Tuesday, November 24, 2009

லிப்ட் மாமா - ஒரு பக்க கதை



நான் ஸ்வேதா. ஒரு சாப்ட்வேர் கம்பெனியில் பணி. குடும்பம் சென்னையில். பெங்களூரில் தனி வீடு எடுத்து தங்கியிருக்கிறேன்..

அலுவலகம் முடிந்து என்னுடயை அப்பார்ட்மெண்ட் லிப்டில் நுழைய எத்தனித்தேன். எதிர்த்த அப்பார்ட்மெண்ட் ஜொள்ளு மாமா ஏற்கனவே லிப்டில் நிற்கிறார்.

எப்போதும் ஒரு ஜொள்ஸ் லுக் விட்டுத்தொலையும் கிழம்.

என்னம்மா,  ஆபீஸ் முடிஞ்சதா ?

(வேற என்ன நிலாவுக்கா போயிட்டு வறேன், கிழவா.....)

முடிஞ்சது..

சுருக்கமாக பதில் சொன்னேன்...

எந்த ப்ளோர் போறேம்மா..நீ ?

நான் என்னோட பிப்த் ப்ளோர் அப்பார்ட்மெண்ட்டுக்கு.

லிப்ட் பட்டனில் கை வைப்பதுபோல மேலே உரசுகிறது கிழம்.

ஹி ஹி. வீட்டுக்கு வரவாம்மா ? ஏதாவது ஹெல்ப் வேனும்னா சொல்லு..நான் தான் நெக்ஸ்ட் மந்த்லேர்ந்து ப்ளாட் செக்கரட்டரி தெரியுமோல்லியோ ?

எதுவும் தேவையில்லை..

கையை பிடித்துவிட்டான். ..

சார். என்ன பண்றீங்க ?

நீ ரொம்ப அழகாயிருக்கே...!!

இடியட். கையை எடுய்யா ?. வயசானவராச்சேன்னு பார்த்தா ?

உனக்கு ஓக்கேன்னா சொல்லு..வயசாச்சேன்னு பார்க்காதே. நான் ரெண்டை கட்டி மேய்ச்சவனாக்கும்...

நங்கென முட்டிக்கு கீழே ஒரு உதைவிட்டேன். நிலை குலைந்து விழுந்தான் கிழம். ஐந்தாவது ப்ளோர் கதவு திறந்தது. விரைவாக வெளியே வந்து, எமெர்ஜென்ஸி லிப்ட் பவர் ஆப் என்ற லிவரை மேலே தூக்கினேன். லிப்ட் பாதியில் நின்றது.  என்னுடைய மடிக்கணினியை திறந்து லிப்ட் 10000 முறை மேலும் கீழுமாக போய் வருவது போல் எழுதியிருந்த கல்லூரி ப்ராஜக்ட் மென்பொருளை தேட ஆரம்பித்தேன்..அதில் கதவை திறக்கமுடியாதபடி ஒரு வரியை சேர்த்து இயக்கிப்பார்க்கவேண்டும்...

11 comments:

VISA said...

இந்த ஐடியா நல்லாஇருக்கே.....சூப்பர்...
இப்போ நம்ம டெர்ரர்.....

இப்படி தான் என்ன ஏமாத்தி வேற ஒருத்தன கல்யாணம் பண்ணின காதலியும் அவ
புது புருஷனும் லிப்டுக்குள்ள போனாங்க. அந்த பொண்ணு கிட்ட கடன் வாங்கி அந்த
சாப்ட்வேர பொருத்தினேன். 10000 எடிட் பண்ணி 100000 மாத்தினேன்.
அப்புறம் ஒரு எக்ஸ்டிரா கோட்.....லிப்ட் எப்பவும் போற வேகத்த விட
பத்து மடங்கு கம்மியா போகும்.
ஒரு வருஷம் முழுக்க லிப்டுலையே குடும்பம் நடத்தி ஒரு குழந்தையோட வெளிய வந்Tஹா.

sriram said...

மரண மொக்கை ரவி,
Better luck next time
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

ரவி said...

நன்றி விசா.

ரவி said...

சிரீராம் உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு..

ஷாகுல் said...

ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப நல்லாருக்க்கு.

vasu balaji said...

ம்ம்

இராகவன் நைஜிரியா said...

கதை - ரொம்ப சாதாரணமா இருக்குங்க.

சப்புன்னு இருக்கு. வர்ணனைகள் கூட் எனோ தானோன்னு இருக்கு.

ஊர்சுற்றி said...

10000 ஆஆஆஆஆ... உண்மையிலேயே மரண மொக்கைதான்.

Nat Sriram said...

ரவி..இதென்ன டோண்டுவோட ஜெச்டஸ் மொக்கைக்கு எதிர்வினையா ;-)
(இதுவும் எங்கே பிராமணன் மாதிரி போவும் போலருக்கு எகொஇச..)

Nat Sriram said...

ஒருவேளை இப்படி முடிக்கலாமா ரவி? Instead of the 10000 code thing..

"எங்கர்ந்து தான் ஜொள்ளு விடரதுக்குன்னே வராங்களோ?" என்று புலம்பிக்கொண்டே வீட்டினுள் நுழைந்த ஸ்வேதா "ஏம்மா, யாராச்சும் கஸ்டமர் போன் பண்ணாங்களா? 1 ஹவருக்கு 60000 துக்கு குறைக்காதே. அப்பறம் கச்சடா பார்ட்டி எல்லாம் தேடி வரும் " என்றாள் ஸ்வேதா என்ற 'மீன்கண்' மகேஸ்வரி.

ரவி said...

நட்ராஜ், கலக்கல்...!!!!

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால்

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால் டயபட்டீஸ் / நீரிழிவு / சர்க்கரை நோயை விரட்ட நியான்டர் செல்வனால் ஆரம்பிக்கப்பட்ட இந்த குழுமத்திற்கு ( https://www....