Monday, November 23, 2009
வைரஸ் / குட்டிக்கதை
மாம்ஸ். என்னோட பர்சனல் இமெயில்ல வைரஸ் தாக்கிருச்சு தெரியுமா ...காலையில் அலுவலகம் வந்தவுடன் மென்மையாக அரற்றினான் க்ருஷ்.
ஏன் என்ன ஆச்சு ? எப்படி ஆச்சு ? என்ன செய்யுது ? கேள்விமேல் கேள்விகளை அடுக்கினான் சுதாகர்..
என்னோட கடவுச்சொல்லை (பாஸ்வேர்ட்)தெரிஞ்சு வச்சுக்கிட்டு எனக்கு வரும் இமெயில் எல்லாத்தையும் படிச்சுடுது டா...
அப்புறம் ?
மொக்கையான இமெயிலை மட்டும் விட்டு வெச்சுட்டு மத்ததை டெலீட் பண்ணிடுது.
அட ?
என்னோட தங்கச்சி, அண்ணன் யார்க்கிட்ட இருந்தாவது இமெயில் வந்தா அதையும் டெலீட் பண்ணிடுது..
இங்கபார்ரா ??
யாராவது பணம் கடன் கேட்டு மெயிலோ சேட்டோ செய்தா அதை அப்படியே த்ராஸுக்கு அனுப்பிடுது...
அட...ஏன் இந்த கொலைவெறி ?
இதுக்கே அசந்துட்டா எப்படி...இதைக்கேளு...பழைய க்ளாஸ்மெட் ஒருத்தி அனுப்பின மின்னஞ்சலுக்கு ஏதோ திட்டி கூட பதில் அனுப்பியிருக்கு..
நிஜம்மாவா ? என்ன வைரஸ்டா அது ? யாருடா உருவாக்கியிருப்பா அதை ?
வேற யார் ? என்னோட மாமனார்தான்...
..
..
Subscribe to:
Post Comments (Atom)
டயபட்டீஸ் ப்ரோட்டக்கால்
டயபட்டீஸ் ப்ரோட்டக்கால் டயபட்டீஸ் / நீரிழிவு / சர்க்கரை நோயை விரட்ட நியான்டர் செல்வனால் ஆரம்பிக்கப்பட்ட இந்த குழுமத்திற்கு ( https://www....
-
ஆனந்த விகடனில் தி.மு.க / அ.தி.மு.க ரெண்டு கட்சிக்காரங்களும் அயோக்கியர்கள் என்பது போல பேசிய விஜியகோந்துவை பகரைனில் இருந்து சுரேஷ் என்ற வாசகர்...
-
நித்யானந்தா விவகாரம் ஆரம்பித்தவுடன் எல்லோரும் எங்கே எங்கே என்று இணையத்தில் தேடியது அந்த வீடியோவைத்தான்...!! ட்விட்டரில், பேஸ்புக்கில்...
-
வலையுலகில் காமெடியில கலக்கிய / கலக்கிக்கிட்டு இருக்கிற மக்கள்ல எனக்கு தெரிஞ்ச பட்டாசுகள் லக்கிலுக், இளவஞ்சி , கைப்புள்ள , வெட்டிப்பயல் , கொங...
24 comments:
நான் மனைவின்னு சொல்ல போறிங்கன்னு நினைச்சேன். மாமனார் அவ்ளோ பவர்ஃபுல்லா?=))
வானம்பாடிகள் சார்.
புரியலையா ???
பாதி படிக்கும் போதே புரிஞ்சிடுச்சு. ஏன் இந்தக் கொலவெறி?
:-)
மேடம். மாமனார் ஒரு கம்பூட்டர் எஞ்சினியரா இருக்கக்கூடாதா என்று ஒரு புதிய கோணம் தோன்றுகிறது இப்ப..
ஹாஹாஹா..... :))
//மாமனார் ஒரு கம்பூட்டர் எஞ்சினியரா இருக்கக்கூடாதா என்று ஒரு புதிய கோணம் தோன்றுகிறது இப்ப..//
ஐயோ இது புரியலையே.. :-((
வைரஸே பரவாயில்லன்னு சொல்றீங்களா?
ரவி
சுவாரசியமா இருந்தது.. நான் இந்த ட்விஸ்டை எதிர் பார்க்கவில்லை.
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்
ரவி, கதை நல்லா இருக்கு. நீங்கள் ஏன் உங்களின் சிறுகதைகளை தொகுத்து ஒரு புத்தகமாக கொண்டுவரக்கூடாது ?
மணிகண்டன். ஏன் இந்த கொலைவெறி ?
ஹி ஹி தீபா..
நன்றி பாஸ்டனாரே...
நன்றிடா சென்ஷி
மாமனார் வைரஸ்... மாமியார் மனைவியெல்லாம் என்ன சொல்வீங்களோ! கலக்கலா இருக்கு ரவி. அய்யா சொன்ன மாதிரி மனைவின்னு நினைச்சிட்டுத்தான் படிச்சேன்...
பிரபாகர்...
அது வைரஸ் போட்டோ வா இல்ல மாமனார் போட்டோ வா :) நல்லா இருக்கு உங்கள் குட்டி கதைகள்..
ரவிக்கே அவரது கதையை விளக்குவது கொடுமையானாதாக இருக்கும் என்பதால்
****
என்ன வைரஸ்டா அது ? யாருடா உருவாக்கியிருப்பா அதை ?
வேற யார் ? என்னோட மாமனார்தான்.
*****
இந்த வரிகளை மறுபடியும் படித்து பார்க்கவும். மனைவியை உருவாக்கியவர் மாமனார் என்று கூறுகிறார். ஒருவேளை அது கிரிஷின் மாமானராக இருக்கமுடியாது என்று தோன்றினால் மட்டும் இதுபோன்று பின்னூட்டங்கள் போட்டு டார்ச்சர் கொடுக்கவும்.@vaannampaadigal @prabakar @prasannakumar
சுவாரசியமா இருந்தது
நல்லாருக்கு கதை!
:)
@ மணிகண்டன்...
வைரஸ் ப்ரோக்ராம் வேணும்னா கம்ப்யுட்டர்லதான் தலைவரே ரெடி செய்வாங்க. ;)
//மனைவியை உருவாக்கியவர் மாமனார் என்று கூறுகிறார். ஒருவேளை அது கிரிஷின் மாமானராக இருக்கமுடியாது என்று தோன்றினால் மட்டும் இதுபோன்று பின்னூட்டங்கள் போட்டு டார்ச்சர் கொடுக்கவும்.@vaannampaadigal @prabakar @prasannakumar//
சத்தியமா இந்த வரியைப் படிச்சுட்டு சிரிச்சுட்டேன். சரி மறுக்கா வம்பு வளர்ர்ப்போமேன்னுதான் மேல உள்ள கமெண்டு போட்டிருக்கேன்... மணிகண்டன் மாத்திரம் வந்து கும்மலாம் :-))
வேற யாரும் போராளிகள் வந்து கும்மிடாதீங்க.
மணிகண்டன்.
நல்ல மிமிக்ரி...நன்றி !!!!!
thanks senshi :)-
இன்னிக்கு மாலை தான் கும்மி விளையாட்டு விளையாடலாம். அதுவரைக்கும் பிஸி, பிஸி, பிஸி. அதுக்குள்ளார ரவி இன்னும் பத்து ஒருபக்க கதைகள் பப்ளிஷ் பண்ணிடுவார் :)-
சூப்பர். சரியான டிவிஸ்ட்.. :)
Post a Comment