சுடர் ஏற்றும்படி பணித்த அனுவுக்கு நன்றி...அய்யா ஞானவெட்டியான் கேள்விகளுக்கு எப்படியோ வெற்றிகரமாக பதிலளித்துவிட்டு, என்னை தாளித்துவிட்டார்...
கண்டிப்பாக நேரத்தை செலவிட்டு எழுதவேண்டிய சீரியஸ் மேட்டர்களை கேள்விகளாக தந்துவிட்டார்...இருந்தாலும் கேள்விகளுக்கு பதிலளித்து அப்படியே வேலைவாய்ப்பு கல்வி மலர்ல போட்டிடலாம் போல இருக்கு கேள்விகள்...நல்ல கேள்விகளை கேட்டதுக்கு முதலில் நன்றி....
1. சில வருடங்களாக ஏறுமுகத்தில் இருந்த வளாகத்தேர்வுகள் இந்த ஆண்டு சற்று குறைந்துள்ளது. இந்த போக்கின் எதிர்காலம் என்ன?
புதிய பணி வாய்ப்புகள் உருவாகிக்கொண்டுதான் இருக்கின்றன...2007 ஆம் ஆண்டுக்கான IT மற்றும் ITES (IT Enabled Services) - தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த துறையின் வளர்ச்சி 31 சதவீதமாக இருக்கும் என்று நாஸ்காம் சர்வே தெரிவிக்கிறது...
ஆனால் இவை பரந்துபட்ட அளவில் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த துறைகளில் அதிக அளவில் இருக்கிறது...அதாவது பி.பி.ஓ அல்லது கால்செண்டர் ஆகிய இரண்டையும் சேர்த்துத்தான் மொத்த வளர்ச்சியை கணக்கில் கொள்கிறார்கள்...
இளம்பொறியாளர்களை விட அனுபவம் வாய்ந்தவர்களின் தேவைப்பாடு அதிகம் இருப்பதை காண்கிறேன்...
சேவைத்துறையில் (Software Service Industry) உள்ள நிறுவனங்களான டி.சி.எஸ் / இன்போஸிஸ் / விப்ரோ / சத்யம் / ஹெச்.சி.எல் / காக்னிஸண்ட் போன்றவையின் அனுபவம் வாய்ந்த பணியாளர் தேவை அதிகமாக உள்ளது...மேலும் இவர்கள் சேவைத்துறையிலும் கால்வைத்துள்ளதால் கடந்த மூன்றாண்டுகளில் Campus / Offcampus போன்றவற்றில் தேர்வாகாதவர்கள் ஏதாவது (BPO / CC போன்றவையாக இருந்தாலும் )ஒரு பணியில் உள்ளே நுழையும் நிகழ்வு மிக அதிகமாக உள்ளது...
மேலும் கடந்த மூன்று ஆண்டுகளில் எடுக்கப்பட்ட Attrition கணக்கீடுகள், அனுபவம் வாய்ந்தவர்களை விட புதிதாக பணியில் சேர்ந்த இளம்பொறியாளர்களின் விலகல் குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகளாக உள்ளது...இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்..
மேலும் TCS / WIPRO போன்ற நிறுவனங்கள் B.Sc / BCA முடித்தவர்களை பணிக்கு சேர்ப்பதில் பல காரணங்களுக்காக ஆர்வம் காட்டுகின்றன...அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்...
இப்படி பல இருக்கலாம்களை சொல்லி வரலாம் தான்...இருப்பினும் நிறுவனங்கள் இளம்பொறியாளர் தேர்வுகளை Off Campus ஆக நடத்துவதில் பல நிர்வாக சிக்கல்கள் குறைவதை காண்கின்றன, அதனால் Off Campus இல் அதிக ஆர்வம் காட்டுகின்றன என்று மனிதவள துறையில் பணிபுரியும் ஒரு தோழி கூறுகிறார்...
2. E-lanes வகை வேலைகள் தமிழர்கள் எந்த அளவு பங்கு பெற்று வெற்றி பெற்றுள்ளார்கள். நடைமுறையில் இந்த வகை வேலைகளின் எதிர்காலம் மற்றும் வெற்றி சாத்தியகூறுகள் என்ன?
முதலில் இந்த கேள்வி ஒரு சிலருக்கு புரியாமல் போய்விடக்கூடிய சாத்தியக்கூறுகள் உண்டு...அதனை முதலில் தடுப்போம்...ELance / GetaFreelancer.com போன்றவை இணையத்தில் சிறிய / நடுத்தர ப்ராஜக்டுகளை ஏலத்தில் எடுக்கும் வாய்ப்புடைய தளங்கள்..
இதன்மூலம் 30 $ முதல் 5000 டாலர் வரையான ப்ராஜக்டுகளை பெறலாம்...
இந்த வகையிலான ப்ராஜக்டுகளை வெற்றி பெறுவதிலும் அவற்றை சிறப்பாக செய்து முடிப்பதிலும் இந்தியர்கள் இப்போது சிறப்பாக செயல்படுகிறார்கள்...
உதாரணமாக பெயர் சொல்ல விரும்பாத ஒரு பெண்மணி, கொல்கத்தாவில் இருந்து ஒரு நாளைக்கு பத்து முதல் பதினைந்து லோகோ டிசைன் ப்ராஜக்டுகளை முடிக்கிறார்...அவர் பெறும் வருமானம் ஒரு நாளைக்கு 500 அமெரிக்க டாலர்களுக்கு மேல்...நம்ப கடினமாக இருந்தாலும் இது தான் உண்மை...
2003 - 2004 ஆண்டு பல ப்ராஜக்டுகள் செய்துள்ளேன்...கடந்த ஆண்டு சில ப்ராஜக்டுகள் எடுத்தேன்...பணிச்சுமை காரணமாக ப்ராஜக்டுகள் எடுப்பதில்லை என்று கடந்த ஆண்டு மத்தியில் முடிவு செய்தேன்...
எனக்கு தெரிந்து அமெரிக்க / ஆஸ்திரேலிய வாழ் தமிழர்கள் இதில் மிக சிறப்பாக செயல்படுகிறார்கள்...நம்மவர்கள் அதிகம் ஈடுபடாமல் இருப்பதற்கு காரணம் விழிப்புணர்ச்சி இன்மையே...
மேலும் பண பரிமாற்றத்தில் உள்ள சில பிரச்சினைகளும் நம்மவர்கள் இது போன்ற ப்ராஜக்டுகளில் அதிக வருமானம் ஈட்டும் வாய்ப்பு இருந்தும் ஈடுபடுவதில்லை...
விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தும் விதமாக செயல்பட வேண்டும், மா.சிவக்குமார் மூலமாக தமிழ் கம்பியூட்டர் போன்ற வெகுஜன ஊடகங்களுக்கு கட்டுரைகள் அனுப்பவேண்டும் என்று நினைத்திருக்கிறேன், செயல்படத்தான் நேரமின்மை தடைக்கல்லாக இருக்கிறது...
3. நாஸ்காம் போன்ற நிறுவனங்கள் சமீபத்தில் குடுத்துள்ள அறிக்கையில் 25% மாணவர்கள் கூட வேலைக்கு தகுதியற்றவர்கள் என கூறியுள்ளது. இது குறித்து தங்களின் சொந்த கருத்து மற்றும் சொந்த அனுபவம் என்ன?
நாஸ்காம் கூறியது ஒரு வகையில் சரிதான்...இதற்கு காரணம் நமது கல்வி முறை...நான் எட்டு முறை தவறிய டிஸ்க்ரிட் மேத்ஸ் என்ற கல்லூரிப்பாடத்தை இந்த 7 ஆண்டு கணிணி துறை பணியில் ஒரு முறை கூட நான் பயன்படுத்தியதில்லை...
அந்த பாடத்தை வடிவமைத்தவர் மீது ஆசிட் ஊற்ற வேண்டும் போல் கொலைவெறி உள்ளது...(கிலியாக வேண்டாம், ப்ரீயா விடுங்க, அட்லீஸ்ட் பினாயில் ஊத்திடலாம்)
ஆனால் பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு நமக்கே உரிய கடின உழைப்பின் மூலம் நம் மாணவர்கள் சாதிப்பதை கண் கூடாக அதே நாஸ்காம் கண்டுள்ளது...அதன் தலைவர் இந்த கருத்தை ஒரு முறை தெரிவித்தார்...
என்னுடைய நன்பர்கள் சிலர் முன் அனுபவம் இல்லாமல் நிறுவனங்களில் என்னுடைய முயற்சியால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள் ( சிறு கயமை - கண்டுக்காதீங்க), ஆனால் பணியில் இணைந்த பிறகு IIT / REC போன்ற நிறுவனங்களில் படித்து, மெரிட்டில் கேம்ப்ஸ் தேர்வாகி பணியில் இணைந்துள்ள சக ஊழியருக்கு சற்றும் சளைக்காமல் அனாயாசமாக பணியில் சிறந்து விளங்குவதை காணும்போது "தமிழன் சளைத்தவன் இல்லையடா" என்று தோன்றும்...
4. இந்த கால இளைஞர்கள் வேலைக்கு சேர்ந்த பின்பு பொருளாதாரத்தை எதிர்காலத்திற்காக சேர்ப்பவர்கள் அதிகமா? அல்லது ஆடம்பரத்தில் மூழ்கி விடுகிறார்களா?
பெரும்பான்மை இளைஞர்கள் ஆடம்பரத்தில் மூழ்கிவிடுகிறார்கள் என்பது உண்மை...இந்த ஆடம்பரம் "தேவை" என்ற விதத்தில் வந்து சொல்லாமல் கொள்ளாமல் பாக்கெட்டை கரைத்துவிடும்...
பெரும்பாலானவர்கள் சேமிக்கும் பழக்கம் இல்லாமல் இருக்கிறார்கள்...
ஆடம்பரம் என்று சொன்னால், அடுத்தவன் ஒரு Hi-End மொமைல் வைத்துள்ளான்..இருபதாயிரம் ரூபாய்...மல்ட்டிமீடியா உள்ளது...ஆக அது போன்ற ஒரு போன் வாங்கவில்லை என்றால் Out Of Date ஆகி விடுவோம் என்ற எண்ணம் EMI கட்டியாவது அப்படி ஒரு போன் வாங்கிவிடலாம் என்று கிளம்பிவிடுகிறார்கள்...
க்ரெடிட் கார்டுக்கு தேவையில்லாத வட்டி கட்டிக்கொண்டு இருக்கிறார்கள்...
எனக்கு கிடைத்த தகவல்படி கொரியாவில் இளைஞர்கள் ஆடம்பர வாழ்க்கையில் மூழ்கி, க்ரெடிட் கார்டுகளுக்கு அதிக செலவு செய்து 35 வயதில் தான் திருமணம் செய்ய பெண்ணை ப்ரொபோஸ் செய்கிறார்களாம்...
ஒரு எளிமையான உதாரணம் சொன்னால், Enigma என்று ஒரு பப் (பார்) உண்டு இங்கே...அந்த பப்பில் ஒரு பியர் 300 ருபாய்...ஆனால் அதே பியர் வேறு சில பாரில் 100 ரூபாய்...அதே பியர் கடையில் 60 ரூபாய்...குடிக்க வேண்டும் என்று நினைப்பவன் எனிக்மாவில் தான் குடிக்க வேண்டுமா ? ஏன் சாதாரண கடையில் குடித்தால் ஆகாதா ? இது போன்ற ஆடம்பரத்தை நானும் விரும்பவில்லை என்றாலும் சில சமயம் குழுவாக செல்வதற்கும் பார்க்கிங் வசதிக்கும் இது போன்ற கடைகளுக்கு செல்வது தவிர்க்க முடியாதது ஆகிவிடும்...(அப்போ பில்லை எவன் தலையிலயாவது கட்டிட வேண்டியது தான் :))
ஆடம்பரத்தை நான் வெறுக்கிறேன்....
5. இந்தியாவில் உள்ள பன்னாட்டு நிறுவனங்களில் வேலையின் உழைப்பை விட அதிக ஊதியம் வழங்கப்படுகிறது. இதனால்மற்ற துறையினரின் வாழ்க்கை தரமும், பொருளாதாரமும் பாதிக்கப் படுகிறது. இந்த அதீத ஊதியம் பற்றிய தங்களின் கருத்து...இது தேவைதானா?
பன்னாட்டு நிறுவனங்களில் உழைப்பை விட அதிக ஊதியம் வழங்கப்படுகிறது என்பதை நான் மறுக்கிறேன்.....(சில சமயம் உழைக்காமல் பிலாக் எழுதி / பின்னூட்டம் போட்டாலும் ஊதியம் வழங்கப்படுகிறது ஹி ஹி)
அப்படி வாங்கும் சம்பளத்தை அந்த ஊழியர்கள் என்ன அண்டார்ட்டிக்காவிலா செலவு செய்யப்போகிறார்கள் ? இங்கே தானே...
மற்ற துறைகளின் பொருளாதாரம் பாதிக்கப்படுகிறது என்ற கருத்து உண்மையில்லை...பன்னாட்டு நிறுவனங்களினால் Infrastructure / Real Estate / Communication போன்றவை வளர்ந்துள்ளன அனுசுயா...
ஆனால் இது போன்றதொரு வளர்ச்சி மற்ற துறையினருக்கு பொறாமை ஏற்ப்படுத்தும் அளவில் உள்ளது என்பது உண்மை...
அப்பாடா...எப்படியோ ஒப்பேத்தியாச்சு...இனிமேல் இந்த சுடரை யார் கையிலயாவது பிடிச்சு கொடுக்கனும்...பட்டுனு நியாபகம் வருவது வலைப்பூ சின்னக்குத்தூசி / வலைப்பூ சுனாமி லக்கி லூக் அவர்கள்...
இனிமேல் கேள்விகள்...
1. வருங்காலத்தில் அரசியலில் ஈடுபடும் எண்ணம் உண்டா ? கலைஞரை ஏன் பிடிக்கும் ? கலைஞர் புகழ் பாடுவதால் ஏதாவது ப்ரயோஜனம் உண்டா ?
2. பத்திரிக்கை துறை ஏன் இப்படி போட்டி பொறாமையில் தவிக்கும் துறையாக, வருமானம் அற்ற துறையாக உள்ளது ? இந்த நிலை மாற வழியுண்டா ? வலையுலகால் எடிட்டர் என்ற பதவியே அழிந்துவிட்டது போனது போல் உள்ளதே, அது பற்றி உங்கள் கருத்தென்ன ?
3. பள்ளி காலத்தில் அய்யர் / அய்யங்கார் சாதியில் உங்களுக்கு ஏதேனும் நன்பர்கள் உண்டா ? அவர்களுடனான உங்கள் இனிமையான அனுபவத்தை (எச்சி வெக்கறது இல்லை) எங்களுடன் பகிர்ந்து கொள்ளவும்...
4. ஈழத்தமிழர்களுக்கு குரல் கொடுப்பதை தி.மு.க நிறுத்திக்கொண்டதா ? வெறும் 60 ஆயிரம் மக்களை மாக்கள் போல் அடைத்துவைத்துள்ள முகாம்களின் நிலை மாறுமா ? க்வாரண்டைண் என்று சிறைகளில் அடைத்து வைக்கும் கொடுமை மாறுமா ? அவர்களின் சுகாதாரம் / கல்விக்காக ஏன அரசு (கண் துடைப்பின்றி ) நடவடிக்கை எடுக்க கூடாது ?
5. கீழ்வரும் வார்த்தைகளுக்கு ஒத்தை லைனில் குறிப்பு சொல்லவும்..
திராவிட தமிழர்கள் குழுமம்
தடாலடியார் கவுதம்
பின்னூட்ட கயமை
அதர் அனானி ஆப்ஷன்
கொலைவெறி படை
பா.க.ச
பொன்ஸ்
அய்யங்கார்
ஓசை செல்லா
தகவல் தொழில்நுட்பம்
பைக் குதிரை
மடிப்பாக்கம்
இந்துத்துவம்
ஜல்லிகள்
மொக்கை பதிவு
வெளிப்படையாக பேசுதல்
ஜெர்மன் மொழி
Subscribe to:
Post Comments (Atom)
டயபட்டீஸ் ப்ரோட்டக்கால்
டயபட்டீஸ் ப்ரோட்டக்கால் டயபட்டீஸ் / நீரிழிவு / சர்க்கரை நோயை விரட்ட நியான்டர் செல்வனால் ஆரம்பிக்கப்பட்ட இந்த குழுமத்திற்கு ( https://www....
-
நித்யானந்தா விவகாரம் ஆரம்பித்தவுடன் எல்லோரும் எங்கே எங்கே என்று இணையத்தில் தேடியது அந்த வீடியோவைத்தான்...!! ட்விட்டரில், பேஸ்புக்கில்...
-
'கள்' உண்ணாமை வேண்டும் அப்படின்னு காந்தி சொன்னதா கேள்வி..ஆனா அவர் கிட்ட கள் பத்தி யாரோ கதை விட்டு இருக்கனும்...கள் ரொம்ம போதை..உடம்ப...
-
பார்ப்பனீயம் குறித்து நிலவும் பெருங்குழப்பம் காரணமாக ஒரு அனானி டோண்டு ராகவன் சாரிடமே, சில விளக்கங்கள் கேட்டிருக்கிறார்... நிறைய புதிய பதிவர்...
34 comments:
நல்ல தகவல்கள். நன்றி.
வழக்கம் போல கலக்கீட்டீங்க...
நல்ல பதில்கள்.. அப்பால அடுத்து லக்கியா...?
வெயிட் பண்றோம்..
சென்ஷி
தல,
பதில்கள் எல்லாமே நச்! நச்!! நச்!!!
சுடருக்கு எனது வாழ்த்துகள்.
உண்மைதான் ரவி. இப்பொழுது சற்று அனுபவம் உள்ளவர்களுக்கான வாய்ப்புகள் பெருகியுள்ளன என்றே நினைக்கிறேன். அத்தோடு அமெரிக்காவில் ரிசசஷன் தொடங்கியிருப்பதாகவும் பேசுக்கொள்கிறார்கள். அதுவும் கூட காரணமாக இருக்கலாம்.
வேலைக்கு அதிகமாக சில இடங்களில் குடுப்பது உண்மைதான். ஆனால் பல இடங்களில் குடுத்த காசுக்குக் கற்பழிப்பதும் உண்மைதான். அது அவரவர் நல்லூழைப் பொருத்து. ஒங்களுக்கு நெறைய நல்லூழ் இருக்கு போல. :-)
ஆடம்பரம்....ம்ம்ம்...பல சமயங்களில் தவிர்க்க முடியாத சுமையாகி விடுகிறது. இருந்தாலும் முடிந்தவரை தவிர்ப்பது நல்லது. ஆனாலும் forum, garuda mall, mg road எல்லாம் போகாம இருக்க முடியலையேன்னு இங்கு ஒரு பெருங்கூட்டமே பொலம்புது!
அடுத்து லக்கியாரா! ஆகா. காத்திருக்கிறோம் பதிவிற்கு.
பின்னூட்டத்துக்கு நன்றி ஐகாரஸ் பிரகாஷ் / சென்ஷி / தம்பி...
ஜீரா,
நீங்கள் சொல்வது சரிதான்...வேலைக்கு அதிகமாக கிடைக்கும் இடத்துக்கு வரும் முன் ஒரு நாளைக்கு பதினாறு மணிநேரம் செத்து சுண்ணாம்பாகும் காலம் கண்டிப்பாக இருக்கும்...சிலர் சீக்கிரம் அரசியல் செய்து மேலே வந்துவிடுகிறார்கள்...பலர் நல்ல திறமை இருந்தும் வாய்ப்புகள் இருந்தும், எட்டு வருட அனுபவத்திற்கு பிறகும் கோடு அடித்துக்கொண்டு இருப்பது மிகவும் கொடுமை...
///ஆடம்பரம்....ம்ம்ம்...பல சமயங்களில் தவிர்க்க முடியாத சுமையாகி விடுகிறது. இருந்தாலும் முடிந்தவரை தவிர்ப்பது நல்லது. ஆனாலும் forum, garuda mall, mg road எல்லாம் போகாம இருக்க ///
போகலாம்...பர்ஸை வீட்டில் மறந்து விட்டுவிட்டு...!!!
நல்லா இருக்குங்க...அதிலும் லக்கிக்கு ஏற்ற கேள்விகள்....
//இதற்கு காரணம் நமது கல்வி முறை...நான் எட்டு முறை தவறிய டிஸ்க்ரிட் மேத்ஸ் என்ற கல்லூரிப்பாடத்தை இந்த 7 ஆண்டு கணிணி துறை பணியில் ஒரு முறை கூட நான் பயன்படுத்தியதில்லை...
அந்த பாடத்தை வடிவமைத்தவர் மீது ஆசிட் ஊற்ற வேண்டும் போல் கொலைவெறி உள்ளது...(கிலியாக வேண்டாம், ப்ரீயா விடுங்க, அட்லீஸ்ட் பினாயில் ஊத்திடலாம்)//
என்னை கிலியடைச்செய்த எலக்டிரிக்கல் டெக்னாலஜி பாடத்திட்டத்தை வடிவமைத்த பாரதிதாசன் பல்கலைக்கழக ஆளையும் சேர்த்துக்குங்க!
தெவினின்ஸ் தியரம், நார்ட்டான்ஸ் தியரம்ன்னு படிக்கும்போது ஒரே துயரம் போங்க!!
நான் பணிக்கு வந்து இந்த 17 ஆண்டுகளில் ஒருநாள் கூட எனக்குப் பயன்படாத விஷயம் இவை. இதுகளை ஏன் படிக்கணும்??
//Enigma என்று ஒரு பப் (பார்) உண்டு இங்கே...அந்த பப்பில் ஒரு பியர் 300 ருபாய்...ஆனால் அதே பியர் வேறு சில பாரில் 100 ரூபாய்...அதே பியர் கடையில் 60 ரூபாய்...குடிக்க வேண்டும் என்று நினைப்பவன் எனிக்மாவில் தான் குடிக்க வேண்டுமா ? ஏன் சாதாரண கடையில் குடித்தால் ஆகாதா ?//
என்னைக் கேட்டால் ஏன் குடிக்காமல் இருந்தால் ஆகாதா??ன்னு கேட்பேன்.
குடி மறுப்பு என்பது சிக்கனத்துக்குச் சிக்கனம். நல்ல பழக்க வழக்கத்துக்கு நல்லது.
இப்படி பியர் பப்புன்னு போதையில் மல்லாந்து மல்லையாவை கிங்கு பிஷர் ஆக்கணுமா?? :-))
நல்ல படியா சுடரை ஒளிரவைத்து இருக்கின்றீர்கள்! வாழ்த்துக்கள்!
நன்றி ஹரி !!!!
ஆனால் பியர் ஒரு கூல் டிரிங்ஸ் தானே ? :))
நீங்க சொன்னதை கேட்டு ஒன்னரை நாளா தம்மை நிறுத்தி சுகர் செக் செய்ததில் (காலையில்) 88 என்ற அளவில் உள்ளது...!!! நன்றி...
நல்ல கேள்விகள்.. உங்க பதில்களும்..
ஆடம்பரம் பற்றிய கருத்து உண்மை.. முடிந்தவரை தவிர்க்கலாம்.. மற்றவர்கள் முன்னால் ஆடம்பரம் காட்டும் வழக்காம் தேவையில்லாதது
செந்தழலாரே,
Discrete Mathematics, முதலாண்டிலயா வந்துது..:-) பெரிய எண் சுவை சேக்கறத்துக்குன்னு வச்சுக்குவோம் :-).. அத விடுங்க!!. நமக்கு டேஞ்சரே Fourier transformations தான். ஒரு தடவ கப் வாங்கிட்டு, எவண்டா இத சிலபஸ்ல சேத்தவன்னு கொலவெறியோட சுத்தனது இன்னும் பசுமையா இருக்கு. இதே மாதிரிதான் நானும் நம்ம உபயோகமில்லா சிலபஸ்ஸ திட்டிக்கிட்டு இருப்பேன். இப்பொ கொஞ்ச நாள் முன்னாடி அலுவலகத்தில அடுததகட்ட தொழில்நுட்ப பயிற்சி இருக்கு, போய் இதல்லாம் படிக்கலாம் அப்டின்னு கைல ஒரு தாள கொடுத்தாங்க பாத்தா நம்ம சூனியம்... டேய்..... யாரபாத்து என்ன படிக்க சொல்றேன்னு ஒரே ரகளை.. அப்புறம் பஞ்சாயத்தெல்லாம் பண்ணி.. அதுலேந்து தப்பிக்கறதுக்குள்ள.. இதுல நம்ம எதிரி முகாம் ஆள் ஒருத்தர் மாட்டிக்கிட்டார்.. ஒரே கல்லுல ரெண்டு மாங்கா :-)
நன்றி சத்யா.
மொதல் மொற நம்ம வூட்டாண்ட வந்திருக்கீங்க, அதுக்கும் நன்றி...
ஆமாம், மொதல் செமஸ்டர்லே வந்திருச்சி...பி.எஸ்.ஸியில நாலு முறை பெயில். பைனல் செமஸ்டர்லதான் பாஸ்.
எம்.எஸ்.ஸி பாரதியார் யூனுவர்ஸிட்டி சிலபஸை முன்னாலேயே பாத்திருந்தா படிப்பையே விட்டிருப்பேன்...
நேரக்கொடுமை இப்படியாச்சு..நான் பாட்டுக்கு இங்கிலீஷ்ல இருக்கு சிலபஸ், இதைப்படிச்சு இன்னா ஆவப்போவுதுன்னு அப்ளை செஞ்சு கிடைச்சிருச்சு...
மொத நாள் க்ளாஸ் போனவுடனே புக்கு டிஸ்ட்ரிபியூட் பண்ணாங்க...அதுல மொதல்ல குந்திக்கிட்டிருந்த புக், டிஸ்க்ரீட் மேத்ஸ்...
அப்படியே வெளிய போய் ரெண்டு சிகரெட் தொடர்ச்சியா அடிச்சுட்டு தான் உள்ளாறக்க வந்தேன்...
எம்.எஸ்.ஸியில நாலு முறை பெயில்...கடைசி செமஸ்டர்ல படிப்பை முடிக்க முடியாதேன்னு படிச்சு எழுதினேன்...பாஸும் ஆனேன்...
ஆகக்கூடி பி.எஸ்.ஸி 4 தடவை, எம்.எஸ்.ஸி 4 தடவை...ஆக எட்டுமுறை பரீச்சை எழுதி இருக்கேன்...
மனதைக் கவர்ந்த பதில்கள். பொதுவாக பன்னாட்டு நிறுவனங்கள் குறிப்பாக மெக்சிகோ போன்ற இடங்களில் குறைந்த கூலிக்கு அதிக வேலைவாங்குவதும் மன உளைச்சல் மற்றும் வன்முறைகள் நிகழ்வதாகவும் (சில உண்மை நிகழ்வுகள் உண்டு) செய்திகள் வரும். இந்தியாவில் எப்படி என்பதையும் சொல்லுங்களேன்
enigmaவில் பீர் மட்டும் தானா இருக்கும்..பல பல குஜாலான விழயங்கள் இருக்கே அதையும் சொல்லுப்பா
நல்ல கேள்விகள் தெளிவான பதில்கள்
தங்களிடம் தெளிவான பதில்களை வரவழைக்கூடிய கேள்விகளைக் கேட்ட அனுவிற்கு நன்றி!
சுடர் தொடரின் நல்ல ஒரு கேள்விப் பதில் பதிவு! நமது கல்வித்துறை பற்றிய தங்களின் கருத்துக்கள் உண்மையே!
//பணியில் இணைந்த பிறகு IIT / REC போன்ற நிறுவனங்களில் படித்து, மெரிட்டில் கேம்ப்ஸ் தேர்வாகி பணியில் இணைந்துள்ள சக ஊழியருக்கு சற்றும் சளைக்காமல் அனாயாசமாக பணியில் சிறந்து விளங்குவதை//
பழக்கதோசத்தில் உங்களையும் வாரிவிட்டீங்க போல?:))))))
ஆஹா அடுத்து நம்ம லக்கியாரா? அடடா அது இன்னும் அருமையாக இருக்குமே! குறிப்பாக லக்கியாரிடம் கேட்கப் பட்டவேண்டிய கேள்விகள்.
//ஜெர்மன் மொழி //
அதானே பார்த்தேன், எங்கடா செந்தழலாரின் டச் என்று!:))))))
அன்புடன்...
சரவணன்
வாங்க உங்கள் நன்பன் சரவணன்...பின்னூட்டத்துக்கு நன்றி..
//பழக்கதோசத்தில் உங்களையும் வாரிவிட்டீங்க போல?:))))))// நானும் ஸ்மைலியை போட்டு ஒப்பேத்திடவா ? பார்க்கலாம் லக்கி என்ன சொல்லுதுன்னு..
வாருங்கள் கானா பிரபா, கருத்துக்கு நன்றி..
நன்றி பத்மா அரவிந்த்...பணியில் வன்முறைகள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன...மாடு மாதிரி வேலை வாங்குவது...அப்ரைசலில் கை வைக்கப்படும் என்று பள்ளிக்கூட பிராக்டிக்கல் மார்க் வாத்தியார் போல மிரட்டுவது, பெண்களுக்கு எதிரான வன்முறை ( கால்செண்டர் ஊழியர்களாகிய பெண்களை புகைக்கவும், குடிப்பழக்கத்துக்கு அடிமையாக மாற்றவும் செய்வது) போன்றவை கிட்டத்தட்ட இந்தியாவை காலாச்சார சாவுக்கு அழைத்துச்செல்கிறதோ என்று சில சமயம் எண்ணத்தோன்றுகிறது...
ஆனால் இதே போதை கலாச்சாரம் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளிடமும் பரவி, ஐ.டி துறையினருடன் சேர்ந்து அவர்களும் கொட்டமடித்த RAVE (பூனே) பார்ட்டி சம்பவம் ஜஸ்ட் ஒரு எடுத்துக்காட்டு...
பெங்களூர் - ஓசூர் நடுவே நூற்றுக்கணக்கான பண்ணைவீடுகளில் தினம் நடக்கும் நிகழ்வுதான் இது...
இதெல்லாம் சொன்னா நம்மளை பழமை வாதின்னு ஆட்டத்துல சேக்க மாட்டானுங்க...அதனால சும்மா லைட்டா அப்படியே கலந்துக்கவேண்டியது தான்...
...பலர் நல்ல திறமை இருந்தும் வாய்ப்புகள் இருந்தும், எட்டு வருட அனுபவத்திற்கு பிறகும் கோடு அடித்துக்கொண்டு இருப்பது மிகவும் கொடுமை...
கோடு அடிப்பதில் என்னக் கொடுமை? எனக்கு விளங்கவில்லை. நாவலந்தீவில் மானகையர் ஆவது பெருமை போலத் தெரிகிறது.
அமெரிக்காவில் பெரும்பாலும் கணினித்துறை சாராத கல்வித்தகுதியில் குறைந்தவர்களே (பள்ளிப்படிப்பு இருந்தால் கூடபோதுமானது) மானகையர்களாக இருப்பதைக் காணாலாம். அனுபவம் மிக்க மூத்தக் குடிமக்கள்கூட தொடர்ந்து நிரலி எழுவதை விரும்புகிறார்கள். நிரலி எழுதுபவர்கள் உயர்வாகவே மதிக்கப்படுகிறார்கள். நானும் அதுவே ஆக்கபூர்வமான வேலையாக உணருகிறேன்.
very much informative..thanks for the info.
India's skills famine : an article from newyorker!
http://www.newyorker.com/talk/2007/04/16/070416ta_talk_surowiecki
தலைவா, நான் வெறும் கோடு அடித்துக்கொண்டு சீனியர் சாப்ட்வேர் எஞ்சினீயராகவோ / சாப்ட்வேர் எஞ்சினீயராகவோ குப்பைபை கொட்டுபவர்களை பற்றி சொன்னேன்...
எட்டு ஆண்டுகள் எக்ஸ்பிரியன்ஸ் போட்ட பிறகும் ஒரு டெக் லீட் டெவலப்மெண்ட் மானேஜெர் / டெஸ்ட் மானேஜர் போன்ற பதவிகளுக்கு போகவேண்டும் அல்லவா...I mean thatz.
நன்றி முத்து...!!!
good sudar. keep it up ravi
நல்ல பதில்கள் இரவி. இ-லான்சிங் பற்றி தெரிந்திருந்தாலும் அதில் நம்மவர்கள் அவ்வளவாக ஈடுபடவில்லை என்றே எண்ணியிருந்தேன். எனக்குத் தெரிந்து யாருமே இல்லை. அதனால் அப்படி ஒரு எண்ணம் வந்திருக்கலாம். ஆனால் அதிலும் நம்மவர்கள் ஓரளவிற்காவது ஈடுபடுகிறார்கள் என்பதை அறிந்து மகிழ்கிறேன்.
ஆனால் இ-லான்சிங்கிற்கு தகவல் தொழிற்துறையில் எவ்வளவு மதிப்பு இருக்கிறது? ஒரு நிலையான பணியில் இருந்தவரும் இ-லான்சிங் செய்தவரும் ஒரு நேர்முகத்திற்குச் சென்றால் நிலையான பணியில் இருந்தவரைத் தானே தேர்ந்தெடுக்கிறார்கள்? அதுவும் நம்மவர்கள் அதில் ஈடுபடாமல் இருக்க ஒரு காரணமா?
அனுவின் கேள்விகளுக்கான உங்கள் பதில்கள் நச்
ஹரி சொல்வது போல பியரை தவிர்க்கலாமே....
பின்னூட்டத்துக்கு நன்றி குமரன் மற்றும் மஞ்சூர் ராசா...
குமரன், கால் செண்டர் மற்றும் பி.பி.ஓ ப்ராஜக்டுகளை நம்மவர்கள் (இந்தியர்கள்) இப்போது பெரும்பாலும் வெற்றி பெறுகிறார்கள்...உங்களிடம் இது பற்றி தனிமடலில் பேசுகிறேன்..
மஞ்சூராரே...இன்னாது இது பீரு கூட அடிக்கலைன்னா தமிழக வருத்தப்படாத வாலிபன் என்னதான் செய்யறது ?
//எட்டு ஆண்டுகள் எக்ஸ்பிரியன்ஸ் போட்ட பிறகும் ஒரு டெக் லீட் டெவலப்மெண்ட் மானேஜெர் / டெஸ்ட் மானேஜர் போன்ற பதவிகளுக்கு போகவேண்டும் அல்லவா..//
அமெரிக்காவின் போக்கும், நாவலந்தீவின் போக்கும் இங்கே வேறுபடுகிறது. திரைப் படநடிகர்கள் போட்டுக் கொள்ளும் பட்டம் போல, பதவிப்பெயர் அலங்காரம் நம் மக்களுக்கு இன்னும் தேவைப்படுகிறது. நீங்கள் சொல்லும் புறத்திட்டு/தரக்கட்டுப்பாட்டு மானகையர்கள் இங்கே பெரும்பாலும் பள்ளிக் கல்வித்தகுதி மட்டும்தான் வைத்திருக்கிறார்கள்.
மென்பொருள் பொறியாளர் I, II, III, ... என்று அதுவும் அலுவகத்துக்குள் மட்டும்தான் தேவைப்படும் போது பாவிக்கிறார்கள். அனுபவத்திற்கேற்றார்போல ஊதியம் இருக்கும். மற்றபடி நிரலி எழுதுவது கீழோர், ஐந்து ஆண்டுகளுக்குப் பின் அவர்கள் மற்றவர்களிடம் வேலை வாங்க வேண்டும் என்ற மனப்பான்மை இல்லை. நான் 1984 லிருந்து உருவாக்க வேலை செய்கிறேன். ஊர் திரும்பினால் பணியிடத்தில் என்ன மரியாதை இருக்கும் என்று கவலையாயிருக்கிறது.
ஐடி வேலைவாய்ப்பு பற்றி மிக விரிவாக அலசி இருக்கிறீர்கள். உங்கள் விரிவான பார்வை படிக்க ஆர்வமூட்டுகிறது. என்னவோ ஐடி வேலை வாய்ப்புகள் பற்றி யார் சொன்னாலும் ஆவென்று வாய் பிழந்து கேட்பதில் ஒரு தனி ஆர்வம் இருக்கத்தான் செய்கிறது.
////////
மற்ற துறைகளின் பொருளாதாரம் பாதிக்கப்படுகிறது என்ற கருத்து உண்மையில்லை...பன்னாட்டு நிறுவனங்களினால் Infrastructure / Real Estate / Communication போன்றவை வளர்ந்துள்ளன
////////
உண்மைதான். தாங்கள் சொல்லும் I/RE/C போன்றவற்றின் வளர்ச்சி, சக ஐடி துறையில் இருந்து அதிக சம்பளம் வாங்கும் நபருக்கே நன்மை பயக்கும். இதன் மறுபக்கம் மிக எரிச்சல் தரக்கூடியது. நிலம், வீடு ஆகியவற்றின் விலை/வாடகை என்பது அநியாயமாக உயர்ந்துள்ளளது அல்ல உயர்த்தப்பட்டுள்ளது. மாதம் 30000 கையில் கிடைக்கக்கூடிய ஐடி பொறியாளர்கள் நிறைய பேர் உள்ளனர். அவர்களுக்கு 6000-15000 வீட்டு வாடகை என்பது சாதாரணமாகத் தெரிகிறது. எனவே சாதாரண இரட்டை படுக்கை அறை உள்ள வீட்டின் வாடகை இன்று சென்னையில் குறைந்தது 4000-10000 என்ற அளவில் வருகிறது. ஒரளவு சம்பளம் பெறக்கூடிய அரசாங்க அதிகாரியை எடுத்துக்கொள்ளுங்கள். 16000 சம்பளம், பிடித்தம் போக 10000 கைக்கு வருகிறது என்று வையுங்கள். வீடு என்பதைப் பொறுத்தவரை உங்களது தேவையும், அவரது தேவையும் ஒன்றுதான். நீங்கள் எவ்வளவு வாடகை என்றாலும் கொடுக்கத் தயாராக இருப்பதால், அவரது நிலை கவலைக்கிடமாகிறது. பாவம் சென்னையில் அப்படிப்பட்ட அரசு ஊழியர்கள் ஊருக்கு ஒதுக்குப்புறமாக வாழ்ந்துகொண்டு, ஓராள் சம்பளத்தில் குடும்பம் தள்ளுகிறார். பல்லாவரத்தில் ரயில் பிடித்து, பார்க்கில் இறங்கி ஓடி சென்ட்ரலில் அடுத்த ரயிலைப் பிடிக்கிறார். (நமது சிங்காரச்சென்னையில் வாடகை உயரக் காரணம் எனக்குத் தெரிந்து மூன்று. 1. ஐடி மக்கள் 2. புரோக்கர்கள் 3. freeads!!!)
அதை விடுங்க, ஆட்டோவில் அசெண்டாஸ் கட்டிடித்தில் இருந்து மத்திய கைலாஸ் வர 25 ரூபாய் ஆகுமா. வாய் கூசாமல் 40-50 சொல்கிறார்கள். நீங்கள் வேண்டாம் என்று சொன்னால் கூட ஆட்டோ ஓட்டுனர் கண்டுகொள்ளப்போவதில்லை, அதே விலையில் வரக்கூடிய ஆட்கள் கண்டிப்பாக கிடைப்பார்கள். அட, 100 கொடுத்துவிட்டு கீப் தி சேஞ்ச் என்று சொல்லும் கணவான்களும் இருக்கிறார்கள்தானே!
எனவே, விலைவாசி என்பது கண்ணா பின்னாவென்று ஏற்றப்பட்டுள்ளது.
பொருளாதாரம் பாதிக்கப்படவில்லை என்பது சக ஐடி பொறியாளர்களுக்கே. பெரும்பான்மை மக்களுக்கு அல்ல என்று எனக்குத் தோன்றுகிறது.
>நான் எட்டு முறை தவறிய டிஸ்க்ரிட் மேத்ஸ் என்ற கல்லூரிப்பாடத்தை இந்த 7 ஆண்டு கணிணி துறை பணியில் ஒரு முறை கூட நான் பயன்படுத்தியதில்லை...
>அந்த பாடத்தை வடிவமைத்தவர் மீது ஆசிட் ஊற்ற வேண்டும் போல் கொலைவெறி உள்ளது...(கிலியாக வேண்டாம், ப்ரீயா விடுங்க, அட்லீஸ்ட் பினாயில் ஊத்திடலாம்)
உங்க கூட படிச்ச எல்லோருமே நீங்க செய்யற அதே மாதிரி வேலைகளை செய்யறது இல்லயே. வேற வேலைகள் செய்யறவங்களுக்கு பயன் பட்டிருக்கும். எப்படியாவது, யாராவது ஒருத்தராவது ராக்கெட் சயிண்டிஸ்ட் ஆகமாட்டாங்களா-ன்னு ஒரு ஆதங்கத்துல பாடத்திட்டம் வடிவமைச்சிருப்பாங்க!! அதுனால, ஆசிட் வேண்டாம் ப்ளீஸ், பினாயில் ஓகே!! :)
Is it a guess or is there any proven statistics that says the campus selections have reduced this year.
சுடர அணையாம ஏத்திட்டேன் ரவி!
வாங்க கேஎஸ் மற்றும் சரவ்...
உங்களோட கருத்துக்களுக்கு நன்றி...!!!! இவ்வளோ பெரிய பின்னூட்டத்துக்கு நன்றி கே.எஸ்..ஆமாம் ஐ.டி மக்களால சாதாரண மக்கள் பாதிக்கப்படுறாங்க என்பது உண்மை...ஆனா ஒரு ஆட்டோ ஒட்டினா நல்லா சம்பாதிக்கலாம், அஞ்சுக்கும் பத்துக்கும் அலையத்தேவை இல்லை என்று அதே சாதாரண மனிதனுக்கு வேலை வாய்ப்பு தருவதும் இந்த ஐ.டி தானுங்க...மெட்ராஸ் பக்கம் போனால் போதும் எங்க பார்த்தாலும் கட்டிட வேலை நடந்துக்கிட்டிருக்கு, கொத்தனார் வேலை பார்த்தாலே ஒரு நாளைக்கு 250 ரூவா கூலி, என்று அதே சாதாரண மனிதனுக்கு ரியல் எஸ்டேட் துறை வேலைவாய்ப்பு தருது...ஒரு ப்ரவுஸிங் செண்டர் போட்டா பொழச்சுக்கலாம், வீட்டை வாடகைக்கு விட்டாலே பொழைச்சுக்கலாம், அட புதுசா வர்ற கம்பெனிக்கு பக்கத்துல ஒரு பொட்டிக்கடை வெச்சா பொழைச்சுக்கலாம் என்று அதே சாதாரணனுக்கு உயிர் நாடியாக நிற்பது ஐ.டியும் அது சார்ந்த துறைகளும்...
நடுத்தர வயது கம்பெனி எம்ப்ளாயியோ / வேலைக்கு செல்லும் பெண்ணோ கண்டிப்பாக பாதிக்கப்படுகிறார்தான்...வளர்ந்து வரும் விலைவாசி ஏற்றம், என்ன விலை சொன்னாலும் வாங்கிக்கத் தயாரா இருக்கான் அந்த தெருவில இருக்கவன், எதுக்கு இந்த தெருவில் நின்னு பேரம் பேசனும் என்று தக்காளிக்காரன் உட்பட ஹையர் ஆப்பர்ச்சூனிட்டிய பார்த்து போறதென்னமோ உண்மைதான்..
ஆனா இந்த த்ரட் (Threat) தானுங்க இந்தியாவுக்கு - நடுத்தர குடும்பத்துக்கு மாபெரும் ஆப்பர்ச்சூனிட்டி (Oppertunity)...ஏழைக்குடும்பங்கள் நடுத்தர குடும்பங்களாவும், நடுத்தர மிடில் க்ளாஸ் குடும்பங்கள் உயர் நடுத்தர குடும்பங்களாவும் புரட்டிப்போடப்பட்ட மாற்றம் கடந்த மூன்றாண்டுகளில் நடந்துருச்சி...
நாலு ஏக்கர் வெச்சிருந்தவன் கோடீஸ்வரனாவும், நாலு கிரவுண்டு வெச்சிருந்தவன் லட்சாதிபதியாகவும் நடந்துள்ள இந்த மேஜிக் இன்னும் தன்னோட ஷோவை முடிக்கலைங்க...
இன்னும் பத்து ஆண்டுகளின் சுனாமி மாதிரி வந்துக்கிட்டிருக்கு வளர்ச்சி...ஒரு மெபைலோ / ப்ளாட்டில் ஒரு வீடோ எல்லோருக்கும் சாத்தியப்படப்போகுது...
ஆனால் கலாச்சார சீரழிவுக்கு இது வழிவகுத்துக்கிட்டிருக்கு என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது...வேண்டுமானா கடந்த வாரம் பெங்களூர்ல நடந்த ஒரு பார்ட்டி போட்டோஸ் தனிமடல் அனுப்பறேன்...வயிறு எரிங்க...
சரவ்
அது அவங்களே சொன்னதாத்தான் இருக்கும்...எந்த ஸ்டாட்டிட்டிக்ஸும் இல்லைன்னு நினைக்கறேன்...தேடிப்பார்த்துட்டேன் நான்...இருந்தாலும் அவங்களையும் ஒரு முறை கேட்டுக்கறேன்..
சுடருக்கு வாழ்த்ஸ்!
பா.பாட்டு த,தா,ஆ ல நீங்கதான் பாடணும்..
பாட்டுக்கு பாட்டு
பாட டைம் இல்லன்னா, ஒரு பின்னூட்டிடுங்க. கஷ்டப்பட்டு நானே பாட வேண்டியதாயிடும்.
பாடல் சாய்ஸ் சில கீழே:
த - தமிழா தமிழா நாளை உன் நாளே
தா - தாய் மண்ணே வணக்கம்
ஆ - ஆடுவோமே பள்ளு பாடுவோமே.
எப்படி, தேசிய சிந்தனைய தூண்டர பாட்டா இரூக்கு பாருங்க.
ஏதாவது ஓண்ண பாடி, பதிவா போட்டாலும் ஓ.கே.
சுடர் சும்மா நல்லா தக தக பிராகசாமா இருக்கு ரவி....
நல்ல பதில்கள்.
அந்த பாடத்திட்டம் நமக்கும் உங்க கருத்து தான்... ஆனா எட்டு தடவை எல்லாம் இல்ல....
ரவி, அப்படி ஒரு அழகு பதிவு போட்டு விடுங்க...
உங்களை அழகு பதிவு போட நான் அழைத்து உள்ளேன்.
http://tsivaram.blogspot.com/2007/04/blog-post_16.html
I am joining EEE thro merit
whether the subject is tough
besides is it necessary to learn programmes separately
your suggestion is requested plz
Post a Comment