்றி வா.ம. கொறைச்சுக்கறேன். (கதையில மட்டும்)

ஈரோடு கதிர் said...

சரி அந்தப் பொண்ணுகிட்ட வாங்கின சிகரெட்ட என்ன பண்ணுனீங்க

பிரபாகர் said...

//செந்தழல் ரவி said...
பிரபா. மின்னஞ்சல் வேண்டுமா
//
குடும்பத்துல குழப்பம் வரதுக்கா? (தனியே கேக்காம இப்படி பப்ளிக்கா கேக்கறீங்களே?)

பிரபாகர்.

ஸ்டாலின் குரு said...

:))

சித்தூர்.எஸ்.முருகேசன் said...

ரொம்ப பொயட்டிக்கா இருக்கு. சிகரட் கதை சரி. நாட் நாட் வாகனங்கள் , அரசு பேருந்துகள் கக்கும் புகை, அதனால் வரும் சுவாச கோளாறுகள், எட்செட்ராவுக்கும் ஒரு தீர்வை சொல்லிவைங்க

வானம்பாடிகள் said...

ரொம்ப நல்லா இருக்கே இந்த வழி.=))

sriram said...

மூணு கதயும் படிச்சிட்டேன் ரவி
சிகரெட்டும் ழவும் பிடிச்சிருந்தது, சாட் பிடிக்கவில்லை.
தொடர்ந்து எழுதுங்கள்..
என்றும அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

T.V.Radhakrishnan said...

நச்

நசரேயன் said...

நச் +1

ஹாலிவுட் பாலா said...

ஸ்ரீராமுக்கு ரிப்பீட்!!

ழ’வில்.. அந்த கூன் மேட்டர் நல்லா இருந்ததுங்க ரவி.

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

நச்.. நச்.. நச்.. நச்..!

செந்தழல் ரவி said...

ஸ்டாலின் குரு. நன்றி

செந்தழல் ரவி said...

ரொம்ப பொயட்டிக்கா இருக்கு. சிகரட் கதை சரி. நாட் நாட் வாகனங்கள் , அரசு பேருந்துகள் கக்கும் புகை, அதனால் வரும் சுவாச கோளாறுகள், எட்செட்ராவுக்கும் ஒரு தீர்வை சொல்லிவைங்க..............................................

சார். உங்க ஆப்பூரேசன் இண்டியா திட்டத்தில் இதுக்கு வழியில்லாமலா போச்சு ?

செந்தழல் ரவி said...

நன்றி ஈரோடு கதிர். ஒன்னும் செய்யலைன்னு தான் சொல்லிட்டேனே ?

தேவன் மாயம் said...

சின்ன விசயம்!! நல்லா எழுதியிருக்கீங்க!!

செந்தழல் ரவி said...

thanks devan

செந்தழல் ரவி said...

நன்றி ஹாலிபாலா

சித்தூர்.எஸ்.முருகேசன் said...

செந்தழல் ரவி அவர்களே,
எனது ..சாரி நமது ஆப்பரேஷன் இந்தியாவில் நீர் வழிபோக்குவரத்துக்கே முக்கியத்துவம், அதையடுத்து ரயில்வே, பிறகு பப்ளிக் ட்ரான்ஸ்போர்ட். ஹெல்த்,காவல்,வாகனங்களுக்குதான் ரிலாக்சேஷன். மேலும் வாரம் ஒரு நாள் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தினம்னிட்டு தடை போட்ருவம்ல‌