வ.வா.சங்கத்தினருக்கு ஆப்பு(ரைசல்)

வ.வா.சங்கத்தினருக்கு ஆப்பு(ரைசல்)

முதலில் அப்ரைசல் (what is appraisal) என்றால் என்ன என்று தெரிந்துகொள்ளுங்கள்...தகவல் தொழிநுட்பத்தொழிலாளர்கள் ஒவ்வொரு ஆண்டும் சம்பள உயர்வு பெறுகிறார்கள் அல்லவா...அவர்களுடைய சம்பள உயர்வு பலவேறு காரணிகளுக்காக வழங்கப்படுகிறது...சிறப்பாக உழைத்தவருக்கு நல்ல சதவீதம் உயர்வு கிடைக்கும்.....சரியாக வேலை செய்யாமல் ஓப்பி அடிப்பவருக்கு குறைவான சம்பள உயர்வு கிடைக்கும்...இந்த வகையில் அளவீடு செய்ய பல காரணிகளை மானேஜர்கள் பயன்படுத்துவார்கள்...ஊழியரின் பணி பற்றிய அறிவு, நேரம் தவறாமை, குழு மனப்பான்மை, தொடர்புகொள்ளும் திறன் போன்றவை கணக்கில் எடுக்கப்படும்...இந்த முறையில் ஒரு வருடத்தில் அவருடைய ப்ர்பார்மன்ஸ் (இயங்குதிறன்) கணக்கிடப்பட்டு (எவாலுவேஷன் - Evaluation)அதற்கு தகுந்தார்போல சம்பள உயர்வு அதிகமாகவோ குறைவாகவோ கொடுக்கப்படும்...

சரி இனி மேட்டருக்கு வரேன்...

நம்ம வ.வா.சங்கத்துக்காரவுக இந்த ஆண்டு 2006 - 2007 எப்படி செயல்பட்டாங்க என்பதை கணக்கீடும் ஆப்புரைசல் நடக்குது...ஆசிப் மீரான் ஆப்புரைசல் போடச்சொல்லி என்னிடம் கொடுத்துட்டாரு...நாம நமக்கு நாமே ஆப்பு வெச்சுக்கறதுல கில்லாடியாச்சே...

பத்து நிமிஷம் செலவழிச்சு பதிவை எழுதிட்டு தெரியாத்தனமா சேவ் பண்ணாம க்ளோஸ் பண்ணிட்ட நேரத்திலேயே ஆப்பு ஆரம்பிச்சுருச்சு...ஒரு வேளை வ.வா.சங்கத்தை பற்றி ஆரம்பிச்சாலே ஆப்புத்தானோ....

2006 முழுசும் போட்ட மொத்தம் 129 பதிவுகளை கணக்குல எடுத்துக்கிட்டாலே பெரிய ஆணியா கிடைக்கும்...அதுல புடுங்கினது போவ மீதி இருப்பதோ வகை வகையான ஆணிகள்...அந்த ஆணிகளை வெச்சு ஆப்படிச்சாலே அய்யகோன்னு ஆகிரும்...என்னத்த சொல்ல, என்னத்தை விட..இருந்தாலும் இந்த எவாலுவேஷன் பீரியடுல எவனோன்னுவேஷம் போட்டுக்கிட்டு இருக்க முடியாதே...ஆப்பு வெச்சே ஆவனுமே...

கைப்புள்ளையோட கதையை ஆப்பிரிக்காவுல இருந்து ஆரம்பிச்சு கைப்போங்கான்னு அகஸ்மாத்தா எழுதனத சொல்லவா, இல்லை கவுண்டரை வெச்சு ஆணியடிச்சு டெவில் ஷோ நடத்துனதை சொல்லவா...

இருந்தாலும் பாயிண்டு பாயிண்டா இப்ப புடிக்கலாம்...

ஜாப்பு நாலேஜ் : கைப்புள்ளைக்கு ஆப்பு வெக்கிறது தான் ஜாப்புன்னு சங்கத்துக்கு தெரியுது...கைப்புள்ள அடிவாங்கும்போது எஸ்கேப்பாயிட்டு, எங்கடான்னு கேட்டா பக்கத்தூருல லாரில ஆளு கூட்டியாற போயிருந்தேன் தல அப்படீன்னு கதைய உடுறது...பின்னூட்டம் போடுறவங்களுக்கு எல்லாம் இராம் நொந்து நூலாகி பதில் போட்டுக்கிட்டு இருப்பாரு...தேவும் இளாவும் ஆணி புடுங்க போயிருப்பாங்க....சவுண்டு பார்ட்டி எப்படா தீவாளி வரும், பொங்கலை பத்தி பதிவு போடலாம்னு காத்திருப்பாரு...ஜொள்ளு எங்கயாவுது பாளை பஸ்டாண்டுல நின்னுக்கிட்டு பிகர்களை பற்றி கணக்கெடுத்துக்கிட்டிருப்பாரு...சங்கத்துல இராமை போட்டு எல்லாரும் நொக்கு நொக்குனு நொக்கிக்கிட்டிருப்பாங்க...ம்ம்ம் விடுங்க அடுத்த பாயிண்டுக்கு போவோம்...

பிராப்ளம் சால்விங் ஸ்கில் : ப்ராப்ளமே நாந்தாண்டா என்று உக்காரும் இடத்திலெல்லாம் ஆப்பு வாங்கிக்கொண்டிருக்கும் கைப்புவை வைத்துக்கொண்டு என்னாத்த ப்ராப்ளம் சால்விங் ஸ்கில்ல காட்டறது...ட்ராக்டர்னா தெரியுமான்னு வியசாயிய கேட்டா, ஆமாம் கைப்பு போட்டிருப்பாரே அழுக்கு கலர் ட்ராயர் அப்படீங்கறார்...என்னத்த ப்ராப்ளத்த சால்வ் பண்ணி...

ஆட்டிடியூட் டுவோர்ஸ் வொர்க் : பிகர்களை கலாய்க்கறது தான் தனது மெயின் ஒர்க் என்று சொல்லி சுத்திக்கொண்டிருக்கும் ஜொள்ளு...(உண்மையில்) ஆமா, போற எடத்துல எல்லாம் கட்ட வெளக்கமாத்த கொண்டி அடிக்கறாளுங்க. இதுல பிகரு வேற கேக்குது...இந்த வருசமாவது ஏதாவது மஞ்சத்தாவனிக்கு ரூட்டு விட்டு கல்யாணத்தை முடிச்சுடலாமுன்னு தான் பார்க்குறார்...ஒன்னும் செட்டாக மாட்டேங்குது...கடந்த நாப்பது வருஷமா...ச்ச்சே...இருவத்தைஞ்சு வருஷமா இந்த நிலை தென்மேற்கு பருவக்காத்து மாதிரி நீடிச்சிக்கிட்டு தான் இருக்கு...என்னாத்த சொல்ல...

டீம் ஒர்க் : இத பாராட்டித்தான் தீரனும்...உண்மையா சொன்னா, கிடக்கறது கிடக்கட்டும் கிழவிய தூக்கி மனையில வை அப்படீன்னு ஒரு கிழ ச்சே பழ மொழி இருக்குல்ல...அதை மனசுல வெச்சுக்கிட்டு எல்லா மெம்பரும் சங்கத்துல ஒரு மொக்கை பின்னூட்டமோ பதிவோ போடாம நைட்டு வீட்டுல பாத்திரத்தை கழுவறதில்லைன்னு அடுத்தவிட்டு வாச்சுமேன் தலையில அடிச்சு சத்தியம் வச்சிட்டாங்கல்லா...

கம்மூனிகேசன் : இந்த டீம் எபக்டிவ் கம்மூனிகேசன் செய்யுதுன்னு சொன்னா அது மிகையில்லை...கைக்காச போட்டு ஆமதாபாளையம் வரைக்கும் போனப்போட்டு கைப்புவை கலாய்க்கறதுக்கு கொஞ்சம் தெம்பு வேனும்தான்...அந்தாளுக்கு போனப்போட்டா, காக்காய படம் புடிச்சிக்கினு இருக்கேன், மைனா மேல கழிஞ்சிருச்சி அதை துடைச்சிக்கினு இருக்கேன் அப்படின்னு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த உண்மைய சொல்லுவாரு...வேற என்ன...

இனிசியேட்டிவ் : சங்கத்து ஒரு வருச பர்த்து டேவுக்கு ஆயிரம் பொற்காசு போட்டி ஆரம்பிச்சு, வரவேற்பை பொறுத்து அதை மூவாயிரம் பொற்காசா மாத்தினது எல்லாம் ஒருவகை இனிசியேட்டிவ்தான்...ஆனா அதுக்காக அந்த மூவாயிரத்துக்கு நாமக்கல் சிபி க்ரெடிட் கார்டை தேச்சது தான் கைப்பு மீஞ்ஜில அயர்ண்ட் பாக்ஸை தேச்ச மாதிரி தீஞ்சு போன விஷயம்...ஹி ஹி...ச்ச்ச்சும்மா...

கஸ்டமர் ஓரியண்டேஷன் : சங்கத்துக்கு கஸ்டமர் யாரு...சைக்கிள் ரிப்பேர் பண்றவனும், பேரீச்சம்பழம் விக்கறவனும் தான்...இருந்தாலும் ஹிட்டு கொறையும் போதெல்லாம் ஒரு மொக்கை பதிவாவது போட்டு, குருப்புக்கு ஒரு மெயிலாவது தட்டி கஸ்டமரை எப்போதும் சிரிக்கவெக்கற சங்கத்து சிங்கங்களுக்கு ஒரு அஞ்சி மார்க்கை அஞ்சாமே போட்டுடறேன்...

ட்ரெயினிங் நீட்ஸ் ( Training Needs) : கம்பேனியில இலவசக்கொத்தனாரும், இம்சை அரசியும் அவ்ளோ ஆக்டிவ்வா இல்லை போலிருக்கே...கொறஞ்ச பட்சம் 100 கூட அடிக்கலன்னா என்ன சங்க போஸ்ட்டு...ஒரு போஸ்ட் போட்டா மொக்கையா ஒரு பத்து பின்னூட்டம் போடாம யாராவது இருந்தா அவங்களுக்கு இம்போஸிஷன் கொடுக்கனும்...

சூப்பர்வைசர் இறுதி கமெண்டுகள்..

மொத்தத்தில் இந்த வ.வா.சங்கம் சிறப்பாக செயல்படுகிறது...2006 ல் சிறப்பான எபக்டோடு செயல்பட்ட இந்த பதிவில் 2007 ல் குறைந்த பட்சம் 300 பதிவு விழவேண்டும்...இந்த வலைப்பூவை டொமைன் பதிவாக மாற்ற சூப்பர்வைசர் பரிந்துரைக்கிறார்...வெச்சாச்சுப்பா ஆப்புரேசல்.

Comments

Anonymous said…
ithla aarambikalaama thala
இராம் said…
இரவி,

சூப்பரா வைச்சிட்டிங்க ஆப்பு'ரைசல் :)

//இந்த வலைப்பூவை டொமைன் பதிவாக மாற்ற சூப்பர்வைசர் பரிந்துரைக்கிறார்..///

பாருங்க
Anonymous said…
சூப்பர் தல. ஆப்புரைசல் உங்க டாச்சிங்கோட கலக்கலா கீது.

SP
நன்றி அனானி, இராம், எஸ்.பி.
நல்லா ஆப்புரைசல் ரவி :))))))))))
ஆமா "ஆட்டிடியூட் டுவோர்ஸ் வொர்க் " நம்மக்கு மட்டும் தானா ?? மத்தவங்களூக்கும் கொஞ்சம் போடுறது !!! ;)))))))))))))) நல்லா சிரிச்சேன் !!!
தனித்திரு
உனக்கும்
ஒருநாள்
ஆப்பு வரும்

:)

Popular Posts