
அல்போன்ஸு உண்மையில் ஆச்சர்யமாக பார்த்து மற்றும் கேட்டு கொண்டிருந்தான். அவன் இவ்வளவு ஆர்வமாக வாயை பிளந்து விசாரித்துக்கொண்டிருக்கிறான் என்றால் அது படு முக்கியமாகத்தான் இருக்கும் என்று நானும் எட்டிப்பார்த்தேன்..
தொலைக்காட்சியில் கூகிள் பற்றியதொரு நிகழ்ச்சி. கூகிள் என்று மெல்லிய பனியன் அணிந்த அழகி, கூகிள் நிறுவனம் தோன்றிய விதம், கூகிள் மூலம் என்ன என்ன தேடலாம் என்பதை விளக்கிக்கொண்டிருந்தாள்...

அவனுக்கு அவ்வளவாக இங்கிலீஷ் புரியாது என்பதால் என்னை பார்த்து இந்த கேள்வியை கேட்டான்.
அதென்ன கூகிள் சர்ச் , பாதிரியார் இருப்பாரா ? இது அல்போன்ஸ்.
முண்டம். கூகிள்னு இண்டர்நெட்ல வெப்சைட் இருக்குல்லா ? அதுடா. அதுல முகப்பு பக்கத்தில் உள்ள பெரிய பெட்டியில் எதையும் டைப் செய்து தேடலாம்.
எல்லாத்தையும் தேடலாமா ?
ஆமாம் அல்போன்ஸு. இலக்கியம், பொருளாதாரம், அறிவியல் அப்படீன்னு என்ன தேடினாலும் வரும். எந்த இடம் எங்க இருக்குன்னு தேட கூகிள் மேப். தெருத்தெருவா காட்டும். எந்த புது செய்தியாக இருந்தாலும் கூகிள் நியூஸ். ஆர்க்குட்னு ஒரு சோஷியல் நெட்வோர்க்கிங். அதுவும் கூகிள்தாண்டா. ஆனால் முக்கியமா நீ கத்துக்கவேண்டியது கூகிள் சர்ச். எதை எப்படி செய்வது என்பது கூட தேடினால் பல வலைப்பக்கங்களில் அதன் செய்முறையை தெரிஞ்சுக்கலாம். I am feeling Lucky அப்படீங்கற பட்டன் நேரடியாக அந்த இணையத்துக்கே கொண்டு சேர்க்கும். Search என்றால் பல இணைய தளங்கள் பட்டியலாகும்.
இங்கபாரு. என்னோட லேப்டாப்ல. கூகிள் முகப்பை திறக்கிறேன் பாரு. இங்க இருக்க பெட்டியில் எதை வேண்டுமானாலும் டைப் செய் பார்க்கலாம்.
சரி டைப் செய்யறேன். லேப்டாப்பை கொடு.
இந்தா அல்போன்ஸு.
அல்போன்ஸு மடிக்கணினியை கோவில் ப்ரசாதம் போல பயபக்தியோடு வாங்கினான்.
கூகிள் விண்டோவில் டைப் செய்தான்.
" How To Search in Google"
..
..
..
14 comments:
இதைவிட நல்ல பதிவுக்கு ஓட்டு போடுங்க. இதுக்கு போடாதீங்க.
//செந்தழல் ரவி said...
இதைவிட நல்ல பதிவுக்கு ஓட்டு போடுங்க. இதுக்கு போடாதீங்க.//
நோ சான்ஸ்.. இந்த பதிவுக்குத்தான் நான் ஓட்டு போடுவேன். ரவி பேச்சை நான் கேக்கணுங்கற அவசியமா என்ன? :)
அவ்வ் சென்ஷி..
//இதைவிட நல்ல பதிவுக்கு ஓட்டு போடுங்க. இதுக்கு போடாதீங்க//
பெரியவங்க சொன்னா நான் கேட்டுகுவேன். நான் ஓட்டு போடலங்க
நன்றி ஷாகுல்ஜி...
இதைவிட நல்ல பதிவுக்கு ஓட்டு போடுங்க. இதுக்கு போடாதீங்க./////
இதுக்காகவே ஒட்டு போடுவேன்
ஹி ஹி நன்றி சுரேஷ்குமார்.
அல்போன்ஸ் குஜாலு ஆளா இருக்காரு :)-
அப்ப இந்த பதிவுக்கு நான் எப்போதும் போடும் நெகடிவ் வோட்டு கூடாதா ?
அது ...சரின்னா..
" How To Search in Google"
மணி நீதானா அது ?
நன்றி சிவனடியார்....
நன்றி தமிழ்நெஞ்சம்.
:))
Post a Comment