தேடுங்க !

Thursday, November 05, 2009

இபே (ebay.in) மூலம் போலி பொருட்கள், உஷார் உஷார்

இந்தியாவில் ஒரு மாதத்துக்கு 8 லட்சம் சீன அலைபேசிகள் நுழைகின்றன. ஐஎம்இஐ எண்கள் இல்லாத, எந்த சர்வதேச காப்பிரைட் சட்டங்களுக்கும் மென்பொருள் சட்டங்களுக்கும் பேடட்ண் விதிகளுக்கும் கட்டுப்படாத போன்கள் இவை. நோக்கியா போலவே இருக்கும். ஐபோன் போலவே இருக்கும். அதனால் அந்த நிறுவனத்தில் வியாபாரம் பாதிகப்படும்.

சீன மொபைல் போன்கள் இந்திய அரசால் தடை செய்யப்பட்டுவிட்டாலும், அந்த அரசு விதியை வழக்கம்போல ஓட்டை போட்டு இந்திய பொருளாதாரத்தை ரத்தம் போல உறிஞ்ச இந்திய எதிரிகள் தயாராகவே இருக்கிறார்கள்.(ஆப்பிள் நிறுவனத்தின் லாபம் அமெரிக்காவுக்குத்தானே போகிறது என்பார்கள் சிலர், அது வேறு கதை)

இந்த இபே (ebay.in) தளத்தின் மூலம் வழக்கம்போல போலி பொருட்கள் உள்ளே நுழைகின்றன. இந்திய அரசு விழித்துக்கொள்ளவேண்டும். இந்த பதிவை பார்க்கும் பத்திரிக்கையாளர்கள் தங்கள் பத்திரிக்கை மூலம் இதனை அம்பலப்படுத்தவேண்டும்.

இந்த சுட்டியில் பார்த்தீர்கள் என்றால் முப்பதாயிரம் மதிப்புள்ள ஐபோனை மூவாயிரத்து சொச்சத்துக்கு தருகிறார்கள். அதுவும் தில்லாக சீனா ஐபோன் என்று எழுதி விற்கிறார்கள்.கொரியன் போன் என்று கடைகளில் விற்கப்படும் இந்த போன்கள் உண்மையில் தாய்வானிலும் சீனாவிலும் தயாராகின்றன.

IMEI என்னும் International Mobile Equipment Identity இல்லாத போன்கள், நெட்வொர்க் மூலம் (ஏர்டெல், வொடாபோன் மற்றும் இந்தியாவில் இயங்கும் அனைத்து நெட்வோர்க்கும் இதில் வரும்) மட்டுறுத்தப்படும் என்று ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ESN எண் என்பதும் ஐஎம்இஐ போன்றதொரு குறியீடே. இந்த இரு வகையான எண்கள் இல்லாத அலைபேசிகளை தடை செய்யும்படி சொல்லுகின்றது தொலைபேசி ஒழுங்குமுறை ஆணையம் ட்ராய்.

அலைபேசி நெட்வொர்க்கில் உள்ள இஐஆர் ஐஎம்இஐ எண்களைப்பற்றிய தகவல்களை வைத்துள்ளது. ஐஎம்இஐ எண் இல்லாத அலைபேசியில் இருந்து அழைப்பு வந்தால் அந்த அழைப்பை தடை செய்யும் வகையில் அதனை செயல்படுத்த முடியும்.

அதனையும் இப்போது சீன மொபைல்கள் கடந்துவிடுகின்றன. போலியான IMEI எண்ணை அந்த மொபைலில் போட்டே அனுப்புகிறார்கள். இங்கேயும் 50 ரூபாய் செலவில் போடுகிறார்கள் என்று கேள்வி.

அலைபேசிக்கான எந்த ஸ்பெசிப்பிக்கேஷனையும் பாலோ செய்யாத இந்த மொபைல்களால் உடல் நலனுக்கும் கேடு. உதாரணமாக மொபைலில் உள்ள ரேடியோ இவ்வளவு அளவுக்கு மேல் SAR (Specific absorption rate) வெளியிடக்கூடாது என்கிறோம். அல்லது 900 ப்ரீக்வன்ஸிக்கு (450 μW/cm2 at 900 MHz, and 950 μW/cm2 at 1900 MHz.) இவ்வளவுதான் வெளியிடவேண்டும் என்கிறோம். கன்னாபின்னாவென வெளியேறும் ரேடியோ கதிர்வீச்சினால் கேன்ஸர் கூட வரலாம் என்று சொல்கிறார்கள். ஐரோப்பிய ஒழுங்குமுறை ஆணையம் கடுமையான விதிகளை அலைபேசி நிறுவனங்களுக்கு விதித்துள்ளது. ஆனால் இந்த வகை திருட்டு அலைபேசிகள் இவ்வாறு எந்த விதிகளையும் பின்பற்றுவதில்லை.

இந்த மொபைல்களை வைத்துத்தான் பாக்கிஸ்தான் தீவிரவாதிகள் பேசுவார்கள் என்று சொல்லும் அளவுக்கு நான் முட்டாள் அல்ல. பாக்கிஸ்தான் தீவிரவாதிக்கு ஆயிரம் வழிகள் இருக்கிறது. ஆனால் கள்ளத்தனமாக உள்ளே வரும் பொருட்கள் இந்திய சந்தைப்பொருளாதாரத்தை அழிக்கும் விஷம். அதனை மட்டும் நாம் கவனிக்கவேண்டும்.

13 comments:

blogpaandi said...

நம்ம மந்திரி ராஜா கிட்ட சொல்லி இதுக்கு ஒரு வழி பண்ணுங்க!

செந்தழல் ரவி said...

ஓகே பிளாகு பாண்டி. நன்றி

பிரபாகர் said...

பயனுள்ள இடுகை தோழா... ரெண்டிலயும் ஒட்டிட்டேன்...

பிரபாகர்.

செந்தழல் ரவி said...

நன்றி பிரபாகர்.

வால்பையன் said...

இதையும் e-bay வ்ல விக்கிறாங்களா!?

செந்தழல் ரவி said...

ஏன் இல்லாமல் வால்ஸ்.

பின்னோக்கி said...

அட இதுதான் 20,000 ரூபாய் செல்போன் 2000 ரூபாய்க்கு வாங்குற விஷயமா. உஷார் பதிவு. நன்றி.

செந்தழல் ரவி said...

நன்றி பின்னோக்கி.

பிஸினஸுக்காக நெட்வோர்க்குகள் இந்த உடல்நலனுக்கு கேடு விளைவிக்கும் போன்களை அனுமத்திருந்தன..

நாகா said...

இந்தியா போன்ற நாடுகளில் எதுவாக இருப்பினும் விலை மட்டும்தான் முதலில் மக்களைக் கவருகிறது. பொருட்களின் தரம் பற்றி யோசிப்பவர் வெகு குறைவே. படித்த்வர்கள் பலரும் இதே போல்தான்.. இணைய வணிகத்தை தடை செய்வது எவ்வளவு தூரம் சாத்தியம் என்று தெரியவில்லை ஆனால் உங்கள் பதிவு பலரையும் சென்றடைய வேண்டும்.. எனவே ஓட்டுகள் இரண்டிலும்..

செந்தழல் ரவி said...

thanks naga

பீர் | Peer said...

இன்று தான் SAR பற்றி படித்துகொண்டிருந்தேன். உஷார் படுத்தியதற்கு நன்றி.

Krishnakumar said...

உபயோகமான தகவல் நண்பரே ..உஷார் படுத்தியதற்கு நன்றி

செந்தழல் ரவி said...

நன்றி க்ருஷ்ணகுமார்