Thursday, October 08, 2009
2009 புக்கர் பரிசு / ஹிலாரியின் வூல்ப் ஹாலுக்கு !!!
நேற்றே இது பற்றி எழுதலாம்னு நினைத்தேன். தமிழ்ச்சூழலில் புக்கர் விருது போன்ற ஒரு மாபெரும் பரித்தொகையான விருது ஒன்று இருந்தால் அந்த பரிசுத்தொகையை நோக்கிய இன்னும் சிறப்பான புத்தகங்கள் வெளிவரும் என்பது என்னுடைய தனிப்பட்ட எண்ணம். அல்லது தமிழ் எழுத்தாளர்களை வெறும் தேங்காய் மூடியை கொடுத்து உபசரிப்பது நிறுத்தப்படவேண்டும், ஒரு ட்ரிப்புள் பெட்ரூம் ப்ளாட் வாங்கும் அளவுக்காவது பரிசு கொடுக்கப்படவேண்டும் என்பதும் நீண்ட நாட்களாக என் மனதில் இருக்கும் ஒரு ஆசை...
இந்த முறை 50 ஆயிரம் பவுண்டு மதிப்புள்ள இந்த மாபெரும் பரிசு இங்கிலாந்தில் 1952 ஆண்டு பிறந்த சட்டம் படித்த சமூக சேவகி ஹிலாரி மெண்டல்லுக்கு. போஸ்ட்வானாவில் அஞ்சு வருஷம், பிறகு சவூதி அரேபியாவில் நாலு வருஷம் இருந்துட்டு, என்பதுகளின் மத்தியில் இங்கிலாந்து திரும்பினாங்க ஹிலாரி.
ஏற்கனவே பல நாவல்கள் பல விருதுகள். Eight Months on Ghazzah Street, A Place of Greater Safety, The Giant, O’Brien, Giving Up the Ghost: A Memoir (கொஞ்சம் சுய சரிதை மாதிரி இருக்கும்). Winifred Holtby Memorial Prize, Cheltenham Prize, Southern Arts Literature Prize, Hawthornden Prize அப்புறம் Commonwealth Writers Prize மற்றும் Orange Prize for Fiction ஆகிய விருதுகளுக்கு தேர்தெடுக்கப்பட்டது இவரோட புக்ஸ்.
இப்ப புக்கர் பரிசை தட்டிய Wolf Hall, இங்கிலாந்து அரச குடும்பம், அதில் உண்டான அரசியல், நம்பிக்கைகள், அப்படீன்னு நிறைய கேரக்டர்கள் மூலமாக சொல்லுது. ஹிலாரியை இங்கிலாந்தில் வாழும் அனைத்து தரப்பு இண்டலக்சுவல்களுக்கும் தெரியும் என்றாலும், இந்த புத்தகம் இன்னும் அவரை எல்லா இடத்திலும் கொண்டு சேர்க்கும் என்றால் அது மிகையல்ல.
அருந்ததி ராயின் The God of Small Things புக்கர் பரிசை வென்றது உங்களுக்கு நினைவிருக்கலாம்.
அரவிந்த் அட்காவின் The White Tiger கூட புக்கர் பரிசை ஜெயிச்சது.
எனக்கு புடிச்ச பய புள்ளையான சேத்தன் பகத்துக்கு கிடைக்கனும். கிடைக்கும். எதிர்பார்த்திருபேன்.
சேத்தன் பகத்தில் மூனு மிஸ்டேக்ஸ் இன் மை லைப் என்ற புக் ஒரு அல்ட்டிமேட் க்ளாஸிக். முடிஞ்சா படிங்க.
மற்றபடி, ஐஸ்வர்யா ராய்க்கும் சுஷ்மிதாவுக்கும் உலக அழகி பட்டம் கொடுக்கறதே, மேற்கத்திய அழகியல் கலாச்சாரத்தின் தாக்கத்தை இந்தியாவில் கொண்டுவரவே என்றும் அவை எல்லி ஐப்ரோ பென்சில்களை விற்கவே என்றும் சொல்லப்படும் கருத்தாக்கத்தையும் இந்த பதிவின் மூலம் மறுக்கிறேன். அவர்கள் உண்மையிலேயே அழகிகள். அதைப்போல சேத்தன் பகத்துக்கும் இந்த புக்கர் கிடைக்கும்போது இன்னோரு இடுகை எழுதி சந்தோஷப்பட்டுக்கறேன். மற்றபடி புக்கர் பக்கர் என்று தமிழ்ச்சூழலில் தேடிப்பார்த்து கிடைக்காததால் நானே எழுதிவிட்டேன். ஓட்டு போடப்போறவங்களுக்கு நன்றி !!!
Subscribe to:
Post Comments (Atom)
டயபட்டீஸ் ப்ரோட்டக்கால்
டயபட்டீஸ் ப்ரோட்டக்கால் டயபட்டீஸ் / நீரிழிவு / சர்க்கரை நோயை விரட்ட நியான்டர் செல்வனால் ஆரம்பிக்கப்பட்ட இந்த குழுமத்திற்கு ( https://www....
-
நித்யானந்தா விவகாரம் ஆரம்பித்தவுடன் எல்லோரும் எங்கே எங்கே என்று இணையத்தில் தேடியது அந்த வீடியோவைத்தான்...!! ட்விட்டரில், பேஸ்புக்கில்...
-
'கள்' உண்ணாமை வேண்டும் அப்படின்னு காந்தி சொன்னதா கேள்வி..ஆனா அவர் கிட்ட கள் பத்தி யாரோ கதை விட்டு இருக்கனும்...கள் ரொம்ம போதை..உடம்ப...
-
பார்ப்பனீயம் குறித்து நிலவும் பெருங்குழப்பம் காரணமாக ஒரு அனானி டோண்டு ராகவன் சாரிடமே, சில விளக்கங்கள் கேட்டிருக்கிறார்... நிறைய புதிய பதிவர்...
11 comments:
சாரு நிவேதிதாவின் சீரோ டிகிரி கூட இங்கிலீசு புக்கு தான் என்பதை பதிவில் எழுத மறந்தேன்...
ஓட்டு போடுறதுக்கு முன்னாடியே நன்றியை நான் பார்த்துட்டதால நன்றியோட ஓட்டு போட்டுட்டேன் :)
புக்கர் பரிசைப் பற்றிய மேலதிக தகவல்களை எழுதியிருக்கலாமே ரவி!
யாரால் தரப்படுகிறது. ஏன் தரப்படுகிறது. என்ன செய்யனும் அதுக்குன்னு விரிவாராய்ஞ்சிருக்கலாம் :)
//செந்தழல் ரவி said...
சாரு நிவேதிதாவின் சீரோ டிகிரி கூட இங்கிலீசு புக்கு தான் என்பதை பதிவில் எழுத மறந்தேன்...//
இந்த பின்னூட்டத்துக்காகவே தமிழ்மண ஓட்டு குத்திட்டுப் போக வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்திட்டே நீ :)
ஹி ஹி சென்ஷி. எப்படி சாருவை வைச்சு உன்னை மடக்கிட்டேன் பத்தியா ?
புக்கர் பரிசு பற்றி ஒரு சின்ன அறிமுகம் கொடுக்க இல்லை இந்த பதிவு. வெற்றி நியூஸ் மட்டும். ஆனா நீ சொன்ன பாரா இருந்திருந்தா கண்டிப்பா நல்லாருந்திருக்கும்...
சேட்ல வா.
நான் இதைப் பற்றி இப்பொழுது தான் முதன் முதலில் கேள்விப் படுகிறேன். ஆமாம் இன்னும் கொஞ்சம் விரிவாக எழுதியிருக்கலாமே ரவி. அறிந்து கொள்ளக் கூடியதாக இருந்திருக்கும்.
//எனக்கு புடிச்ச பய புள்ளையான சேத்தன் பகத்துக்கு கிடைக்கனும். கிடைக்கும். எதிர்பார்த்திருபேன். //
அவர்களுக்கு இவ் விருது கிடைக்க அதை நீங்கள் கொண்டாட எனது வாழ்த்துக்கள்! :)
நன்றி யாழினி.
கூகிள் இட்டு பார்க்கவும். இவரோட பழைய புக்ஸ் இங்கிலீஷ்ல தேடி பார்கக்வும். பி.டி.எப் கோப்பு கிடைக்கலாம்.
என்னோட பொண்ணு பேரும் இதே இதே !!!
one night @ call centre ...படித்துள்ளேன். மிக எளிய ஆங்கிலத்தில் இருக்கிறது இவரின் படைப்புகள்..அதனால் எனக்கு பிடித்தது...
5 வருடங்கள் ஆச்சாமே ஹிலாரிக்கு இந்த புக்கை முடிக்க... நம்ம சேத்தன் அவ்ளோ பெரிய புக்கை எழுதுவாரா.....
நன்றி அமுதா க்ருஷ்ணன். ஆமாம். 5 வருடம் என்பது எவ்வளவு பெரிய காலம், எவ்வளவு விஷயங்களை அவங்க கடந்துவந்திருக்கனும்.
தமிழ்சூழலில் கூட பத்து ஆண்டுகள் இழுத்து எழுதப்பட்ட நாவல் ஒன்று இருப்பதாக கேள்வி. ஜெ.மோ ? தெரியல.
Post a Comment