பெங்களூரு புத்தகக் கண்காட்சி - 2009


பெங்களூரு புத்தகக் கண்காட்சி - 2009 நவம்பர் மாசம் நடைபெறுகிறதுங்க. கிழக்கு பதிப்பகத்தின் நியூஸ்லெட்டர் மூலம் தெரியவந்தது. இது வரை போகாதவங்க கண்டிப்பா போங்க. 2007 ல வடை பஜ்ஜி சூப்பர். 2008 ல சாண்டில்யன் புக்ஸ் ஒரு பண்டல் அள்ளினேன். அங்கே திருமாலை, ஜிராவை மீட் பண்ணியிருக்கேன். பத்ரி கூட வந்தார் என்று நினைக்கிறேன். விகடன் பதிப்பகம் வரும். உயிர்மை வரும். சுஜாதாவின் புக்ஸ் கிடைக்கும். கேள்பிரண்ட் இல்லாமல் காலையில் போனீங்க என்றால் மாலை வரை சுற்றலாம்.

இடம்:
PALACE GROUNDS
MEKHRI CIRCLE
RAMANAMAHARISHI ROAD
BANGALORE

நவம்பர் 6 முதல் 15 வரை.
அரங்கு எண்: 165, 166

பெங்களூரு புத்தகக் கண்காட்சியில் கலந்து கொள்கிறது கிழக்கு பதிப்பகம். கிழக்கு பதிப்பகத்தின் நூல்களை நீங்கள் அந்த அரங்குகளில் வாங்கலாம். தன்னம்பிக்கை, அரசியல், வரலாறு, அறிவியல், உடல்நலம், வாழ்க்கை வரலாறு, நாவல், சிறுகதை, நிதி, வணிகம், ஆன்மிகம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட நூல்களைப் பார்க்கவும் படிக்கவும் வாங்கவும் ஒரு வசதியை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது கிழக்கு பதிப்பகம்.

பல்வேறு சிறந்த புத்தகங்களுடன் பெங்களூரு புத்தகக் கண்காட்சியில் கலந்து கொள்ளும் கிழக்கு பதிப்பகத்தின் புத்தகங்களை 10% கழிவுடன் நீங்கள் அங்கே வாங்கலாம்.

மேலதிக விவரங்களுக்குத் தொடர்புகொள்ள:

095000-45641 (மணிகண்டன்) மற்றும் 095000-45608 (காளி பாண்டியன்)

Comments

எந்த வருடமும் தவற விட்டதில்லை புத்தகக் கண்காட்சியை. முன் அறிவிப்புக்கு நன்றி:)!
சாண்டில்யன் புக்ஸ் வாங்குனீங்களே படிச்சுட்டீங்களா ? ஏன் கேட்குறேன்னா 2 வருஷத்துக்கு முன்னாடி சென்னை புத்தகக் கண்காட்சியில வாங்குன புக்ஸ் இன்னமும் நான் படிச்சு முடிக்கலை. சாண்டில்யன் புக்ஸ் வேற பெருசா தலையணை சைஸ்ல இருக்கும். அது தான் கேட்டேன் :)
நன்றி ராமலட்சுமி
கடல்புறாவை அவ்ளோ ஜாலியா படிச்சேன்.
ரவி,
நலம்,நலமா? குசல விசாரிப்புகள் கேட்கும் பழக்கம் இன்னும் போகவில்லை!

நல்ல தகவல், இப்போதெல்லாம் நூல்கள் விலை வாங்கும் திறனை விட அதிகமாகி விட்டதால் வாங்குவதில்லை, சும்மா வேடிக்கை பார்க்க போவேன், போய்பார்க்க தூண்டி விட்டது உங்கள் பதிவு!
தகவலுக்கு நன்றி செந்தழல்!
வவ்வால் சார். நலமே. இருக்கவே இருக்கிறது நூலகம் ? என்னுடைய முதுநிலை பாடத்திட்டத்தின் புத்தகங்கள் விலை ஆனை விலை குதிரை விலை இருந்ததால், காலையில் கன்னிமரா நூலகம் சென்று நாலு மணி நேரம் படிப்பு. பின்பு மாலையில் தேர்வு. என்று எழுதி தேறினேன். இது எப்பிடி இருக்கு ???

தமிழ்மணம் போட்டியில் ஜெயிச்சு புத்தகம் வாங்கலாமே :)
நன்றி யுவகிருஷ்ணா சார்
ரவி,

நிங்களும் கன்னிமாரா செல்பவரா, நானும் முன்னர் எல்லாம் அங்கே அடிக்கடி செல்வேன், மதியம் அதன் எதிரே பாந்தியன் சந்து முனையில் இருக்கும் ஒரு உணவகத்தில் சாப்பிட்டு விட்டு மீண்டும் தொடர்வேன், ரசம், மோர் எல்லாம் பெரிய பிளாஸ்டிக் ஜார்களில் அந்த உணவகத்தில் வைத்திருப்பார்கள் எவ்வளவு வேண்டுமானாலும் ஊற்றிக்கொள்ளலாம்!(நான் குடிப்பேன் என்பதை சொல்லவும் வேண்டுமா)

தமிழ்மணப்போட்டியிலா அதெல்லாம் அறிவு சீவிகளுக்கானது ஆச்சே!

கடல்புறா எல்லாம் படித்திருக்கிறீர்கள் பெரிய ஆள் தான் , படித்ததும் நாமும் கடலில் மிதக்கும் ஃபீலிங் வருமே! சாண்டியல்யன் வர்ணனைகளே சும்மா தூக்குமே!

Popular Posts