
மைக்ரோசாப்ட் எக்ஸ்பி இயங்குதளத்தில் திடீரென வைரஸ் தாக்கிவிட்டதாகவும், உம்மாச்சி கண்ணைக்குத்தாமல் இருக்கவேண்டும் என்றால் க்ரெடிட் கார்டு எண்ணை கொடுத்து வைரஸ் ப்ரொடக்ஷனை பெற்றுக்கொள்ளுமாறும் செய்தி.
என்னுடைய திரை முழுவதும் ஒன்றும் இல்லை. இந்த செய்தி மட்டுமே இருக்கிறது. மற்ற ஐக்கான்கள் எல்லாம் எங்கே போனது என்று தெரியவில்லை.
என்னவோ மைக்ரோசாப்ட்டில் இருந்து சொல்வது போலவே சொல்கின்றது இது. டாஸ்க் பார் மூலம் இதனை க்ளோஸ் செய்துவிட்டு, டெஸ்க்டாப் ஐக்கானை அழுத்தி மீண்டும் என்னுடைய திரையை பெற்றேன்.
இது உண்மையா, உண்மையிலேயே உம்மாச்சி கண்ணை குத்தியதா, இல்லை, ஏற்கனவே லைனக்ஸு இலவச திறந்தமூல இயங்குதளங்களிடம் பெரிய ஆப்புகளாக வாங்கி RIP (Rest in அமைதி) க்கு போக இருக்கும் மைக்ரோசாப்டுக்கு வைக்கப்பட்ட சூனியமா செய்வினையா மஞ்சள் குங்குமம் தடவிய எலுமிச்சம்பழமா என்று தெரியவில்லை.
தெரிந்தவர்கள் பின்னூட்டத்தில் கும்மவும்.
5 comments:
'பலான' தளங்கள் பக்கம் உலாத்தினால் அப்படித்தான் வைரஸானந்தா (மால்வேரானந்தா) கண்ணைக் குத்துவார்.
பேசாமல் f8 அழுத்தி பத்து நாளைக்கு முன்னாடி போகவும்.
மாயவரத்தான்.... said...
'பலான' தளங்கள் பக்கம் உலாத்தினால் அப்படித்தான் வைரஸானந்தா (மால்வேரானந்தா) கண்ணைக் குத்துவார்
//
::))
::))))
பேசாமல் f8 அழுத்தி பத்து நாளைக்கு முன்னாடி போகவும்.
//
யெஸ்
Start | All Programs | Accessories | System Tools | System Restore
இது புதியவர்களுக்காக
அவ். மாயூஸ்.
என்ன கொடுமை இது ? நீங்கள் என்னுடைய வலைப்பதிவை சொல்லவில்லையே ?
மின்னுது மின்னல் ?
நன்றி..
Post a Comment