வேளச்சேரி வாழ் பொதுமக்களுக்கு அறிவிப்பு.

இதனால சகலமானவர்களுக்கு அறிவிக்கறது என்னான்னா...

வலையுலகத்தில் அனைவரும் அறிந்த கவிதா அவர்கள், குழைந்தைகளுக்கான டே. கேர் ஒன்றை வழிநடத்த இருக்கிறார்கள்.

அதன் சுட்டி : http://kreativekrayonz.blogspot.com/

இங்கே யாழினி பாப்பாவின் க்ரச்சில், பிள்ளைகளை வழிநடத்தும் விதம் எனக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கும் ஒன்று.

சாப்பிடும் இடத்தில்:

யாருக்கும் சாப்பாடு ஊட்டுவதில்லை. டேபிளின் மேல் உட்கார வைத்து ஸ்பூன் போட்டு கொடுத்துவிடுகிறார்கள்.

ப்ரட், அதன் பிறகு பழங்கள் என்று தட்டில் வைத்து நீட்டுகிறார்கள், குழந்தைகள் அவர்களாக எடுத்து சாப்பிடுகிறார்கள்.

இசை பயிலும் இடத்தில்:

பல்வேறு இசைக்கருவிகளை வைத்து சொல்லிக்கொடுக்கிறார்கள். கரோகே முறையில் பாடல்கள். குழு பாடல்கள்.

ப்ளே ஏரியாவில் :

சைக்கிள்கள், ஸ்டேக் போர்டுகள் என்று எல்லா உபகரணங்களையும் போட்டுவிடுகிறார்கள். அவர்களே எடுத்து விளையாடுகிறார்கள்.

குழந்தைகளுக்கான ப்ளே ஏரியாவில்:

பல்வேறு வகையான மூளைக்கு வேலை தரும் விளையாட்டு சமாச்சாரங்களை போட்டு விளையாடவைக்கிறார்கள்.

உறங்கும் இடத்தில்:

அமைதியான உறங்கும் இடத்தில் ஸ்ட்ரோலர்களில் போட்டு உறங்கவைக்கிறார்கள். கதவை மூடிவிட்டு வந்துவிடுகிறார்கள். ஏதாவது குழந்தை அங்கே அழுதால், இங்கே ரிசப்சனில் சத்தம் கேட்குமாறு கருவி வைத்துத்துள்ளார்கள். அதன் மூலம் உடனே சென்று பார்க்கிறார்கள்.

சார்ட் மெத்தட்:

எந்த குழந்தை எங்கே இருக்கிறது என்று போர்டில், சார்டில் எழுதி வைத்துள்ளார்கள். அந்த குழந்தைகளை உடனே சென்று பார்க்கலாம்.

வீடியோ கேமரா:

கேட், உறங்கும் ஏரியா, மற்ற இடங்கள் என்று வீடியோ கேமரா மூலம் மானிட்டர் செய்ய ஒரு ஆள்.

வெளியே அழைத்து செல்லுதல்:

ஆறு ஆறு பேர்களாக பிரித்து, தினமும் இரண்டு பேர் அவர்களை வெளியே அழைத்து செல்கிறார்கள். நடக்க முடிந்த குழந்தைகள் நடந்து, சிறிய குழந்தைகளை சிறிய வண்டிகளில் அமரவைத்து. நல்ல காற்றுடன் கூட க்ளைமேட்டில் குழந்தைகள் வெளியே போய்விட்டு வந்து நன்றாக உறங்கும்.

குழந்தைகள் ரப்பஸ்ட்டாக, மிகுந்த தன்னம்பிக்கையோடு, தன்னுடைய வேலைகளை தானே செய்யும் அளவுக்கு உருவாக்குவதை பார்த்தபோது, நாமும் இது போல ஒன்று சென்னையில் ஆரம்பிக்கவேண்டும் என்று நினைத்தேன்....!!!

இப்ப அக்கா ஆரம்பிச்சிருக்காங்க. அவங்களுக்கு வாழ்த்துக்கள்.

அனில் குட்டி அய்யப்பன்:

இந்த அக்காவே ஒரு குழந்தை. அதனால குழந்தைகளை நல்லா பாத்துப்பாங்க. நம்பி விடலாம்.

க்வாட்டர் தாத்ஸ் :

“There are no seven wonders of the world in the eyes of a child. There are seven million.”

Comments

வாழ்த்துக்கள்!

அக்காவுக்கும் அங்கே சேரப் போகும் குழந்தைகளுக்கும்!

(தயவு செய்து பாட்டெல்லாம் பாடி குழந்தைகளை படுத்தாதீங்கன்னு சொல்லுங்க, குழந்தைகள் பாவம்)
எதிர்பார்க்கவே இல்லை.. :)))) அவ்வ்வ்வ்வ்வ்வ்

இப்படி பதிவு அதுவும் ஒரு 2 நிமிடம் கூடவே இருக்காது நான் மெயில் அனுப்பி.. ஏன்ன்ன்ன் இப்படி???? விளம்பரம் ???

நன்றி :))) )))

//இந்த அக்காவே ஒரு குழந்தை. அதனால குழந்தைகளை நல்லா பாத்துப்பாங்க. நம்பி விடலாம்.//

ஹி ஹி.. ரொம்ப நன்றி என் மேல இருக்கும் நம்பிக்கைக்கு.. :))
//இந்த அக்காவே ஒரு குழந்தை. அதனால குழந்தைகளை நல்லா பாத்துப்பாங்க. நம்பி விடலாம்.//

ஹெஹெ! ரவி!

உங்களை நினைச்சா எனக்கு பாவமா இருக்கு!
//தயவு செய்து பாட்டெல்லாம் பாடி குழந்தைகளை படுத்தாதீங்கன்னு சொல்லுங்க, குழந்தைகள் பாவம்)//

ரகசியத்தை வெளியில சொல்ல வேண்டாமுன்னு பார்த்தேன்...

சொல்ல வச்சிட்டீங்க..

நான் பாட்டு பாடி த்தான் குழந்தைகளை தூங்க வைக்க போறேனே.... இப்ப என்ன செய்வீங்க..?? இப்ப என்ன செய்வீங்க? :)))
//உங்களை நினைச்சா எனக்கு பாவமா இருக்கு!//

கிர்ர்ர்ர்ர்ர்.... ஏன் இந்த கொலவெறி :(
//நான் பாட்டு பாடி த்தான் குழந்தைகளை தூங்க வைக்க போறேனே.... இப்ப என்ன செய்வீங்க..?? இப்ப என்ன செய்வீங்க? :)))//

சரி சரி! சீக்கிரமே குழந்தைகள் நல வாரியத்துல நான் பிராது கொடுப்பேன்!
அதுக்குள்ள ஆரம்பிச்சி எங்கிட்டோ போகுது....
தப்பித் தவறிகூட ஆண்டு விழான்னு சொல்லி மாநக்கல் பார்ட்டியை கூப்பி்ட்டிராதீங்க..

பிள்ளைக பயந்திரும்ங்க..!
வாழ்த்துக்கள்..

எண்ணம்போல் வாழ்க..! உங்களுடைய இந்த எண்ணம் சிறப்பாக மென்மேலும் உயர என் அப்பன் முருகனை வேண்டிக் கொள்கிறேன்..!
விட்டுப்போனது 1 > குழந்தைய விட்டுட்டு ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை கூட போன் போட்டு கேட்டுக்கலாம். குழந்தை என்ன செய்யுதுன்னு ?
குவார்ட்டரு தாத்ஸ் அசத்தல் :-)
ரிசப்சனிஸ்ட் சேட்ல இருப்பாங்க, அவங்களோடவும் அப்பப்ப சேட் பண்ணி குழந்தை என்ன செய்யுதுன்னு பார்க்கலாம். ஒரு முறை பாப்பா தூங்குவது போட்டோ எடுத்து அனுப்பனாங்க.
ஹை சேர் மாதிரி ஒன்னு வெச்சி அதில் உட்கார வெச்சு சாப்பாடு தருவாங்க.
வாழ்த்துக்கள், கவிதா. (குழந்தைகளுக்கு கவிதை எழுத சொல்லித்தருவீங்களா?)

ரவி, உங்க ஃபைனல் டச் பிடிச்சிருந்தது... :)
மென்மேலும் வளர்க..!!
SanjaiGandhi said…
வெரி குட்.. வாழ்த்துகள்.. சில ஆண்டுகள் முன்பே ஆரம்பித்திருந்தால் என் சித்தப்பா பிள்ளைகள் சேர்ந்திருப்பார்கள். இருந்தாலும் அவர்கள் காதில் போட்டு வைக்கிறேன்.
இங்கன ஒரு அட்மிஷன் போட்டுக்குங்க!

பெயர் : நாமக்கல் சிபி
வயது : 1 1/2
அனில் குட்டி அய்யப்பன் - ஹா ஹா ஹா... அண்ட் தட் குவார்டர் ;-)))

நம்மோட வாழ்த்துக்களும்...
இதுக்கெல்லாம் சேவை மனப்பான்மை நிறம்ப வேண்டும்.


வாழ்த்துகள்!
//மின்னுது மின்னல் said...

மென்மேலும் வளர்க..!!//


ரிப்பிட்டேய்ய்ய்ய்ய் :)
நன்றி தெ.கா. முதல் வருகை ???
நன்றி அத்திவெட்டியாரே..

Popular Posts