எடுத்துக்காட்டு...!!பாண்டிச்சேரியில் ஹார்ட்வேர் எஞ்சினீயராக வேலைபார்த்த காலம் தொண்ணூறுகளின் இறுதியில். பக்கத்துவீட்டுக்காரன் கம்பூட்டர் வாங்கிட்டானே என்று தானும் வாங்க ஆரம்பித்த மக்களால் எங்களுக்கும் ஓயாத வேலை. சிடியை கம்ப்யூட்டரி எப்படி போடுவதில் இருந்து, கம்பியூட்டரில் ஸ்டார்ட் பட்டன் தெரியமாட்டேங்குது வரை இரவு பதினோரு மணி வரை பம்பரமாக சுற்றவேண்டிய வேலை.

சம்பளம் என்னவோ பெரிதாக இல்லை என்றாலும், நெல்லித்தோப்பு ஆபீஸுடன் இணைந்த ஓனர் வீட்டு நான் வெஜ் சாப்பாடும், பீச் காற்று முகத்தில் அறையுமாறு அரியாங்குப்பத்தில் இருந்த கம்பெனி ஓனரின் உபயோகப்படுத்தாத பீச் கெஸ்ட் ஹவுசும், அவ்வப்போது ரத்னா தியேட்டர் எதிர் சந்தில் கிடைக்கும் பீரும் இட்லியும் புரோட்டாவுமாக காலம் ஓடிய ஓட்டம் புல்லட் ரயில்வேகம்..

காலையில் எட்டுமணிக்கு ஆரம்பிக்கும் பரபரப்பான பணிச்சுமையில் இரவு வந்து படுக்கையில் விழுவது எப்போது மீண்டும் எழும்புவது எப்போது என்றே தெரியாத வகையில் இருந்ததொரு காலம். ஆங்காங்கே சிகரெட் பட்ஸும், மூலைகளில் நிறுத்திவைக்கப்பட்ட கடைசி ரெண்டு ஸிப் குடிக்கப்படாத பீர் பாட்டில்களும், வாசலில் நிற்கும் அரச மரத்தில் இருந்து எப்போதாவது உள்ளேயே பறந்து வந்து விழும் காய்ந்த சருகுகளுமாக, அந்த அழகிய கெஸ்ட் ஹவுஸ் ஒரு குட்டி குப்பைத்தொட்டியாக்கியிருந்தது.

சோம்பலானதொரு ஞாயிற்றுக்கிழமை காலை. லட்சங்களை கொட்டி வாங்கிப்போட்ட கெஸ்ட் ஹவுஸ் எப்படி இருக்கிறது என்று பார்த்துவிட்டு போகலாம் என்று காரை செல்ப் ட்ரைவ் செய்துகொண்டு வந்து என்னுடைய ஓனரே வீட்டு கதவை தட்டுகிறார். கைலி அவிழ்ந்துவிடாமல் கொஞ்சம் இறுக்கமாக கட்டிக்கொண்டு கையில் கிடைத்த ஏதோவொரு டிஷர்ட்டை எடுத்து போட்டுக்கொண்டு, கதவை திறக்கிறேன்..

உள்ளே நுழைந்தவருக்கு வீடு இருந்த கோலத்தை பார்த்து அதிர்ச்சி...ஒன்றும் பேசவில்லை..சுவரோரம் தானும் அழுக்காக நின்றிருந்த துடைப்பம் ஒன்றை எடுத்து, பரபரவென வீட்டை சுத்தம் செய்ய ஆரம்பித்தார். எனக்கு கையும் ஓடவில்லை, காலும் ஓடவில்லை. பல கோடிகளுக்கு அதிபர், இப்படி நம் வீட்டை சுத்தம் செய்கிறாரே என்று கொஞ்சம் உறைந்துதான் போனேன். கிட்டத்தட்ட பதினைந்து நிமிடங்கள்.

கையை நீட்டி ஒட்டடை அடித்து, அதனையும் பெருக்கி, குப்பைகளை, பீர் பாட்டில்களை வெளியில் இருந்த குப்பைத்தொட்டியில் போட்டுவிட்டு வந்து துடைப்பத்தை மூலையில் வைத்துவிட்டு, சரி நான் வரேன் ரவி. நாளைக்கு ஆபீஸ்ல பார்க்கலாம். என்று சொல்லிவிட்டு காரை எடுத்துக்கொண்டு போய்விட்டார்...

நான் அதன்பின் எவ்வளவு வேலை இருந்தாலும் தினமும் வீட்டை சுத்தப்படுத்தி வைக்க ஆரம்பித்தேன்..!!!
.
.
.

Comments

அவருக்கு வீட்ல செய்து பழக்கமோ.

நல்ல விஷயம் தான் சொல்லாமல் செய்ய வைத்திருக்கிறார்.
மீ த பர்ஸ்டேய்
Nataraj said…
பாண்டிச்சேரில ஹார்டுவேர் கம்பெனி-னா HCL-ஆ? அப்போ அது ஓனர்னா ஷிவ் நாடாரா?

அவள் குனிந்து பெருக்கினாள்
வீடு சுத்தமாச்சு
மனசு குப்பையாச்சு
இது பழைய புதுக்கவிதை (முரண்?)
அவர் குனிந்து பெருக்கினார்
வீடு சுத்தமாச்சு
மனசும் சுத்தமாச்சு
இது என் புதிய பழங்கதை

இப்படின்னு சொல்லலாமா ரவி ;-)
சுத்தம் சோறு போடும்..பரோட்டாவும் பீரும் போடுமா?
இப்படி மாட்டிக் கொள்ளாதவரையில்.. அந்த வாழ்க்கையில் இருந்த மகிழ்ச்சி இப்போ இல்லையே தலைவா!
ஷாகுல். சொல்லாமல் சொல்லி புரியவைக்க முயன்றார். அல்லது எடுத்துக்காட்டாக இருந்தார். புரிந்துணர்வுக்கு நன்றி.
நட்ராஜ். வியக்கவைச்சுட்டீங்க. நன்றி..
டிவிஆர் அய்யா. சோறே போதும் என்று வாழ ஆரம்பித்தால் நன்று..!!!
சூர்யாகண்ணன்...

நன்றி...!!! அது என்னவோ உண்மைதான்..!!! அது உடல் நலனுக்கும் கேடு என்று இப்போது புரிகிறது :()
VISA said…
hei asathiputeenga.
And this is a right way to punish anyone and make them feel for their mistakes.

Good one.
VISA said…
இப்படி தான் என் முதலாளி வீட்டுல தங்கியிருந்த ஒரு பையன்
வீட்ட சுத்தமா வச்சுக்கல.
உடனே முதலாளி அவனுக்கு கல்யாணம் பண்ணி பொண்டாட்டியோட
அதே வீட்டுல குடி வச்சிட்டாரு.
இப்போ அவன் தினமும் வீட்ட சுத்தமா பெருக்கி NEAT-a வைக்கிறான்.

இது எப்படி இருக்கு.
blogpaandi said…
This comment has been removed by the author.
blogpaandi said…
:)

இன்ன செய்தாரை ஒருத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல்
:))))

நல்லத யாரு செஞ்சா என்ன.. செஞ்சா சரிதான்!
கொஞ்சம் எங்க வீட்டுக்கு அந்த ஒனர்(ரை) அனுப்பி வைக்கமுடியுமா ? :)- ப்ளீஸ்.
அய்யே!கல்யாணமாகதவன் வீடுன்னா இப்படித்தான் இருக்கும்.இதுக்குப் போயி...

சுத்தம்,சமையல்,உழைப்பு,தாய்மை=பெண்கள்.
ப்ளாக்பாண்டி, நன்றி...
சென்ஷி, நன்றி !!
ராஜ நடராஜன், பெண்கள் வாக்குகளை அள்ளிவிடும் உங்கள் பின்னூட்டம்...
ரவி, நீங்களும் எங்க ஊருல (புதுவையில்) சிறிது காலம் பணியில் இருந்தீர்களா? அருமை!

அருமையான பதிவு. வாழ்த்துகள்
Anonymous said…
//செந்தழல் ரவி said...
Wednesday, October 14, 2009

ராஜ நடராஜன், பெண்கள் வாக்குகளை அள்ளிவிடும் உங்கள் பின்னூட்டம்...
//

பதிவுக்காகவும் இந்தப்பின்னூட்டத்துக்காகவும் ஓட்டு போட்டாச்சு :)
அவர் கை காசை போட்டு கட்டிய வீடாக இருக்கும். அது தான் தாங்க முடியாமல் சுத்தம் செய்திருப்பார் :) :)
சும்மா ஒப்புக்காச்சும் விடுங்க சார் நான் செய்யுறேன் என்று சொல்லி அவரை தடுக்காமல் வேடிக்கை பார்த்து, வேலை செய்ய விட்டு விட்டு பேச்சை பாரு, லொள்ளை பாரு!

அவர் சுத்தம் செய்து முடிஞ்சதும் சார் உங்களுக்குள் பல திறமைகளை ஒளிச்சு வெச்சு இருக்கீங்க, இனி மாசம் ஒரு முறை வாங்கன்னு சொல்லி இருந்தா அவர் என்ன செய்து இருப்பார்?:)))
சில நேரம் இந்த மாதிரி மற்றவர்களின் செய்கைகள் நமக்கும் ஏற்படுத்தும் தாக்கம் பெரியதாக இருக்கும்.

ஆனாலும் சொல்றேன். படத்த பார்த்தேன்..பாவங்க...உங்க ஹவுஸ் ஓனர். கதறி அழாம போனாரே..ரொம்ப தைரியமான ஆளு போல
பிரேம்குமார், நன்றி. ஆமாம்..மறக்கமுடியுமா புதுவையை...பெரிய பெரிய பெருமூச்சுகள் விட்டுக்கறேன்...
ஓட்டுக்கு நன்றி சின்ன அம்மணி..
ஹி ஹி. கை காசையோ அல்லது கால் காசையோ (gold) வித்து வாங்கினதாக இருக்கும். நன்றி புருனோ..
அவர் சுத்தம் செய்து முடிஞ்சதும் சார் உங்களுக்குள் பல திறமைகளை ஒளிச்சு வெச்சு இருக்கீங்க, இனி மாசம் ஒரு முறை வாங்கன்னு சொல்லி இருந்தா அவர் என்ன செய்து இருப்பார்?:)...
///

சம்பளத்தைக்கூட கொடுக்காம துரத்தியிருப்பார் :))
பின்னோக்கி சார்.

அப்போ என்னிடம் கேமராவெல்லாம் கிடையாது. இது நெட்டில் இருந்து புடிச்சு போட்ட படம்.
ஹலோ சார், நீங்க பாண்டிச்சேரிலியா வேல பாத்திங்க? எந்த கம்பெனி? அதுவும் 90ல? பிரகதியா இல்ல நெக்ஸஸ்-ஆ? நானும் அந்த டைம்ல ஒரு பிரகதி கம்யூட்டர் கம்பெனில வேல பாத்தேன். அதுக்குதான் கேட்டேன்? முடிஞ்சா மெயில் பண்ணுங்க.
//குசும்பன் said...
சும்மா ஒப்புக்காச்சும் விடுங்க சார் நான் செய்யுறேன் என்று சொல்லி அவரை தடுக்காமல் வேடிக்கை பார்த்து, வேலை செய்ய விட்டு விட்டு பேச்சை பாரு, லொள்ளை பாரு!

அவர் சுத்தம் செய்து முடிஞ்சதும் சார் உங்களுக்குள் பல திறமைகளை ஒளிச்சு வெச்சு இருக்கீங்க, இனி மாசம் ஒரு முறை வாங்கன்னு சொல்லி இருந்தா அவர் என்ன செய்து இருப்பார்?:)))
//

கமெண்ட்டே உங்க பேர சொல்லுது குசும்பன் :))
that time Pragathy Romma Famous Illayaa ?

:)))
புன்முறுவலுடன் இரசித்தேன். நன்று!
-முகிலன்
தோரணம்
மகேஷ் said…
எங்க ஓனரும் தான் இருக்காரே.
இப்பு புரிந்ததா.. அவரு ஏன் கோடிஸ்வரர், நீங்க ஏன் அவர் வீட்டில் குடியிருந்தவர் என்று.

எத்தனை உயரே போனாலும் கால்ரெண்டும் தரையில்தான் நிற்கவேண்டும். உங்களைச்சொல்லலை..சொல்லனும்னு தோனுச்சு.

Popular Posts