இன்னையோட திவ்யாவை ப்ரபோஸ் பண்ணி ஒரு வருஷம் ஆச்சு...அவளோட வாய்ஸ கேக்கலாம்னு அவளோட ஆபீஸ் நம்பருக்கு போன் போட்டேன்..வழக்கம்போல பிஸி...வாய்ஸ் மெயில் போகுது...வாய்ஸ் மெயில் கொடுக்க முடியாதுன்னு ஒரு அறிவிப்பை கொடுத்துட்டு ஆப்பரேட்டருக்கு ட்ரான்ஸ்பர் ஆகுது ஆட்டோமேட்டிக்கா...அவளோட வாய்ஸ் மெயில் பாக்ஸத்தான் நான் இந்த ஒரு வருஷத்துல நிரப்பிட்டனே...ம்ம்ம்ம்...
ஆங்...இன்னோரு விஷயம்...இந்த ஒரு வருஷத்துல அவளை ரெண்டு மூனுமுறை தான் பார்த்திருக்கேன்...ஒரு நாலஞ்சு முறைதான் போன்ல பேசியிருக்கேன்...என்ன குழப்பமா இருக்கா...மொதல்ல அப்படித்தான் இருக்கும்...என்னோட கதையை கொஞ்சம் பொறுமையா கேட்டீங்கன்னா அப்புறம் குழம்ப மாட்டீங்க...
என்னோட பேரு குமார்....திரைகடல் ஓடி திரவியம் தேடுன்னு ஒரு பழமொழி இருக்கில்ல...(திரவியம்னா ஏதாவது லிக்விடா ?) அதுக்கு நான் ஒன்னும் விதிவிலக்கில்ல...ஐ.டி ஜாப் தேடி பெங்களூர் வந்து, ஜாவா ப்ரோக்கிராமரா ஒரு கம்பெனியில சேர்ந்து மூனு வருஷமாச்சு...கிராமத்துல அப்பா அம்மா, ஒரு தங்கச்சி....ப்ளஸ் டூ படிக்கறா...இந்த வருஷம் பப்ளிக்...அதை விடுங்க, அது அவ்ளோ இண்டரஸ்டிங்கா இருக்காது...
நானும் திவ்யாவும் ஒரே ஆபீஸ்ல தான் ரெண்டு வருஷம் வேலை பார்த்தோம்...ரொம்ப திக் ப்ரண்ஸ்...திவ்யாவை பற்றி சொல்லனும்னா அவளோட குண்டு கண்களை சொல்றதா, இல்லை கழுத்தில் புரளும் கருமையான முடியை சொல்றதா, இல்லை எப்போதும் புன்முறுவலோட பேசும் அவளோட குணத்தை சொல்றதா...இந்த புன்முறுவலே அவளுக்கு தனி அழகுதான்...என்னோட ஆளை பற்றி அதிகமா சொல்ல மாட்டேன் போங்க...விஷயத்துக்கு வரேன்...அவளுக்கு ப்ராஜக்ட் பிடிக்கலைன்னு வேற ட்ரை பண்ண ஆரம்பிச்சா...ட்ரை பண்ணிக்கிட்டிருக்கும்போது அவளுக்கு வேற பெரிய கம்பெனி கிடைச்சு அதுக்கு மாறிட்டா...நானும் ட்ரைபண்ணிக்கிட்டு தான் இருக்கேன்....லாஸ்ட் இயர் திவ்யா போன கம்பெனியிலேயே ஜாய்ண் பண்ணனும்னு வெறியா ட்ரை பண்ணேன்...ஆனா முடியல...அவளோட இண்டர்வியூ மாதிரி என்னோடது சக்ஸஸ் ஆகல...ஊத்திக்கிச்சு...அதுக்கு நான் கொஞ்சம் மெண்டலி அப்செட் ஆனதும் ஒரு காரணம்...
மொதல்ல நான் ஏன் திவ்யா பின்னால ஓடுறேன்னு தெரிஞ்சுங்கோங்களேன்...ஆமாம் இதுல என்ன கம்ப சூத்திரம் (இது டிஸ்க்ரீட் மேக்ஸ விட பெரிய சப்ஜெட்டா - எல்லோரும் சொல்றாங்க, நானும் சொல்றேன், நீங்க பெருசா எடுத்துக்காதீங்க ப்ளீஸ்) அப்படீன்னு கேக்கறீங்களா ? அவளை லாஸ்ட் இயர் ஏப்ரல்ல நான் ப்ரபோஸ் பண்ணேன்...மொதல்ல பிப்ரவரி 14த் தான் பண்ணலாம்னு நினைச்சேன்...இருந்தாலும் அப்படியே தயங்கி தயங்கி ஏப்ரல் ஆகிருச்சு...
ப்ரபோஸ் பண்றதுக்கு முன்னால ரெண்டு பேரும் போன்ல மணிக்கணக்கா பேசுவோம்...ஏர்டெல் டூ ஏர்டெல் ப்ரீ கார்டு வாங்கி போன் சூடாக சூடாக பேசுவோம்...கே டிவியில பார்த்த அரதப்பழசு படம், சினிமா கிசு கிசு, ஜாவா அப்படீன்னு பேச்சு மணிக்கணக்கா நீளும்...அவளுக்கு அவளோட டாடின்னா உசுரு...அது தெரிஞ்சதுல இருந்து நானும் என்னோட டாடின்னா உசுருன்னு சொல்லிக்கிட்டேன்...அவளுக்கு ஜாஸ் மியூசிக் பிடிக்கும்...நானும் என்னை நானே ஜாஸ் மியூசிக்கு கண்வர்ட் ஆக்கிக்கிட்டேன்...அப்படி எல்லாம் அவளுக்கு பிடிச்சமாதிரி தான் நடந்துக்கிட்டேன்...
ஆனா அவளை ப்ரபோஸ் பண்ணப்போ கொஞ்ச நேரம் யோசிச்சிட்டு 'வேணாம்' குமார்னு ஒத்தை வார்த்தையில சொல்லிட்டா...நானும் எவ்வளவோ கேட்டுப்பார்த்தேன்...காரணம் ஒன்னும் பெரிசா அவளால சொல்ல முடியல...இண்டர் காஸ்ட் மாரேஜ் எல்லாம் எங்க பேமிலியில ஒத்துக்கமாட்டாங்க குமார் அப்படீன்னா...அவளோட கணவன் எப்படி இருக்கனும்னு சில கனவுகள் இருக்காம் அவளுக்கு...அதுக்கு நான் சூட்டாக மாட்டேன் அப்படீன்னு சொன்னா...நான் விடலை...எப்படி எல்லாம் இருந்தா உன்னோட எதிர்பார்ப்புக்கு ஏற்றமாதிரி இருக்கும் என்றெல்லாம் நோண்டி நோண்டி கேட்டுப்பார்த்தேன்...அவ ஸ்ட்ரிக்டா 'நோ' சொல்லிட்டா...கடைசியா கெஞ்சோ கெஞ்சுன்னு கெஞ்சுனப்புறம், நான் கொஞ்சம் யோசிக்கனும் அப்படீன்னா...
ரெண்டு மூனு நாள் வேலையே ஓடலை...அப்புறம் கேண்டீனுக்கு போய் சாப்டுட்டு வந்தப்புறம் கொஞ்ச நேரம் பார்க் பக்கமா இருந்தா...பக்கத்துல கொஞ்சம் இடைவெளி விட்டு உட்கார்ந்தேன்...
திவ்யா...
ம்...சொல்லுங்க குமார்...
என்ன யோசிச்சாச்ச...என்னால சாப்பிட முடியல, தூங்க முடியல திவ்யா...ப்ளீஸ்...சொல்லும்மா...
குமார்...எனக்கு யோசிக்க டைம் வேனும்னு சொன்னேன்...ரெண்டு மூனு நாள்ல சொல்ல முடியாது குமார்...
வேற எவ்ளோ நாள் வேனும் திவ்யா...
லுக்..இது என்னோட லைப் பிரச்சினை...இதுல நான் திங்க் பண்ணி தான் டிஸிஸன் எடுக்க முடியும்...
ஓக்கே ஓக்கே...திங் பண்ணி சொல்லும்மா...அதுல எனக்கு ஒன்னும் ப்ராப்ளம் இல்ல...ஆனா உனக்காக நான் வெயிட் பண்ணிக்கிட்டிருப்பேன்...
குமார்...நீ எனக்கு நல்ல ப்ரண்ட்...ஒன்னை லூஸ் பண்ண எனக்கு இஷ்டம் இல்ல...இருந்தாலும் ஒரு சில விஷயங்கள் ப்ரண்ஷிப்பை விட லைப் தான் முக்கியம்னு நாம டிசிஷன் எடுக்கவேண்டியிருக்கும்...பிக்காஸ்........
திவ்யா...நீ எடுக்கற எந்த முடிவும் எனக்கு ஓக்கே தான்...நான் உன்னை கண்டிப்பா கட்டாயப்படுத்தல...ஆனா என்னோட மனசுல இருக்க ஆசையை சொல்லக்கூடாதுன்னு நீ சொல்லலியே...
ஓக்கே...ஒனக்கு ஒரு விஷயம் சொல்லனும்...நாம ரெண்டு பேரும் அட்டண் பண்ண இண்டர்வியூ ரிசல்ட் கண்ஸல்டண்ட் மெயில் பண்ணியிருக்கா...நான் செலக்டடாம்...உன்னோட ரெஸ்யூமை ஹோல்டு ல போட்டுட்டாங்களாம்...15 டேய்ஸ்ல ஜாய்ன் பண்ணச்சொல்லி ஆபர் அனுச்சிட்டாங்க...நான் கண்டிப்பா ஜாய்ண் பன்றதா சொல்லிட்டேன்....என்னோட மனசு சரியில்ல...எனக்கு இப்போ ஒரு சேஞ்ச் வேணும் குமார்...
திவ்யா...உன்னோட மனசு சரியில்லாததுக்கு நான் காரணமா ? ப்ளீஸ் திவ்யா...என்னால இதுக்கு மேல ரெஸிஸ்ட் பண்ண முடியல...
நோ நோ...எனக்கு இந்த ப்ராஜக்ட் பிடிக்கலைன்னு எத்தனை முறை சொல்லியிருக்கேன்...புது கம்பெனியில சூப்பர் ப்ராஜக்ட்...அருமையான சேலரி...கண்டிப்பா நல்லா இருக்கும் குமார்..டாடி கூட ஓக்கே சொல்லிட்டார்...எனக்கு டெண் டேய்ஸ் லீவ் இருக்கறதால நான் நெக்ஸ்ட் வீக் போயிருவேன் குமார்...
அப்படியே கண்கள் கலங்க ஆரம்பித்தது எனக்கு...
சீ..என்ன சின்ன குழந்தை மாதிரி அழற குமார்...நான் ஒன்னும் ரிஜக்ட் பண்ணல்லியே உன்னோட ப்ரபோஸலை...ஒரு ஒன் இயர் போகட்டும்...பிறகு சொல்றேன்...
என்னாது ஒன் இயரா ?
என்ன திவ்யா சொல்ற ?
எஸ் குமார்...நான் புது கம்பெனியில ஜாயின் பன்றேன்..நீயும் வேற நல்ல கம்பெனி ட்ரை பண்ணு...வீட்டுக்கு எப்போதும் போல வா...போன் பண்னு...நெக்ஸ்ட் இயர் கேளு...சப்போஸ் எனக்கு ஓக்கேன்னா சரி...இல்லைன்னா நம்ம எப்போதும்போல ப்ரன்ஸாவே இருக்கலாம்...
சரி திவ்யா...இருந்தாலும் நான் இவ்ளோ நாள் வெயிட் பண்ணனுமா ?
ப்ளீஸ் குமார்..இந்த விஷயம் இதோட விடுவோமே...ஹாரி பாட்டர் புக் வாங்கித்தரச்சொன்னனே என்ன ஆச்சு...
நேத்தே வாங்கிட்டேன்பா...உன்னோட ட்ராயர்ல வெச்சிருக்கேன்...எடுத்துக்கோ...
தேங்ஸ் குமார்....நான் கிளம்பறேன்...டைம் ஆச்சு...
இவ்ளோதான் எங்களோட உரையாடல் நடந்தது...அதுக்கப்புறம் எப்போ போன்பண்ணாலும் நான் பிஸி...அப்புறம் பேசறேன்...அப்படீனே சொல்றா...நானும் ஒரு ரெண்டு மாசத்துக்கு அப்புறம் போன் பன்றதையும் விட்டுட்டேன்...அவங்க வீட்டுக்கு மட்டும் சண்டேஸ்ல போவேன்...ஆனா அவ பெரும்பாலும் வீட்டுக்கே வரதில்லயாம்...புதுக்கம்பெனியில அக்காமடேஷன் இருக்காம்...நிறைய வேலைன்னு அங்கயே தங்கிடறாளாம்...யூ.எஸ். ஹெச் ஒன் பி வேற ப்ரபோஸ் பண்றாங்களாம் கம்பெனியில.....என்று அவங்க அம்மா ஒரு முறை போன்ல சொன்னப்ப கொஞ்சம் சுர்ர்ருனு இருந்தது...
இன்னையோட எங்களோட (என்னோட) ப்ரபோஸலுக்கு ஒரு வயசாச்சு...
சரி இன்னைக்கு எப்படியும் அவளோட பேசிடலாம் என்று அவள் அலுவலக நெம்பருக்கு போன் அடித்தேன்...
ரிங் ரிங்...!!
நாலு ரிங்குக்கு பிறகு வாய்ஸ் மெயில் போனது.....
அட...வாய்ஸ் மெயில் பாக்ஸ் க்ளீயர் ஆகி இருக்குப்பா...
ப்ளீஸ் லீவ் எ மெஸேஜ் ஆப்டர் த பீப்...அப்படீன்னு ஒரு பெண் குரல்...
பீப்........
நான் ஹ்ஹ...என்று ஒருமுறை கனைத்துக்கொண்டு பேச ஆரம்பித்தேன்...
ஹாய் திவ்யா...எப்போதும்போல உன்னோட வாய்ஸ் மெயில் புல்லா இருக்கும்னு நெனச்சேன்...பட் க்ளீயர் பண்ணிட்டே போலிருக்கே....சே...நான் சொல்ல வந்தது அது இல்லை...ஆக்சுவலி....நான் சொல்ல வந்தது நம்மோட லவ் மேட்டர் பத்தி...நானும் இந்த ஒன் இயரா உனக்காக வெயிட் பண்ணி பார்த்தேன்...நீ பதில் சொல்றமாதிரி தெரியல...நம்ம ஆபீஸ்ல - அதாவது உன்னோட பழைய ஆபீஸ்ல...புதுசா ஜாய்ன் பண்ணி இருக்க அர்ச்சனா எனக்கு தகுந்த மாதிரி இருப்பான்னு தோனுது....நெறைய யோசிச்சு அவளை ப்ரபோஸ் பன்னலாம்னு பாக்கறேன்...இனிமே நான் உனக்கு கால் பண்ண மாட்டேன்...உன்னை டிஸ்டப் பண்ணதுக்கு சாரி...ஹேவ் அ நைஸ் டைம் திவ்யா...பை....
Subscribe to:
Post Comments (Atom)
டயபட்டீஸ் ப்ரோட்டக்கால்
டயபட்டீஸ் ப்ரோட்டக்கால் டயபட்டீஸ் / நீரிழிவு / சர்க்கரை நோயை விரட்ட நியான்டர் செல்வனால் ஆரம்பிக்கப்பட்ட இந்த குழுமத்திற்கு ( https://www....
-
நித்யானந்தா விவகாரம் ஆரம்பித்தவுடன் எல்லோரும் எங்கே எங்கே என்று இணையத்தில் தேடியது அந்த வீடியோவைத்தான்...!! ட்விட்டரில், பேஸ்புக்கில்...
-
'கள்' உண்ணாமை வேண்டும் அப்படின்னு காந்தி சொன்னதா கேள்வி..ஆனா அவர் கிட்ட கள் பத்தி யாரோ கதை விட்டு இருக்கனும்...கள் ரொம்ம போதை..உடம்ப...
-
பார்ப்பனீயம் குறித்து நிலவும் பெருங்குழப்பம் காரணமாக ஒரு அனானி டோண்டு ராகவன் சாரிடமே, சில விளக்கங்கள் கேட்டிருக்கிறார்... நிறைய புதிய பதிவர்...
10 comments:
முந்தைய கதையை முடிவோட (ஒரு முடிவோடதான் இருக்கடா நீயு) இந்த பதிவில் கொடுத்திட்டேன்...:))))) அதில் பின்னூட்டம் கொடுத்த அத்துனை பேருக்கும் நன்றீ....
ஒரு வருஷத்த வேஸ்ட் பண்ணிட்ட தல நீ!
தம்பி, இது என்னோட கதை இல்ல...இது ஜஸ்ட் ஒரு கதை...
ada archana epdi irukanga ?
Ithan kadhaya? Sari sari :))
ஏனுங்க...கோயமுத்தூர் குசும்பு...இது கதை தானுங்க...!!!!!!!!!!!
aaha.... aaha... ithallava kathai... ithu maathiri vithyaasamaana kathaikalathaan Ameerum, Radha Krishnanum thedikittu irukaanga :)))
தம்பி, இது என்னோட கதை இல்ல...இது ஜஸ்ட் ஒரு கதை...//
இது கதை , நம்பமுடியாது ...
நல்ல வேளை.. கிழிச்ச கடைசி பக்கத்தை திரும்பவும் கொடுத்துட்டீங்க.. :-)
:) :) :)
அர்ச்சனா to பூஜா எப்போ?
Post a Comment