Wednesday, October 15, 2008

பாரதியார் ? பாரதி - யார் ? : மறைக்கப்படும் உண்மைகள்...



Real Face !!!



Reeeeeel Face !!!

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே...!!!
உச்சி மீது வானிடிந்து வீழுகின்ற போதிலும்...
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே...!!!


என்று கவிதை பாடிய பாரதியாரின் உண்மையான முகம் என்ன ? இன்றைக்கு பாரதியார் கவிதைகள் புத்தகத்தை வைத்திருந்தால் "தமிழ்ப பற்று" உள்ளவராக பார்க்கிறார்கள்...

இப்படி புனித பிம்பமாக கட்டமைக்கப்பட்ட பாரதியாரின் உண்மை முகம் என்ன ? அவர் உண்மையில் நாட்டுக்காகவும், சுகந்திரத்துக்காகவும் போராடினாரா இல்லை, வெள்ளைக்கார துரைகளுக்கு பயந்து தமிழகம் புதுச்சேரி என்று டவுசர் கிழிய ஓடி மன்னிப்பு கடிதம் எழுதி மானம் கெட்டு வாழ்ந்தாரா ?

கீழே நான் கொடுத்திருக்கும் தகவல்களை எல்லாம் பாருங்கள்...சமகாலத்தில் நடந்த அநீதி அக்கிரமம் அனைத்தையும் பார்த்துக்கொண்டு பிழைப்புக்காக கட்டபொம்மனை காட்டிக்கொடுத்த எட்டப்பனிடம் கவிதை புனைந்துகொண்டு குந்தியிருந்தவர் தான் இந்த பாரதி...

1. ஜாலியன் வாலாபாக் சம்பவம் நடந்தபோது, ஒரு வார்த்தைக்கு கூட அதனை கண்டித்து எழுதவோ, பேசவோ செய்யவில்லை...

2. ஜாலியன் வாலாபாக் படுகொலையை ஒரு ஜாலி படுகொலையாக, ஒரு தீவிரவாத ஒழிப்பு நடவடிக்கையாக கட்டமைத்து, எழுதியும் பேசியும் வந்த அன்னிபெசண்ட் அம்மையாரை தன்னுடைய தேவியாக புகழ்ந்தவர் பாரதி..

3. மாட்சிமை தங்கிய கவர்னர் அவர்களே என்று விளித்து எழுதப்பட்ட கடிதங்களில், தான் ஒரு பார்ப்பணராக இருப்பதால் தன்னுடைய உடலுக்கு சிறை வாழ்வு ஒத்துவராது என்று கூறி தன்னுடைய சாதியை வெளிப்படுத்தியும், அந்த சாதியால் ஏதாவது பிஸ்கெட் துண்டு கிடைக்கும் என்று எதிர்பார்த்தும் வாழ்ந்த "குடுமி" பாரதி...ஒரு முறை இருமுறை அல்ல, பல்வேறு மன்னிப்பு கடிதங்களை நாளாந்தம் பிரிட்டிஷ் அரசாங்கத்துக்கு அனுப்பி கேவலமான ஒரு வாழ்க்கையை வாழ்ந்தவர் பாரதி..

4. 1916 ஆம் ஆண்டு சுதேசமித்திரனில், ஆங்கிலேயர்களே, இந்தியாவை விட்டு போய்விடாதீர்கள் என்று அற்புதமான கட்டுரையை எழுதியவர் இந்த பாரதி..

5. தன்னுடைய தந்தையார் வறுமையில் வாடியதை எழுத்தில் எப்படி வடித்தார் தெரியுமா பாரதி ? மனு தர்மப்படி வியர்வை சிந்தி பார்ப்பணர் உழைப்பது அநீதி, அப்படிப்பட்ட அநீதி தன்னுடைய தந்தையாருக்கு நேர்ந்துவிட்டது என்று எழுதினார். இவரா தேசியக்கவிஞர் ? இவரா சாதிக்கொடுமைகளை எதிர்த்து போராடினார் ?

6. 'நாலு குலங்கள் அமைத்தான் - அதை நாசமுறப் புரிந்தனர் மூட மனிதர்' என்று வருணபேதத்துக்கு ஆதரவாக எழுதிய இவரை எந்த குடுமி குரூப்பில் சேர்த்தாலும் பிட் ஆகிவிடுவார் என்று நான் நினைக்கிறேன்...நீங்க ?

7. "குலத்தளவே ஆகுமாம் குணம்" என்றும் "அம்பட்டன் பிள்ளை தானாகவே சிரைக்கக் கற்றுக் கொள்கிறது. சாதி இப்போது இருக்கும் நிலையில் அதை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை" என்று எழுதி தன்னுடைய கொண்டையை வெளிப்படையாக காட்டியவர்தானே இந்த பாரதி ?

8. "சென்னைப் பட்டிணத்தில், நாயர் கட்சிக் கூட்டம் ஒன்றில் பறையரை விட்டு இரண்டு மூன்று பார்ப்பனரை அடிக்கும்படித் தூண்டியதாகப் பத்திரிக்கையில் வாசித்தோம்", "என்னடா இது! ஹிந்து மதத்தின் பஹிரங்க விரோதிகள், பறையரைக் கொண்டு பிராமணரை அடிக்கும்படிச் செய்யும் வரை சென்னைப் பட்டிணத்து ஹிந்துக்கள் பார்த்துக் கொண்டிருந்தார்கள்!" என்று சொன்னவர் பாரதி. இவரை ஆர்.எஸ்.எஸ்ஸிலோ, பஜ்ரங் தள் இயக்கத்திலோ கொண்டாடுவதன் அர்த்தம் இப்போதாவது உங்களுக்கு புரியும் என்று நினைக்கிறேன்...

9. 'ஈனப் பறையர்களேனும் அவர் எம்முடன் வாழ்ந்திங்கிருப்பவர்' என்று தலித் மக்களை பார்த்து சொன்ன பாரதியின் முண்டாசுக்குள் இருந்தது சாதீயப்பற்றல்ல...சாதீயப்புற்று !!!

10. பாரதி எப்போது எக்குத்தப்பாக மாட்டினாலும் அவரை சிறை மீட்பது, வேலை கொடுப்பது, வைத்து பராமரிப்பது கீழ்க்கண்டவர்களே..நடேச அய்யர், ரங்கசாமி அய்யங்கார், திருமலை ஆச்சாரியார், பார்த்தசாரதி அய்யங்கார், சர் சி.பி.ராமசாமி அய்யர், மணி அய்யர், சர் சி.பி.ராமசாமி அய்யர், சுதேசமித்திரன் ரங்கசாமி அய்யங்கார்....இவர்கள் அனைவரும் பார்ப்பனீயத்திலும் சாதி வெறியிலும் ஊறியவர்கள்...வேறொன்று சொல்ல விரும்பவில்லை, வாசிக்கும் நீங்களே பாரதியின் டவுசரை உருவிக்கொள்ளுங்கள்...

11. இஸ்லாமியர்களை பற்றிய பாரதீயின் டெபனிஷன் : "வேதநூல் பழிக்கும் வெளித்திசை மிலேச்சர்" என்றும், அவர்களின் செயல்களாக "ஆலயம் அழித்தலும் அருமறை பழித்தலும் பாலரை விருந்தரைப் பசுக்களை ஒழித்தலும்" அவ்ளோதான்...ஏன் பாரதீய ஜனதா பார்ட்டி பாரதீயை கொண்டாடாது ? "தீ" என்று ஒரு எழுத்தை அழுத்தியது, தீமையை குறிக்க. வேறொன்று நினைக்காதீர்...

12. திருவல்லிக்கேணி வீதி ஒன்றில் கிறித்துவப் பள்ளிக் கூடத்தில் இருந்து வெளி வந்த இரு பிராமணச் சிறுமியர் பேசியதைக் காது கொடுத்த பாரதி, உடனே பேனா தூக்கி எழுதத் தொடங்குகிறார். "அச்சிறுமிகள் 'ஆண்டவன்' என்றும் 'ஏசுநாதன்' என்றும் பேசிக் கொண்டு செல்வது காதில் விழுந்தது. அடக் கடவுளே! இதைக் கேட்கவா இத்தனைக் காலமும் மாதர்களுக்குக் கல்வி வேண்டும் எனக் கூச்சலிட்டோம்!" என்று டென்ஷனாகிய பாரதிக்கு வெள்ளை நிறத்திலொரு பூனை என்று மதநல்லினக்கத்தை பொய்யாக வலியுறுத்துவதற்கு பதில் ஒரு மண்ணாங்கட்டியும் எழுதாமல் இருந்திருக்கலாம்...

13. "சென்னைத் தலைமைப் பாதிரி எல்லூரில் ஆணும் பெண்ணும், குழந்தைகளுமாக ஏறக்குறைய முன்னூறு பேரைக் கிறிஸ்துவ மதத்தில் சேர்த்துக் கொண்டார் என்று தெரிகின்றது. இந்த விஷயம் நமது நாட்டில் பல இடங்களில் அடிக்கடி நடந்து வருகிறது. இது ஹிந்து மதத்தில் அபிமானமுடையவர்களுக்கெல்லாம் மிகுந்த வருத்தத்தை விளைவிக்கத்தக்கது....ஒரிஸ்ஸாவில் பெண்ணை வண்புணர்ச்சி செய்யும் கலவரக்காரர்களுக்கு ஆதார விதை இதுபோன்றவர்களின் எழுத்துக்கள், பேச்சுக்கள் தானே...நினைவிருக்கட்டும், இந்தியா ஒரு மத சார்பற்ற நாடு, யாருக்கும் எந்த மதத்தையும் பின்பற்ற உரிமை உண்டு.

14. கடலூர் சிறையில் இருந்து பாரதி எழுதிய "புரச்சி" கடிதம்.

om sakthi
----------
District Jail, Cuddalore,
28 November-1918.
To,His Excellency Lord Pentland,
Governor,
Fort St.George,Madras.
The Humble petition of C.Subramania Bharathi,
May it please your excellency,
It is more than a week now since I was arrested at Cuddalore on my way from Pondicherry to Tirunelveli which is my native district. After many loyal assurances on my part as your excellency may well remember, the Dy.I.G.(C.I.D.) was send by your Excellency's Government a few months back, to interview me at Pondicherry. The D.I.G after being thoroughly satisfied with my attitude towards the Government asked me if I would be willing to be kept interned, purely as a war measure, in any two districts of the Madras Presidency during the period of the war. I could not consent to that proposal, because, having absolutely renounced politics, I could see no reason why any restraint should be placed on my movements even while the war lasted. Subsequent to that also, I have addressed several petitions to your Excellency clearing away all possible doubts about my position.
Now that the war is over and with such signal success to the Allies, I ventured to leave Pondicherry, honestly believing that there would be no difficulty whatsoever in the way of my setting in British India as a peaceful citizen. Contrary to my expectations, however I have been detained and placed in the Cuddalore District Jail under conditions which I will not weary your Excellency by describing here at any length but which are altogether disagreeable to a man of my birth and status and full of dangerous possibilities to my health.
I once again assure your Excellency that I have renounced every form of politics, I shall ever be loyal to the British Government and law abiding.
I therefore, beg of your Excellency to order my immediate release. May God grant your Excellency a long and happy life.
I beg to remain
Your Excellency's
most obedient Servant
C.Subramania Bharathi.
************************************

நன்றி போர்முரசு வலைப்பூ : http://poarmurasu.blogspot.com/2007/12/blog-post_11.html

சான்றாதார நூல்கள்:

1) பாரதி பக்தர்களின் கள்ள மவுனம் - மருதையன், வே.மதிமாறன்
2) திராவிடர் இயக்கப் பார்வையில் பாரதியார் - வாலாசா வல்லவன்
3) 'பாரதி'ய ஜனதா பார்ட்டி - வே.மதிமாறன்
4) வே.மதிமாறனின் 'பாரதி'ய ஜனதா பார்ட்டி -விமர்சனமும் - விளக்கமும்**************************************
=====xxx==== =====xxx==== =====xxx====
நன்றி, கற்பக விநாயகம்!



தமிழ் ஆர்வம் என்றால் இங்கே பெரும்பாலானோருக்கு..."எனக்கு பாரதியார் கவிதை பிடிக்கும் தெரியுமா" என்பார்கள்...அவர்கள் பெரும்பாலானோர் பார்ப்பனர்களாக இருக்க காண்கிறேன்...

கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தை இயக்கிய மணிரத்தினம் ( Rajeev Menon) ஒரு க்ராஸ்பெல்ட். அவர் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராய் பாரதியார் கவிதைகள் சொன்னது நல்லாத்தான் இருந்தது...ஐ மீன் ஒன்லீ ஐஸ்வர்யா ராய்.

பாரதி-யாரின் உண்மை முகத்தை பார்க்க உதவிய போர்முரசு வலைப்பூவுக்கு நன்றி...நன்றி ஸ்பார்டகஸ்.......இணையத்தில் தரவுகளை தேடியபோது ஒரே பதிவு...ஒன் ஷாட் ஆக போர்முரசு வலைப்பூ கிடைத்தது...நன்றி...!!!

28 comments:

பழமைபேசி said...

இரவி,

ஆச்சர்யமானதாக இருக்கிறது. பொருள் பற்றி தெரிந்து கொண்டு, மீண்டும் வருகிறேன்! இந்தக் கண்ணோட்டத்திலும் சிந்திக்க வைத்தமைக்கு நன்றி!

தமிழ் ஓவியா said...

பாரதியாரின் பித்தலாட்டங்களை சான்றுகளுடன் தோலுரித்து காட்டி பாரதி -யாரின் உண்மை முகத்தை, பாரதி என்ற பிம்பத்தை அம்பலப்படுத்தியதற்கு பாராட்டுக்கள் தோழரே.

Anonymous said...

உன்னை போன்ற ஓரிரு பதர்கள் பார்ப்பான் பிடிக்காது என்பதற்க்காக எந்த எழவையாவது உளறிவிட்டு ஒழியுங்கள். ஏண்டா படித்த நாய்களா உங்களுக்கு பாரதி பற்றி பேச எந்த அருகதையும் இல்லை. போ பொய் கருணாநிதி கவிதையை பிடித்து தொங்கு..

Anonymous said...

உன்னை போன்ற ஓரிரு பதர்கள் பார்ப்பான் பிடிக்காது என்பதற்க்காக எந்த எழவையாவது உளறிவிட்டு ஒழியுங்கள். ஏண்டா படித்த நாய்களா உங்களுக்கு பாரதி பற்றி பேச எந்த அருகதையும் இல்லை. போ பொய் கருணாநிதி கவிதையை பிடித்து தொங்கு..

Unknown said...

//இஸ்லாமியர்களை பற்றிய பாரதீயின் டெபனிஷன் : "வேதநூல் பழிக்கும் வெளித்திசை மிலேச்சர்" என்றும், அவர்களின் செயல்களாக "ஆலயம் அழித்தலும் அருமறை பழித்தலும் பாலரை விருந்தரைப் பசுக்களை ஒழித்தலும்" அவ்ளோதான்...//

ஓரறிவும் இல்லாது முஸ்லீம்களை 'திசை தொழும் துருக்கர்' என்றவர்.

க்ராஸ்பெல்ட் இருப்பவன்தான் சுதந்திரத்துக்காக பாடுபட்டவன் என்று வரலாற்றைத் திருப்பிய கூட்டத்தினால் ஏற்பட்டதுதான் இதெல்லாம்.

Anonymous said...

நீ ஒரு மன நோயாளி என்பது நீ கக்கி இருப்பதை பார்த்தல் தெரிகிறது. நல்ல மன நல மருத்துவரிடம் உடனே சிகிச்சை எடுக்கவும்.

Anonymous said...

sir you have a mistake.kandukonden kandukonden is not manirathnam film ;it is rajeev menan film .your thoghts are like fire;i appreciate you.

மணிகண்டன் said...

ரவி, நீங்க இந்த புத்தங்கங்கள் எல்லாம் படிச்சீங்களா ? அதே மாதிரி இந்த சான்றுகளுக்கு விளக்கம் இருக்கிறதா என்று தேடி பார்த்தீர்களா ? இல்லை அந்த பிளாக்கர் எழுதியதை படித்துவிட்டு இந்த பதிவு எழுதினீங்களா ?

TAMIZHAN said...

AN ELDERLY PROFESSOR FROM PONDICHERRY USED TO CONVERSE WITH ME ABOUT BHARATHIAR. HE TOLD ME THAT WHEN BHARATHIAR WAS ROAMING IN THE STREETS OF PONDY, HE WAS ALWAYS DRUNK WITH BLOODY EYES AND ALL THE LADIES USED TO LOCK THEMSELVES INSIDE THE HOUSE OUT OF FEAR. I CANNOT AUTHENTICATE THE STATEMENT, BUT THERE MAY BE SOMEBODY WHO KNOWS HIS HABITS. MOREOVER, IN THE DAY OF INDEPENDENCE FIGHT EVERY FREEDOM FIGHTER WAS QUOTING ARREST TO BE TORTURED. BHARATHIAR HID HIMSELF FROM BRITISH RAJ, SINGING, I DO NOT FEAR ANYBODY, EVEN THE THUNDER BOLT HIT ME.

Robin said...

பாரதியின் மறுபக்கம் எவ்வளவு கவனமாக இவ்வளவு காலமும் மறைக்கப்பட்டு வந்திருக்கிறது. பாரதியின் சாயம் வெளுத்தவுடன் ஆதிக்கசக்திகள் கொதித்தெழுவதை புரிந்துகொள்ள முடிகிறது.

rapp said...

//ஜாலியன் வாலாபாக் படுகொலையை ஒரு ஜாலி படுகொலையாக, ஒரு தீவிரவாத ஒழிப்பு நடவடிக்கையாக கட்டமைத்து, எழுதியும் பேசியும் வந்த அன்னிபெசண்ட் அம்மையாரை தன்னுடைய தேவியாக புகழ்ந்தவர் பாரதி//

இதுப்பற்றி நானும் சிலக்கட்டுரைகள் படிச்சிருக்கேன்.

Anonymous said...

Read more about Bharathi in Keetru

வாலாசா வல்லவன் எழுதிய ‘திராவிட இயக்கப் பார்வையில் பாரதியார்’

http://www.keetru.com/literature/essays/valasa_vallavan.php

Arun

Anonymous said...

ரவி
பாரதியை எத்தனை முறை அம்பலப்படுத்தினாலும் அவரது பக்தர்கள் நமீதா ரசிகரைக்காட்டிலும் வெறியாக இருக்கிறார்கள். யோசிக்கையில் ஒன்று தெரிகிறது. எல்லாவித சமரசங்களோடும் வாழும் அறிவு சீவிகளுக்கு பொருத்தமான முன்னோடியாக பாரதியார் இருக்கிறார். பாரதியைப் போல முற்போக்கு வேடமும் அணிந்து கொண்டு வாழ்வில் பிழைப்புவாதத்தை வரிந்து கொண்டு குஷாலாய் காலம் தள்ளலாம். வேறு என்ன?
திரும்பத் திரும்ப மறுபதிப்பு செய்யவேண்டிய பதிவு

வினவு

Anonymous said...

///
வஞ்சனை பேய்கள் என்பார்.. இந்த மரத்தில் என்பார் அந்த குளத்தில் என்பார்..அஞ்சி அஞ்சி சாவார்...இவர் அஞ்சாத பொருளில்லை அவனியிலே.
/////


இத மாத்தலையா இன்னமும் ?

குடுகுடுப்பை said...

அப்படியே கட்டபொம்மனின் ஆங்கிலேயர் எதிர்ப்பு ஏன் என்று படித்து எழுதுங்கள்.

Anonymous said...

இல்லாத கம்யூனிச சொர்கத்தை எதிர் நோக்கிக் காத்திர்க்கும் நட்டுக் கேஸ்களின் கட்டுக் கதையெல்லாம் போட்டு உன் வலைப்பதிவை நீ சிறுமை படுத்திக் கொள்ளாதே. அவர்கள் எதிர்ப்பெல்லாம் பாரதி ஒரு பார்ப்பான் என்பதற்குத் தான். ஜாதி ஒழிய வேண்டும் என்றால் முதலில் ஜாதியைச் சொல்லி திட்டும் பழக்கம் ஒழிய வேண்டும். அதற்கு அப்படித் திட்டுபவர்களை ஒதுக்கவேண்டும்.

ILA (a) இளா said...

So, அவருடைய எழுத்துக்கள்/கவிதைகளை விட அவரோட ஜாதியும், தனிப்பட்ட வாழ்க்கையும்தான் உங்களுக்குத் தெரியுது. பார்வை தான் வித்தியாசம். உங்களுக்கு ஜாதி, மத்தவங்களுக்கு கவிதை.

ILA (a) இளா said...

அதே சமயம் போர்முரசு சொன்னதை படிச்சுட்டு வியந்திருக்கேன். அவர் சொன்னதை எப்படி உண்மைன்னு நம்புறது?

Anonymous said...

in most of your new posts, you keep surprising me by stooping to a new low!


keep it up..

ரவி said...

இளா...

தனிப்பட்ட வாழ்க்கையில் சாதி, மத, இன வெறியோடு வாழ்ந்து, வெள்ளையர்களிடம் மண்டியிட்டு வாழ்ந்த பாரதி...

பெரிய உடான்ஸ் பேர்வழி...!!!

வினவு எழுதிய பதில் ::

///எல்லாவித சமரசங்களோடும் வாழும் அறிவு சீவிகளுக்கு பொருத்தமான முன்னோடியாக பாரதியார் இருக்கிறார். ///

இன்றைக்கு பலர் இப்படித்தான் இருக்கிறார்கள்...

SurveySan said...

பாரதியார், தன்னை ஒரு யோக்கியன்னு எங்கையும் சொல்லிக்கிட்டதா நான் படிக்கலை.

எல்லா கவிதையிலையும் கூட, பராசக்திகிட்ட தன்னை, ஒழுங்கா வழி நடத்துன்னு தான் கேட்டிருக்காரு.

அவரை, புனித பிம்பமா, யாரோ அரசியல் காரணங்களுக்காக மாத்தியிருக்கலாம்.

ஆனா, அவரின் எழுத்தால் விளைந்த நன்மைகளை யோசிக்கணும். அவர் ஏழ்மையில் தான் பெரும் வாழ்வை வாழ்ந்தார்னு படிச்சிருக்கேன். ஜால்ரா போட்டவரு ஏன் அப்படி வாழ்ந்து செத்திரூக்கணும்?

சால்ஜாப்பு பேர்வழிகளால் எல்லாம், அவ்ளோ ஸ்ட்ராங்கா, கவிதை எழுத முடியாது என்பது அடியேன் எண்ணம்.

சுதந்திரம் வாங்கரதுக்கு முன்னாடியே, சுதந்திரம் வாங்கியாச்சுன்னு பாட்டு எழுதினவரு அவரு.

அவர ரொம்ப கேவலப் படுத்தரது நன்னால்ல.

SurveySan said...

புனிதப் பிம்பப் படுத்தரது பாரதியார் கிட்ட மட்டுமில்ல. பல தலைகளை இப்படி ஆக்கி வச்சிருக்காங்க.

அமெரிக்கால, கென்னடியை பெருசா பிம்பப் படுத்தி வச்சிருக்காங்க.

போன வாரம் ஒரு 75 வயசு பெருசுகிட்ட, உண்மையாவே அவரு பெரிய பிம்பமா கேட்டா, ஹீ இஸ் எ எஸ்.ஓ.பின்னு சொன்னாரு.

Anonymous said...

Your lies are exposed here:

http://suvadi.wordpress.com/2008/10/17/lies-expose/

கபீஷ் said...

சர்வேசனை(ரை) கன்னா பின்னானு வழிமொழியறேன்.

Robin said...

//Your lies are exposed here:

http://suvadi.wordpress.com/2008/10/17/lies-expose/// somebody (probably with thread from shoulder to waist) has tried to conceal the truth but failed miserably!

King Vishy said...

//
I have been detained and placed in the Cuddalore District Jail under conditions ... which are altogether disagreeable to a man of my birth and status and full of dangerous possibilities to my health.
//

I guess this is what u translated as:
//
தான் ஒரு பார்ப்பணராக இருப்பதால் தன்னுடைய உடலுக்கு சிறை வாழ்வு ஒத்துவராது என்று கூறி..
//

Which is very poor translation. He simply says the conditions do not suit his health. That is all. He did not say it's because he is a Brahmin.

I am not a fan of Bharathi. Nor do I hate him. As I read thru ur blog, I was beginning to believe u, until I came to this part. That was when I realized this is one more of those baseless rants that do not deserve any attention.

Very clearly you are even more obsessed with Bharathi being a Brahmin than u claim he himself was.

I really didnt want to comment here.. This whole post stinks of bias.. But I couldnt hold myself back after seeing the kind of translation you have done.. Now I sure dont believe any other thing u have said either.. who knows, u might have misinterpreted (by mistake or intentionally) all along!

Unknown said...

பாரதியை பற்றி அருமையான கதை (கற்பனை) சொன்னீர்கள். சாதி வெறி பிடித்த அதே மிருகம் (நீங்கள் சொல்வது) தான் " குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்" என்று சொன்னது. அந்த மிருகம் அதை ஏன் சொல்ல வேண்டும் என்பதை நீங்கள் சொல்லவில்லை?...சொன்னால் இந்த கட்டுரையின் நோக்கம் மாறும் என்றா?

Karthik said...

Kuzuru saithi.

In Sanfrancisco, Tamil sangam is split into 2.
One named Barathi Tamil Sangam (created for Sanghis, i heard)

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால்

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால் டயபட்டீஸ் / நீரிழிவு / சர்க்கரை நோயை விரட்ட நியான்டர் செல்வனால் ஆரம்பிக்கப்பட்ட இந்த குழுமத்திற்கு ( https://www....