வீ த பீப்புள் பதிவை பார்க்க இங்கே க்ளிக் செய்யவும் http://wethepeopleindia.blogspot.com/2007/04/blog-post.html
வீ த பீப்புள் சொல்வது போல ஒரு கருத்தை நான் வலியுறுத்தவில்லை என்றாலும் பொருளாதார ரீதியில் எல்லோருக்கும் பங்கிட்டு தரவேண்டும் என்றேன்...
இட ஒதுக்கீடு வாங்கி IIT / IMM இல் படிப்பது...பின்பு கோர்ஸ் முடியும் முன் வெளிநாட்டு ஆபர் ஒன்றை வாங்கிக்கொண்டு பாரினுக்கு பறந்துவிடுவது...இவனால் இந்தியாவுக்கு அன்னிய செலாவனியும் குவிவதில்லை, ஒன்றும் இல்லை...அவன் பாரினில் இருந்து வரும்போது வாங்கி வரும் சாக்கிலேட்டு குப்பைதான் மிச்சம்...
ஏன் இந்தியாவில் / இந்திய அரசின் நிதி உதவியுடன் படித்துவிட்டு வெளிநாட்டு நிறுவனத்துக்கு சேவை செய்யவேண்டும் ? இந்திய தேசியத்துக்கு சேவை செய்யவேண்டியது தானே..( உடனே நீ ஏன் பன்னாட்டு நிறுவனத்தில் குப்பை கொட்டுகிறாய் என்று நொள்ளையாக ஒரு கேள்வி கேட்கவேண்டாம் ) இங்கே IIT / IIM பற்றித்தான் பேச்சு...
என்னிடம் என் பதிவில் செந்தில் கேட்டார்...நான் 10 லட்சம் கொடுக்கிறேன்...எனக்கு IIM இல் ஒரு சீட்டு வாங்கித்தரமுடியுமா என்று...
பத்துலட்சம் பணம் உள்ளவன் ஏழையா ? அவனுக்கு கவருமெண்டு கோட்டாவில் IIT / IIM வேண்டுமா ? அவன் சோத்துக்கு சிங்கி அடிக்கிறானா ? பத்து லட்சத்தை வைத்து கவுரவமான சுய தொழில் ஆரம்பித்து அம்பானி / டாட்டா / பிர்லா ரேஞ்சுக்கு முன்னேறலாமே...அம்பானியும் என்ன IIM இலா மேனேஜ்மெண்ட் படித்தார் ?
தன்னை ஒரு கூலித்தொழிலாளி என்று கூறி மெடிக்கல் காலேஜ் சீட்டை மகளுக்கு வாங்கிய மாணிக்கவாசகம் IG ஆப் போலீஸைத்தான் நான் கிருமி லேயர் என்கிறேன்...D பிரிவு ஊழியரை அல்ல...
பார்ப்பானர் வீட்டில் அம்மா அக்கா அத்திம்பேர் எல்லாம் படித்திருப்பார்கள், அவர்கள் சொல்லிக்கொடுக்கும் குடும்ப சூழல் இருப்பதால் அவர்கள் வீட்டு பிள்ளைகள் படிக்கிறார்கள்...ஆனால் தாழ்த்தப்பட்ட வகுப்பினரின் பிள்ளைகள் படிக்கும் சூழ்நிலை இல்லை...சதா சர்வகாலமும் குடித்துவிட்டு வரும் அப்பா எங்கே படிக்க விடுகிறார் என்று கேட்கிறார்கள் மதிப்புக்குரிய பதிவர்களும் என்னுடைய நன்பர்களும்...
முதலில் ஒன்றை புரிந்துகொள்ளுங்கள்...இது "FIT for Survival" வேர்ல்டு...நீ முன்னேறும் காரணிகளை கொண்டிருந்தால் முன்னேறு...இல்லையென்றால் செத்து சுண்ணாம்பா போ...இது தான் பரிணாம கொள்கை..."தகுதியுள்ளவை தப்பி பிழைக்கும்"...
திருக்கோவிலூருக்கு அருகில் உள்ள சித்திலிங்க மடம் என்ற கிராமத்தில் (வெட்டிப்பயலுக்கு தெரியும் கேட்டுப்பாருங்க), உள்ள ஒரு விவசாயியின் மகன், ஐ.ஏ.எஸ் தேர்வில் இந்தியாவிலேயே முதலாவதாக வந்தார்...இரண்டு வருடம் முன்பு...2005ல்..அவர் எந்த இட ஒதுக்கீட்டீல் வந்தார்...எந்த இட ஒதுக்கீடு அவரது கமிட்மெண்டையும், அறிவையும், வெற்றி பெற வேண்டும் என்ற வெறியையும் வளர்த்தது ?
இட ஒதுக்கீடு என்பது பிச்சை போல் தோன்றுகிறது...அருவருப்பாயிருக்கிறது...சாதி ரீதியாக மக்களை இன்னும் முன்னேறவிடாமல் தடுக்கும் கீரிப்பட்டிகளையும், பாப்பாப்பட்டிகளையும் ( இது மட்டுமா - இது சும்மா உதாரணத்துக்கு) எந்த சாதியினர் முன்னேற விடாமல் தடுக்கின்றனர் ? பார்ப்பணீயம் செத்துக்கொண்டிருக்கும் ஒரு காண்ஸப்ட்...துரத்தி துரத்தி அடிக்கப்படுகிறது எங்கும்...ஆங்காங்கே சில இடங்களில் உயிர்மூச்சு விட்டுக்கொண்டிருக்கிறது (உதாரணம் : பாலபாரதி ராமேஸ்வரத்தில் எடுத்த படம் ) இன்னும் சில ஆண்டுகளில் சுத்தமாக செத்து ஒழியும்...அதனால் அதைப்பற்றி பேசாமல் இருப்பது நலம் என்னைப்பொறுத்தவரை...
வீ த பீப்புள் சொல்லி இருப்பது போல குறிப்பிட்ட சமுதாயத்தினரின் ஆதிக்க சக்திகள் (இந்த நாளிள் பார்ப்பணர்களின் % இந்த இடத்தில் குறைவுதான்) தங்களை Empower செய்துகொள்ள இந்த இட ஒதுக்கீட்டை பயன்படுத்தத்தான் போகின்றன பாருங்க...
#########################################
THIS EMAIL MESSAGE IS FOR THE SOLE USE OF THE INTENDED RECIPIENT(S) AND MAY CONTAIN CONFIDENTIAL AND PRIVILEGED INFORMATION. ANY UNAUTHORIZED REVIEW, USE, DISCLOSURE OR DISTRIBUTION IS PROHIBITED.BEFORE OPENING ANY ATTACHMENTS PLEASE CHECK FOR VIRUSES AND DEFECTS.IF YOU ARE NOT THE INTENDED RECIPIENT, PLEASE NOTIFY US IMMEDIATELY BY REPLY E-MAIL AND DELETE THE ORIGINAL MESSAGE.
#########################################
23 comments:
கொஞ்சம் நல்ல கமெண்டு போடுங்க செல்லங்களே...எனக்கு கமெண்ட் டெலீட் செய்யும் வசதி எல்லாம் இப்போதைக்கு இல்லை...விட்டுருங்களேன்....
தெய்வமே, நெஞ்சத்தொட்டுட்ட போ...
ரவி, நீங்க எந்த அரசியல் சார்பும், திராவிட சார்பும் இல்லாததால் தான் தங்களுக்கு இந்தமாதிரி யோசிக்க முடிகிறது.
மற்றவர்கள், குறிப்பாக இட ஒதுக்கீடு ஆதரவாளர்கள் திராவிட கொள்கைகளிலும், அது சார்ந்த கட்சிகளிடத்தும் மூளையை அடகு வைத்துள்ளதால் இந்த மாதிரி யோசிக்கமுடிவதில்லை. என்ன செய்வது, இதுவும் தமிழகத்தின் மீதான சாபமே.
அட பண்ணாடை குழலி,
//அதாவது குறைந்த கட்டணத்தில் அரசு கல்லூரிகள் இடமில்லையென்றாலும் OCயில் பணம் கொடுத்து சுயநிதிக்கல்லூரிகளில் படிக்கும் சக்தி மற்ற அனைத்து பிரிவினரையும் விட அதிகம், அதனால் தான் இதை முதலில் OCயில் ஆரம்பித்தால் உயர்சாதி ஏழை மாணவர்களுக்கு பயன்படும் அல்லவா.//
முதல்ல OCயத்தான் நிரப்புவாங்க யாரா இருந்தாலும். OC ன்னா ஓசில குடுக்குறது இல்ல. "Open competition". இதுல வரதுக்கு சாதிதேவையில்ல. மனுசனா பொறந்திருந்தா போதும்.
எனக்கு தெரிஞ்சு இந்த இட ஒதுக்கீடு பிரச்சனைக்கு தீர்வா வன்னிய ஜாதியையும்,தேவரின ஜாதியையும் , இன்னும் கொஞ்சம் பிற முக்கியமான ஜாதிகளயும் Forward castல சேத்தா நாட்டுல மத்த மக்கள் முன்னேற முடியும்.
"நீ முன்னேறும் காரணிகளை கொண்டிருந்தால் முன்னேறு...இல்லையென்றால் செத்து சுண்ணாம்பா போ...இது தான் பரிணாம கொள்கை..."தகுதியுள்ளவை தப்பி பிழைக்கும்"...
அப்ப நாம இன்னும் மனிதர்களாக
மாறவில்லையா?
கற்காலக் கருத்துக்களை கறாராகக்கூறிய
ஆதிமனிதன் ரவி வாழ்க.
//அட பண்ணாடை குழலி,//
புதிய பட்டப்பெயர் இன்னும் எத்தனை வரப்போகுதோ... ம்...//
//முதல்ல OCயத்தான் நிரப்புவாங்க யாரா இருந்தாலும். OC ன்னா ஓசில குடுக்குறது இல்ல. "Open competition". இதுல வரதுக்கு சாதிதேவையில்ல. மனுசனா பொறந்திருந்தா போதும்.
//
அப்போ OCயில சீட்டு காலியா இருக்கும்போதே பிசி, எம்பிசி, எஸ்சி, எஸ்டில எப்புடி ராசா கொஞ்சம் சீட்டுங்க முடிஞ்சிருக்கு, நீ சொல்ற மாதிரி பார்த்தா ஓசியில எல்லா சீட்டும் முடிஞ்ச பின்னாடி தான் பிசி, எம்பிசி, எஸ்சிக்குலாம் ஆரம்பிச்சிருக்கனும், இதுல எப்புடி ஓசி முடியாமயே மற்றதுக்கு ஆரம்பிச்சிருக்கு.... புரியலையா அது ஒரு தில்லாலங்கடி வேலைதான் நல்லா வெளக்கமா போட்டிருப்பேன் படிச்சிப்பாரு....
O.C - Open Competition OR Other Castes
//நீ முன்னேறும் காரணிகளை கொண்டிருந்தால் முன்னேறு...இல்லையென்றால் செத்து சுண்ணாம்பா போ...இது தான் பரிணாம கொள்கை..."தகுதியுள்ளவை தப்பி பிழைக்கும்"...//
மனிதர்களுக்கு இது பொறுந்துமா? ஹிட்லர் செய்த யூத இன அழிப்புக்கு இது பொறுந்துமா? ஈழத்திலே நடக்கும் இன அழிப்புக்கு பொறுந்துமா?
குழலி ஐயாவை பன்னாடை என்று தரக்குறைவாக திட்டுவது மிகவும் இழுக்கானது. இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.
அவருடைய பதிவில் ஓசை செல்லா அவர்கள் இட ஒதுக்கீட்டுக்கு எதிராக கருத்து சொன்னவர்களை பன்னாடை என்று சொன்னார் மற்றும் குழலி அவர்கள் அதை அனுமதித்தார் என்பதற்காக மற்றோர்களும் இந்த இழிசெயலை செய்தால் அப்பறம் எல்லாருமே செல்லாக்காசு போல ஆகிவிடுவார்கள். இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்
//மனிதர்களுக்கு இது பொறுந்துமா?//
மனிதர்களுக்கு மட்டுமில்லை குழலி - எல்லா உயிரினங்களுக்கும் பொருந்தும். இயற்கையின் நியதி - உங்களால் ஒன்றும் செய்ய முடியாது.
ஆனால் உங்களுக்கும், ஓசைக்கும், மற்றும் சில திடப் பொருட்களுக்கும் பொருந்தாது. அதனால் நீங்களும் உங்கள் சந்ததியினரும் கவலைப்படத் தேவையில்லை. 120% வன்னிய சாதி ஒதுக்கீடு கேளுங்களேன் - உளறுவதில் என்ன கஞ்சத்தனம்?
//அப்போ OCயில சீட்டு காலியா இருக்கும்போதே பிசி, எம்பிசி, எஸ்சி, எஸ்டில எப்புடி ராசா கொஞ்சம் சீட்டுங்க முடிஞ்சிருக்கு, நீ சொல்ற மாதிரி பார்த்தா ஓசியில எல்லா சீட்டும் முடிஞ்ச பின்னாடி தான் பிசி, எம்பிசி, எஸ்சிக்குலாம் ஆரம்பிச்சிருக்கனும், இதுல எப்புடி ஓசி முடியாமயே மற்றதுக்கு ஆரம்பிச்சிருக்கு.... புரியலையா அது ஒரு தில்லாலங்கடி வேலைதான் நல்லா வெளக்கமா போட்டிருப்பேன் படிச்சிப்பாரு....//
சாமி தூங்குபுவன எழுப்பலாம், நடிப்பவன எழுப்ப முடியுமா?..
பேருக்கேத்தாப்பல நல்லா ஜல்லி அடிக்கிறார்ப்பா குழலி.
உண்மையிலேயே புரிஞ்சுதான் பேசுறாரா? இல்லை மருத்துவர் மாதிரி காமெடி பண்ணுரார?
அய்யா எல்லா கல்லூரியிலையும் OC கோட்டா முடிஞ்ச பின்னாடிதான் மத்ததுக்கு போகனும்ன்னு ரூல்ஸ் எதாவது இருக்கா.
நினைச்ச கல்லூரி,சீட்டு,இடம் இதுவெல்லாம் தீர்மானிக்கும் விசயமா இருக்கும் போது எல்லாவனோட எதிர்பார்ப்பு எங்க இருக்கும்?. அடுத்த கல்லூரி OC கோட்டாவுலையா, அல்லது தான் நினைச்ச கல்லூரி,சீட்டு,இடம் இதுவெல்லாம் இருக்கும் இடஒதுக்கீட்டு கோட்டாவுலையா?..
//எனக்கு தெரிஞ்சு இந்த இட ஒதுக்கீடு பிரச்சனைக்கு தீர்வா வன்னிய ஜாதியையும்,தேவரின ஜாதியையும் , இன்னும் கொஞ்சம் பிற முக்கியமான ஜாதிகளயும் Forward castல சேத்தா நாட்டுல மத்த மக்கள் முன்னேற முடியும்.//
மிஸ்டர் குழலி பதில் எங்கே?
/// மிஸ்டர் குழலி பதில் எங்கே? ////
குழம்பிப்போன எங்கள் சிறுதலை (கவனிக்கவும் தறுதலை அல்ல...) குழலி ஐயா அவர்கள் ரகசியமாக எங்கள் பெருதலை ஐயாவுடன் ஆலோசித்து வருவதால் இந்த பின்னூட்டங்களுக்கு பதில் இல்லை என்று தெரிவிக்கச்சொன்னார். மேலும் விவரங்களுக்கு மக்கள் டிவியை பாருங்கள்..
//எனக்கு தெரிஞ்சு இந்த இட ஒதுக்கீடு பிரச்சனைக்கு தீர்வா வன்னிய ஜாதியையும்,தேவரின ஜாதியையும் , இன்னும் கொஞ்சம் பிற முக்கியமான ஜாதிகளயும் Forward castல சேத்தா நாட்டுல மத்த மக்கள் முன்னேற முடியும்.//
கரெக்ட்டுங்க. இதோட குங்குமப்பொட்டுக் கவுண்டர்ஸ், யாதவர், இசுலாமியர், கிறித்தவர் இவர்க்ளையும் முன்னேறியவர்களாக ஃபார்வர்டு கம்யூனிட்டியில் சேர்த்துவிட்டு ஒபன் கேட்டகிரிக்கு சதவீதத்தை 50 சதவீதம் ஆக்கி 12% புதிய வகைப்படுத்தப்பட்ட மிகப்பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்க்கும் 18% தாழ்த்தப்பட்டவர்கள்+ பழங்குடியினர்க்கும் 20 சதவீதம் பொருளாதார ரீதியில் பரம ஏழைகளாக இருக்கும் இடஒதுக்கீடு இல்லாத அனைவருக்கும் எனப் புதிய இட ஒதுக்கீட்டுக் கொள்கை எடுத்து வந்தால் சமூகத்தின் அனைத்து வகையிலும் நலிந்த பிரிவினர் (சமூக, பொருளாதார வகையில்) எல்லோருக்கும் பயன் தரும்.
குறிப்பாக சாதி ஓட்டு அரசியல் காணாமல் போகும். தேசம் உருப்படும். மக்களும் மேம்படுவார்கள்!
//மனிதர்களுக்கு இது பொறுந்துமா? ஹிட்லர் செய்த யூத இன அழிப்புக்கு இது பொருந்துமா?//
அப்பாடா, என்னடா இஸ்ரேலை பற்றி எழுதி நாளாயிற்றே என நினைத்து கொண்டிருந்தேன். இன்றைய எனது பிறந்த நாள் (ஏப்ரல் 4) பரிசாக குழலி சான்ஸ் கொடுத்தார். அவருக்கு என் நன்றி.
நீங்கள் கேட்ட கேள்விக்கு ஆம் என்பதுதான் பதில். இந்த ஹிட்லர் என்ற மிருகம் தன்னை அறியாமல் யூதர்களுக்கு செய்த ஒரு நல்ல காரியம் இது. அதற்கு விலையான 60 லட்சம் மரணங்கள் மிக மிக அதிகமே. ஆனாலும் அந்த விலையை முதலிலேயே எடுத்துக் கொண்டு விட்டதால் ஜியோனிஸ்டுகள் அதன் பலனை பார்த்து பார்த்து எடுத்து கொண்டனர்.
இந்த ஹோலோக்காஸ்ட் வரை யூதர்கள் தாங்களிருக்கும் நாட்டுக்கு உண்மையாக இருந்து வாழ்ந்து விடலாமே என்றுதான் அசால்டாக இருந்தார்கள். அவர்களுக்கெல்லாம் இது சரியான அதிர்ச்சி வைத்தியம்.
ஆனால் அவர்கள் நினைப்பு அமெரிக்கா மற்றும் இந்தியா போன்ற மிகச்சில நாடுகளைத் தவிர எல்லாவற்றிலும் பொய்த்தது. இப்போதைய இஸ்ரேலை சீண்டவே யோசிப்பார்கள் பலர். அது மிகப்பெரிய வெற்றித்தானே.
நன்றி குழலி அவர்களே.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//வீ த பீப்புள் சொல்வது போல ஒரு கருத்தை நான் வலியுறுத்தவில்லை என்றாலும் பொருளாதார ரீதியில் எல்லோருக்கும் பங்கிட்டு தரவேண்டும் என்றேன்... //
ரவி நானும் நீங்க நினைக்கிற மாதிரி டி கிரேடு அரசு பணியாளனுக்கு இட ஒதுக்கீடு வேண்டாம் என்று சொல்லவில்லை, ஒவ்வொரு குரூப்பிலும் நாலு தலைமுறைக்கு இட ஒதுக்கீடு பயன் கொடுத்தால் எப்போ தரையில் இருக்கும் கூலிக்காரனுக்கு இட ஒதுக்கீடு பயன் தரும் என்று தான் கேட்டேன் :)
ரவி நீ ஒரு தாசில்தார் பையனையும் ஒரு புரோகிதர் பையனையும் பார்த்துவிட்டு பேசியிருக்கிறாய், கீழே இருக்கும் புள்ளிவிபரத்தை பார், தாசில்தார் பையன்கள் பிசியில் எத்தனைபேர் புரோகிதர் பிள்ளைகள் எஃப்சியில் எத்தனை பேர் என்று தெரியும்
http://www.annauniv.edu/tnea06/rama21.doc
CATEGORY OC BC MBC SC ST
ANNA UNIVERSITY 0 0 0 0 0
GOVT. & GOVT AIDED 0 0 0 0 1
SELF FINANCING 2839 4757 3804 4569 434
இலட்சக்கணக்கில் பணத்தை அழுது படிக்க வேண்டிய சுயநிதிக்கல்லூரிகளில் மட்டும் தான் இடம் நிரம்பாமல் உள்ளது,
31% OC யில் 2839 இடங்கள் மட்டுமே காலி ஆனால் 30% BC யில் 4757 இடங்கள் காலி (OCயை விட கிட்டத்தட்ட 70% அதிக காலியிடங்கள்)
20% MBC யிலோ 3804 இடங்கள் காலி (OCயை விட கிட்டத்தட்ட 107% அதிக காலியிடங்கள்)
18% SC யிலோ 4569 இடங்கள் காலி, (OCயை விட கிட்டத்தட்ட 177% அதிக காலியிடங்கள்)
இலவச அல்லது குறைந்த கட்டணத்தில் இடம் கிடைக்கவில்லையென்றாலும் OCயில் படிக்க முடிந்தவர்கள் அதிகம், ஆனால் அதே நிலை BC யில் OC யைவிட குறைவு ஆனால் MBCயைவிட அதிகம், இதே SC யை பார்த்தோமென்றால் காலியிடங்கள் MBCயைவிட அதிகம்.
வர்ணாசிரம அடுக்கு முறை ஏற்படுத்திய ஏழ்மைக்கு இந்த புள்ளிவிபரம் ஒரு உதாரணம்.
சுயநிதிகல்லூரிகளில் பிசியில் 4757சீட்டுகள் காலியாக உள்ளன, ஒரு பிசி ஓசி பிரிவில் சென்று காசு கொடுத்து சீட்டுவாங்குவதை விட பிசி பிரிவில் வாங்குவது இன்னமும் லாபம்... கல்லூரி பிரிவுகளை தேர்ந்தெடுக்கலாம் எனவே அவர்கள் ஓசியில் சேரமாட்டார்கள், அப்படியிருந்தும் பிசியில்,எம்பிசி,எஸ்சி, எஸ்டியில் இத்தனை காலியிடமென்றால் ஓசி முழுக்க எஃப்சி என்று தானே அர்த்தம்?
//ரவி நானும் நீங்க நினைக்கிற மாதிரி டி கிரேடு அரசு பணியாளனுக்கு இட ஒதுக்கீடு வேண்டாம் என்று சொல்லவில்லை,//
சென்ற ஆண்டுவரை க்ரீமிலேயருக்கு பொருளாதார வரையறை ஆண்டுக்கு ஒரு இலட்சம் வருமாணம், அதாவது மாதம் ரூபாய் 8,333.... அப்போ டி கிரேட் பியூன் பசங்க போனவருசம் க்ரீமிலேயர், இந்த வருசம் 20,000னு மாற்றியிருப்பதா சொல்றாங்க... அப்பவும் கூட ரிட்டையர் ஆகுற நிலையில் இருக்குற டி க்ரூப் ஆபிசருங்க இதை தொடுவார்கள், டில்லியில் 20,000 சம்பளம் வாங்கி 8,000 வாடகை கொடுத்து இன்ன பிற செலவுகள் செய்து மாத கடைசியில் கடன் வாங்குபவன் க்ரீமிலேயர், ஆனால் ஏதோ ஒரு கிராமத்தில் 19,999 சம்பாதித்து 1000 வாடகை கொடுத்து மாச கடைசியில் 5,000மோ பத்தாயிரமோ மிச்சம் பிடிப்பவன் க்ரீமிலேயர் இல்லை.... அப்படித்தானே? இன்றைக்கு பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு கேட்பவர்கள், நாளைக்கு நான் சொன்ன இந்த ஓட்டைகள், மற்றும் பொய் வருமான சர்ட்டிபிகேட் வாங்குகிறார்கள் என்றெல்லாம் சொல்லி இடஒதுக்கீட்டையை மொத்தமாக தூக்க சொல்வார்கள், இது தான் பொருளாதாரத்தை க்ரீமிலேயரில் சேர்க்க சொல்வதன் பிண்ணனி, இந்த பிண்ணனி புரிந்தால் செந்தழலும், வீ த பீப்புளும் தங்கள் நிலைப்பாட்டை மாற்றுவார்களா?
ஒவ்வொரு குரூப்பிலும் நாலு தலைமுறைக்கு இட ஒதுக்கீடு பயன் கொடுத்தாட்ல் எப்போ தரையில் இருக்கும் கூலிக்காரனுக்கு இட ஒதுக்கீடு பயன் தரும் என்று தான் கேட்டேன் :)
//ஒவ்வொரு குரூப்பிலும் நாலு தலைமுறைக்கு இட ஒதுக்கீடு பயன் கொடுத்தாட்ல் எப்போ தரையில் இருக்கும் கூலிக்காரனுக்கு இட ஒதுக்கீடு பயன் தரும் என்று தான் கேட்டேன் :)
//
இதுக்கு என்பதிவில் விளக்காமாவே சொல்லியிருக்கேன்...
http://kuzhali.blogspot.com/2007/04/blog-post.html
இதுவும் கூட க்ரீமிலேயருக்கு பொருளாதார வரையறை சொல்லி எப்படி இடஒதுக்கீட்டை ஒழிக்கும் முயற்சியோ அதுபோலத்தான் இதுவும்.
படிக்காத, கல்வி விழிப்புணர்வு இல்லாத குடும்பத்திலிருந்து ஒரே தலைமுறையில் ஹைஜம்ப் அடித்து உயர்கல்வி நிறுவனங்களுக்கு செல்ல இயலாது, படிப்பறிவில்லாத குடும்பத்திலிருந்து கிளார்க்காகவும், 'டி' கிரேட் பணியாளர்களாகவும் வெளிவருவார்கள் (என் தந்தை தலைமுறை இப்படித்தான் பெரும்பாலும் ), அதிலிருந்து அடுத்த தலைமுறை தான் அடுத்த உயர்கல்வி நிலைக்கு கொண்டு சேர்க்க முடியும், உயர்சாதியினர் இடஒதுக்கீட்டிற்கே ஆப்பு வைக்கும் எண்ணத்தில் தான் இதை தடை செய்ய சொல்கின்றனர், ஒயின்ஷாப்பில் ஊற்றிகொடுக்கவும், 'டி'க்ரூப் கிளார்க்காக்வும் தலைமுறையை நிறுத்திவிட்டு அய்யோ பாருங்கள் இடஒதுக்கீடு கொடுத்தும் ஐஐடியில் இத்தனை இடம் காலியாக இருக்கின்றது, கல்லூரி ட்ராபவுட் இத்தனை என்று ஓலமிட்டு இடஒதுக்கீட்டினால் பலன் இல்லை என்று மொத்த இடஒதுக்கீட்டிற்கும் ஆப்படிக்க நினைக்கின்றனர்.
நான் ஒரு இந்து. தாழ்த்தப்பட்ட ஹரிஜன வகுப்பை சேர்ந்தவன். என்னையும் உயர்ஜாதி என்று ஏற்றுக் கொள்வார்களா பார்ப்பனர்கள்? அவர்கள் போட்டுக் கொள்ளும் பூனூலை நானும் போட்டுக்கலாமா? நான் அவர்கள் வீட்டு திண்ணையில் கொஞ்ச நேரம் அமர்ந்தால் திண்ணையை கழுவாமல் இருப்பார்களா பார்ப்பனர்? எனக்கு பார்ப்பனர் பெண் கட்டித்தருவார்களா?
--------------------------------
osai cella post
மொத்த மெரிட் இடங்கள் = 430
பிற்படுத்தப் பட்டோர் = 321
மிகப் பிற்படுத்தப்பட்டோர் = 57
தாழ்த்தப்பட்டோர் = 14
உயர்குலத்தோர் = 38
(38/430) *100 = 8.837209302325581
(321/430)*100 = 74.65116279069768
(57/430) *100 = 13.25581395348837
(14/430) *100 = 3.255813953488372
3.255813953488372+13.25581395348837+74.65116279069768+8.837209302325581 = 100
31% Holds the 8.837209302325581 seats out of 100
30% holds the 74.65116279069768 seats
20% holds the 13.25581395348837 seats
19% holds the 3.255813953488372 seats
---------------------------------
31% OC யில் 2839 இடங்கள் மட்டுமே காலி ஆனால் 30% BC யில் 4757 இடங்கள் காலி (OCயை விட கிட்டத்தட்ட 70% அதிக காலியிடங்கள்)
20% MBC யிலோ 3804 இடங்கள் காலி (OCயை விட கிட்டத்தட்ட 107% அதிக காலியிடங்கள்)
18% SC யிலோ 4569 இடங்கள் காலி, (OCயை விட கிட்டத்தட்ட 177% அதிக காலியிடங்கள்)
மேலே உள்ளதில் தெரிகிறதா 74% இடங்களை BC பிடித்துள்ளனர். இங்கு உயர் சாதியினரின் அளவு 8.8.% மட்டுமே.
மீதி MBC அட்டகாசம் (மரம்வெட்டி தன் சாதிக்கா ஏற்படுத்தியது).
முதலில் வன்னிய,தேவரின சாதிகளை MBCலிருந்து FCக்கு மாற்றினாலே தமிழ்நாடு முன்னேறும். தமிழ்நாட்டில் பெரும்பாண்மையாக உள்ள இவர்கள் MBCல் அதிக இடங்களை ஆக்கிரமிக்கிறார்கள். அதனால் உண்மையான மற்ற மிகவும் பிற்படுத்தப்பட்டோர்கள் பாதிக்கப்படுகிறார்கள்.
// முதலில் ஒன்றை புரிந்துகொள்ளுங்கள்...இது FIT for ஸுர்வைவல் வேர்ல்டு...நீ முன்னேறும் காரணிகளை கொண்டிருந்தால் முன்னேறு...இல்லையென்றால் செத்து சுண்ணாம்பா போ...இது தான் பரிணாம கொள்கை..."தகுதியுள்ளவை தப்பி பிழைக்கும்"... //
அப்ப எதுக்கு ஜனநாயக இந்தியான்னு எதுக்கு பேர் வச்சிருக்கிங்க...
// திருக்கோவிலூருக்கு அருகில் உள்ள சித்திலிங்க மடம் என்ற கிராமத்தில் (வெட்டிப்பயலுக்கு தெரியும் கேட்டுப்பாருங்க), உள்ள ஒரு விவசாயியின் மகன், ஐ.ஏ.எஸ் தேர்வில் இந்தியாவிலேயே முதலாவதாக வந்தார்...இரண்டு வருடம் முன்பு...அவர் எந்த இட ஒதுக்கீட்டீல் வந்தார்...எந்த இட ஒதுக்கீடு அவரது கமிட்மெண்டையும், அறிவையும், வெற்றி பெற வேண்டும் என்ற வெறியையும் வளர்த்தது ? ///
விதிவிலக்கு எப்போதும் விதியாகாது ரவி... உதாரணங்கள் எல்லா விசயத்திலும் பொருந்தும்..
நான் சொல்வது எல்லாவகையிலும் வாய்ப்பு கொடுக்கப்பட வேண்டும். அதில் தேர்ந்தவர் வாழட்டும், தேராதவர் தேர்ந்தெடுக்கட்டும்..
27% இடஒதுக்கீடு என்றால் அதில் ஒருவராக வருவதும் போட்டிதானே.. அதில் ஒருவராக வேண்டுமென்றால் அதற்கு திறமை தானே வேண்டியிருக்கிறது...
அல்லது திறமையால் மட்டும் தான் பதவி என்றால். திறமையோடும், ஒதுக்கீடு இன்றி பதவிக்கு வந்த எத்தனை பேர் லஞ்சம் வாங்காமல், கடமையில் ஒழுங்காய் இருக்கிறார்கள்...?
// ஏன் இந்தியாவில் / இந்திய அரசின் நிதி உதவியுடன் படித்துவிட்டு வெளிநாட்டு நிறுவனத்துக்கு சேவை செய்யவேண்டும் ? இந்திய தேசியத்துக்கு சேவை செய்யவேண்டியது தானே..//
ஏன் ரிசர்வேசன் இன்றி படிக்கும் வேறு யாரும் பாரின் போய் சாக்லெட்/அல்வா வாங்கிட்டு வருவதே இல்லையா..?
இப்போதைக்கு இவ்வளவு முடிஞ்சா தொடர்ந்து சொல்கிறேன்..
http://tvpravi.blogspot.com/2007/04/blog-post_677.html
>>>>>>>>>>>>
முதலில் ஒன்றை புரிந்துகொள்ளுங்கள்...இது "FIT for Survival" வேர்ல்டு...நீ முன்னேறும் காரணிகளை கொண்டிருந்தால் முன்னேறு...இல்லையென்றால் செத்து சுண்ணாம்பா போ...இது தான் பரிணாம கொள்கை..."தகுதியுள்ளவை தப்பி பிழைக்கும்"...
<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<
திரு TVP ரவி
பரிணாமக் கொள்கைதான் இட ஒதுக்கீட்டுக்கு ஆதி காரணம்
அதிக ஓட்டு வலிமை பொருந்திய சாதிகளும், அதிக ஒற்றுமை வாய்ந்த சாதிகளும், (வன்னியரோ, தேவரோ, நாடாரோ), தங்கள் அரசியல் பலத்தால் பெரும் சலுகை தான் இட ஒதுக்கீடு
இருக்குறது ஜனத்தொகையில 4% அதிலையும் 10 கட்சிக்கு ஓட்டு போடுவேன், இருக்குறது 2% அதிலையும் என் புள்ளையை அமேரிக்காவில கிரீன் கார்டா (ஓட்டில்லாம) உக்காத்தி வெப்பேன்ன்னு சொன்னா பிளாகுல தான் வந்து கதற வேண்டி வரும்...
இட ஒதுக்கீடு கெடைக்காதவங்க, ஒழுங்கா இந்த ஜெனரேசனாவது நல்லா புள்ளைபெத்து, ஒத்துமையா இருந்து, அடுத்த ஜெனெரேசன் ஒரே கட்சிக்கு ஓட்டு போட்டு, அடுத்த ஜெனரேசன்ல ரிசர்வேசன் வாங்கிக்கலாம்
இல்லை அமேரிக்காவுக்கு போகலாம் ...
இல்லை சீ சீ இட ஒதுக்கீடு் மோசம்னு சொல்லலாம் ..
அவங்க அவங்க வசதிப்படி ......
அய்யா ஒரு முக்கியமான விசயம் சொல்லலாமா?
சில காலம் முன்பு ஐ.ஐ.எம் நிறுவனத்தில் ஆண்டு கட்டணம் ஒன்றரை
லட்ச ரூபாயாக இருந்தது. இதை 30,000 ஆக குறைக்க அரசு
முயற்சித்தது. முரளி மனோகர் ஜோஷி (டோண்டு அல்ல) கட்டணத்தை
குறைக்க வேண்டுமென்றார்.
எல்லா ஊரிலும் மாணவர்கள் கட்டணத்தை குறைக்க சொல்வார்கள். ஆனால்
இந்த அதிசய மாணவர்கள் கட்டணத்தை குறைக்கக் கூடாது என்று கொடி
பிடித்தார்கள்.
'தேசிய கீத புகழ்' நா..ரா..யண மூர்த்தி கட்டணத்தை குறைக்கக் கூடாது.
அப்படி செய்தால் தகுதி, தெறம போய்விடும் என்று ஒரு மனு எழுதி
மன்மோகன் சிங்கிடம் கொடுத்தார்.நல்ல எஜுகேசன் வெண்டுமென்றால்
செலவு செய்யத்தான் வேண்டுமென்றார். (ஏழைகளுக்கு திறமை இருந்தாலும் அவர்கள்
சேவை நாட்டுக்கு தேவை இல்லை. அவர்கள் மாடு மேய்க்க போகலாம்.
பணக்காரர்களுக்கு மட்டுமே திறமை உண்டு :))
இவர்களே இன்னொரு பக்கம் கிருமி லேயரை நீக்கு என்று சொல்வார்கள்.
கிருமி அல்லாத எந்த obc வருடம் இவ்வளவு கட்டணம் கொடுக்க முடியும்.?
ஒரு வழியாக இப்போது ஏழை மாணவர்களுக்கு இலவசம், மற்றவர்களுக்கு
இரண்டு லட்சம் என்று மாற்றி அமைத்திருக்கிறார்கள்.
http://www.indiabschools.com/bs_news_41.htm
Post a Comment