Wednesday, April 04, 2007

இட ஒதுக்கீடு என்ன விலை ?

முதலில் ஒன்றை புரிந்துகொள்ளுங்கள்...இது "FIT for Survival" வேர்ல்டு...நீ முன்னேறும் காரணிகளை கொண்டிருந்தால் முன்னேறு...இல்லையென்றால் செத்து சுண்ணாம்பா போ...இது தான் பரிணாம கொள்கை..."தகுதியுள்ளவை தப்பி பிழைக்கும்"...

திருக்கோவிலூருக்கு அருகில் உள்ள சித்திலிங்க மடம் என்ற கிராமத்தில் (வெட்டிப்பயலுக்கு தெரியும் கேட்டுப்பாருங்க), உள்ள ஒரு விவசாயியின் மகன், ஐ.ஏ.எஸ் தேர்வில் இந்தியாவிலேயே முதலாவதாக வந்தார்...இரண்டு வருடம் முன்பு...2005ல்..அவர் எந்த இட ஒதுக்கீட்டீல் வந்தார்...எந்த இட ஒதுக்கீடு அவரது கமிட்மெண்டையும், அறிவையும், வெற்றி பெற வேண்டும் என்ற வெறியையும் வளர்த்தது ?

இட ஒதுக்கீடு என்பது பிச்சை போல் தோன்றுகிறது...அருவருப்பாயிருக்கிறது...சாதி ரீதியாக மக்களை இன்னும் முன்னேறவிடாமல் தடுக்கும் கீரிப்பட்டிகளையும், பாப்பாப்பட்டிகளையும் ( இது மட்டுமா - இது சும்மா உதாரணத்துக்கு) எந்த சாதியினர் முன்னேற விடாமல் தடுக்கின்றனர் ? பார்ப்பணீயம் செத்துக்கொண்டிருக்கும் ஒரு காண்ஸப்ட்...துரத்தி துரத்தி அடிக்கப்படுகிறது எங்கும்...ஆங்காங்கே சில இடங்களில் உயிர்மூச்சு விட்டுக்கொண்டிருக்கிறது (உதாரணம் : பாலபாரதி ராமேஸ்வரத்தில் எடுத்த படம் ) இன்னும் சில ஆண்டுகளில் சுத்தமாக செத்து ஒழியும்...அதனால் அதைப்பற்றி பேசாமல் இருப்பது நலம் என்னைப்பொறுத்தவரை...

வீ த பீப்புள் சொல்லி இருப்பது போல குறிப்பிட்ட சமுதாயத்தினரின் ஆதிக்க சக்திகள் (இந்த நாளிள் பார்ப்பணர்களின் % இந்த இடத்தில் குறைவுதான்) தங்களை Empower செய்துகொள்ள இந்த இட ஒதுக்கீட்டை பயன்படுத்தத்தான் போகின்றன பாருங்க...

#########################################
THIS EMAIL MESSAGE IS FOR THE SOLE USE OF THE INTENDED RECIPIENT(S) AND MAY CONTAIN CONFIDENTIAL AND PRIVILEGED INFORMATION. ANY UNAUTHORIZED REVIEW, USE, DISCLOSURE OR DISTRIBUTION IS PROHIBITED.BEFORE OPENING ANY ATTACHMENTS PLEASE CHECK FOR VIRUSES AND DEFECTS.IF YOU ARE NOT THE INTENDED RECIPIENT, PLEASE NOTIFY US IMMEDIATELY BY REPLY E-MAIL AND DELETE THE ORIGINAL MESSAGE.
#########################################

3 comments:

Anonymous said...

ரவி,

சமீபத்தில் எங்காவது தலையில் பலமாக அடிபட்ட ஞாபகம் இருக்கிறதா? எங்காவது விழுந்துவிட்டீர்களா?

டாம் அண்ட் ஜெரியில் திடீரென்று டாம் (பூனை) அடிவாங்கியதும் ஜெர்ரி மாதிரி (எலியாக) மாறிவிடும். ஜெரி மிகவும் கவலைப்பட்டு அது டாமாக (அது பூனையாக) மறுபடியும் மாற்றப்பாடுபடும்.

அதுபோல, எல்லோரும் நல்லதே பேச ஆரம்பித்தால் இணையத்தில் காமெடி இருக்காது. இட ஒதுக்கீட்டுக்கு ஏலம் போடும் சில "குழல்கள்", "பா.பா" க்கள் இருந்தால்தான் நமக்கு "லக்கி". இல்லாவிட்டால் வெளியே மிதந்து ஓசை போடுவார்கள் இந்த செல்லா காசுகள்.

இப்படியே இருந்துவிட்டு போகவும். நமக்கும் பொழுது போகும்..

thiru said...

//முதலில் ஒன்றை புரிந்துகொள்ளுங்கள்...இது "FIT for Survival" வேர்ல்டு...நீ முன்னேறும் காரணிகளை கொண்டிருந்தால் முன்னேறு...இல்லையென்றால் செத்து சுண்ணாம்பா போ...இது தான் பரிணாம கொள்கை..."தகுதியுள்ளவை தப்பி பிழைக்கும்"...//

வல்லவன் வாழ்வான் என்பது தான் நீதி என்றால் சமூகநீதி பற்றி பேச எதுவும் இல்லை ரவி. மனுதர்மத்தின் சாதிப்பாகுபாடு உருவாக்கிய வல்லவர்கள் வாழ்ந்தார்கள், வாழ்கிறார்கள். வாய்ப்பு அவர்களுக்கு சாதகமாக வளைக்கப்பட்டதால் வந்தது தான் அந்த வாழ்க்கை. திறமை தானாக எங்கிருந்தும் வருவதில்லை. வளர்க்கபடும் சூழலை சார்ந்ததே திறமை.

//இட ஒதுக்கீடு என்பது பிச்சை போல் தோன்றுகிறது...அருவருப்பாயிருக்கிறது...சாதி ரீதியாக மக்களை இன்னும் முன்னேறவிடாமல் தடுக்கும் கீரிப்பட்டிகளையும், பாப்பாப்பட்டிகளையும் ( இது மட்டுமா - இது சும்மா உதாரணத்துக்கு) எந்த சாதியினர் முன்னேற விடாமல் தடுக்கின்றனர் ? பார்ப்பணீயம் செத்துக்கொண்டிருக்கும் ஒரு காண்ஸப்ட்...துரத்தி துரத்தி அடிக்கப்படுகிறது எங்கும்...//
பார்ப்பனீயம் பற்றிய புரிதலில் குழப்பமா? பார்ப்பனீயம் உண்மையில் செத்துக்கொண்டிருக்கிறதா? ஒரு சாதியை மட்டும் சார்ந்ததல்ல பார்ப்பனீயம்.

//ஆங்காங்கே சில இடங்களில் உயிர்மூச்சு விட்டுக்கொண்டிருக்கிறது (உதாரணம் : பாலபாரதி ராமேஸ்வரத்தில் எடுத்த படம் ) இன்னும் சில ஆண்டுகளில் சுத்தமாக செத்து ஒழியும்...அதனால் அதைப்பற்றி பேசாமல் இருப்பது நலம் என்னைப்பொறுத்தவரை...//

ரவி, இது உங்களது நம்பிக்கையாக இருக்கலாம். ஆனால் வரலாற்று பார்வையும், இன்றைய சமூகமும் இதற்கு எதிராகவே உள்ளது. தானாக பார்ப்பனீயம் மட்டுமல்ல எந்த ஆதிக்கமும் அழிந்துவிடாது. அதற்கு திட்டங்களும், சட்டங்களும், சமூக கல்வியும் அவசியம்.

dondu(#11168674346665545885) said...

//தானாக பார்ப்பனீயம் மட்டுமல்ல எந்த ஆதிக்கமும் அழிந்துவிடாது. அதற்கு திட்டங்களும், சட்டங்களும், சமூக கல்வியும் அவசியம்.//
சத்தியமான வார்த்தை. ஆகவே ஓபீசிக்களில் கிரீமி லேயர் இட ஒதுக்கீட்டிலிருந்து நீக்க வேண்டும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால்

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால் டயபட்டீஸ் / நீரிழிவு / சர்க்கரை நோயை விரட்ட நியான்டர் செல்வனால் ஆரம்பிக்கப்பட்ட இந்த குழுமத்திற்கு ( https://www....