Thursday, October 29, 2009

அன்னா மரியா குமாரசாமி.....



காலையில் அலுவலகம் வந்து மின்னஞ்சலை திறந்தவுடன், 'உடனே என்னுடய இடத்துக்கு வரமுடியுமா' என்று மின்னஞ்சல் அனுப்பியிருந்தான் க்ரிஷ்.

என்னடா அவசரம். அப்புறமா வரேன். மீட்டிங் இருக்கு. என்று பதில் அனுப்பினேன்.

ம்ஹும். அர்ஜெண்ட். உடனே வா.

அப்படி என்னடா அர்ஜெண்ட், என்றேன் அவன் இருக்கைக்கு அருகில் நின்றுகொண்டு.

அவன் கையில் இன்றைய செய்தித்தாள். அதில் தோராயமாக நடுப்பக்கம். பார். படி. என்றான்.

புதிய வரிவிதிப்பு முறைகள் பொதுமக்களை எவ்வாறு பாதிக்கின்றன என்பது போல ஒரு த்ராபையான தலைப்பு, ரெண்டு முழு பக்கங்களை விழுங்கியிருந்தார் எழுத்தாளர். அதில் நாலைந்து பொதுமக்களை பேட்டி கண்டு அவர்கள் கருத்தை பதிந்திருந்தார். அவர்களது படங்களும் வெளியாகியிருந்தன.

குழந்தையோடு நிற்கும் ஒரு பெண், பள்ளி செல்லும் ஒரு மாணவி, ரெண்டு முதியவர்கள் என்று வேறுபட்ட ஏஜ் க்ரூப்பில் அவர்கள் கருத்துக்களை தெரிவித்திருந்தார்கள்.

அதில அந்த பொண்ணு சொல்றத படி.

படத்தில் இருந்த இளம்பெண் அழகு. ஒல்லியான தேகம், நல்ல உயரம். வெண்ணிற ஆடை, தோளில் ஸ்டைலிஷான ஒரு கரிய நிற பேக். ஒற்றை வார்த்தையில் அழகு என்று சொல்லிவிட முடியாதபடிக்கு.

சூப்பரா இருக்கா இல்லையா ?

நான் அவள் சொல்றத படிக்கச்சொன்னேன்.

புதிய வரிவிதிப்பு முறைகளை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?

மாறிவரும் பொருளாதார சூழ்நிலையில் அரசுக்கு இருக்கும் நிர்ப்பந்தகளின் அடிப்படையில் வரி விதிப்புகளை செய்கிறார்கள். அந்த வரி விதிப்புகள் நடுத்தர மற்றும் அதிக வருவாய் அற்ற பிரிவினரை பாதிக்காமல் இருந்தால் நன்று. அதே சமயம், இந்த வரிவிதிப்புகள் தொழில் வளர்ச்சியை தடுக்கும் வகையில் அமைந்திடாமல் காத்திடவேண்டும். அப்படி செய்தால் தான், தொழில்கள் மீண்டும் வளர்ச்சிப்பாதையில் செல்லும். பொருளாதாரமும் மீளும். இது கடினமான பணி என்றாலும், இதனை சிறப்பாக கடந்துசெல்வதம் மூலம் மக்கள் அனைவரின் ஆதரவையும் அரசு பெறும்.

காம்ப்ளிகேட்டடா பேசியிருக்கா. இல்லையா ?

அப்போதுதான் பெயர் மற்றும் வயதை பார்த்தேன். அன்னா மரியா குமாரசாமி. வயது பதினாறு. வி ஜி எஸ் பள்ளி.

என்னடா, பதினாறு வயசுன்னு போட்டிருக்கு ? பேர் என்னடா வித்யாசமா ? அன்னா மரியா குமாரசாமி ? தமிழ் பொண்ணா இருக்குமோ ?

போர்ச்சுகீஸ் மாதிரி இருக்காடா. அன்னா அப்படீங்கறதுல ரெண்டு n இல்லை. அதனால கண்டிப்பா போர்ச்சுகீஸ்.

குமாரசாமி ?

அதான் தெரியலை. ரொம்ப குழப்பமா இருக்கு. அதனால உன்னை கூப்பிட்டேன்.

நெட்ல தேடியிருப்பியே ?

இவ ரொம்ப இண்டலிஜெண்ட். தன்னை பற்றிய எந்த விவரமும் நெட்ல வராம பார்த்துக்க்கிட்டிருக்கா.

ஊப்ஸ்.

அட்ரியன் குமாரசாமின்னு ஒரு மொட்டைத்தலை வர்ரார். அவர் ஒருவேளை இவளோட அம்மாவை கல்யாணம் செஞ்சிருக்கலாம். இவளோட அம்மா டைவர்ஸ் ஆகியிருக்கலாம். ட்ரொல்லி ட்ரோன்ஸ்னு ஒருத்தவங்க இருக்காங்க நெட்ல. அவங்களோட லாஸ்ட் நேம் குமாரசாமி. எந்த தமிழ் பெண்ணோட பேரு ட்ரோல்லி ட்ரோன்ஸ் ? கண்டிப்பா அவங்க குமாரசாமியோட வொய்ப். ஒருவேளை அவங்க இவளோட அம்மாவா இருக்கலாம். அவங்களோட எக்ஸ் ஹஸ்பெண்ட் போர்ச்சுகீஸ் ஆக இருக்கலாம். அல்லது அவங்களே போர்ச்சுகீஸ் ஆக இருக்கலாம்.

என்னடா பாலச்சந்தர் படம் மாதிரி குழப்பற ? இதை எல்லாம் வச்சி உனக்கு என்ன வேனும் ?

இந்த பொண்ணோட இமெயில் ஐடி கண்டுபிடிக்கனும். அதுக்கு நீ எனக்கு ஹெல்ப் பண்ணனும்.

டேய், ஆபீஸ்ல சம்பளம் கொடுக்கறது இதுக்கா ?

அதெல்லாம் முடியாது. நீ ஓவ்ர்டைம் பார்த்து எனக்கு இவளோட இமெயில் ஐடி கண்டுபிடிச்சு தா. குழந்தையை போல அடம்பிடிக்கிறான் க்ரிஷ். விட்டால் அழுதுவிடுவான் போல.

சரி உனக்காக இன்னைக்கு ஸ்பெண்ட் பண்ணி கண்டுபிடிக்கிறேன். வீட்ல இருந்து என்னோட வொய்ப் போன் பண்ணா மீட்டிங் இருக்குன்னு நீ பொய் மட்டும் சொல்லு..

ஓக்கே டன் டன். இது க்ரிஷ்.

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

பயபுள்ளைக்கு காதல் கத்தரிக்காய் என்று எதுவும் கிடையாது. எந்த பார்ட்னருடனும் ஒரு டேட் கூட இது வரை கிடையாது. அட யாருடனும் ஒரு காப்பிஷாப் கூட போனதில்லை. தனிக்கட்டை. இவனை கல்யாணம் செய்துகொள்ளச்சொல்லி அம்மா கட்டாயப்படுத்தவில்லை. சொல்லப்போனால், இவன் அம்மா அடிக்கடி சொல்வது, தயவு செய்து நி யாரையும் கல்யாணம் பண்ணி தொல்லை கொடுக்காதேடா. உனக்கு அதுக்கான மெச்சூரிட்டி கிடையாது. ஷார்ட் டெம்பர் லூசு டா நீ. அவன் அம்மா அவனுக்கு ஒரு தோழியைப்போன்றவள். அவள் சொல்வதிலும் உண்மை இருந்தது.

நான் கேட்டிருக்கிறேன்.

ஏண்டா. லவ் அது இதுன்னு எதாவது ஏன் உனக்கு வரவே இல்லை.

ரவி. When it Happens. it Happens. அது நடக்கும்போது நடக்கட்டுமே. எதையும் போர்ஸ் செய்யவேண்டாமே ?

அலுவலகத்தில் என்னுடைய கணினியில் கூகிளை திறந்து அன்னா மரியா குமாரசாமி, அன் மரி குமாரா, அன்னா மரியே குமாரசுவாமி என்றெல்லாம் டைப் செய்து பார்க்க ஆரம்பித்தேன்.

ம்ஹும். அவன் சொன்னதுபோல உண்மையில் இவள் இண்டலிஜெண்ட்.

யார் யாரோ வருகிறார்கள். கூகிள் படத்தேடல், புதிய தேடு இயந்திரம் பிங், பழைய தேடு இயந்திரம் யாஹூ என்று என்னால் ஆனமட்டும். இல்லை. கணிப்பொறியை சல்லடையாக்குகிறேன். அன்னா மரியாக்களை ஜலிக்கிறேன். சிக்கவில்லை.

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

ரவி. ரிப்போர்ட் எங்கே ? மேனேஜர்.

சார். ஐயாம் நாட் பீலிங் வெல் டுடே. நாளைக்கு தந்திடறேனே ?

ஓகே. வீட்டுக்கு போகவேண்டியது தானே ?

ஆக்சுவலி ஐ ஹாவ் சம் பர்சனல் ஒர்க் சார்.

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

ஒருமாதிரி முறைத்தபடி அவர் என் அறையில் இருந்து வெளியேற. மறுபடியும் கூகிள். வெறும் ஆன் மரி என்று தேடினால் கிடைப்பாளா ? குமாரசாமிக்கு எப்படி அன்னா மரியான்னு ஒரு மகள் இருக்கமுடியும் ?

'டெலிபோன் மணிபோல் சிரிப்பவள் இவளா' அலைபேசி துடித்தது.

என்னங்க, எவ்ளோ நேரம் ஆகும் வர ? எதுவும் பெரிசா வேலை இல்லைன்னு தானே சொன்னீங்க ?

இல்லம்மா, க்ளையண்ட் மீட்டிங்ல என்னை இழுத்துவிட்டுட்டாங்க.

சரி எப்ப ?

ஹாபனவர் ஆகும். பை.

அரைமணி நேரத்தில் எதுவும் முடியாமல், சரி நாளைக்கு பார்த்துக்கொள்ளலாம் என்று க்ரிஷிடம் சேட்டில் சொல்லிவிட்டு, கிளம்பினேன்.

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

காலையில் வீட்டில் காபியுடன் கணிப்பொறியை திறந்தவுடன், ஏங்க ஷேர்ட் அயர்ண் பண்ணலாம் இல்லையா ? காலையில கம்யூட்டர் திறக்கலைன்னா இந்த மனுசனுக்கு ஆவாதே ? என்ற வசவுகளுடன் கூகிள்.

முதல் பெயர் இரண்டு பெயராக இருந்தால், அதாவது அன்-மரியா என்று இருந்தால் நடுவில் ஒரு சிறிய கோடு விட்டு எழுதுவார்கள். ஒரு போரம்மில் பார்த்திருக்கிறேன். அது தூங்கும்போது நியாபகம் வந்து தொலைந்தது. பொதுவாக தூங்கும்போது எதாவது சிந்தனைகள் ஓடிக்கொண்டேயிருக்கும்..

இந்தாங்க ஷர்ட். அயண்ர் பண்றீங்களா ? இல்லைன்னா நான் அயர்ன் பண்றேன், நீங்க உப்புமா பண்ணுங்க.

இல்லை நான் அயர்ன் பண்றேன்.

ஈவ்னிங் மீட்டிங் இருக்கு, ஷாப்பிங் போகனும்னு சொன்னியே ?

இல்லை நான் நடந்து போய்ட்டு வந்திடறேன்.

ஓக்கே தேங்ஸ் மா. மதியம் மெக்டொனால்ட்ஸ்ல க்ரிஷ் ஆபீஸ் ஐடி கார்டை தொலைச்சுட்டான். உனக்கு தான் தெரியுமே ? ஐடி கார்ட் இன்ஸர்ட் பண்ணலைன்னா வெளியில வர முடியாது. அதனால அவன் வேலை முடிஞ்சு வரவரைக்கும் வெயிட் பண்ணனும். ஸாரிடா...

ஓக்கே பரவால்லைங்க. கேரி ஆன்...

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

அலுவலகம், மீட்டிங், க்ரிஷ்ஷுடன் லஞ்ச், அதன் பிறகு லேப்பில் கொஞ்சம் வேலை, அப்புறம் ஒரு டாக்குமெண்ட் சப்மிஷன். மாலையில் வீட்டில்..

ஏங்க ? ஏன் என்னிடம் சொல்லலை ?

என்ன சொல்லலை ?

மதியம் மெக்டொனால்ஸ்ட் போயிருந்தீங்களா அந்த லூசு க்ரிஷ்ஷோட ?

ஹி ஹி. உன் கிட்ட சொல்லாம போனதுக்கு சாரி. அங்க இருக்க யாரையும் நான் சத்தியமா சைட் அடிக்கலை.

உளறாதீங்க. நான் அதை கேட்கலை. அந்த லூசு ஆபீஸ் ஐடியை அங்கேயே விட்டுட்டு வந்திருச்சு. அங்க பார்ட் டைமா வொர்க் பண்ற ஒரு ஸ்கூல் பொண்ணு வந்து கொடுத்திட்டு போனா.

ஓ. வெரிகுட். ஆனா நீங்க திரும்ப போனா, அந்த கார்டை கொண்டுவந்து கொடுத்ததுக்கு அவளுக்கு ட்ரீட் தரனுமாம்.

சரி, தந்திட்டா போச்சு. அவ பேரு என்ன ?

அன்னா மரியா குமாரசாமி.....

என்னாது ???

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

34 comments:

பிரபாகர் said...

ம்... கண்டுபிடிச்சீங்களா இல்லையா?

நல்லாருக்கு ரவி, ஓட்டுக்களும் போட்டுட்டேன்.

பிரபாகர்.

ரவி said...

நன்றி பிரபாகர்...!!!

பின்னோக்கி said...

இது கதையா இல்லை உண்மை சம்பவமா ? எப்படி இருந்தாலும் ரொம்ப சுவாரசியமா இருக்கும். கூகிள நல்லா யூஸ் பண்றீங்க...

ரவி said...

சிறுகதை தான் பின்னோக்கி..நன்றி...

T.V.ராதாகிருஷ்ணன் said...

நன்றி..பின்னோக்கி.. சிறுகதை தான் .

:-)))

ரவி said...

நன்றி டிவிஆர்

ரவி said...

இது சிறுகதை என்றால் முடிவு எங்கே என்று கேட்கிறார் ஒரு தோழி உரையாடியில்.

சிறுகதை என்றால் முடிவு இருக்கவேண்டும் என்று இல்லையே ?

தொடரும் என்பது தான் முடிவு.

ஒருவேளை சர்வேசன்500 போட்டிக்கு அனுப்பினால் எதாவது முடிவு எழுதவேண்டும். திங்கிங்.

ரவி said...

முடிவு எழுதியாச்சு.

ரவி said...

வாக்களித்த ஆறு பேருக்கும் நன்றி. ஒரு ஓட்டு என்னோடது.

அருண். இரா said...

சரி ரவி..நச் கதை எங்கே? ஆங் ..சும்மா காமெடிக்கு கேட்டேன் ..கலக்கிட்டீங்க ..ஓட்டுக்களும் போட்டுட்டேன்.

நசரேயன் said...

நானும் ஒரு ஓட்டு

ரவி said...

:))

யாசவி said...

ரவி

ஆய்டியை மனைவியிடம் பார்த்து ஏது என கேட்க

ஒரு பெண் மெக்கியில் இருந்து கொடுத்ததாக சொல்ல

பொறி தட்டி பெயர் கேட்க

என முடித்திருந்தால் கடைசி வரியில் டிவிஸ்ட் வைத்திருக்கலோமோ?

எப்படி இருந்தாலும் கதை வேகமாக போகிறது.

:) nice to read

VISA said...

நம்ம ஓட்டையும் சேத்துக்கோங்க கணக்குல

ரவி said...

ஆமாம் அது கூட நல்ல ஐடியா தான். அப்படிக்கூட கொண்டு போயிருக்கலாம், இன்னும் நன்றாக வந்திருக்கும் யாசவி...

ரவி said...

நன்றி விசா

நர்சிம் said...

புனைவா உண்மையா என யோசிக்க வைத்தது வெற்றி தல.

ரசிக்கும் நடை.

☀நான் ஆதவன்☀ said...

நீங்க சிறுகதைன்னு சொன்னாலும் மனசு உண்மைதான் னே நினைக்குது :)

Kumky said...

நல்ல சுவாரஸ்யமான் நடை ரவி.

கதையானாலும் வரி விதிப்பு தொடர்பான வரிகள் அருமை.

ரவி said...

நன்றி கார்ப்பரேட் கம்பரே...

ரவி said...

நன்றி நான் ஆதவன்

ரவி said...

நன்றி கும்க்கி. வரி விதிப்பு தொடர்பான வரிகள் நானே ரூம் போட்டு யோசிச்சது.

sriram said...

ரவி
நெஜமாவே நல்லா இருக்கு, Flow ரொம்ப நல்லா இருந்தது. முடிவு கொஞ்சம் நல்லா இருந்திருக்கலாம், யாசவி சொன்ன முடிவு நல்லா இருக்கு
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

ரவி said...

கதையை அனுப்பிட்டேனே ? சரி மாற்றி அப்டேட்டட் போட்டுடறேன்.

ராம்குமார் - அமுதன் said...

நல்லா இருக்கு ரவி... வெற்றி பெற வாழ்த்துக்கள்....

ரவி said...

நன்றி ராம்.

பெசொவி said...

ஒரு உண்மையைச் சொல்லணும். இவ்வளவு தூரம் கூகிளில் தேடியபின் வீட்டுக்கு போகும்போது, ஒரு புதிய பெண் வந்தாள் என்றாலே அது மரியாவாகத் தான் இருக்க வேண்டும் என்று உள் உணர்வு சொல்லுகிறது (எனக்கு)

எதிர்பார்த்த முடிவு

ஊர்சுற்றி said...

நன்று.

ரவி said...

வாசகர்கள் யாசவி சிரீராம் கேட்ட மாற்றங்களுடன்.

Unknown said...

நல்லா இருக்கு ரவி.விறுவிறுப்பாகவும் இருக்கு.அவளைத் தேடுவதற்கு இன்னும் கூட கனமான காரணம் வைத்திருக்கலாமோ என்பது என் எண்ணம்.

வாழ்த்துக்கள்!

ரவி said...

நன்றி ரவிஷங்கர். நல்ல பாய்ண்ட். எடிட் செய்ய முயற்சி செய்ய முடியுமா பார்க்கிறேன்...

மாதங்கி said...

ஒரு த்ராபையான தலைப்பு,
மாறிவரும் பொருளாதார,.....),
டேய், ஆபீஸ்ல சம்பளம் கொடுக்கறது இதுக்கா ?
அவன் அம்மா அவனுக்கு ஒரு தோழியைப்போன்றவள்,
என்னோட வொய்ப் போன் பண்ணா மீட்டிங் இருக்குன்னு நீ பொய் மட்டும் சொல்லு,
இல்லைன்னா நான் அயர்ன் பண்றேன், நீங்க உப்புமா பண்ணுங்க

சுவாரசியமா இருக்கு

வாழ்த்துகள்!

ரவி said...

நன்றி மாதங்கி.

சுவாசிகா said...

நல்லா இருந்ததுங்க..

வெற்றி பெற வாழ்த்துகள்

அன்புடன்,
சுவாசிகா
ஐ லவ் யூ - சர்வேசன் – நச்னு ஒரு கதை

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால்

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால் டயபட்டீஸ் / நீரிழிவு / சர்க்கரை நோயை விரட்ட நியான்டர் செல்வனால் ஆரம்பிக்கப்பட்ட இந்த குழுமத்திற்கு ( https://www....