Saturday, November 07, 2009

புதிய தலைமுறை இணையதளம்


இப்போது கலக்கிவரும் புதிய தலைமுறை இதழின் இண்டர்நெட்டு அட்ரஸை பார்த்தேன். அதான் ஒரு பதிவை போட்டுவிடுவோமே என்று.

http://puthiyathalaimurai.com/index.html

மாணவ பத்திரிக்கையாளர் திட்டம் இருக்கிறது. பகுதி நேர வேலை வாய்ப்பு பற்றிய தகவல்களுக்கு தொடர்புகொள்ள மின்னஞ்சல் முகவரி இருக்கிறது. இளம் பத்திரிக்கை. வலைப்பதிவர்களை கண்டிப்பாக ஊக்குவிக்க அவர்களின் படைப்புகளில் தரமானதை வெளியிடுமாறு கேட்டுக்கொள்கிறேன். தமிழில் டெக்னிக்கல் ரகமான படைப்புகளை நிறைய போடுங்கப்பா..

37 comments:

ரவி said...

புதிய தலைமுறையில் படைப்பு அனுப்பி வெளிவந்தவங்க எல்லாரும் ஓட்டு போடுங்க

சென்ஷி said...

அச்சச்சோ. இது தெரியாம நான் ஓட்டுப் போட்டுட்டேனே... :(

ரவி said...

வராதவங்களும் போடுங்க.

மணிஜி said...

சனிக்கிழமையோட தினத்தந்தி இளைஞர் மலர் வரும் இலவச இணைப்பாக ..அதுல இருகிற விஷயங்கள்.பு.த வில் இல்லை..பசை இருக்கு .கொஞ்ச நாள் ஓடும்

மணிஜி said...

அப்புறம்..மைனஸ் ஓட்டு நான் தான்....

ரவி said...

பசை இருந்தா ஒட்டும். எப்படி ஓடும் ? :))

மைனஸ் ஓட்டு எனக்கா இல்லை புதிய தலைமுறைக்கா ?

புதிய (இளைய) தலைமுறையை மைனாஸா நெனைக்காதீங்க சாரே. அது தான் இனிமே லீடிங்.

மணிஜி said...

நான் இளைய தலைமுறையை சொல்லலை ரவி..மைனஸ் ஓட்டு பு.தவிற்குதான்..உங்களுக்கு இல்லை..

மணிஜி said...

பசைன்னா விளம்பரம் இத்யாதிகள்..எஸ்.ஆர்.எம்.ல் படிக்கும் 70% பேருக்கு தமிழே தெரியாது.அவங்க சந்தா கட்டினா புக்கை எப்படி படிக்க முடியும்?அப்துல் கலாம் பற்றி படித்து அலுத்து விட்டது...மீதி விஷயங்கள் அச்சில் வரும் முன்னரே இணையத்தில்..ஐந்து ரூபாய் என்பது நிச்சயம் பிளஸ் பாயிண்ட் இல்லை..நீங்கள் அந்த இணையத்தில் என்ன படித்தீர்கள்?

puduvaisiva said...

"பின்னூட்டங்களுக்கு நீங்களே பொறுப்பாளி...நிர்வாகம் பொறுப்பல்ல..."

:-)))))))

Thanks for new site information...

yes Ravi I put Vote

யுவகிருஷ்ணா said...

பதிவுக்கு நன்றி ரவி. சர்க்குலேஷன் ஒன்றரை லட்சத்தை ஆரம்பித்த இரண்டாவது வாரமே எட்டிவிட்டது. விரைவில் இணையத்துக்கும் வரலாம் என்று தகவல்.

ரவி said...

எஸ்.ஆ.ரெம்மில் இருப்பவர்களுக்கு தமிழ் தெரியாது என்று சொல்வது 100 சதம் உண்மைதான். தமிழர்களுக்கு சீட்டு தருவதில்லையா அல்லது தமிழர்களுக்கு கட்டுபடியாகும் விலையில் சீட்டு இல்லையா என்று தெரியவில்லை. இருந்தாலும் சத்யபாமா போல ஆண்களுடன் பெண்கள் பேசுவதற்கு அட்டுத்தனமான கட்டுப்பாடுகளை விதிப்பதில்லை. ப்ரீயாக பழகவிடுகிறார்கள் என்று கேள்வி. அதிலேயே அவர்கள் ஸ்கோர் செய்கிறார்கள்.

மற்றபடி, இணையம் பற்றி அறிந்த மூத்த பத்ரிக்கையாளார் மாலன் இருக்கிறார். வலைப்பதிவு சூப்பர்ஸ்டார்கள் அதில் இருக்கிறார்கள். அது ஒன்று போதுமே ? அந்த வலைமனையில் அறிவுப்புகள் மட்டும் தான் இருந்தன.

இணைய எழுத்தாளர்கள் எல்லாரும் குப்பையாக எழுதுகிறார்கள் என்று உளறிய சாரு அங்கில்லை. அதுவே நல்லது. :)))

குப்பன்.யாஹூ said...

புதிய தலைமுறை கலக்க எல்லாம் இல்லை.

தமிழகத்தின் தலை எழுத்தோ, வாசிக்கும் பழக்கமோ அடியோடு எல்லாம் மாறி விட வில்லை புதிய தலைமுறை வந்ததும்.

எத்தனயோ முறை மாலனிடம் கோரிக்கை வித்தகி விட்டது, இணைய வடிவில் புதிய தலைமுறையை கொண்டு வாருங்கள் என்று, இப்போதும் கேக்கிறேன்.

மாலன் விரைவில் இணைய வடிவில் கொண்டு வாருங்கள்.

மணிஜி said...

எதாவது பொத்தாம் பொதுவாக சொல்ல நினைப்பவன் நானில்லை..இரண்டாம் இதழ் கடைகளில் கிடைக்கவில்லை.நாலைந்து கடைகளில் தேடியும்..இந்த இதழ் இன்னும் கொடிகளில் ஊஞ்சலாடுகிறது..நான் சொல்ல வந்தது ரிபீட் வாசகர்கள் இல்லை என்பதைதான்..பதிவுலக நண்பர்களின் கருத்தையும் கேட்டேன்..அவர்களின் பதிலும் அதுதான்..இந்தியா டூடேவுக்கும்,குமுதம்,விகடனுக்கும் இடையில் ஒரு வெற்றிடம் இருக்கிறது..இணையத்தை தவிர்த்து புத்தக வாசிப்பு இன்றைய இளைய தலைமுறைக்கு அவசியம் என்று உணர்த்த பு.த வினால் முடிய வில்லை என்பதே என் கருத்து...

மணிஜி said...

புதிய தலைமுறை என்ற பெயரே முதலில் தவறு என்பது என் கருத்து.மன்னிக்க..இதுவரை இது பற்றிய பதிவு எதுவும் வராததால் இதில் சொல்கிறேன்..ஒரு கல்லூரியில் கெஸ்ட் லெக்சர் கொடுக்க போயிருந்தேன்.அங்கு மாணவர்களிடம் உரையாடும்போது அவர்களிடம் தெரிந்து கொண்டது..பயங்கரமாய் அப்டேட் பண்ணி கொண்டேயிருக்கிறார்கள்..பு.த வெல்லாம் யானை பசிக்கு சோளப்பொறி

Athisha said...

பதிவுக்கு நன்றிண்ணே!. ஏற்கனவே பதிவர்களின் படைப்புகள் வரத்துவங்கிவிட்டது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

மணிஜி said...

/அதிஷா said...
பதிவுக்கு நன்றிண்ணே!. ஏற்கனவே பதிவர்களின் படைப்புகள் வரத்துவங்கிவிட்டது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்//

நீங்க பதிவர்ன்னு தெரியுமப்பா....

பீர் | Peer said...

அனுப்பாதவங்க?

மணிஜி said...

/மற்றபடி, இணையம் பற்றி அறிந்த மூத்த பத்ரிக்கையாளார் மாலன் இருக்கிறார். வலைப்பதிவு சூப்பர்ஸ்டார்கள் அதில் இருக்கிறார்கள். அது ஒன்று போதுமே ? //

இதுல கேள்விக்குறி ஏன்?

Karthikeyan G said...

//தண்டோரா ...... said...
சனிக்கிழமையோட தினத்தந்தி
இளைஞர் மலர் வரும் இலவச இணைப்பாக ..அதுல இருகிற விஷயங்கள்.பு.த வில் இல்லை..பசை இருக்கு .கொஞ்ச நாள் ஓடும்//

Thandora Sir, Wat a coincidence. My similar tweet... http://twitter.com/gkarthy/status/4777243748

ரவி said...

குப்பன் சார். இணைய வடிவில் கொண்டுவருவது பெரிய மேட்டரா ? Resource Problem இருக்கும் என்று நினைக்கிறேன். நானும் இந்த பதிவின் மூலம் கோருகிறேன். நன்றி.

ரவி said...

எதாவது பொத்தாம் பொதுவாக சொல்ல நினைப்பவன் நானில்லை..இரண்டாம் இதழ் கடைகளில் கிடைக்கவில்லை.நாலைந்து கடைகளில் தேடியும்..இந்த இதழ் இன்னும் கொடிகளில் ஊஞ்சலாடுகிறது..நான் சொல்ல வந்தது ரிபீட் வாசகர்கள் இல்லை என்பதைதான்..பதிவுலக நண்பர்களின் கருத்தையும் கேட்டேன்..அவர்களின் பதிலும் அதுதான்..இந்தியா டூடேவுக்கும்,குமுதம்,விகடனுக்கும் இடையில் ஒரு வெற்றிடம் இருக்கிறது..இணையத்தை தவிர்த்து புத்தக வாசிப்பு இன்றைய இளைய தலைமுறைக்கு அவசியம் என்று உணர்த்த பு.த வினால் முடிய வில்லை என்பதே /////////


தண்டோரா சார். its too early to Judge. அது தான் என்னுடைய ஸ்டேண்ட். ஐந்து ரூபாய் கொடுத்து வாங்கிய உங்களுக்கு அந்த புத்தகத்தை விமர்சிக்க எல்லா உரிமையும் உண்டு. ஆனால் அது அந்த புத்தகத்தின் படைப்புகளை மட்டுமே :)))

ரவி said...

தண்டோரா சார். சாதாரணமாக கண்ட இடத்தில் புள்ளிகளையும் கேள்விக்குறிகளையும் போட்டுவிடுவது என்னுடையை பழக்கம். தவறாக எண்ணவேண்டாம். நான் அப்படித்தான் :)))

ரவி said...

பீர் சார். அனுப்பாதவங்க அனுப்புங்க. இதுல என்ன சார் இருக்கு ?

ரவி said...

யுவக்ருஷ்ணா சார். பின்னூட்டத்துக்கு நன்றி. நான் பதிவு போட்டுட்டேன் இல்லையா ? அடுத்த மாசம் 2 லட்சத்தை தொடும்.

ஆ.ஞானசேகரன் said...

பகிர்வுக்கு நன்றிங்க

Cable சங்கர் said...

புதிய தலைமுறை மொக்கையாய் இருக்கிறது.. ஒரே அட்வைஸ் மழை.

அப்புறம் இணையத்தில் எழுதிகிறவர்கள் எல்லாம் குப்பை என்று சாரு மட்டும் சொல்லவில்லை.. :)

குப்பன்.யாஹூ said...

மாலன் இந்திய டுடே தமிழ் பதிப்பின் ஆசிரியராக மாறியதும், தமிழக வாசிக்கும் பழக்கத்தில் ஒரு மாற்றம் ( தாக்கம்) தெரிந்தது, சின்ன மாற்றம் நிகழ்ந்தது என்றே சொல்வேன். Subsequently vaasanthi took the lead in the same direction.

அதே போல தினமணி கதிரிலும், குமுதத்தில் கூட Maalan .

அதே போன்ற ஒரு ஆரோக்யமான மாற்றம் வாசிக்கும் பழக்கத்தில் கொண்டு வர வேண்டும் மாலன். அவரால் முடியும், அதில் எனக்கு எந்த ஐயமும் இல்லை.

கல்லூரி நூலகங்களில் புதிய தலைமுறையை பிரபலப் படுத்த வேண்டும்.

ரவி said...

நன்றி ஆ.ஞா.

ரவி said...

கேபிள் சார். வேற யார் யார் சொன்னது ? (இதில ஒரு கொடுமை என்னவென்றால் அவரே சாருஆன்லைன் என்று இணையத்தில் எழுதுகிறார் கிகிகி)

ரவி said...

குப்பன் யாஹூ.

உங்கள் அளவுக்கு அனுபவம் இல்லாததால் நீங்கள் சொல்லும் விஷயத்தில் என்னால் கமெண்ட் பண்ண முடியல. நான் வயசுக்கு வந்த காலத்தில் இருந்து குமுதம் நடுப்பக்கத்தை மட்டுமே பார்ப்பவன்.

மணிஜி said...

//Blogger Cable Sankar said...

புதிய தலைமுறை மொக்கையாய் இருக்கிறது.. ஒரே அட்வைஸ் மழை.

அப்புறம் இணையத்தில் எழுதிகிறவர்கள் எல்லாம் குப்பை என்று சாரு மட்டும் சொல்லவில்லை.. :)//

கேபிள்..வேற யார் சொன்னாங்கன்னு உடைச்சு சொன்னீங்கன்னா ஏழரை லட்சமும்,மீதி இருக்கிற சொச்சமும் தெரிஞ்சுக்கிறொம்

- யெஸ்.பாலபாரதி said...

ரவி,
சில ஆண்டுகள் முன்பு வரை (இப்போது வருகிறதா தெரியவில்லை)கோவையில் இருந்து ”தன் நம்பிக்கை” என்ற பெயரில் (என்று நினைக்கிறேன்) ஒரு இதழ் வந்துகொண்டிருந்தது. இதழ் முழுக்க கூவி கூவி தன்னப்பிக்கை டானிக் விற்றுக் கொண்டிருந்தார்கள். அப்புறம்.. அதே வேலையை பல பதிப்பகங்கள் எடுத்துக்கொண்டன.. இப்போது பு.மு இதழ் இளைஞர்களில் சோர்வானவர்களை குறிவைத்து வந்துகொண்டிருக்கிறது.

இவர்களும் இதே டானிக் வேலையைத் தான் தருகிறார்கள். கலர் கலராக.. வாசனையாக.. ஆனா... இதழில் எல்லோரும் டானிக் விற்க, ஆசிரியர் மட்டும் சமீபகால பிரச்சனைகளை தொட்டு எழுதுகிறார்.

முதல் இதல் போலவே.. பொருளடக்கம் மாறாமல்.. இதழ் தொடர்ந்தால்.. சிரமம் தான்.

தமிழில் தனித்த அடையாளங்களையெல்லாம் பெற முடியாது. பத்தோடு ஒன்றாக வந்துகொண்டிருக்கும் அவ்வளவே..!

ரவி said...

ஒரு பத்திரிக்கையாளராக உங்கள் மணியையும் அடித்துவிட்டீர்கள் பாலா :))

ரவி said...

அதானே ? கேபிள் சார். டெல் மீ ஈ ஈ

Sanjai Gandhi said...

இரண்டாவது இதழ் படித்தேன்.. கண்டெண்ட் எல்லாம் கல்லூரி மாணவர்களால் நடத்தப் படும் வளாகப் பத்திரிக்கை மாதிரியே இருந்தது. இ.டுடே , குமுதம் , விகடனுக்கு இடையே வெற்றிடம் இருப்பதாக மேலே ஒரு மாமா சொல்லி இருக்காங்க.. அவருக்கு நான் பரிந்துரைக்கிறேன் : தி சண்டே இந்தியன். இந்தியாடுடேவும் சண்டே இந்தியனும் தான் இப்போதைக்கு வழி போல.. புதிய தலைமுறை - குண்டு சட்டியில் குதிரை..

பதிவுக்கு தொடர்பில்லாத கமெண்ட்:

இளைஞர்கள் என்றாலே கல்லூரி மாணவர்கள் தான் என்ற பொதுப் புத்தியை மாற்ற எதுனா சட்டம் கொண்டு வந்தா தேவலை.

கல்வெட்டு said...

இரவி இதென்ன கலாட்டா?? மாலன் இதன் ஆசிரியரா?

புதிய முயற்சிக்கு வாழ்த்துகள் மாலன்.

புதியதலைமுறை இணையப்பக்கத்தில் பார்த்தது.

http://puthiyathalaimurai.com/aboutus.html

இந்தியா வல்லரசாக மாறவேண்டுமெனில், மாற்றம் எனும் மாமந்திரம், எல்லோரிடையேயும் குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் பரவ வேண்டும். எப்படி மாற்றம் ஏற்பட வேண்டும் என்னும் சிந்தனைகள் முதலில் புதிய தலைமுறையினரிடையே எழவேண்டும். மனித நேயத்தை மீறி ஓங்கிவிட்ட இனப்பற்றும், நாட்டின் நலனை விஞ்சிவிட்ட மொழிப்பற்றும் சமூக நலத்தைச் சாய்த்து உயர்ந்துவிட்ட சாதிப்பற்றும், பொது நலத்தை பொசுக்கிவிட்டுப் பெருகியுள்ள சுயநலப் நோக்கும், மாற்றம் ஏற்பட்டே ஆக வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றன.





//இந்தியா வல்லரசாக மாறவேண்டுமெனில், மாற்றம் எனும் மாமந்திரம், எல்லோரிடையேயும் குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் பரவ வேண்டும்.//

வல்லரசுன்னா என்னவென்று கேட்டுச் சொல்லுங்கள்.


//மனித நேயத்தை மீறி ஓங்கிவிட்ட இனப்பற்றும், //

எந்த இனத்தைச் சொல்கிறார்? மதம் சார்ந்த இனமா? அல்லது சாதி சார்ந்த இனமா? அல்லது எல்லாமேமுமே? இனக்குழு என்பது மனிதனின் குழுவாழ்க்கையின் ஆரம்பம்.

//நாட்டின் நலனை விஞ்சிவிட்ட மொழிப்பற்றும்//

நாட்டின் நலன்? இந்தியா? இந்தியாவின் நலன் என்ன என்று பட்டியல் போட்டுவிட்டு அதை எந்த மொழிப்பற்றுவிஞ்சிவிட்டது என்று சொல்லலாம்.

// சமூக நலத்தைச் சாய்த்து உயர்ந்துவிட்ட சாதிப்பற்றும், //
சபாஸ், இது மிகவும் அவசியம். மாலன் சாதி மதம் இல்லாதவர்களை முதலில் வேலைக்கு வைப்பது அவசியம். அதுபோல சாதி/மதம் இல்லாதவர்கள் மட்டுமே கதை/கட்டுரை எழுதவேண்டும் என்று அறிவிக்கவேண்டும். ஆரம்பம் உங்களின் மேசையில் இருந்து தொடங்கவேண்டும்.

வேலை பார்ப்பவர்களை பட்டியல் போட்டு அவர்களின் சாதி/மத துறப்பை அறிவித்துவிட்டு இப்படி அறிக்கைகள் கொடுக்கலாம்.

நிச்சயமாக ஒரு முன்மாதிரியாக இருக்கும்.

//பொது நலத்தை பொசுக்கிவிட்டுப் பெருகியுள்ள சுயநலப் நோக்கும்,//

பொதுநலம்?? இவர்கள் பத்திரிக்கை வைத்து இருக்கும் தெருவில் இருந்து இவர்களால் தொடங்கப்படட்டும். நல்ல எடுத்துக்காட்டாக இருக்கும்.

// மாற்றம் ஏற்பட்டே ஆக வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றன.//

அதே ,மாற்றம் உங்களில் இருந்து ஆரம்பித்துவிட்டதாக அறிவித்துவிட்டு தொடரலாம்.

******

அப்துல்காலம் வகையறா கனவுகாணும் புத்திமதிகள் மட்டும் இருந்தால் போதாது. பிரதிகள் விற்பதே சாதனை என்றால் xxx பத்திரிக்கைகூட அதிகம் விற்கும்.

"மாற்றம் வேண்டும்" என்ற‌ நோக்கில் பத்திரிக்கை தொடங்கினால், எத்தனைபேர் மாறினார்கள் என்பதில்தான் வெற்றி உள்ளது.

****

மணிமேகலைப் பிரசுரத்தின் தன்னம்பிக்கைத் தொடர் புத்தகமும், அப்துல்கலாமின் கனவு அறிவுரைகளும் இந்தியாவை இன்னும் மாற்றிவிடவில்லை. வேறு தளத்தில் சிந்திக்கவேண்டியது அவசியம்.


**


பத்தோடு பதினொன்றாக பொழுதுபோக்கு பத்திரிக்கையாக மாறாமல் நல்ல வழியில் பயணிக்க வாழ்த்துகள்.

Anonymous said...

நன்றி கல்வெட்டு...

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால்

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால் டயபட்டீஸ் / நீரிழிவு / சர்க்கரை நோயை விரட்ட நியான்டர் செல்வனால் ஆரம்பிக்கப்பட்ட இந்த குழுமத்திற்கு ( https://www....