Tuesday, October 06, 2009

லஞ்சத்தின் த்ரீ டைமன்ஷன் ???


லஞ்சத்தை காலம் காலமாக சகித்துக்கொள்ளும் பொதுமக்கள்:

க்யூவில் நிற்க என்னுடைய ஸ்டேட்டஸ் இடம் கொடாது..

என்னுடைய வேலை சீக்கிரமா முடியனும், நான் வெளிநாடு போவனும், எவன் எக்கேடு கெட்டாலும் எனக்கு கவலை இல்லை.

நான் நேர்மையானவனில்லை. என்னிடம் இருக்கிற டாக்குமெண்ட்ஸ் சட்டப்படி செல்லாது. அதனால் சட்டத்துக்கு புறம்பாகத்தான் என்னுடைய காரியத்தை முடிக்கவேண்டும்.

அய்யோ. லஞ்சம் கொடுக்கவில்லை என்றால் என்னுடைய காரியம் நடக்கவில்லை என்றால் ? பயமாருக்கு. என்னுடைய வேலை எனக்கு முக்கியம்.

என்னது, லஞ்சம் கொடுக்கவேண்டாமா ? அவன் மிரட்டி வாங்குறான் சார். என்ன செய்யறது ?

எல்லாரும் கொடுக்கறாங்க. நானும் கொடுக்கறேன். நான் மட்டும் என்ன விதிவிலக்கா சார் ?

அவங்கள எதிர்த்துக்கிட்டு என்ன சார் செய்யமுடியும் ? பேசாம கொடுத்துட்டு போகவேண்டியது தான்.

இது என்ன சினிமாவா ? ரியல் லைப் சார் ரியல் லைப். இந்தியன் தாத்தா படம் எப்பவோ தியேட்டரை விட்டு ஓடிருச்சு..

நாணல் மாதிரி வளைஞ்சு கொடுத்துட்டு போய்ட்டே இருக்கனும்பா. லஞ்சம் கொடுக்க மாட்டேன், முடிச்சு அவுக்கமாட்டேன் அப்படீன்னா கடைசியில படறது நாமதானே ?

போலீஸ்ல சொல்றதா ? ஹி ஹி. அவங்களே வாங்குறாங்களேப்பா.

என்னது லஞ்ச ஒழிப்பு போலீசா ? எவ்ளோ லஞ்சம் கொடுக்கனுமோ அவ்ளோ பணத்தை நாம லஞ்ச ஒழிப்பு போலீசுக்கு கொடுக்கனுமாம். அதுல அவங்க கெமிக்கல் தடவுவாங்களாம். அதை நான் கொண்டுபோயி லஞ்சம் கேக்குற அதிகாரிக்கிட்ட கொடுக்கனுமாம். அப்புறம் அவங்க மறைஞ்சிருந்து அதிகாரிய புடிப்பாங்ககாள். ஆனா என்னோட காசு ஆதாரமா கோர்ட்டுல சம்பிட் பண்றதுக்கு போலீஸ் எடுத்துக்குவாங்களாம். அதுக்கு நான் லஞ்சமே கொடுத்திட்டுபோவனே ? அதே செலவுதானே ?

அடப்போய்யா..எவன் கோர்ட்டு கேசுன்னு அலையறது ? மண்டையில இருக்க கொஞ்ச நஞ்ச முடியும் கொட்டிரும்...வேற ஆளைப்பாரு.

நாம மாட்டிவிடற அதிகாரி, சஸ்பெண்ட் ஆகி, வேலை போய், நாளைக்கு நடுத்தெருவுக்கு வந்துருவான். அப்புறம் கூலிப்படையை வெச்சு மாறுகால் மாறுகை வாங்கிட்டான்னா ? கையும் காலும் என்னுதாச்சே ?



காலம் காலமாக டேபிளுக்கு கீழும் மேலும், தலையை சொறிந்தும், மிரட்டியும், மக்களின் தேவைகளை பயன்படுத்தியும், அதிகாரம் செய்தும், அதிகார துஷ்ப்ரயோகம் செய்தும், "மாசக்கடைசி" என்ற சிங்கிள் வேட்டை பயன்படுத்தி கெஞ்சியும் லஞ்சம் அல்லது கையூட்டு பெற்றுக்கொண்டிருக்கும் அதிகாரிகள், அரசுத்துறையினர்

மூனு லோன், பி.எப் லோன், பிடித்தம் போக சம்பளம் மூவாயிரம் வருது சார். இந்த மூவாயிரத்துல வீட்டு வாடகை கூட கட்டமுடியாது. என்னை ஏன் வாங்கக்கூடாதுன்னு சொல்ற ?

ஒரு பையன் இஞ்சினீயரிங் படிக்கிறான். டொனேஷன் 3 லட்சம் கொடுத்தேன். அட ஹாஸ்டல் பீஸ் அம்பதாயிரம் சார். என்னை என்ன செய்ய சொல்றீங்க ?

ஊருல யாருமே வாங்கலைன்னு சொல்லுங்க. என்னையும் வாங்கவேண்டாம்னு சொல்லுங்க. நான் மட்டும் முட்டாள், ஊர்ல இருக்கறவனெல்லாம் அறிவாளி. அப்படித்தானே ?

தாலி செயின் கொஞ்சம் பெருசா வேணும்னு வீட்ல ரொம்ப டார்ச்சர். நீங்களா பணம் தரப்போறீங்க அதுக்கு ? கை நீட்டித்தான் ஆவனும்.

அம்பது வயசு வரைக்கும் வாங்கலை சார். இன்னும் வாடகை வீடு. காறித்துப்பறா என்னோட பொண்டாட்டி. இனிமேலும் பொறுக்கமுடியாது சார். சொந்தவீட்டுக்கு போயே ஆகனும்.

இன்னைக்கு கோயம்பேட்ல ஒரு கிலோ தக்காளி எவ்ளோ சார் ? என்னோட சம்பளத்தை மட்டும் நம்பிக்கிட்டிருந்தா, வெறும் தக்காளி மட்டும்தான் வாங்க முடியும். அரிசி வாங்க முடியாது.

24 மணி நேரம் டூட்டி பாக்குறோம் சார். வேற எந்த டிப்பார்ட்மெண்ட்ல இப்படி இருக்கு ? சம்பளம் எவ்ளோன்னு தயவு செஞ்சி கேக்காதீங்க. நைட் வாச்மேனுக்கும் எங்களுக்கும் பெரிசா வித்யாசமில்லை.

பேரு தான் பெத்த பேரு. கவுர்மெண்டு ஜீப்பு. பொண்டாட்டி புள்ளைங்கள ஒரு சினிமாவுக்கு ட்ராமாவுக்கு கூட்டிக்கிட்டு போவ முடியல சார். பாப்கார்ன் அம்பது ரூவா. என்ன செய்யச்சொல்றீங்க ?

ஊரே அம்மணமா திரியுது. நான் மட்டும் கோவணம் கட்டிக்கனுமா ? என்னைய பார்த்தா கேனையன் மாதிரி இருக்கா ?

என்னோட படிப்பு செலவுக்கு மொத்தம் பத்து லட்சம் ஆச்சு சார். இந்த ஊர்ல போஸ்டிங் வாங்கறதுக்கு சொளையா மூனு லட்சம் செலவாச்சு. எங்கப்பா வீட்டை வித்திருக்கார். எப்படி சார் அந்த காசை திரும்ப எடுக்கறது ?

மத்தவங்கள மாதிரி ஆயிரம் ரெண்டாயிரம்னு வாங்கறதில்லை சார் நானு. ஏதோ ஒரு நூறு எறநூறு. இல்லாதப்பட்டவங்களுக்கு ப்ரீயாவே செய்யறேன். ஆபீஸ்ல எல்லாருக்கும் டீ வாங்கித்தரச்சொல்லுவேன். ரெண்டு கொயர் பேப்பர், பத்து ரெணால்ட்ஸ் பேனா. இது போயி தப்பா ?

இவனுங்க வேலைக்கு நான் வண்டியில பெட்ரோல் போட்டுக்கிட்டு டாக்குமெண்டை தூக்கிட்டு போறேன். பெட்ரோல் என்ன என் வீட்டு கெணத்துலயா புடிக்கமுடியும் ? அம்பது ரூவா ஆவுதில்ல ? மேல ஒரு 200 போட்டு எறநூத்தம்பதா கேட்டு வாங்கிக்கறேன். இவனுங்க பாஸ்போர்ட்ட வாங்கிக்கினு வெளிநாட்ல போய் லச்ச லச்சமா சம்பாரிப்பானுங்க. நமக்கு ஒரு எறநூத்தம்பது குடுக்கமாட்டானுங்களா ?

என்ன சார் உழைப்பாளி ? நைட் ஷிப்ட்டு ? நைட்டு பண்ணண்டு மணிக்கு பொண்ணுகளோட பைக்ல வருவான். டாக்குமண்ட் இருக்காது. அப்படியே உட்டுடனுமா ? ஐநூறு ரூபாய்க்கு பீர் அடிப்பானுங்க. எனக்கு நூறு ரூபா குடுக்க மூக்கால அழுவானுங்களா ? லைசென்ஸ் இல்லைன்னு கேஸை கோர்ட்டுக்கு இழுத்துக்கிட்டு போனா அவன் ஆயிரம் ரூபா கட்டனும் சார். நான் செய்யறது உண்மையிலேயே பாவப்பட்டு. எங்கிட்ட வந்து லஞ்சம் வாங்காத பஞ்சம் வாங்கதன்னு ? போ சார் வேலைய பாத்துக்கினு.

ஐடிங்கறான். வேலைக்கு போய் ரெண்டு வருசத்துல காரை வாங்கிடுறான். ப்ளாட்டை வாங்கிடுறான். நான் முப்பது வருஷம் சர்வீஸ் பண்ணி இப்பதான் சிட்டி அவுட்டர்ல லேண்டே வாங்கியிருக்கேன். இனிமே அதுல வீடு கட்டனும். பொண்ணுக்கு கல்யாணம் பண்ணனும். நாய் மாதிரி வேலை செஞ்சு டாக்குமெண்டை ரெடி பண்ணி கொடுத்திருக்கேன். ஆயிரம் ரூபாய் குடுக்கறான். வாங்கக்கூடாதா சார் ?

சாப்ட்வேர் கம்பெனி சம்பளம் வேண்டாம். அட்லீஸ்ட் செண்ட்ரல் கவர்மெண்டு சம்பளம் போடச்சொல்லுங்க. லஞ்சமே வாங்காத பெரியவர் கதை தெரியுமில்ல ? பி.எப் அப்ளை பண்ணி மூணு வருசமா பணம் வரலை. பொண்ணு முப்பது வயசுல நிக்குது. அந்தாளை மாதிரி லூசா இருக்கச்சொல்றீங்களா ?

சார். ஏதோ ஆயிரம் ஐநூரு கிடைக்கிறது இந்த ஊர்ல மட்டும்தான் சார். ஏதாவது அத்துவான காட்டுக்கு ட்ராஸ்பர் வந்துட்டா அதுக்கும் வழியில்லை. காற்றுள்ள போதே தூற்றிக்கறோம். இதுல என்ன தப்பு ?

முப்பது வண்டி ஓடுது அவனுக்கு. இந்த எப்.சிக்கு அவன் குடுக்குற ஆயிரம் பிச்சைக்காசு சார் அவனுக்கு. அதை போய் வாங்காதீங்கன்னு சொல்லி எதுக்கு எங்க பொழப்புல மண்ணள்ளி போடறீங்க ?

டாஸ்மாக்குல சரக்கு கூல்ட்ரிங்ஸுன்னு நூறு ரூபாய் ஆயிடும். அதுக்கு பாவம் அவம் பத்து ரூபாய்க்கு சாரயம் குடிச்சுட்டு போறான். அதைப்போய் ரெய்டு பண்ணி எதுக்கு சார் ? விட்டுத்தளுங்க. என்னது சாராய வியாபாரியா ? அவன் வாரம் அஞ்சாயிரம் கட்டுதான். அது மொத்தம் பத்து பேருக்கும் பங்கு பிரிச்சா எனக்கு வெறும் ஐநூறு வரும் சார். அதைப்போயி ? என்னது கள்ளச்சாராயமா ? குடிச்சுட்டு சாவட்டுமே ? நாட்ல மக்கள் தொகை கொறையுதுன்னு வைங்க ஹெ ஹெ.

சார் நீங்க சொல்லுங்க. டெக்னிக்கலா இந்த கவர்மெண்ட் கம்பெனியில செய்யறதை எந்த தனியார் கம்பெனியிலயாவது செய்யமுடியுமா ? சம்பளம் மட்டும் அவங்களோடதுல கால் வாசிதான். ஏன் சார் எங்களுக்கு மட்டும் இப்படி ?

நீங்க நெனைக்கிறமாதிரி ஒரு ஆளுக்கு மட்டும் போறதில்லை சார். மேலிருந்து கீழ வரைக்கும் பங்கு. குரங்கு பங்கு பிரிக்கிற மாதிரி. அதெல்லாம் பெரிய போஸ்ட்ல இருந்தாத்தான் நிறைய கிடைக்கும் சார்.

லஞ்சத்தை ஒழிக்கனுமா ? ப்ளீஸ் கெட்ட வார்த்தை பேசாதீங்க. வெகுமதின்னு சொல்லுங்க. அன்பளிப்புன்னு சொல்லுங்க. ஹோட்டல்ல டிப்ஸ் வைக்கலைன்னா உங்களுக்கு என்ன மரியாதை கிடைக்கும் ? ரெண்டு இட்லிய சர்வ் பண்றதுக்கே ரெண்டு ரூபாய் வைக்குமோது, நாப்பது லட்ச ரூவா வேலைக்கு வெறும் நாலாயிரம் வாங்கினா என்ன சார் தப்பு ?

இருக்கறவன் குடுக்கிறான். உனக்கென்ன பொச்செரிச்சல் ? வேலையை பார்த்துக்கிட்டு போய்யா.

நானும் ஆரம்பத்தில கொஞ்சம் கஷ்டப்பட்டேன். எதிர்த்து கூட பேசினேன். உனக்கு தேவையில்லைன்னா ஒதுங்கிக்கோன்னு சொல்லிட்டாங்க. அதான். நான் ஒதுங்கிட்டேன். என்னளவில் எந்த வேலைக்கும் காசு வாங்குறது கிடையாது. அவ்ளோ தான் என்னால செய்யமுடியும் சார். மத்தபடி இவங்களை போட்டுக்கொடுத்து, வேலைக்கு உலை வெக்கனும்னு எனக்கு ஆசையில்லை. எக்கேடோ கெட்டுபோறாங்க !!



அரசாங்கத்தின் வருமானத்தின் 90 சதவீதத்தை அரசு ஊழியர்களின் சம்பளத்துக்கே செலவு செய்யும், லஞ்ச ஒழிப்புத்துறை என்ற வீக்கான கட்டமைப்பை உருவாக்கி லஞ்சத்தை ஓரளவுக்கு ஒழிக்க முயலும் அரசு

நீங்க கம்ப்ளைண்ட் கொடுங்க சார். அவங்க பார்த்துப்பாங்க. அதுக்குத்தானே தனி டிப்பார்ட்மெண்ட் இருக்கு ?

ஐடி கம்பெனி மாதிரி நாங்க எப்படி சம்பளம் கொடுக்கமுடியும் ? எங்களுக்கு என்ன க்ளையண்ட் அமெரிக்காவிலயா இருக்கான், டாலர்ல கொட்ட ?

அவங்க உங்க வேலையை செஞ்சு கொடுக்கறதே பெரிசு சார். இதுல அதை வாங்காத இதை நோங்காதன்னுட்டு..

நாங்களும் எங்களால முடிஞ்சதை செய்துக்கிட்டு தான் இருக்கோம்.

கவர்மெண்ட்லயே இதை ஸ்ட்ரிக்டா செய்ய சொல்லலை சார். நாங்க என்ன செய்யறது ?

ஆமா. கோர்ட்டு கேஸுன்னா கொஞ்ச நாள் ஆகத்தான் செய்யும். இண்ஸ்டண்டா தீர்ப்பு சொல்ல இது என்ன நூடுல்ஸ் வெவிக்கிற விஷயமா ? புகார் காழ்ப்புணச்சியின் அடிப்படையில கூட இருக்கலாம் இல்லையா ?

நீங்க குடுக்காதீங்க. உங்களை மிரட்டி கேட்டா சொல்லுங்க. மத்தபடி நாட்ல லஞ்சம் வாங்கற எல்லாருக்கும் தண்டன கொடுக்க இது என்ன சினிமாவா ?

உங்க வேலை என்னவோ அதை பாருங்க. பெரிசா சமூக சேவைக்கு கெளம்பிட்டாரு அய்யா...

..

..

..

41 comments:

ரவி said...

மக்கள், அரசு ஊழியர்கள், அரசு என்ற மூன்று தரப்பின்பாலும் நின்று பார்க்க முயன்றதன் விளைவு இந்த பதிவு...!!! பதிவி பிடித்திருந்தால் ஓட்டு போடுங்கள்...

உண்மைத்தமிழன் said...

சூப்பர்ப்.. சூப்பர்ப்.. சூப்பர்ப்..

மூன்று அனலிஸ்களுமே உண்மைதான்..

எல்லாம் பணம் படுத்தும் பாடு..!

நான் ஆதரவுக் குத்து குத்திவிட்டேன்..!

பிரபாகர் said...

நல்லா அலசியிருக்கீங்க... ஆதரவு ஓட்ட போட்டுட்டேன்... கலக்குங்க ரவி.. 3/3

பிரபாகர்.

ரவி said...

உங்கள் பாராட்டு தேன். நன்றி உ.த. அண்னே..

ரவி said...

நன்றி ப்ரபா.....

aathirai said...

அய்யா செந்தழஅலு,
அது என்ன எல்லாரும் திமிங்கலம், சுறா எல்லாத்தையும் உட்டுட்டு இந்த நேத்திலி மீனுங்க்ள பத்தியே கவலைப்படறீங்க.

இதையே தொழிலதிபர் , அமைச்சர் ,இந்த லெவலில் ஏன் யோசிக்கக்கூடாது ?

இன்னொரு கொடுமை ஒன்னு இருக்கு. லஞ்சம் வாங்க்காதவங்களை பத்தி லஞ்சம் வாங்கறவன் மொட்டை பெடிஷன் எழுதி ஓயாத ரோதனை கொடுப்பது. கடைசியில் இதுக்கு லஞ்சம் வாங்குவதே மேல் என்ற நிலைக்கு வந்துடுவான்,

நிகழ்காலத்தில்... said...

ஓட்டுப் போட்டுவிட்டேன்

நல்லமுறையில் மூன்று தரப்பிலும் நின்று சிந்தித்தது மிகவும் பிடித்தது..

அடிக்கடி இந்த மாதிரி அலசுங்க..

வாழ்த்துக்கள்

புருனோ Bruno said...

//அரசாங்கத்தின் வருமானத்தின் 90 சதவீதத்தை அரசு ஊழியர்களின் சம்பளத்துக்கே செலவு செய்யும்,//

இதற்கு ஆதாரம் தர முடியுமா ?

Ramprasath said...

உண்மையாக ஒரு COMMON MAN-ன் மனதை பிரதிபலித்திருக்கிறீர்கள், ஆனால்
இந்த மாதிரி நினைக்காம செயலில் இறங்கியவங்க List தான், இந்த
தளம் பூராகவும்.

பீர் | Peer said...

சூப்பர் ரவி, நாட்டு நடப்பை சொல்லியிருக்கீங்க..

அவனவனுக்கு வயிற்று வலி..

ரவி said...

டாக்டர்.

ஜெயலலிதா முதல்வராக இருந்த பீரியடில் வந்த அரசு ஊழியர் பிரச்சினையின் போது செய்தித்தாளில் படித்தேன்...

ரவி said...

நன்றி பீர்..!!!

ரவி said...

திரு லஞ்சம் (பேரை மாத்துங்களேன்) மற்றும் மவுனி, உங்களது பதிவுகள் தான் இந்த இடுகைக்கு இன்ஸ்ப்ரேஷன் என்று சொன்னால் நம்புவீர்கள்தானே ?

ILA (a) இளா said...

ரவி அவர்களே! உங்கள் பதிவுகளிலேயே சிறந்ததுன்னு சொல்ல வெக்க ஒரு பதிவுன்னா அது இதுதான். நமக்குள் ஆயிரம் பிரச்சினை இருந்தாலும் இப்படி சில நல்ல பதிவுகள்(மட்டுமே) கைகுலுக்கிக்கொள்கின்றன.

ரவி said...

daankuda ila

ஊர்சுற்றி said...

//ஜெயலலிதா முதல்வராக இருந்த பீரியடில் வந்த அரசு ஊழியர் பிரச்சினையின் போது செய்தித்தாளில் படித்தேன்...//

என்புட்டு பழசான விசயம்!

இடுகை நன்றாக அலசி நிதானமாக யோசித்து எழுதப்பட்டது என நினைக்கிறேன். பெரும்பாலான (சொல்லப்போனால் அத்தனைவிதமான) சாக்கு போக்குகளும் இங்கே வந்துவிட்டன. அருமை ரவியண்ணா.

sriram said...

டைமென்ஷன் எல்லாம் நல்லா இருக்கு, இத்த ஒழிக்க ஒரு மனுஷன் எப்போ வருவான்?
ஜாதியும், லஞ்சமும் இல்லாத இந்தியா எவ்வளவு வலிமையா இருக்கும்? அது எப்போ நடக்கும்? :(
அப்புறம் ஒரு தனி மடல் அனுப்பி இருக்கேன், பதில் போடுங்க
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

T.V.ராதாகிருஷ்ணன் said...

சூப்பர்ப்..

Anand said...

பட்டைய கிளப்பிடீங்க சார்..!! - ஆனந்த்.

VISA said...

அப்பாவி மக்கள் என்ன செய்வார்கள். லஞ்சம் கொடுக்காதே என்று சொல்பவர்களை நாக்கறுக்கவேண்டும். நல்ல பதிவு.

SurveySan said...

வெரிகுட்!!

சென்ஷி said...

:)

கபிலன் said...

அருமை...த்ரீ டைமன்ஷன்ல சொன்னவை அனைத்தும் யோசிக்க வைக்கிறது!

ரவி said...

நிகழ்காலத்தில், நன்றி !!!!

ரவி said...

ஊர்சுற்றி, கிடைத்த கொஞ்ச நேரத்தில் கிறுக்கியது என்பது மட்டில் உண்மை.

நன்றி.

யுவகிருஷ்ணா said...

////அரசாங்கத்தின் வருமானத்தின் 90 சதவீதத்தை அரசு ஊழியர்களின் சம்பளத்துக்கே செலவு செய்யும்,//

இதற்கு ஆதாரம் தர முடியுமா ?
//

கொடநாடு கொண்ட சீமாட்டி மட்டுமே இதற்கு ஆதாரம் :-)

ஆரூரன் விசுவநாதன் said...

மறப்பது மானுட இயல்பு, நினைவு படுத்தவேண்டியது நம் கடமை என்ற வரிகள் நினைவிற்கு வருகின்றன.

வாழ்த்துக்கள்

ரவி said...

sriram, டிவிஆர் அய்யா, ஆனந்த், கபிலன், வாராது வந்தவக (சர்வேசன்), விசா, சென்ஷி, ஆரூரன், எல்லோரும்க்கும் நன்றிங்க...

ராஜ நடராஜன் said...

உங்க கடைப்பக்கம் ரொம்ப நாள் வந்தாலும் இந்த இடுகை ஒரு மைல்கல் என்று சொல்லலாம்.

அப்படியே பின்னூட்டத்தில் ஆதிரை கேட்ட மாதிரி "இதையே தொழிலதிபர் , அமைச்சர் ,(கூட மா அமைச்சர்)இந்த லெவலில் ஏன் யோசிக்கக்கூடாது ?" என்ற 3D எதிர்பார்ப்புடன்.

ரவி said...

நன்றி ராஜ நடராஜன்.

Bruno said...
This comment has been removed by a blog administrator.
M.G.ரவிக்குமார்™..., said...

இந்தியன் திரைப்படத்தில் லஞ்சம் பற்றி ஒரு அருமையான caption கொடுத்திருப்பார்கள்!நேற்றைய குற்றம்!இன்றைய நியாயம்!நாளைய சட்டம்!......இன்னும் கொஞ்ச நாளில் லஞ்சம் சட்டப்பூர்வமாக்கப்பட்டாலும் ஆச்சர்யமில்லை.!....

ரவி said...

டாக்டர், உங்க பின்னூட்டத்தில் வந்த ஒரு செய்திக்காக அதை எடுக்கவேண்டியதா போச்சு.

படித்தேன். நம்பியிருந்தேன்.

தமிழக அரசின் நிதி நிலை அறிக்கை பற்றிய தகவலை நீங்கள் சொன்னால் தெரிந்துகொள்கிறேன்.

மற்றபடி, எனக்கு ஒன்னும் விஷயம் தெரியாது என்பது எல்லோருக்குமே தெரியும். ஜஸ்ட் ஒரு டைம் பாசுக்காக எழுதறேன். நீங்களும் அப்படி காமெடியாகவே எடுத்துகோங்க டாக்டர்..

ரவி said...

நேசன் சரியா சொன்னீங்க.

கையூட்டு பெறுவது என்பது ஒரு குற்றம் என்ற பீலிங் அரசு ஊழியர்களுக்கு போய் ரொம்ப நாளாச்சு..

ரவி said...

மேலும் டாக்டர். அது நானல்ல, நானல்ல. காதால் கேட்பது உண்மையல்ல.

aathirai said...

எனக்கு ஒரு தமிழ்நாட்டு (கிராமம்) பெண்மணி இப்படி ஐடியா குடுத்தார். நீ ஏன் அமெரிக்காவுல கெடந்து கஷ்டப்படறே , இங்க ஆபீசர் ஆகி நல்லா வாங்கலாம இல்லே ! பெண்ணுரிமை எங்கேயோ போயிடுச்சு இந்தியாவுல .: )

இன்னொரு ராபின் ஹூட் அதிகாரி - நான் ஏழைகளிடம் எல்லாம் வாங்கறதில்ல. பணக்காரங்க வரும்போது ரெண்டு கையால வாங்குவேன் . அவன் கிட்ட வாங்கினா தப்பில்லைன்னு நெனைக்கற கம்யூனிஸ்டு . M/L etc.
ps:
i condemn blogs without anonymous option.

ரவி said...

ஆதிரை. இங்கன அனானி ஆப்சன் கொடுத்தா ரொம்ப கலீஜாக்க ஆட்கள் ரெடி. உங்களுக்கு பழைய ஹிஸ்டரி எல்லாம் தெரியாது போல. ஆனாலும் உங்க பர்ஸ்பெக்டிவ்ல இருந்த ரெண்டு பாயிண்ட்ஸும் சூப்பர்.

geethappriyan said...

ரொம்ப அருமையான அலசல்கள்.மறுக்கமுடியா காரணிகள்
ஒட்டுக்கள் போட்டாச்சுண்னே

ரவி said...

நன்றி கார்த்திகேயன்..

ஜோதிஜி said...

போட்டது பதினோராவது ஓட்டு. ஆனால் இன்னும் 39 ஓட்டுக்கள் இதற்கு வர வேண்டும்.

commie.basher said...

கலர் டீவிக்கும், 500 ரூபாய்க்கும் ஆசைப்பட்டு சோசியலிசத்துக்கு வோட்டு போட்டால் என்ன நடக்கும் ?

அரசு இயந்திரத்துக்கு "ஆயில்" போட்டே ஆண்டியவது தான் நடக்கும்.

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால்

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால் டயபட்டீஸ் / நீரிழிவு / சர்க்கரை நோயை விரட்ட நியான்டர் செல்வனால் ஆரம்பிக்கப்பட்ட இந்த குழுமத்திற்கு ( https://www....