Wednesday, September 24, 2008

ஒரு ப்ராஜக்ட் மேனேஜரின் கதை (இறுதி பகுதி)

ஒருமுறை கொஞ்சம் சீரியஸான பொழுதில் அவருக்கும் என்னுடைய நன்பனுக்கு கடுமையான வாக்குவாதம்...குடி, கடவுள், பெண்கள், வறுமை என்று பல்வேறு திசைகளில் போனது..

சார், உங்களை நீங்க கொஞ்சம் மாத்திக்கிட்டா நல்லது...

என்ன மாத்திக்கனும் ?

உங்கக்கிட்ட இருக்க கெட்ட பழக்கங்கள் கொஞ்சம் மாத்திக்கிடுங்க சார், அப்புறம் ரொம்ப கஷ்டமாகிரும்...

என்ன கெட்ட பழக்கம் ? சொல்லுங்க அப்புறம் பார்க்கலாம்...

ஏய் விஜய், நீ சொல்றா...

விஜய் மெதுவாக ஆரம்பிச்சான்...சார் குடிக்கறது தப்பில்லையா ?

யார் சொன்னது தப்புன்னு ? ஏன் மேலை நாட்டுல சாப்பாட்டு டேபிள் மேலயே சரக்க வெச்சிருக்கான்...அப்பன் மவன் எல்லாரும் அடிக்கறான், அவன் கிட்ட போய் சொல்லுவியா ?

அங்க குடிக்கிறாங்கன்னா அது அவங்க க்ளைமேட்டுக்கு சூட் ஆகும் குடிக்கிறாங்க...இங்க எதுக்கு சார் குடிக்கிறோம் ? போதைக்கு தானே ?

ஏன் இங்க சரக்கே இல்லையா என்ன ? கற்காலத்துலயே சோம பாணம், சுறா பாணம் அப்படின்னு இருந்தது...

ஏன் ராமாயணம், மகாபாரத கதையில கூடத்தான் சரக்கு இருந்ததுக்கு ஆதாரம் இருக்கு...அப்போ என்ன இந்தியா க்ளைமேட் ஸ்விஸ்ஸர்லாந்து க்ளைமேட்டா இருந்ததா என்ன ?

சார், குடிக்கறது தப்பில்லை சார், அளவுக்கதிகமா குடிக்கறது தான் தப்பு...இடையில் புகுந்து நான்...

ஏண்டா, இவ்ளோ நேரம் குடிக்கறதே தப்புன்னு சொன்னீங்க, இப்ப அளவா குடிக்கனும்ங்கறீங்க...

எதுடா உங்க அளவு ? ஒருத்தனுக்கு நைண்டி அடிச்சா போதும்னா எனக்கு ஆப் அடிச்சாலும் மப்பு ஏறமாட்டேங்குது...நீங்க எல்லாம் மோந்து பாத்தாலே படுத்திடுறீங்க...அப்ப எது அளவு ? கவர்மெண்ட அதை மொதல்ல பிக்ஸ் பண்ணச்சொல்லு...அளவோட குடிக்கறோம்...

சார் அதை விடுங்க...கோவிலுக்கு போகக்கூடாது அப்படீன்னு நீங்க உங்க வொய்ப் கிட்ட சண்டை போட்டதா சொன்னீங்களே ? அது தப்பில்லையா ?

ஆமா...பூஜை, புனஸ்காரம்னு உப்பு சப்பில்லாத மேட்டருக்கு காசு செலவு பண்ணா ? அதான் இழுத்து போட்டு அடிச்சேன்...

சார், உங்களுக்கு கடவுள் நம்பிக்கை இல்லாம இருக்கலாம்...அதுக்காக அவங்களை ஏன் சார் தடுக்கனும் நீங்க ?

ஏய் என்ன சொல்ற நீ ? கொஞ்சமாவது அறிவு இருக்கா ? உலகம் கடவுள் படைச்சாடா உருவாச்சி ? பிக் பேங் தியரி தெரியுமா ? ஓசோன்ல ஹோல் தெரியுமா ? ப்ளாக் ஹோல் தெரியுமா ?

இவ்ளோ சைன்ஸ் வளந்திருக்கு, டி.என்.ஏவுல உள்ள ஸ்ட்ரக்சரை ஆராய்ச்சி பண்ணிக்கிட்டிருக்கும்போது, கோயில்ல அய்யர் ஊத்தற மாட்டு மூத்திரத்த தலையில தெளிச்சிக்கிட்டு வர்றது எதுக்கு ?

சார், கடவுள் அப்படீங்கறது அவங்கவங்க நம்பிக்கை சார்ந்த விஷயம். நீங்க பாலோ பண்ணலைன்னா ஏன் சார் அடுத்தவங்களை இரிட்டேட் பண்ணனும் ?

ஏன் விஜய் கூடத்தான் தினமும் காலையில சாமி கும்பிடுறான்...அதுக்காக நாங்க பண்ற ப்ராஜக்ட் டெலிவரி வேணாம்னு சொல்லிருவீங்களா சார் ?

கும்பிடுங்கடா. நல்லா கும்பிடுங்க. அதுக்கு முன்னால உங்க மண்டையில இருக்க களி மண்ணை கொஞ்சம் யூஸ் பண்ணுங்கன்னு சொல்றேன்...ஒம்போது கிரகமாம், பூமியை சுத்தி எல்லா கிரகமும் இருக்காம், அரை லூசுப்பயலுகளா.

புளூட்டோ, நெப்டியூனை ஏன் சேர்க்கலை ? அதுவும் இல்லாம மில்க்கீ வேயில ஆயிரக்கணக்கான கிரகங்கள் இருக்கே, அதுக்கெல்லாம் போடவேண்டியது தானே கட்டம் ? ஏன் துலாம், கண்ணியோட நிறுத்திட்டீங்க ? டைனோசர் ராசியையும் சேர்க்கவேண்டியது தானே ?

சார் இது வீண் விதண்டாவாதம். நம்மளோட முன்னோர்கள் சொன்னது எல்லாம் ஒவ்வொரு காரணத்துக்காகத்தான்..

ஏண்டா காக்காயிக்கு சோறு வைக்கச்சொன்னாங்களா முன்னோர்கள் ? முண்டச்சிக்கு மொட்டையடிக்க சொன்னாங்களா முன்னோர்கள் ?

எலுமிச்சம்பழத்தை வெச்சு திருஷ்டி கழிக்க சொன்னாங்களா முன்னோர்கள் ? அப்படி ஒரு மண்ணுக்கும் யூஸ் இல்லாத மேட்டரை வெச்சு என்னாங்கடா கிழிச்சீங்க ? கம்புயூட்டர் கண்டுபிடிச்சீங்களா, கரண்ட கண்டுபிடிச்சீங்களா, அட்லீஸ்ட் ஒரு கால்குலேட்டரயாவது கண்டுபிடிச்சீங்களா ?

வாழை எலையை எப்படி போட்டு திங்கனும்னு சொல்லிக்குடுக்கறதுக்கு எதுக்குடா அந்த பண்ணாடைங்க ? ஏன் இப்ப வாழை எலையை உட்டுட்டு ப்ளாஸ்டிக் ப்ளேட்ல திங்கறீங்க ? ஏன் வாழை எலையிலேயே திங்கறது ?

சார், உங்களை மடக்க வேற வழியில்ல, உங்க பர்சனல் மேட்டருக்கு தான் வரவேண்டியிருக்கு...

தாராளமா வாங்க, எதுவார்ந்தாலும் கேளுங்க சொல்றேன்...

ஒய்ப் குழந்தைன்னு ஆனதுக்கப்புறம் உங்களுக்கு எதுக்கு சார் வேற பொண்ணு ? ஏன் உங்களால உங்களோட ஒய்ப் குழந்தைக்கு உண்மையா இருக்கமுடியல ?

உண்மையா இருந்தாத்தான் நல்ல புருஷனா ? அவங்களை நான் நல்லா வெச்சிருக்கேன். அதே சமயம் என்னுடைய செக்ஸ் தேவைகளை அவளாள பூர்த்தி செய்ய முடியாது, அதனால் தான் நான் அடுத்த பெண்ணை தேடி போறேன்...

பணம் கொடுக்கிறென், வராளுங்க. அவளுங்க வரலைன்னா நான் போவ முடியாது இல்லையா ? அதே சமயம் எங்கிட்ட பணம் இல்லைன்னா எவ வருவா சொல்லு ?

சார், இதை ஏத்துக்க முடியாது, நீங்க என்ன தான் சொன்னாலும் தன்னோட புருஷன் ராமனா இருக்கத்தான் எந்த பொண்ணும் விரும்புவா.

நீ சொல்ற அதே கதைகள்ல ஒரு பொண்டாட்டியோட ராமனும் இருந்தான், அவுங்கப்பன் தசரதன் ஆயிரம் பொண்டாட்டியோட இருந்தான்.

அதே ராமன் தான் அவன் பொண்டாட்டிய நெருப்புல இறங்க சொன்னான், நேருக்கு நேர் சண்டைபோடாம மறைஞ்சு இருந்து அம்பு உட்டான்...

சார், உங்களால உங்களோட பெயிலியர்ஸ் எதையும் ஒத்துக்க முடியாது...அதனாலதான் உங்களோட தனிப்பட்ட வாழ்க்கையில உங்களால சக்ஸஸ்புல்லா இருக்கமுடியல...

ஏன், இப்ப என்ன பெயிலியர் ? என்னால நினைச்சத குடிக்க முடியுது, நினைச்ச பொண்ணோட படுக்க முடியுது, நினைச்ச பொருளை வாங்க முடியுது, இதுக்கு மேல என்ன சக்ஸஸ்புல்லா இருக்கறது ?

நினைச்ச பொருளை வாங்குறதோ, நினைச்ச சரக்க குடிக்கிறதோ, நினைச்ச பொண்ணோட படுக்கிறதோ - இது மட்டுமே லைப் இல்லை சார். சமுதாயம் உங்களை எப்படி பார்க்குதுன்னு.....

இடைமறிக்கிறார்...

என்ன பெரிய சமுதாயம் ? நான் ஒன்னுமில்லாதவனாயிருந்தா இந்த சமுதாயம் வந்து எனக்கு சோறு போடுமா என்ன ? என்னோட காருக்கு என்ன சமுதாயமா பெட்ரோல் போடப்போவுது ? எவன் எப்படி இருக்கான்னு புறனி பேசறதுக்கு தான் இந்த சமுதாயம் லாயக்கு.

அவனுங்களால யாருக்கும் எந்த நன்மையும் இல்ல. அதுனால சமுதாயம், சாக்கடை டிச்சு, சவுக்கு மரம்னு பேசுறதை விட்டுரு சரியா ? நான் ஹைதராபாத் போனா இதே சமுதாயத்தை கூட்டிக்கிட்டா போவப்போறேன் ?

கொஞ்சம் மெல்லிய குரலில் விஜய் சொல்கிறான்...உங்களோட குழந்தையோட எதிர்காலத்துக்காகவாவது உங்களோட ஈகோவை விட்டுட்டு ?

என்ன ஈகோ ? பொட்டச்சிகளுக்குத்தான் இப்ப ஈகோ அதிகம். பத்தாயிரம் ரூபா சம்பளம் வாங்கிட்டாலே என்னமோ ப்ளைட் ஓட்டுறமாதிரி நடக்கறாளுங்க. அம்பதாயிரம் சம்பாதிக்கற என்னோட பொண்டாட்டிக்கு எவ்ளோ ஈகோ இருக்கும்னு நீயே முடிவு பண்ணிக்க...

சார், இந்த மைண்ட் செட்டோட இருந்தா எப்படி சார் நீங்க ஒன்னா சேர்ந்து வாழமுடியும் ? அட்லீஸ்ட் உங்களோட குழந்தையோட எதிர்காலத்தை பாருங்க சார் ப்ளீஸ்...

இப்ப அடுத்த ரவுண்ட போடலாம், அப்புறமா குழந்தையோட எதிர்காலத்தை பார்க்கலாம் ஹா ஹா ஹா என்று வெடிச்சிரிப்பாக சிரிக்கிறார்...நான் விஜய் முகத்தை பார்த்தேன்...

என்னவென்று தெரியாத ஏதோ ஒரு உணர்ச்சியை அவன் முகம் வெளிப்படுத்திக்கொண்டிருந்தது...அவன் எப்போதும் இப்படித்தான், அவன் என்ன நினைக்கிறான் என்பதை அவன் முகத்தில் இருந்து கண்டுபிடிக்கவே முடியாது...!!!

சார் கிளம்பறேன் என்றபடி எழுந்தேன், விஜய் எனக்கு முன்பாக வாசல் அருகில் நின்றிருந்தான்...

அடுத்த வாரம் அவருடைய ட்ரைவர் சலீம் பாய் போன் செய்தார்.

சார். ரோட்ல ட்ராபிக்ல சண்டையில ஒருத்தன் கழுத்த நெறிச்சுட்டான் சார். தொண்டையில காயம் சார், டாக்டர் குடிக்கக்கூடாதுன்னு சொன்னார். இவர் நைட்டு குடிச்சார் சார்.

மேலே பேசமுடியாமல் தினறினார் பாய்...

காலையில எழுந்தவுடனே மூச்சுவிட முடியாம, இருமல் வந்து,

சார் போய்ட்டார் சார்...

. முற்றுப்புள்ளி

நினைவுகள் முற்றும்...!!!

.

23 comments:

Bharath said...

It was worth waiting.. well written.. தப்பாயிருந்தாலும் அவர் பக்கத்து நியாயத்தை சொன்ன விதம் அருமை.. write more..

Robin said...

மதுவால் சீரழிந்த குடும்பங்கள் ஏராளம் நம் நாட்டில் உண்டு. மது என்று ஓன்று இருந்தால் தானே இவர்கள் எல்லாம் குடிப்பார்கள்? ஆனால் இங்கே என்னவென்றால் அரசாங்கமே மதுக்கடைகளை நடத்துகிறது.

Anonymous said...

நன்றி பரத் !!

Anonymous said...

///ஆனால் இங்கே என்னவென்றால் அரசாங்கமே மதுக்கடைகளை நடத்துகிறது.///

அரசாங்கம் நடத்தவில்லை என்றால் தனியார் நடத்துவாங்க. தனியாரை தடுத்தால் தனிநபர்கள் நடத்துவாங்க. (காவல் துறை உதவியுடன்)

Bee'morgan said...

உங்கள் எழுத்து நடை, மிகச் சரளமாகச் செல்கிறது.. வாத பிரதி வாதங்களை அடுக்கிய விதம், அற்புதம்.

Anonymous said...

நன்றி beemorgan. !!!

Anonymous said...

25 people are gummying now

கோபிநாத் said...

தல

கதை சூப்பர் ;)

வெண்பூ said...

அருமையான கடைசி பாகம் ரவி. அவர் நம் பார்வைக்கு தவறானவராக தெரிகிறாரே தவிர அவர் தவறான்வரில்லை என்ற வாதம் ஓரளவுக்கு சரியாகவே படுகிறது.

அமர பாரதி said...

//என்ன பெரிய சமுதாயம் ? நான் ஒன்னுமில்லாதவனாயிருந்தா இந்த சமுதாயம் வந்து எனக்கு சோறு போடுமா என்ன ? என்னோட காருக்கு என்ன சமுதாயமா பெட்ரோல் போடப்போவுது ? எவன் எப்படி இருக்கான்னு புறனி பேசறதுக்கு தான் இந்த சமுதாயம் லாயக்கு.

அவனுங்களால யாருக்கும் எந்த நன்மையும் இல்ல. அதுனால சமுதாயம், சாக்கடை டிச்சு, சவுக்கு மரம்னு பேசுறதை விட்டுரு சரியா ? நான் ஹைதராபாத் போனா இதே சமுதாயத்தை கூட்டிக்கிட்டா போவப்போறேன் ///

அருமையான வாதம். இவ்வளவு பேசியவர் தன்னுடைய உடம்பை மட்டும் பத்திரமாக பார்த்துக் கொண்டு இர்ருந்திருந்தால் இப்படி ஆகியிருக்காது. சமுதாயத்தைப் பற்றி இந்த விஷயங்களுக்காக கவலைப்பட வேண்டியதில்லை. கையில் பணம் இருந்தால் சமுதாயம் நல்லவன் என்று சொல்லும் இல்லையென்றால் அவ்வளவுதான். ஆனால் இவர் மனைவிக்கும் தன்னுடைய சொந்த உடலுக்கும் செய்த துரோகம் தவறானதே.

ரவி said...

///அருமையான கடைசி பாகம் ரவி. அவர் நம் பார்வைக்கு தவறானவராக தெரிகிறாரே தவிர அவர் தவறான்வரில்லை என்ற வாதம் ஓரளவுக்கு சரியாகவே படுகிறது.///

கடைசியில வில்லன் பக்கம் சாய்ஞ்சுட்டீங்களே வெண்பூ

மங்களூர் சிவா said...

//
//என்ன பெரிய சமுதாயம் ? நான் ஒன்னுமில்லாதவனாயிருந்தா இந்த சமுதாயம் வந்து எனக்கு சோறு போடுமா என்ன ? என்னோட காருக்கு என்ன சமுதாயமா பெட்ரோல் போடப்போவுது ? எவன் எப்படி இருக்கான்னு புறனி பேசறதுக்கு தான் இந்த சமுதாயம் லாயக்கு.
//

okies

ரவி said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கோபிநாத்

ரவி said...

///ஆனால் இவர் மனைவிக்கும் தன்னுடைய சொந்த உடலுக்கும் செய்த துரோகம் தவறானதே.///

அதைத்தான் துரோகம் என்றே அவர் ஒத்துக்கொள்ளவில்லையே கடைசீவரை

ரவி said...

வாங்க மேங்களூர் ஜிவா !!! சுகமாயிருக்கிறீயதானே ?

ஜோசப் பால்ராஜ் said...

உங்க மேனேஜர் தனிப்பட்ட வாழ்க்கைல சரியா இல்லைங்கிற உங்க கருத்தோடு நான் ஒத்துப் போனாலும், இந்த பாகத்தில் அவர் சமுதாயத்தைக் குறித்து சொன்ன அத்தனை கருத்துகளும் உண்மையோ உண்மை.

சமுதாயத்திற்காக என்று வாழ ஆரம்பித்தால் நாம் நமது சந்தோசங்களை இழக்க வேண்டிதான் வரும். சமுதாயம் என்பது யார்? நம்மை சுற்றியுள்ள, நம்மைப் பற்றி அறிந்த ஒரு சிலர். அவர்கள் நம்மைப் பற்றி எத்தனை நாள் பேசுவார்கள்? ஒரு வாரம் பேசுவார்கள், அடுத்த வாரம் நம்மை விட சுவாரசியமான வேறு ஒரு விசயம் அவர்களுக்கு கிடைத்து விடும். கஷ்டப்படும் போதும் நம்மை தூற்றும், நல்ல நிலையில் இருந்தாலும் தூற்றும் பொறாமை பிடித்த சமுதாயத்தைக் குறித்து கவலைப்படத் தேவையில்லை என்றாலும்,தனி மனித ஒழுக்கம் மிகவும் இன்றியமையாதது. அது இல்லை என்றால் ஒன்றும் இல்லை.
இத் தொடரை முழுவதுமாய் படித்திருந்தாலும், இப்போது தான் பின்னூட்டமிடுகின்றேன். மிக நன்றாய் எழுதியிருந்தீர்கள். வாழ்த்துக்கள் தோழரே.

Anonymous said...

இவராவது மரணம் வந்து பொட்டுன்னு போயிட்டார். இவர் சீரழித்த பெண்களில் எத்தனையோ பேர் வாழ்நாள் முழுக்க அந்த சித்திரவதையை அனுபவிக்க போகிறார்கள்

Anonymous said...

Good writing style, keep it up.

I think the argument about sex is true. In my experience, because of the conditions in India, we are not enjoying the sex when we are at between 25-35 (or whenever you get married). We learn, wife looses her reluctance over a period of time, by which time, we both are above 32..35. Now for wives another problem creeps up, they suddenly start to feel that we are old, and sex is "Asingam" and at this age this is too much. When is this? When we, the men, become master of the trade, and really want to enjoy every aspect of it. Alas, what do we do, nothing, and learn to adjust, (atleast most of us). And there are few folks like our hero (or villain) here in the story, start to enjoy. I would say that is right, his fault was drinking, not sex. So I would say, either educate the wives about sex, if you are not able to, just enjoy (elsewhere!!!!;-).

Anonymous said...

I agree with the last comment! There are nothing like universal good/bad habits/behaviours. Each society/culture has its own perspective about good/bad habits.

I also believe, if the argument from Vijay has been about hazard to the PM's health because of his habit of drinking with no limits and mix it with sex with strangers , there is a chance(!) that he could have realized what he was doing wrong.

Anonymous said...

///உங்க மேனேஜர் தனிப்பட்ட வாழ்க்கைல சரியா இல்லைங்கிற உங்க கருத்தோடு நான் ஒத்துப் போனாலும், இந்த பாகத்தில் அவர் சமுதாயத்தைக் குறித்து சொன்ன அத்தனை கருத்துகளும் உண்மையோ உண்மை.
///

வாங்க ஜோசப் பால்ராஜ். "உங்க கதையில் உள்ள மேனேஜர்" என்று இருக்கவேண்டும்...உண்மையில் அப்படி எந்த மேனேஜரும் இல்லை, நன்பன் விஜய் இருப்பது உண்மை :)

Anonymous said...

///Anonymous said...
Good writing style, keep it up.

//

மோகன் தாஸ் என்று ஒருவர் எழுதுகிறார், அவரின் ரைட்டிங் ஸ்டைலை காப்பி அடிச்சேன் :)) அவருடைய பதிவுகள், கதைகளையும் வாசிக்கவும்...

Anonymous said...

///I also believe, if the argument from Vijay has been about hazard to the PM's health because of his habit of drinking with no limits and mix it with sex with strangers , there is a chance(!) that he could have realized what he was doing wrong.

Thursday, September 25, 2008
//

அனானியாச்சொன்னாலும் நச்சுனு சொன்னீங்க

Anonymous said...

III:
Is this a real story?
or u imagination?

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால்

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால் டயபட்டீஸ் / நீரிழிவு / சர்க்கரை நோயை விரட்ட நியான்டர் செல்வனால் ஆரம்பிக்கப்பட்ட இந்த குழுமத்திற்கு ( https://www....