Monday, October 05, 2009

விழித்துக்கொள்ளவேண்டிய தமிழக சுற்றுலாத்துறை..

சில பல நாடுகளுக்கு பணி நிமித்தமாக கடந்த ஆண்டுகளில் பயணம் செய்துவருகிறேன். அங்கே தொலைக்காட்சிப்பெட்டியை உசுப்பினால், அடிக்கொரு தரம் சில விளம்பரங்களை பார்க்கலாம்.

அது பல்வேறு நாடுகளின் சுற்றுலாத்துறை, வெளியுறவுத்துறை சார்பான விளம்பரங்கள். ஆசிய நாடுகளில் மலேசியா கொலைவெறியுடன் பல்வேறு நாடுகளில் விளம்பரம் செய்துவருகிறது. ஐரொப்பிய நாடுகளில், ஆஸ்திரேலியாவில், மற்ற நாடுகளில் எல்லாம் மலேசியா ட்ரூலீ ஏசியா என்ற விளம்பரம் பார்க்கலாம். (மற்ற ஏசியா நாடுகள் எல்லாம் போலி ஏசியாவா என்று தெரியாது எனக்கு)

அபூர்வமாக இண்க்ரிடிபுள் இண்டியா என்ற விளம்பரத்தையும் பார்க்கலாம். இந்திய சுற்றுலா பற்றி யோசித்துக்கொண்டிருக்கும் வெளிநாட்டவர், இதுபோன்ற விளம்பரங்களை பார்த்தால் பட்டென்று விழுந்துவிடுவார்கள்.



நமது நாட்டின் கலை, சுற்றுலாதலங்கள், வசதிகள் ஆகியவற்றை சுருக்கமாக காட்டும் விதமாக இந்த விளம்பரங்கள் இருக்கும்.

பொதுவாக இவை நார்த் இண்டியாவையே மையமாக கொண்டிருக்கும். தாஜ்மகாலை காட்டுவார்கள். டெல்லியை காட்டுவார்கள். அதிகபட்சமாக தென்னிந்தியா என்றால் கேரளாவையும் படகு சவாரியையும், வெள்ளை சாரி சேச்சிகளையும் காட்டுவார்கள்.

இந்த இடத்தில் நான் தமிழக சுற்றுலாத்துறையை ஏன் அழைக்கிறேன் என்றால், இந்தியாவின் பிற மாநிலங்கள் தனித்தனியாக விளம்பரங்களை ஒவ்வொரு நாட்டிலும் வெளியிடுகின்றன.

கோவா Go Goa என்ற டூரிசம் கேப்பெயினை நடத்துகிறது. http://www.youtube.com/watch?v=p9DjB7nCgkU என்ற சுட்டியில் இருப்பதை போன்ற வீடியோவை ஐரோப்பிய நாடுகளெக்கும் காட்டுகிறார்கள். அந்தந்த நாட்டில் இருக்கும் ஆங்கில சேனல்களில், லோக்கல் சேனல்களில் இவை ஒளிபரப்பாகின்றன.

அட குட்டி மாநிலமான அஸ்ஸாம் கூட தன்னுடைய மாநிலத்துக்கு வருமாறு சுற்றுலா பயணிகளை அழைக்கிறது.



ஒருமுறை ஸ்வீடன் எம்பசிக்கு சென்றபோது, அங்கே பல மாநிலங்களும் தங்களது சுற்றுலா புக்லெட்டை டிஸ்ப்ளே செய்திருந்தார்கள். குமரகம், படகு போட்டி, சேச்சிகள் மசாஜ் செய்வது போன்ற கிளுகிளுப்பான போஸ்டர்களையும் கேரளாக்கார சேட்டன்கள் ஒட்டிவைத்திருந்தார்கள். ஆனால் தமிழகத்தின் சார்பில் ஒன்றுமில்லை. தமிழகம் மொத்தமாக இருட்டடிப்பு செய்யப்பட்டிருந்தது.

இந்த நிலை ஸ்வீடன் எம்பஸியில் மட்டுமில்லை. ஆஸ்திரேலியாவிலும், தென் ஆப்ரிக்காவிலும், மொராக்கோவிலும், நார்வேயிலும், மலேசியாவிலும். தமிழக சுற்றுலாத்துறை உடனே விழித்துக்கொள்ளவேண்டியது முக்கியம். தமிழக அரசின் சார்பில் சுற்றுலாத்துறைக்கென டீட்டெயில்டு ப்ளான்கள் வரையறுக்கப்படவேண்டும். புகழ்பெற்ற விளம்பர படங்கள் எடுத்துக்கொண்டிருக்கும் தமிழரான பாலா (ரகுமானின் வந்தே மாதரம் வீடியோ) போன்றவர்களை , அல்லது வேறு சிறந்த ஆட் ஏஜென்ஸிகளை தொடர்புகொண்டு சுருக்கமான அழகான வீடியோ படங்கள் எடுக்கப்படவேண்டும்.

அவற்றில் தமிழகத்தின் பாரம்பரிய பெருமைகள், தமிழகத்தின் சிறப்புகள், கலைகள் அடங்கிய காட்சிகள் இடம்பெறவேண்டும்.அவை, உலகமெங்கும் ஒளிபரப்பட்டவேண்டும். மீடியாவுக்கென தனி சிறப்பு குழு அமைக்கப்பட்டு, அந்த குழு இதனை கவனிக்கவேண்டும்.

தமிழகத்தை பற்றிய சிறப்பான சுருக்க குறிப்புகளும் படங்களும் இணைக்கப்பட்ட பேம்ப்லெட்ஸ் உலகமெங்கும் உள்ள இந்திய தூதரகங்களுக்கு அனுப்பப்படவேண்டும். தமிழக அரசு சுற்றுலாத்துறை இணைய தளத்தில் 24 மணி நேர ஹாட்லைன் ஹெல்ப் செண்டர் இருக்கவேண்டும். இதனை ஒரு கால்செண்டருக்கு அவுட் சோர்ஸ் செய்யலாம். அதன் மூலம் சுற்றுலா பயணிகளின் கேள்விகளுக்கு பதில் சொல்லலாம். தமிழக சுற்றுலா பயணிகள் மற்றும் மருத்துவ சுற்றுலாவுக்காக தமிழகம் வருபவர்களின் விசா விதிமுறைகள் எளிமையாக்கப்படவேண்டும்..

ஒட்டு போடுவதோடு, உங்க கருத்தையும் சொல்லிட்டு போங்க

21 comments:

ஆரூரன் விசுவநாதன் said...

அருமையான பதிவு......படிக்க வேண்டியவங்க படிக்கனுமே....

சரி....ஊதர சங்க ஊதுவோம்
விடியறப்ப விடியட்டும்..

வாழ்த்துக்கள்

ரவி said...

நன்றி ஆரூரன்...

குடுகுடுப்பை said...

நல்லா யோசிக்கறீங்க ரவி. சூப்பர் பதிவு

ரவி said...

Nanni GuduGuduppai

பதி said...

உபயோகமான பதிவு ரவி...

//மற்ற ஏசியா நாடுகள் எல்லாம் போலி ஏசியாவா என்று தெரியாது எனக்கு//

எனக்கும் இந்த சந்தேகம் வந்தது !!!!

அதுவும் கேரளா சம்பந்தப்பட்ட ஆவணப்படங்கள் அல்லது யானையை வைத்து நடக்கும் திருவிழாக்கள், தேங்கா துறுவுவது எல்லாத்தையும் இந்த ஊர் தொலைக்காட்சியில் காணலாம் !!! ஆனால், நமது நிகழ்சிகள் எதையும் பார்க்க நேரிட்டதில்லை....

முடிந்தால், தமிழக சுற்றுலா வளர்சிக் கழகத்திற்கு இந்தப் இடுகையின் இணைப்பினை அனுப்பிப் பாருங்கள்..

யாசவி said...

ravi,

same blood. Think the same few years ago.

But no changes.

During J period they do some preliminary activities. But nothing materialized.

ரவி said...

நன்றி பதி !!!

ரவி said...

நன்றி யாசவி !!!!!!!

Barari said...

veli naadukalil vasikkum anaiththu thamizarkalin athangaththai velippaduththi irukkireerkal.nandri ravi.

ரவி said...

Thanks Barari..!!!!!!!!

வெண்பூ said...

எல்லோருக்கும் இந்த ஆதங்கம் இருக்கிறது (அ) இருக்கும் ரவி. ஆனால் முக்கியமான விசயம் விளம்பரம் போட்டாலும் அதைப் பார்த்து வருகின்ற வெளிநாட்டு (அ) வெளிமாநில சுற்றுலா பயணிகளுக்கான அடிப்படை வசதிகளை முதலில் செய்யவேண்டும். அதை நம்ம ஆட்கள் நிறைவேற்றுவதே ரொம்ப கஷ்டம்.

ஜோ/Joe said...

மிக அவசியமான பதிவு.

குப்பன்.யாஹூ said...

we have real stuff so no need of advt .

Mr.Iraiyanbu has been doing a great job

Anonymous said...

தோழர் செந்தழல் ரவி!

இன்று தமிழகத்தில் உள்ள ஊழல் துறைகளில் முதன்மையானவை சில..
1)பொதுபணிதுறை(காண்ட்டிராட் கமிசன்)
2)உள்ளாட்சிதுறை(தாசில்தார்.. மணியக்கார்)
3)போக்குவரத்துதுறை(ஆர்.டி.ஓ ஆபிஸு)
4)நெடுஞ்சாலைதுறை(காண்ட்டிராட் கமிசன்)
5)சமூக நலதுறை(சுய உதவி குழுக்கள்)
ஏற்கனவே இந்திக்காரன் தங்கள் வருமானத்திற்கு தமிழகத்தில் Archaeological Survey of India (ASI) மூலமாக் பாதியை வளைக்க பார்க்கிறான்.. நீர் இதில் ஏற்கனவே கடைசியில் இருக்கும் சுற்றுலா துறையை ஊழலின் முதல் படிக்கு கொண்டு செல்ல ஆலோசனைகளை வழங்குகிறீர்.. நல்லது..

ரவி said...

ஆமாம் வெண்பூ.

ஆனால் சில ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நிலையைவிட இப்போதைக்கு அடிப்படை வசதிகள் நன்றாகவே இருக்கிறதாக நினைக்கிறேன்.

போக்குவரத்து, தொலைதொடர்பு என்று எல்லா துறைகளிலும் கேரளா அஸ்ஸாமைவிட நாம் பெட்டர்தான்.

ரவி said...

நன்றி ஜோ.

ரவி said...

ராம்ஜி.

விளம்பம் இருந்தால் தான் நல்ல பொருள் கூட ஓடும் நிலை இருக்கிறதே ??

ஹமாம் சோப் நேர்மையான நல்ல சோப். அப்புறம் ஏன் அது விளம்பரம் செய்கிறது ??

ரவி said...

தோழர் சிறுத்தை.

லஞ்சம் கொடுத்தால் வேலை சீக்கிரம் ஆவும் என்று எப்போது நினைப்பதை நாம் விடுகிறோமோ அதுவரை லஞ்சத்தை ஒழிக்கமுடியாது. மாற்றம் நம் மனதில் வரவேண்டும். அதே சமயம், தனக்கு கொடுக்கப்பட்ட வேலையை செய்ய எதற்கு கையூட்டு பெறவேண்டும் என்று ஒவ்வொரு அரசு ஊழியரும் நினைத்தால் லஞ்சம் என்பதே இராது. அரசும், மற்ற தனியார் துறைகளுக்கு இணையாகவும், இருக்கிற விலைவாசிக்கு தகுந்தபடியும் சம்பளம் வழங்கினால் ஏன் லஞ்சம் வாங்கப்போகிறார்கள் அரசு ஊழியர்கள் ??

நேசமித்ரன் said...

மிகப் பயனுள்ள இடுகை
உங்கள் சிந்தனையின் வீச்சு ஒரு வித அணுக்கத்தை தருகிறது நண்பரே

ரவி said...

நன்றி நேசமித்ரன்.......

Unknown said...

intha maatram namma uru autokkaran kitta irunthu arambikanum...

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால்

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால் டயபட்டீஸ் / நீரிழிவு / சர்க்கரை நோயை விரட்ட நியான்டர் செல்வனால் ஆரம்பிக்கப்பட்ட இந்த குழுமத்திற்கு ( https://www....