தேடுங்க !

Monday, October 05, 2009

அகண்ட பாரதம் ?அருணாச்சல பிரதேசம் சீனாவின் ஒரு பகுதி என்று சீன இணைய தளங்கள், போரம்கள், செமி அபிஷியன் சீன டாக்குமெண்டுகளின் இடம்பெற ஆரம்பித்துவிட்டது

நேபாளத்தில் சீன ராணுவ உதவியுடன் மாவோயிஸ்டு கொம்யுனிஸ்டுகள் ஆட்சியை பிடித்ததோடு, சீனத்துக்கான எல்லா கதவுகளையும் திறந்துவிட்டுள்ளார்கள். நேபாளத்தில் இந்திய மேலாதிக்கம் கிட்டத்தட்ட தன்னுடைய இறுதி நிமிடங்களை எண்ணிக்கொண்டிருக்கிறது.

நேபாளத்தின் எல்லைப்புறங்களில் புதிது புதிதாக முளைக்கும் சீன கேம்புகள் புற்றீசல் போல அதிகரித்துள்ளன. கடந்தமாதம் மட்டும் ஆரம்பிக்கப்பட்ட கேம்புகளின் எண்ணிக்கை 26 ஆம். அதன் தலைவர்களாக ஓய்வு பெற்ற சீன ராணுவ அதிகாரிகள் நியமிக்கப்படுகிறார்கள். அவர்களின் முக்கிய பணி வேறு என்னவாக இருக்கும் ? லாபி, ஊடுருவல், இந்திய கள்ள பணத்தை புழக்கத்தில் விடுதல், மாவோயிஸ்டுகளுக்கு ராணுவ ரீதியாக உதவுதல் போன்றவையே..

வங்காளதேசத்தின் ராணுவம், சில வருடம் முன் உயிரோடு பிடித்த இந்திய ராணுவ வீரர்களின் கண்களை தோண்டி, பிணங்களை இந்தியாவுக்கு அனுப்பியது. வங்காளதேசம் மூலமாக பெருமளவு ஆயுதங்களும், கள்ள பணமும் வங்கதேசம் வழியாகவும் இந்தியாவுக்குள் ஊடுருவுகிறது. வங்க தேசம் பாக்கிஸ்தான் ஐ.எஸ்.ஐயின் முக்கிய கேந்திரமாக விளங்குகிறது.

இந்தபக்கம் தலிபான்களின் ஆதிக்கம் பாக்கிஸ்தான் ராணுவம் வரை நீள்கிறது. பாக் ராணுவத்தினரில் குறிப்பிடத்தகுந்த அளவில் தலிபான்களை ஆதரிப்பதாக தெரிகிறது. முழுமையான அரசியல் ஸ்திரத்தன்மை இல்லாத இந்த நாட்டில் எப்போது எந்த முடிவை யார் எடுக்கிறார்கள் என்பதில் ஆள்பவர்களுக்கே குழப்பம் வரக்கூடிய சூழல் உள்ளது.

விடுதலைப்புலிகளின் வீழ்ச்சிக்கு பிறகு இலங்கையோ, தன்னுடைய கதவை அகல திறந்துவைத்துவிட்டு, யார் வந்தாலும் ஓக்கே என்பது போல காத்திருக்கிறது. அதன் பார்வையில் சீனாவும், இந்தியாவும், அமெரிக்காவும் ஏன் தாய்லாந்தும் கூட ஒன்றுதான். நீங்கள் பொறைக்காக காத்திருக்கும் தெருநாயை கற்பனை செய்துகொண்டால் நான் வேறு எதுவும் சொல்லமாட்டேன்.

இந்த நேரத்தில் மிக முக்கியமான முடிவுகளை எடுக்கவேண்டிய நிலையில் இந்திய மைய அரசு உள்ளது. இந்த பிராந்தியத்தில் சீன மேலாதிக்கத்தை தலைவணங்கி ஏற்றுக்கொள்வைதை விட தற்கொலை போன்றதொரு முடிவு வேறு எதுவும் இல்லை. கொஞ்சம் இடம் கொடுத்தால் இந்திய சிறு தொழில்கள், வியாபாரம், வளங்கள் என்று அத்தனையையும் தின்று, அழித்துவிட்டு சென்றுவிடுவார்கள் சீனர்கள்.

இதன் உடனடி தீர்வு, அகண்ட பாரதம் என்ற கருத்தாக்கத்தை வளர்ப்பதே. சுற்றியுள்ள நாடுகளை இந்தியாவின் மாநிலங்களாக இணைப்பதே, சிறந்த தீர்வாக அமையும்.

மாநிலம் 29 : இலங்கை

ராஜபக்சேவுக்கு முதல்வர் பதவி. மற்றபடி வடக்கு கிழக்கு மற்றும் கொழும்புவின் அபிவிருத்திக்கான உதவிகள். சர்வதேச அளவில் இருக்கும் அவப்பெயரினை துடைத்தல். இலங்கை தீவில் வாழும் சிங்கள,தமிழர்கள்,முஸ்லீம்களுக்கு வேலைவாய்ப்பு, தொழில் பூங்காக்கள், மற்றைய மற்றைய உதவிகள். இதெல்லாம் கொடுப்பதாக ஆபர் செய்யுங்கள்.

மாநிலம் 30 : நேபாளம்

கலாச்சார ரீதியாக இந்தியாவுடன் உறுதியான பிணைப்பை கொண்டிருக்கும் நேபாளம், முடியாட்சியின் போதே இணைத்திருக்கவேண்டும். இப்போதும் பழுதில்லை. மாவோயிஸ்டுகளோடு பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களின் சீன மேலாதிக்கக ஏற்பு மனோபாவத்தை உடைத்து, பிஸ்கெட் போட்டு, இந்த மாநிலத்தை இணைக்கவேண்டும்.

மாநிலம் 31: வங்காள தேசம்

மொழி ரீதியாக இந்தியாவுடன் நெருக்கமான தொடர்பு. நாம் உருவாக்கிய நாடு. அப்போதே இந்தியாவுடன் இணைத்திருக்கவேண்டும். விட்டாச்சு. இப்போது ஒன்றும் பழுதில்லை. வறுமையில், இயற்கை சீற்றங்களில் திண்டாடிக்கொண்டிருக்கும் இந்த நாட்டை இப்போது இணைக்காமல் எப்போது இணைப்பது ?

மற்றபடி, பர்மா, பூடான் போன்ற தேசங்கள் விரும்பினால் அவர்களையும் இந்திய நாட்டோடு இணைத்துகொள்ளலாம்.

இந்த நாடுகளை, அதனுடனான லாபிபை கவனிக்க தனி அமைச்சகம் உருவாக்கவேண்டியது காலத்தின் கட்டாயம். அங்கே இருக்கும் பத்திரிக்கைகளை முதலில் இழுத்து, இதுபோன்ற ஒரு கருத்தாக்கத்தை உருவாக்கவேண்டும். அப்படி சேரமாட்டேன் என்று அடம்பிடித்தால் ஒரு வாக்கெடுப்பை நடத்தி, மக்களே சேரச்சொல்லிட்டாங்கபா, என்பதுபோல இணைக்கவேண்டும். இல்லையென்றால், ரொட்டி சாப்பிட்டுவிட்டு, உறங்கிக்கொண்டிருக்கும் ராணுவத்தை அனுப்பி, ஒன்னு ரெண்டு அணுகுண்டுகளை கொழும்பிலும், டாக்காவிலும், காத்மண்டுவிலும் வீசுவோம் என்று மிரட்டி பணியவைக்கவேண்டும்.

55 comments:

யுவகிருஷ்ணா said...

தலைப்பு ஆபாசமாக இருக்கிறது.

பதிவு காமெடியாக இருக்கிறது.

:-))))))))

செந்தழல் ரவி said...

அன்புள்ள யுவக்ருஷ்ணா.

எப்படியாவது சோனியாஜியிடம் பேசி என்னை பாரத பிரதமராக்கினால் அந்த கனவை நனவாக்குவேன் என்று உறுதிகூறுகிறேன்...

அதிஷா said...

மிகச்சிறந்த யோசனை.. உடனடியாக அமுல் படுத்தலாம்!

செந்தழல் ரவி said...

அன்புள்ள அதிஷா.

அமுல் என்றால் பாலா ?

Ram said...

Till we are siting here as vetti officer, it will be dream only, and if we have the people like Yuvakrishna surly india will become 30 state in next 20 years

செந்தழல் ரவி said...

நன்றி ராம் !!!

ராஜ நடராஜன் said...

உங்க ஆட்டத்துக்கு அமெரிக்கா வருமுன்னா நினைக்கறீங்க:)

ponns said...

wah.... fantastic idea.. I do support the same.. if

Rajendra cholan (s/o Raja raja cholan) become the king of Aganda bharatam...

he...he... yennapa history yellam padichirikiya...

செந்தழல் ரவி said...

ஒய் நாட் ? கண்டிப்பா..!!!!

மெக்டொனால்ஸ் இந்தியாவில் கண்ணாபின்னான்னு விரிவாக்கம். செய்தி.

செந்தழல் ரவி said...

போன்ஸ்..

படிக்காமலா ? கங்கை கொண்ட சோழபுரத்து பீல்டு ட்ரிப்பே போனவங்க நாங்க......

aravind said...

பாரதம் நான் வெறுக்கும் துனை கண்டம்.......

Voice on Wings said...

மொதல்ல உள்ள இருக்கிற சட்டீஸ்கர், ஜார்க்கண்ட் ஆகிய இரு மாநிலங்களில் இந்திய அரசின் பப்பு எதுவும் வேகிறதில்லையாமே? (காஷ்மீர், வட கிழக்கு மாநிலங்கள் ஆகியவை பற்றி நான் பேச்சே எடுக்கவில்லை என்பதையும் கண்டு கொள்ளவும்)

செந்தழல் ரவி said...

அரவிந்த், ஏன் வெறுக்கிறீர்கள் என்பதை சொல்லவும்.

செந்தழல் ரவி said...

வாய்ஸ் ஆப் விங்ஸ்.

என்ன சொல்றீங்க ? கொஞ்சம் டீட்டெயிலு ??

Barari said...

ravi ungalai serious ana pathivar endru ninaiththu irunthen ippadi comedy seiveerkal endu ninaikkavillai.

மணிகண்டன் said...

***
ravi ungalai serious ana pathivar endru ninaiththu irunthen ippadi comedy seiveerkal endu ninaikkavillai.
***

பராரி, உங்க காமெடிக்கு அளவே இல்லையா !

வஜ்ரா said...

கஷ்மீரைக் கட் செய்யவேண்டும், தமிழகத்தைத் தனியாக்கவேண்டும், அருணாச்சலத்தை அத்துவிடவேண்டும், பீஹாரைப் பீய்த்துவிடவேண்டும் என்பவர்கள் அதிகம் இருக்கும் ஊரில் வந்து அகண்ட பாரதம் என்றால்...என்ன அர்த்தம்.

அம்மணமாக அலையும் ஊரில் கோவணம் கட்டினவன் தான் கோமாளி என்றாகிவிடும்.

உங்களை லூசு என்று டின் கட்டி அஞ்சலிப்பாப்பா மாதிரி அழவிடப்போகிறார்கள்.

தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

T.V.Radhakrishnan said...

சைனாவில் தயாரிக்கப்படும் உலகக்கோளங்களில் காஷ்மீர் தனிக்கலரில் காட்டப்பட்டு..இந்தியாவிற்கு சம்பந்தம் இல்லாததுபோல் காட்டப்பட்டுள்ளது..தெரியுமா ரவி?

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

:-))))

செந்தழல் ரவி said...

பாரதி. நான் சீரியஸாகத்தான் சொல்கிறேன். ப்ளீஸ்.

செந்தழல் ரவி said...

மணிகண்டன்,

நன்றி !!!!

செந்தழல் ரவி said...

வஜ்ரா.

அகண்ட பாரதம், காலத்தின் தேவை. அப்படி காஷ்மீரை தனியாக பிய்த்துவிடவேண்டும் என்பவர்களை இந்திய பாஸ்போர்ட்டை சரண்டர் செய்துவிட்டு பாக்கிஸ்தான் பாஸ்போர்ட் பெற்றுக்கொள்ள சொல்லவேண்டும்.

அணுகுண்டு வெடிச்சதுடா இண்டியா, சந்திரனுக்கு ராக்கெட்டு உட்டுது இண்டியா என்று பெருமை பீத்த வேண்டும், ஆனால் தனி தமிழகம் மட்டும் வேண்டுமா ? என்ன நியாயம் இது ?

செந்தழல் ரவி said...

ஆமாம் டிவிஆர் அய்யா.

அதே குள்ளர்கள், காஷ்மீருக்கும், அருணாச்சல பிரதேசத்துக்கும் தனி வெளியுறவு துறைகளை அமைத்து, அந்த மாநில மக்கள் விசா கோரினால் தனி பேப்பரில் தருகிறார்கள்.

உங்களுக்கு அது தெரியுமா ?

செந்தழல் ரவி said...

ஸ்டார்ஜன்.

நான் என்ன செய்துவிட்டேன் என்று சிரிப்பு வேண்டி கடக்கு ?

ஆரூரன் விசுவநாதன் said...

இருப்பதை காப்பாற்றும் யோக்கியதையே இவர்களுக்கில்லை...... இதில் போய் மற்றவையை இணைப்பதா?

நல்ல தமாஷ் போங்கள்....

செந்தழல் ரவி said...

ஆரூரன்.

எப்படி அப்படி சொல்கிறீர்கள் ? அந்த யோக்யதை இல்லையென்றால் இந்த நேரம் டெல்லியில் தாலிபான் ஆட்சி நடந்துகொண்டிருக்கும்...

செந்தழல் ரவி said...

தமிழ்மணம் ஹேங் ஆகும்போது முதல் பதிவாக நிற்கும் பதிவு நல்ல பதிவு..!!!!

அப்படியே எல்லாரும் ஓட்டு போடுங்கப்பா..

அப்பாவி உழவன் said...

சீனாவை சமாளிக்க ரஷ்ய உதவியை நாடலாம், சீனாவுக்கும் நமக்கும் பொதுவான பிரச்சினைகள் நிறைய இருக்கு.இதனால் எதிர்காலத்தில் நாம் ஒன்றுபட்டு செயல்பட வேண்டி வரும். எனவே சீனாவை எச்சரிக்கையுடன் அதே சமயம் நம்பிக்கையுடனும் எதிர்நோக்க வேண்டும்.

செந்தழல் ரவி said...

அப்பாவி உழவன், இப்படி ஒரு நல்ல பின்னூட்டத்துக்காகவே இந்த பதிவின் நோக்கம் நிறைவேறிவிட்டதாக கருதுகிறேன்..

aathirai said...

athudan pakistanaiyum, afghanistanayum, iraq, iranaiyum mudinja saudi arabiavayum inaichutta enna. Oil kidaikume

ராஜ நடராஜன் said...

தமிழ் மணத்தை ப்ரேக் போட்டு நிறுத்தி வச்சிட்டீங்களாக்கும்:) இடுகை கீழே நகரவே மாட்டேங்குது!

நேசமித்ரன் said...

துவக்கத்தில் வேதனையும் பிறகான கனவுகளோடும் நகர்கிறது

நிலச் சுமையென வாழும் அரசியல் வாதிகள் உள்ள தேசத்தில் அமெரிக்க அடிவருடிகளாக மாறி மிக நாட்களாகி விட்ட தேசத்தில் கனவுகள் காண மட்டுமே முடியும் நண்பரே

செந்தழல் ரவி said...

ஆதிரை

அப்படியே செவ்வாய் சந்திரன் யுரேனஸ் நெப்டியூனையும் ?

செந்தழல் ரவி said...

ராஜா,

ஹி ஹி. இதான் பதில்..!!

செந்தழல் ரவி said...

நேசமித்ரன்,

கவிதையான பதிலுக்கு நன்றி.

குடுகுடுப்பை said...

இலங்கையை இந்தியாவுடன் இணைப்பது காலத்தின் கட்டாயம்.

தைவான், திபெத் சீனாவாகும் போது இலங்கை ஏன் இந்தியாவாகக்கூடாது. ஒருங்கினைந்த இலங்கையில் தமிழர்களுக்கு சம உரிமை கிடைக்காது. ஆனால் இந்தியாவுடன் இணைத்தால் வட இந்தியர்கள் இந்தி படிக்கவில்லை என்று குறை கூறுவார்கள் மற்றபடி முன்னேற நல்ல வாய்ப்பு உண்டு.

Mãstän said...

என்ன ரவி சொல்லிருக்கீங்க? பக்கத்து நாட்டுகாரனிடம் போய் அவனின் நாட்டை எங்கள் மாநிலமாக சேர்ந்து விடு என்று சொன்னால் கேட்பானா? எப்படி இப்படியெல்லாம்? ஸ்ரீலங்காவை விடுங்கள், சிறிய நாடான நேபாளத்தை கேட்க முடியுமா? என்னதான் வசதி செய்து தருகிறேன் என்று சொன்னாலும் யார் ஒப்புகொள்வார்.

காஷ்மீரை பாகிஸ்தான் சொந்தம் கொண்டாடுது, அருணாச்சல பிரதேசத்தை சீனா வேண்டும் என்கிறது. இருப்பதை காப்பாற்றி கொள்ள போரடனும் போல... இதுல அண்டை நாடா???

குடுகுடுப்பை said...

கமெண்டுகள் பெற

செந்தழல் ரவி said...

mastan. no telling. directly joining.

செந்தழல் ரவி said...

nanni gudukudu

யாசவி said...

ur idea attidude is ok.

But amend these is not so easy like u, me and all thinking.

FYI already india doing some sort of ground activities over there.

But it cost huge money and time. But effort from india not enough

SanjaiGandhi said...

நீ ரம்பாஆஆஆஆஆஆஆஆ நல்லவன்யா.. :))

இதுக்கு சீரியஸ் கமெண்ட்ஸ் வேற.. அதுக்கெல்லாம் இவரு இந்த புள்ளயும் பீர் குடிக்கும்னான்னு சீரியஸ் ரிப்ளையாம்.. முடியலைடா சாமி.. :))

ஊட்ல அக்கா கிட்ட செம அடியா ராசா? இல்ல யாழினி பாப்பா உங்க வாய்ல உச்சா போய்ட்டாளா? இங்க வந்து ரிலாக்ஸ் பண்ணிட்டு இருக்கிங்க.. :))

வெண்பூ said...

//
நீ ரம்பாஆஆஆஆஆஆஆஆ
//

என்னது ரவி ரம்பாவா????? நீ எப்பய்யா அவரு தொடைய பாத்த? :)))

வெண்பூ said...

//
செந்தழல் ரவி said...
அன்புள்ள யுவக்ருஷ்ணா.

எப்படியாவது சோனியாஜியிடம் பேசி என்னை பாரத பிரதமராக்கினால் அந்த கனவை நனவாக்குவேன் என்று உறுதிகூறுகிறேன்...
//

ஸாரி.. முதல் குவாலிஃபிகேஷனே அடிபட்டு போச்சு... நீங்களா எதாவது செய்யறதுக்கா உங்களை அந்த போஸ்ட்ல உக்கார வெக்குறது? அது என்னா ப்ராஜக்ட் லீட், டீம் லீட், ப்ராஜக்ட் மேனேஜர் போஸ்ட் மாதிரி நீங்களே சொந்தமா முடிவு எடுத்துக்குற போஸ்ட்னு நெனச்சிங்களா? :))

செந்தழல் ரவி said...

அன்புள்ள சஞ்ஜெய் காந்தி.

நான் இப்போது உண்மையிலேயே சீரியசாகத்தான் பேசுகிறேன்.

செந்தழல் ரவி said...

வெண்பூ,

அப்படியே கும்மியடிச்சுட்டீங்களே.

நடிகை பேரு எல்லாம் வருது, யாராவது கேஸ் ஷீட் ரெடி பண்ணிடப்போறாங்க.

விலைப்பட்டியலில் ரம்பா எம்புட்டு என்ற சந்தேகத்தை யாராவது தீர்த்தால் தேவலை.

SanjaiGandhi said...

// செந்தழல் ரவி said...

அன்புள்ள சஞ்ஜெய் காந்தி.

நான் இப்போது உண்மையிலேயே சீரியசாகத்தான் பேசுகிறேன்.//

வாண்டடா வந்து ஜீப்ல ஏறிட்டா ரவுடி ஆய்டுவிங்களா? போய்யா யோவ்.. :)

Itsdifferent said...

This is way over the top. I think we should atleast try to retain what we have. Arunachal, you are right. Rest a dream.
But on a serious note, Congress government has bunch of cowards. Right from Nehru days, to today's MMS, are all bunch of suckers. I really honestly dont know whether they all have Indian national interests, when they represent India in the world stage. Anywhere you go, our politicians are big suckers and cowards, and will be ready to surrender our sovereignty for 1 rupee. We have a powerful army, but the so called leaders who are supposed to give them directions, surrender to every small country, leave alone China. Why god only knows. I would say, we should get leaders who are bold, outside of our Borders, only our interests should dictate any strategy. Look at the way we treat Pakistan, one simple strategic war will wipe the Kashmir problems for ever. Who has the guts to do it?

vv said...

Your idea is ok. If we go inside of the srilanka means China & Other Buddhist countries are make problem. First our central government will save our states and try to solve our inside problems.then they will try to contact the other countries and give our army to save them from china.

vv said...

Your idea is ok. If we go inside of the srilanka means China & Other Buddhist countries are make problem. First our central government will save our states and try to solve our inside problems.then they will try to contact the other countries and give our army to save them from china.

செந்தழல் ரவி said...

its Different,

உங்கள் கருத்தோடு ஒத்துப்போகிறேன்...!!!!

செந்தழல் ரவி said...

விவி சார்,.

அவங்களே வர மாதிரி செய்யனும். இன்னுமா சீனாக்காரன் லங்காவுக்கு புத்திஸ்ட் என்ற வகையில் சப்போட் செய்வார்கள் என்று நினைக்கிறீர்கள் ?

rama said...

உங்கள் ஹிந்துத்துவா,ஆர்.எஸ்.எஸ்ஸின் கணவு நினைவானால் நீங்க காலியாயிருவீங்க தம்பி பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், பங்களாதேஸ் ஆகிய நாடுகள் முஸ்லீம்களுடையது லங்கா,சீனா புத்திஸ்ட் நேபாள் கம்யூனிஸ்ட் நீங்க இந்தியா ஹிந்துக்கள் அகண்ட பாரதம் வந்தால் ஹிந்துக்கள் சிருபான்மையினர் மற்ற அனைவரும் ஒன்று சேர்ந்து உங்க பட்டாபட்டிய உருவீருவாங்க அப்புரம் அத்வானி,வாச்பாய் எல்லாம் சுண்டல் விற்க்கதான் போகனும் ok வா போய் புல்லகுட்டிய படிக்க வைக்க பாருங்க தம்பி சின்ன புள்ளதனமா யோசிக்குறீங்க முதல்ல இருக்குற இந்தியா கையவிட்டு போகாம பார்த்துக்கோங்க :-) :-)

ஆகாயமனிதன்.. said...

//யுவகிருஷ்ணா said...
தலைப்பு ஆபாசமாக இருக்கிறது.

பதிவு காமெடியாக இருக்கிறது.

:-))))))))
Monday, October 05, 2009//


சரியாக ஒரு வருடம் கழித்து...
(ஆ)பாசம் இருக்கு ?

ஆகாயமனிதன்.. said...

//யுவகிருஷ்ணா said...: தலைப்பு ஆபாசமாக இருக்கிறது.//

'அகண்ட' என்ற வார்த்தை
(இ)அன்றைய நிலையில் கொச்சை பட்டுள்ளது வேதனை..
(யுவ)கிருஷ்ணா லீலையை நினைத்திருப்பார் போல ?