அந்த திரட்டி, அப்படி இருக்கு...அதனால நீங்க இப்படி மாத்துங்க என்றெல்லாம் கருத்து கந்தசாமியாக விரும்பவில்லை...
இருந்தாலும் மற்ற திரட்டிகளின் நல்ல பண்புகளை நமது திரட்டியிலும் பொருத்தினால் கொஞ்சம் நல்லா இருக்குமே என்பது தான் என்னுடைய வேண்டுகோள்...
ஏற்கனவே பல காண்ட்ரவர்ஸிகள் சூடாக இடுகை பற்றி இருக்கிறது...(ஏன் நான் போடும் சில குப்பை இடுகைகளே சூடான இடுகைக்கு வந்து தொலைவது எப்படி இருக்கிறது ?)
நல்ல பதிவுகள் சூடான இடுகைக்கு செல்வதில்லை, காண்ட்ரவர்ஷியல் மற்றும் கவர்ச்சியான தலைப்பு உள்ள பதிவுகளே செல்கின்றன...
சில சமயம் வீக் எண்ட் ஜொள்ளு என்று பதிவு தலைப்பு வைத்து உள்ளே கே.பி.சுந்தராம்பாள் படம் போட்டால் கூட அது சூடான இடுகைக்கு வந்துவிடுகிறது...
மேட்டர் இது தான்...
சூடான இடுகையை எவ்வளவு பேர் பார்வையிடுகிறார்கள் என்பதை வைத்து காட்டுகிறீர்கள், வாசகர் பரிந்துரையை எவ்வளவு பேர் ஓட்டளிக்கிறார்கள் என்பதை வைத்து காட்டுகிறீர்கள்...
இந்த பண்புகளை ஏன் ஒருங்கமைக்க கூடாது ?
வாசகர்கள் ஓட்டளிக்கும்போது "வெற்றி" என்பது போல காட்டும் கை சின்னத்தை கருவி பட்டையில் இருந்து அமுக்குகிறார்கள், அதனால் அது வாசகர் பரிந்துரையில் வருகிறது ( இதுவே இன்னும் நிறைய பேருக்கு தெரியாதுன்னு நினைக்கிறேன்)..
அதை சற்று மாற்றி, "சூடான இடுகையாக்கு" என்று கொடுத்துவிட்டீர்கள் என்றால், உள்ளே பதிவை படித்த பிறகு, குப்பை என்று தெரிந்தால் அதை சூடான இடுகை ஆக்க தேவை இல்லை..உண்மையிலேயே சூடான இடுகைதான் என்றால் அதை கண்டிப்பாக சூடான இடுகைக்கான வாக்கை அளித்து சூடான இடுகை ஆக்குகிறோம்..
வாசகர் பரித்துரைக்கான பத்து செண்டிமீட்டர் நீள காலம் + சூடான இடுகைக்கான பத்து செண்டிமீட்டர் காலத்தில் இரண்டு மடங்கான இடுகைகளை காட்டலாமே ?
என்ன சொல்றீங்க தமிழ்மணம் நிர்வாகிகளே ?
Subscribe to:
Post Comments (Atom)
டயபட்டீஸ் ப்ரோட்டக்கால்
டயபட்டீஸ் ப்ரோட்டக்கால் டயபட்டீஸ் / நீரிழிவு / சர்க்கரை நோயை விரட்ட நியான்டர் செல்வனால் ஆரம்பிக்கப்பட்ட இந்த குழுமத்திற்கு ( https://www....
-
நித்யானந்தா விவகாரம் ஆரம்பித்தவுடன் எல்லோரும் எங்கே எங்கே என்று இணையத்தில் தேடியது அந்த வீடியோவைத்தான்...!! ட்விட்டரில், பேஸ்புக்கில்...
-
'கள்' உண்ணாமை வேண்டும் அப்படின்னு காந்தி சொன்னதா கேள்வி..ஆனா அவர் கிட்ட கள் பத்தி யாரோ கதை விட்டு இருக்கனும்...கள் ரொம்ம போதை..உடம்ப...
-
பார்ப்பனீயம் குறித்து நிலவும் பெருங்குழப்பம் காரணமாக ஒரு அனானி டோண்டு ராகவன் சாரிடமே, சில விளக்கங்கள் கேட்டிருக்கிறார்... நிறைய புதிய பதிவர்...
26 comments:
இப்போதிருக்கும் வாசகர் பரிந்துரை என்பதே காமெடியான விஷயம். டைனமிக் ஐபி வைத்திருக்கும் யார் வேண்டுமானாலும் பரிந்துரையில் முன்னணிக்கு வரலாம். செல்வன், குமரன், எ.அ.பாலா இவர்களை குறிப்பிட்டு சொல்கிறேன் என்று யாரும் எடுத்துக் கொள்ளக்கூடாது :-)
சூடான இடுகைகள் ஹிட்ஸ் அடிப்படையில் வருவதே நியாயமானது. வேண்டுமானால் ஒரே ஐ.பி.யில் இருந்து ஒரு நாளைக்கு ஒரு பதிவுக்கு ஒரே ஒரு ஹிட் மட்டும் கொடுக்கலாம்.
பெரும்பாலான பதிவுகள் தரமற்று இருப்பதால் தமிழ்மணமே தரமான பத்து இடுகைகளை தனியாக பட்டியலிட்டால் நன்றாக இருக்கும். மற்றபடி வாசகர் பரிந்துரை என்ற ஜனநாயகம் வழக்கம்போல் ஊழலுக்கே வழி வகுக்கும்.
good idea.
'ஜில்' தலைப்பு வெச்சு, ஜூடேத்த முடியாம பண்ண இது ஒதவும்.
எம்மாந்தடவ 'வீக் எண்ட் ஜொள்ளு'ப்பதிவில் ஏமாந்திருப்போம்? இதையெல்லம் தவிர்க்கலாம். உண்மையான 'ஜூடு' ஜூடாகட்டும்.
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்......................அப்போ எப்படி என் பதிவெல்லாம் சூடான இடுகைக்கு வர்றதாம்?
நல்ல யோசனைதான். லக்கி சொல்லிய பிரச்சனையும் இருக்கிறது.
வாசகர் தேர்வுக்குப் பதில் பதிவர் தேர்வாக இருந்தால் நலம்!
இப்போ இந்தப் பதிவு சூடான இடுகைல வருமா வராதா? தலைப்பு அப்படி, அதான் :):):)
டைனமிக் ஐபி வைத்து ஒவ்வொரு ஐப்பி மாற்றி மாற்றி வேனும்னே க்ளிக் பண்ணுவாங்களா ?
அவ்ளோ வெட்டியா இருக்கறவங்க பதிவு ஜூடான இடுகையில வந்து தொலையட்டுமே :)))
100 க்கு 10 % இப்படி போயிட்டாக்கூட கொஞ்சமாச்சம் நல்ல பதிவுகள் சூடான இடுகையில வரட்டுமே ?!!!
அதே மாதிரி தமிழ்மணம் ..முகப்பு அலங்காரத்தையும் ..மாத்தின நல்லாருக்கும்... போரடிக்குதுப்பா ..மாதம் ஒரு முகப்பு ன்னு மாத்தினா என்ன ...சூடான இடுகை இப்ப இருக்கிற மாதிரி வந்தாதான் ஒரு திரில் இருக்கும் ..யார் வேண்டுமானாலும் இடம் பிடிக்க முடியும் ..யார் முதல்வர் என்பதும் தெரியும்
நல்ல யோசனை..
நர்சிம்
புதியவர்களுக்கு தமிழ்மணம் தனி இடம் தர வேண்டும்.பழம் தின்னு கோட்டை போட்டது மட்டும் சூடான இடுகையில் வந்து கொண்டிருந்தாலும் ,நியாயமில்லை.அவங்களுக்கு கொவ்ரவம் கொடுத்து தனி பெட்டி போற்ற வேண்டியது.
இன்னைக்கு இது சூடாகும் மச்சான்!
மறுபடியும் சூடான இடுகை பிரச்சனையா
ஸ்ஸ்ஸ்ப்பா இப்பவே கண்ண கட்டுதே
ரவி அண்ணா பதிவு போட எப்படி உங்களுக்கு மட்டும் இப்படி ஜீடா மேட்டர் கிடைக்குது
\\நீங்கள் அளிக்கும் பின்னூட்டங்களுக்கு நீங்களே பொறுப்பாளி...நிர்வாகம் பொறுப்பல்ல\\
சூப்பர்
///புதியவர்களுக்கு தமிழ்மணம் தனி இடம் தர வேண்டும்//
நல்ல யோசனை
இந்த கருத்துகளை நான் வழிமொழிகிறேன்
//டைனமிக் ஐபி வைத்து ஒவ்வொரு ஐப்பி மாற்றி மாற்றி வேனும்னே க்ளிக் பண்ணுவாங்களா ?
//
மோடத்தை ‘ஆன்' ‘ஆஃப்' செய்து உடனுக்குடன் ஓட்டுக்களை அதிகரிக்க முடியும். நானும் தோழர் ஒருவரும் ஆரம்பத்தில் பரிசோதித்து கண்ட உண்மை இது.
நீங்கள் சொல்லும் முறையில் சூடான இடுகைகள் வரும் என்றால் பெரும்பாலான மொக்கைகள் இந்த மெதட்டை பயன்படுத்தி கும்மி அடித்துவிடுவார்கள் :-)
///மோடத்தை ‘ஆன்' ‘ஆஃப்' செய்து உடனுக்குடன் ஓட்டுக்களை அதிகரிக்க முடியும். நானும் தோழர் ஒருவரும் ஆரம்பத்தில் பரிசோதித்து கண்ட உண்மை இது.
நீங்கள் சொல்லும் முறையில் சூடான இடுகைகள் வரும் என்றால் பெரும்பாலான மொக்கைகள் இந்த மெதட்டை பயன்படுத்தி கும்மி அடித்துவிடுவார்கள் :-)///
தோழர், நமது குழுவினர் அனைவரும் மொள்ளமாறிகள் என்று அனைவரும் அறிந்ததே, இருந்தாலும் சில நல்ல பதிவுகள் சூடான இடுகைக்கு செல்ல ஒரு வழி கிடைக்குமே என்று ஆதங்கம்...
//தோழர், நமது குழுவினர் அனைவரும் மொள்ளமாறிகள் என்று அனைவரும் அறிந்ததே, இருந்தாலும் சில நல்ல பதிவுகள் சூடான இடுகைக்கு செல்ல ஒரு வழி கிடைக்குமே என்று ஆதங்கம்...//
தோழர்!
நாம் முடிச்சவிக்கிகள் என்பது உலகுக்கே தெரியும்.
பதிவு நல்லதா இல்லையா என்று பார்த்து முத்திரை குத்தும் வழக்கம் இருந்திருந்தால் இந்தியா எப்போதோ சூப்பர் பவர் ஆகிவிட்டிருக்குமே?
உதாரணத்துக்கு அண்ணை பெயரிலி ஒரு அருமையான பதிவெழுதினால் எத்தனை பேர் + குத்தி, சூடான இடுகை ஆக்குவார்கள்?
இங்கே பார்ப்பது பதிவரை தானே தவிர பதிவை அல்ல என்பது தான் பிரச்சினை.
20
நல்ல யோசனை.. நல்லவேளை இது சூடான இடுக்கைக்கு வந்தது
http://surveysan.blogspot.com/2008/09/tamilish.html
நான் ஒரு கொலைகாரன், நிறுத்துங்கடா.
டண்டணக்கா
Comments Posted By KARTHIKRAMAS
Displaying 1 To 3 Of 3 Comments
‘Digg’ for Tamil Blogs
மேலே “ஓபன் ஓபிஎம் எல் மூடிய குழுமம் ரவிசங்கர்” என்ற குறிப்பினைக் குறித்து
நண்பர் ஒருவர் வினா எழுப்பியிருந்தார். அது பற்றிய சிறிய விளக்கம மட்டும் இங்கு.
ரவிசங்கர் ஓபன் ஓபிஎம் எல் பற்றி ஆரம்பித்த குழ்மத்ட்ஜை சில வாரங்களுக்கு மூடிய குழுமமாக நடத்திவந்ததை பற்றி சொல்லும்போது ஏதோ ஒரு காரணத்துக்காக அவ்வாறு செய்யவேண்டிய கட்டாயம் இருந்தாதாக சொல்லியிருந்தார். பொதுவாக ரவிசங்கர் செய்யும் எதிலும் அவ்வளவாக எனக்கு ஆர்வம் இருப்பதில்லை என்பதால், அப்போதும் பெரிதாக அதை எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால அதே போன்று வற்புறுத்தும் காரணங்கள் ‘தமிழ்மணத்துக்கு இல்லவே இல்லை’ என்ற முடிவுக்கு ரவிசங்கர் எப்படி வந்தார் என்பதுதான் ‘ஓபன் ஓபிஎம் எல் மூடிய குழுமம் ரவிசங்கர் என்ற அடைமொழியுடன் குறிப்பிட காரணம்.
முக்கியக் குறிப்பு: மேற்கண்ட எதுவும் தமிழ்மண்த்தின், டி எம் ஐ யின் கருத்தல்ல.
Comment Posted By karthikramas On April 4, 2008 @ 7:08 pm
அன்புள்ள கில்லி,
தமிழ்மணத்தின் ‘தெரிவு’ தளத்தை ஓபன் ஓபிஎமெல் மூடிய குழுமம் புகழ் ரவிசங்கர் கண்டுபிடித்தவுடன் தனது பதிவில் தெரிவித்திருந்தார். பின்னர் தளத்தின் வேலை இன்னும் முடியவிலையாதலால், தளம் பொதுப்பார்வைக்கு மூடப்பட்டது.
வருங்காலத்தில் வரப்போகும் அரசியல் காரணங்களுக்காக அதையும் இங்கே பதிகிறேன்.
நன்றி.
http://kanimai.blogspot.com/2008/03/blog-post.html
Comment Posted By karthikramas On April 4, 2008 @ 6:00 pm
-----------------
don't ask why Gilli's original post vanished
‘Digg’ for Tamil Blogs
DIGG on net for தெரிவு by தமிழ்மணம்.
வருங்காலத்தில் வரப்போகும் அரசியல் காரணங்களுக்காக அதையும் இங்கே பதிகிறேன்.
http://therivu.thamizmanam.com
//இந்த பண்புகளை ஏன் ஒருங்கமைக்க கூடாது ?//
நல்ல, நியாயமான கேள்வி. "மெட்டுக்குப் பாட்டெழுதும் புலவர்கள்" பெருகி விட்ட போது, மெட்டின் மீது கவனம் செலுத்தினால் கூட பாட்டின் தரம் ஓரளவுக்கு சீராக வாய்ப்பு பெருகும்.
Post a Comment