Tuesday, September 23, 2008

இரண்டாம் திருமணம் செய்பவர்களுக்கான பத்து டிப்ஸ்

1. உங்கள் முதல் திருமணத்தில் உள்ள பிரச்சினைகளை முதலில் முடியுங்கள் - பொருளாதார, சமூக, வாழுமிடத்தில் உள்ள தொல்லைகளில் இருந்து முதலில் வெளியே வாருங்கள்...நீங்கள் ஒரு புதிய உறவுக்கு தயார் என்பதை நீங்கள் உங்கள் மனதில் இருத்துங்கள்...

2. உங்கள் தவறுகளை உணருங்கள்...உங்கள் முதல் திருமண அனுபவத்தினை சீர் தூக்கிப்பாருங்கள்...உங்கள் பலம், பலவீனம் ஆகியவற்றை அசைபோடுங்கள்...பழைய தவறுகளை திரும்ப செய்துவிடாமல் இருக்க இது நிச்சயம் தேவையான ஒன்று...

3. உங்கள் புதிய உறவை முழுமையாக புரிந்துகொள்ள முயலுங்கள்...இந்த இரண்டாவது திருமணம் உங்களுடைய உயிரில்பாதியை பற்றி ஆழமாக தெரிந்துகொள்ள ஒரு வாய்ப்பு என்று நினையுங்கள்....உங்களுக்கு குழந்தை இருப்பின் அந்த குழந்தையை பற்றி, அந்த குழந்தையின் எதிர்காலம் பற்றி உங்கள் புதிய வாழ்க்கைத்துணையின் உள்ளக்கிடக்கை என்னவாக இருக்கிறது என்பதை ஆழமாக வெளிக்கொண்டுவாருங்கள்...

4. நீங்கள் நீங்களாக இருங்கள், திறந்த புத்தகமாயிருங்கள்...மென்மையாக பேசுங்கள்...உங்கள் பயங்கள், சந்தேகங்கள், நம்பிக்கைகள் போன்றவைகளை வெளிப்படையாக சொல்லுங்கள்...உங்கள் உள்ளக்கிடக்கைகள் மற்றும் ஒரு தோல்வியை தந்துவிடும் என்ற எண்ணம் இல்லாமல் உங்கள் புதிய உறவிடம் அனைத்தையும் வெளிப்படுத்துங்கள்...

5. திருமணத்துக்கு முன்பு வழிகாட்ட தன்னார்வ தொண்டு நிறுவனங்களால் நடத்தப்படும் கவுன்ஸிலிங் போன்றவற்றில் கலந்துகொள்ளுங்கள்...உங்கள் மறுமணத்திற்கான ஆழமான அடித்தளம் அமையுங்கள்...

6. புதிதாக தொடங்குங்கள். ஒரு புதிய வீட்டில் - புதிய நன்பர்களுடன் உங்கள் மறுமணத்தை தொடங்குங்கள்...பழைய பேய்கள் உங்கள் இதயத்தை மீண்டும் துளைத்துவிடாதபடிக்கு, பழைய ஊரில் இருந்து வெளியேறுவது கூட பலனையும் நிம்மதியையும் தரும்...

7. புதிய பழக்க வழக்கங்களை உருவாக்குங்கள்...ஜாகிங், ஜிம், ஏதாவது புதிய மொழி படித்தல், புத்தகங்கள் வாசித்தல் என்று உங்கள் பழைய பழக்கங்களை தூக்கி எறிந்துவிட்டு புதிய ஒரு உலகத்துக்கு தயாராகுங்கள்...மறுமணத்தினை புத்தம் புதியதாக ஆரம்பிக்க ஒரு சிறந்த வழி இது...

8. வளைந்துகொடுக்க பழகுங்கள்....உங்கள் பழைய பழக்கங்களில் இருந்து விடுபட்டால் தான் ஒரு வெற்றிகரமான புதிய வாழ்க்கையை தொடங்கமுடியும்...உங்கள் உள்ளத்தை திறந்தே வைத்திருங்கள்...உங்களை மாற்றிக்கொள்ள தயாராக இருங்கள்...இது உங்கள் புதிய வாழ்க்கைத்துணையையும் உங்களையும் அற்புதமான தம்பதியினராக உதவும்...

9. பணப்பரிமாற்றம் போன்ற விடயங்களே மன உளைச்சலை தந்து, புதிய வாழ்க்கையை நிம்மதியாக அனுபவிக்க விடாமல் செய்யும் தொந்தரவுகள். அதனால் முதலில் ஒரு வழக்கறிஞரின் உதவியையோ அல்லது பொருளாதார விடயங்களை கவனிக்கும் நபர்களையோ சந்தித்து, பொருளாதார விடயங்களை முழுமையாக முடித்துக்கொள்ளவும்...

10. தோல்விகளை பற்றிய சிந்தனைகளை அறவே விட்டொழியுங்கள்...உங்கள் புதிய வாழ்க்கையை பாஸிட்டிவ் சிந்தனைகளோடு எதிர்கொள்ளுங்கள்...உங்கள் பழைய தோல்விகளை நினைத்துக்கூட பார்க்கவேண்டாம்...உங்கள் புதிய வாழ்க்கைத்துணையை, அவரது விருப்பு வெறுப்புகளை அறிந்துகொண்டு, "ஈகோ" என்ற விடயத்தை அறவே விட்டொழித்து, புதிய வாழ்க்கையின் ஒவ்வொரு நிமிடத்தையும் சந்தோஷமாக அனுபவியுங்கள்...

உங்கள் மறுமணத்துக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் !!!!

33 comments:

Anonymous said...

இ.பி.கோ என்ற பெயரில் ப்ளாகிவரும் நன்பரை சைக்கோ என்று திட்டி பின்னூட்டம் போட்டேன் ( அது வெளிவரவில்லை), பிறகு வருத்தப்பட்டேன்...அவர் உண்மையில் பாதிக்கப்பட்டிருக்ககூடும்...இருந்தாலும் பாதிக்கப்பட்ட அந்த நபருக்காக எதையாவது கிறுக்கி தள்ளவேண்டும் என்று இதை எழுதி இருக்கிறேன்...

கொழுவி said...

இதே டிப்சை மூன்றாம் நான்காம் திருமணங்களுக்கும் பயன்படுத்தலாமா ? அல்லது அவற்றுக்கு வேறா?

rapp said...

me the third

Anonymous said...

கொழுவி,

எத்தனையாவது திருமணத்துக்கு வேண்டுமானாலும் பயன்படுத்துங்கள்...

:))) மீதி லேடீஸ் எப்படி புட்டுக்கிட்டு போனாங்க என்பதில் உள்ளது !!!

தீவு ஏன் ஆளையே கானோம் ? கொஞ்சம் அட்டெண்டென்ஸ் போடச்சொல்றீங்களா ??

Anonymous said...

////rapp said...
me the third
///

இதுக்கு முன்னாடி போட்ட மூனு பதிவுல மீ த பர்ஸ்ட்டு மீத பர்ஸ்ட்டுன்னு போட்டீங்க இல்ல ? அதனால தமிழ்மணத்துல சேக்கறதுக்கு முன்னாலியே நான் கமெண்டு போட்டுட்டேன் ஹி ஹி

Anonymous said...

எந்த சொந்தங்களால் விவாகரத்து ஆனதோ அந்த சொந்தங்களை உதறித் தள்ளுங்கள் என்பதையும் சேர்த்து இருக்கலாம்.

Anonymous said...

//எந்த சொந்தங்களால் விவாகரத்து ஆனதோ அந்த சொந்தங்களை உதறித் தள்ளுங்கள் என்பதையும் சேர்த்து இருக்கலாம்.///

இண்டேரக்டா அதையும் தான் சொல்லியிருக்கேன் !!!

வருகைக்கு நன்றி இ.பி.கோ419

rapp said...

//இதுக்கு முன்னாடி போட்ட மூனு பதிவுல மீ த பர்ஸ்ட்டு மீத பர்ஸ்ட்டுன்னு போட்டீங்க இல்ல ? அதனால தமிழ்மணத்துல சேக்கறதுக்கு முன்னாலியே நான் கமெண்டு போட்டுட்டேன்//

என்ன ஒரு வில்லத்தனம், அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்........................நானெல்லாம் எப்படியும் ஒரு பிரசன்ட் சார் போடாம போக மாட்டேன்:):):)

அமர பாரதி said...

ரவி,

எல்லா டிப்ஸையும் பாலோ பன்னிடலாம். முதல் மனைவிய என்ன பன்றதுன்னு சொல்லலியே.

Anonymous said...

இந்த டிப்ஸ் சின்ன வீடு செட் பண்ணப் பயன்படுத்தல்லாமா? அல்லது தனியா ஏதாவது டிப்ஸ் இருக்கா?

அண்ணாச்சி சொல்றத கொஞ்சம் சீக்கிரமா சொல்லுங்க.

புள்ளிராஜா

இ.பி.கோ 498A said...

//இ.பி.கோ என்ற பெயரில் ப்ளாகிவரும் நன்பரை சைக்கோ என்று திட்டி பின்னூட்டம் போட்டேன் ( அது வெளிவரவில்லை//

மன்னிக்கவும். அதை சிறிது தாமதமாகப் பார்த்தேன்.

அங்கேயே உங்களுக்கு பதில் எழுதியுள்ளேன். பார்க்கவும்

நன்றி.

ARV Loshan said...

எல்லாம் சரி, முதல் திருமணத்தை எப்படி விவாகரத்து செய்யனும்னு ஐடியா தரவே இல்லையே.. ;)

ARV Loshan said...

எல்லாம் சரி, முதல் திருமணத்தை எப்படி விவாகரத்து செய்யனும்னு ஐடியா தரவே இல்லையே.. ;)

Anonymous said...

வருகைக்கும் மொக்கைக்கும் நன்றி லோஷன்

உண்மைத்தமிழன் said...

சீரியலுக்கு கதை வேணும்.. ஏதாவது ரெடியா இருக்கா..? இருந்தா அனுப்பி வை..

குசும்பன் said...

//உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
சீரியலுக்கு கதை வேணும்.. ஏதாவது ரெடியா இருக்கா..? இருந்தா அனுப்பி வை..//

அண்ணே சீரியலிலாவது ஹிரோயினை முழுசா காட்டுவீங்களா, அல்லது லிப்ஸை மட்டும் காட்டுவீங்கலா?

Anonymous said...

///சீரியலுக்கு கதை வேணும்.. ஏதாவது ரெடியா இருக்கா..? இருந்தா அனுப்பி வை..//

மெகா தொடர் மட்டும் தான் எழுதுவான் இந்த மகாதேவன்.

Anonymous said...

///அண்ணே சீரியலிலாவது ஹிரோயினை முழுசா காட்டுவீங்களா, அல்லது லிப்ஸை மட்டும் காட்டுவீங்கலா?

Wednesday, September 24, 2008
///

பம்பரம் விடும் இடத்தை மட்டும் காட்டி நாற்பது எப்பிசோடு ஓட்டுவோம்.

Balaji said...

ரவி அவர்களே,
இரண்டாம் திருமணத்திற்கு டிப்ஸ் தருவதுற்கு பதில் முதல் திருமணம் முறியாமல் இருப்பதற்கு டிப்ஸ் தரலாமே!

முரளிகண்ணன் said...

என்னத்த சொல்ல?

வால்பையன் said...

//முதல் திருமணத்தில் உள்ள பிரச்சினைகளை முதலில் முடியுங்கள்//

திருமணமே பிரச்சனை தானே, அதிலென்ன முதலில்

வால்பையன் said...

//பழைய தவறுகளை திரும்ப செய்துவிடாமல் இருக்க இது நிச்சயம் தேவையான ஒன்று...//

அப்படினா திரும்ப கல்யாணமே பண்ணிககூடாதே

வால்பையன் said...

//உங்கள் புதிய உறவை முழுமையாக புரிந்துகொள்ள முயலுங்கள்.//

இந்த முயற்சியை முன்னாடியே பண்ணிருக்கலாமே

வால்பையன் said...

//நீங்கள் நீங்களாக இருங்கள், //

வேற மாதிரியும் மாற முடியுமா என்ன?

வால்பையன் said...

//திறந்த புத்தகமாயிருங்கள்.//

இதுக்கு என்ன அர்த்தம்
ட்ரெஸ் போடாம இருக்க சொல்றிங்களா

வால்பையன் said...

//திருமணத்துக்கு முன்பு வழிகாட்ட தன்னார்வ தொண்டு நிறுவனங்களால் நடத்தப்படும் கவுன்ஸிலிங் போன்றவற்றில் கலந்துகொள்ளுங்கள்.//

பிரச்சனையே பொருளாதாரத்தில் தான் ஆரம்பமாகும், அதுக்கு ஹெல்ப் பண்ணுவாங்களா

வால்பையன் said...

//புதிதாக தொடங்குங்கள். ஒரு புதிய வீட்டில் - புதிய நன்பர்களுடன் உங்கள் மறுமணத்தை தொடங்குங்கள்.//

இதுனால மட்டும் பிரச்சனை தீந்துருமா

வால்பையன் said...

//பழைய பேய்கள் உங்கள் இதயத்தை மீண்டும் துளைத்துவிடாதபடிக்கு, //

மூத்த பொண்டாட்டிய இப்படியா பேயின்னு திட்டுறது

வால்பையன் said...

//பழைய ஊரில் இருந்து வெளியேறுவது கூட பலனையும் நிம்மதியையும் தரும்...//

ஊர விட்டு ஓடறதுக்கு ஐடியா கொடுக்குராரப்பா

வால்பையன் said...

//புதிய பழக்க வழக்கங்களை உருவாக்குங்கள்.//

சரக்கு மாத்தி அடிக்கலாம்னு சொல்றிங்களா

வால்பையன் said...

//வளைந்துகொடுக்க பழகுங்கள்.//

நான் "வளையல் கொடுக்க பழகுங்கள்"ன்னு படிச்சேன்

வால்பையன் said...

//உங்கள் உள்ளத்தை திறந்தே வைத்திருங்கள்.//

அதுக்கு அடுத்த கல்யாணத்துக்கா

தமிழ். சரவணன் said...

இப்பொழுதுதான் ஒரு வலைபூவில் கீழ்கண்ட பதிவை போடடென் அதற்குள் தங்கள் பதிவு... அருமையான அறிவுரைகள் மற்றும் நீங்கள் திருமணம் ஆகாதவர் என்றார் என்னுடைய வேண்டுகோள்:- திருமணத்திற்கு முன்பு 498ஏ (வரதட்சணை கொடுமை சட்டம்) மற்றும் குடும்ப வண்முறை சட்டம் அகியவற்றை தெரிந்து கொள்ளுங்கள் இளைஞர்களே... இச் சட்டத்தின் மூலும் சில கெடுமதி பெண்கள் நமது குடும்பத்தை நிர்மூலமாக்கி நடுத்தெருவுக்கு கொண்டு வரலாம்... சிறையில் அடைத்து சித்திரவதை செய்யலாம் இச் சட்டங்களின் உதவியோடு....

திருமணங்கள் தேவையா..??

ஐயா! தற்பொழுது நம் நாட்டில் "சுப்ரீம் கோர்டால்" சுட்டிக்காட்டப் பட்ட சட்டப்பூர்வ தீவிரவாதிகள் என்றும் கெடு மதிபெண்களால் ( அதாவது சட்டத்தை தவறாக பயன்படுத்தி குடும்பத்தை சீர்கலைக்கும் பொய்வழக்கு போடும் கெடுமதி பெண்கள்) நாட்டில் ஒரு வருடத்திற்க்கு சுமார் 20,000 குழந்தைகள் தந்தையில்லாமல் (எனது குழந்தை உட்பட) வளர்கின்றது... இதனால் வருடத்திற்கு சுமார் 7 கோடிக்கு மெல் பணவிரயமும், தற்கொலை சாவுகளும், சென்ற வருடம் மற்றும் சுமார் ஒரு லட்சத்தி 50 ஆயிரம் பெண்களுக்கு மெல் (எனது தாயர் உட்பட எல்லாம் வயதான தாயர்கள் மற்றும் சகோதரிகள்) சிறைக்கு சென்று வந்துள்ளார்கள்... இப்பொது சொல்லூங்கள் "திருமணம் தேவையா?"

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால்

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால் டயபட்டீஸ் / நீரிழிவு / சர்க்கரை நோயை விரட்ட நியான்டர் செல்வனால் ஆரம்பிக்கப்பட்ட இந்த குழுமத்திற்கு ( https://www....