Sunday, October 04, 2009

ஓசூர் விமான நிலையத்தின் தேவையும், சாத்தியங்களும், வாய்ப்புகளும்


உங்களிடம் அட்ச ரேகை மற்றும் தீர்க்க ரேகையை வைத்து, இடத்தை பார்க்கும் வசதியுள்ள மென்பொருள் ஏதும் இருக்கிறதா ?

அட்சரேகை > 12-39-40 *வடக்கு
தீர்க்கரேகை > 77-46-01 *கிழக்கு

இந்த இடத்தில் நான் சுட்டிக்காட்டுவது என்ன என்று ஒருமுறை பார்த்துவிடுங்கள். கந்தல் துணி போல ஒரு ஏர்ப்போர்ட் தெரிகிறதா ?

அது ஓசூர் ஏர்ப்போட்.

உலக அளவில் இந்தியாவின் சிலிக்கான் வேலி என்று புகழப்படும் பெங்களூருக்கு அருகாமையில் உள்ள, தினமும் ஆயிரக்கணக்கான வெளிநாட்டவர் தொழில் நிமித்தமும், சுற்றுலா நிமித்தமும் வரக்கூடிய எலக்ட்ரானிக் சிட்டி, எம்ஜிரோடு, மற்ற சுற்றுலா தலங்களுக்கு கூப்பிடு தூரத்தில் உள்ள ஓசூர்.

ஆயிரக்கணக்கான பன்னாட்டு நிறுவனங்களுடன், அற்புதமான க்ளைமேட்டுடன், பல தொழில்வாய்ப்புகளையும், இந்திய அளவில் பல அறிவுசார் துறை தொழிலாளாளர்கள் வசிக்கும் பெங்களூருடன் 20 நிமிடங்களில் அடையக்கூடிய மிக எளிதான சாலை வசதியை கொண்ட ஓசூர்.

திடீரென்று ஏன் ஓசூர் விமானநிலையம்:

இந்திய விமான துறையின் டைரக்டிவ் படி, 150 கிலோ மீட்டருக்கு உள்ளே வேறு வேறு விமானநிலையங்கள் இருப்பது ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்லவாம். அதனால் பெங்களூரின் மையப்பகுதில் இயங்கிவந்த HAL ஏர்ப்போட் இப்போது இயங்கவில்லை. அதற்கு பதில் BIA, பெங்களூர் சர்வதேச விமான நிலையம் முழு அளவிலான பயன்பாட்டுக்கு வந்துவிட்டது.

5000 கோடி செலவில் கட்டப்பட்ட இந்த விமான நிலையம், தேவனஹள்ளியில் இருக்கிறது. விமான நிலையம் என்னவோ அருமையானதாக இருக்கிறது, நிறைய பயணிகளை கையாளும் வசதியும் இருக்கிறது.

ஆனால் நகருக்கு மிக அதிகமான தூரத்தில், கிட்டத்தட்ட 45 கிமி, இருப்பதால், பீக் அவர்ஸில் பயங்கர ட்ராபிக். உதாரணமாக ஒருவர் எலக்ட்ரானிக் சிட்டி பகுதியிலோ அல்லது பன்னாரக்கட்டா பகுதியிலோ நிறுவனம் வைத்துள்ளார், அல்லது வசிக்கிறார். காலை 8 மணிக்கு பெங்களூர் சர்வதேச விமான நிலையம் வந்து இறங்குகிறார். அவர் தேவனஹள்ளியில் இருந்து எம்.ஜிரோடு பகுதிக்கு வர எப்படியும் 2 மணி நேரம் ஆகும். அங்கிருந்து எலக்ட்ரானிக் சிட்டிக்கு போக அரை மணி அல்லது ஒரு மணி நேரம் ஆகிவிடும்.

நல்ல பீக் அவர்ஸில் இதில் மாட்டியவர்களுக்கு சரியாக அரைநாள் வீணாகும். அதுவே அவர் ஓசூர் விமானநிலையம் வருகிறார் என்று வைத்துக்கொள்ளுங்கள். ஓசூரில் இருந்து 45 நிமிடங்களில் எலக்ட்ரானிக் சிட்டி வந்துவிடலாம். இதனால் நிறைய உள்நாட்டு பயணிகள் பெங்களூர் சர்வதேச விமான நிலையத்தை விட ஓசூர் பெட்டர் என்று கருதுவார்கள்.

ஓசூரில் ஐடி பார்க்

ஓசூரை பொறுத்தவரை, பெங்களூரும் ஓசூரும் ஒன்றுதான். ஓசூரில் வசிப்பவர்கள் பெங்களூருக்கு வந்து வேலை செய்கிறார்கள். சகாய விலைக்கு வாடகை வீடுகள் ஓசூரில் இருப்பதால், நிறைய பேர் இதனை செய்கிறார்கள்.

ஓசூரில் சிப்காட் போன்ற தொழில் முயற்சிகளை அரசு வெற்றிகரமாக செய்தாலும், டைடல் பார்க் போன்றதொரு ஐ.டி பார்க் அமைக்காதது பெருங்குறை.

அதனால் அவ்வாறு இண்ப்ரா ஸ்ட்ரக்சர்களை பெருக்குவதன் முதல் படி, நல்ல தரமான விமான நிலையத்தை அமைப்பதும், அதன் பின் உள்நாட்டு விமான நிறுவனங்களை ஓசூருக்கு இயக்குமாறு ஊக்குவிப்பதும் ஆகும்.

மானிய விலையில் தரமான இண்ப்ரா ஸ்ட்ரக்சர்களை கொடுத்தால் ஐடி நிறுவனங்களுக்கு கசக்கவா போகிறது ?

ஓசூரை டெவலப் செய்ய அரசு கண்டிப்பாக முயற்சி எடுக்கவேண்டும். இப்போது ஆரம்பித்தால் கூடிய விரைவில் பெங்களூருக்கு இணையாக ஓசூரை கொண்டுவரமுடியும்.

16 comments:

ரவி said...

http://www.ourairports.com/airports/VO95/#lat=12.66190312541401,lon=77.76786088943481,zoom=16,type=Satellite,airport=VO95

இதில் பாருங்கள்.

ரவி said...

இங்கே

VISA said...

நல்ல யோசனை. அரசாங்கம் கவனித்தால் சரி. ஆமா ஓசூரில் ஐ.டி பார்க் வந்துவிட்டால் ஒருலட்சம் மதிப்புள்ள நிலத்தை புரோக்கர்களும் நில ஓனர்களும் சேர்ந்து ஐம்பது இருந்தால் தருகிறோம் அதுவும் இன்றே முன்பணம் கொடுத்தால் ஆச்சு நாளைக்கு வந்தா பிளாட் வித்திடும் என்று பயமுறுத்த மாட்டாங்களே. சென்னையில் ஓரிரண்டு வரடத்திற்கு முன் ஜொராய் பணம் பார்த்தார்கள். ஈ.எம்.ஐ. கட்டுவதென்னவோ ஐ.டி. ஆட்கள் தான். ஹீ ஹீ ஹீ

ரவி said...

ஆமாங்க. இப்பவே ஓசூர்ல அது தான் நடக்குது. நம்மளால நாலு பேர் நல்லாருந்தா சரி

இஎம் ஐ கட்டுவோர் சங்கம்.

இராகவன் நைஜிரியா said...

// இந்திய விமான துறையின் டைரக்டிவ் படி, 150 கிலோ மீட்டருக்கு உள்ளே வேறு வேறு விமானநிலையங்கள் இருப்பது ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்லவாம். //

இதையும் மீறி ஓசூரில் விமான நிலையும் அமையும் என்று எதிர்ப் பார்க்க முடியுங்களா?

Alex Pandian said...

ஏர்போர்ட் ஓசூரில் இருந்தால் நல்லதுதான்.

அதற்கும் முன்னர் சன் (அல்லது ஏதோ ஒரு) குழுமம் ஒரு பண்பலை வானொலியை ஆரம்பித்தால் பெங்களூர் (ஹெப்பாள்) வரை கேட்கக்கூடிய டிரான்ஸ்மிட்டர் பவர் கொண்ட ஒலிபரப்பு, பெங்களூரில் வாழும் தமிழர்களுக்கு உதவியாக இருக்கும். கலாநிதி மாறன் செவிமடுப்பாரா ? (பெங்களூரில் தமிழ் ரேடியோ ஆரம்பித்தால் கன்னட ரக்ஷண வேதீகே ஆட்கள் கல்லெறிவார்கள்.)

ரவி said...

தேவையற்ற அந்த விதியை தளர்த்த பிரபுல் பட்டேல் மூலம் முயற்சி நடந்ததாம்.

ரவி said...

சரியான கோரிக்கை அலெக்ஸ். காலாநிதி மாறன் காதில் போட்டுவைக்கிறேன்.

:)))

ராஜ நடராஜன் said...

திட்டக்குழுவில் ஒரு இடம் காலியா இருக்கிறதா கேள்வி!முயற்சி செய்யுங்களேன்.

ரவி said...

ராஜா,

என்னைய வெச்சு காமெடி கீமடி பண்ணலையே ?

Jawahar said...

ரவி, ஓசூர் வாசியான நான் இதை சந்தோஷமாக வழி மொழிகிறேன்!!

http://kgjawarlal.wordpress.com

Sudhar said...

See Kerala is having many AirPorts handling international flights. Now Kannuar International airport land aqusition is going on. Calicut is very near to Kannuar. (not sure abuot 150 kms range).

Why not in Tamilnadu >?

Fight and get like keralites. (Trivandrum, Kochi, Calciut and now in Kannuar) Similary they have more number of passport offices and Railway broad guage tracj etc when compared to the size of the state and population, we are way behind them.

Regards

Sudharsan

ரவி said...

ஜவகர், நன்றி !!!!

ரவி said...

நன்றி சுதர்ஷன் !!!!!

வால்பையன் said...

ஓசூர் நிம்மதியா இருக்குறது பிடிக்கலைன்னு சுருக்கமா சொல்லியிருக்கலாம்!

ரவி said...

அன்புள்ள வால்பையன்.

தோப்பைய்யாவிடம் சொல்லி உமது வாலை ஒட்ட நறுக்குவேன்.

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால்

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால் டயபட்டீஸ் / நீரிழிவு / சர்க்கரை நோயை விரட்ட நியான்டர் செல்வனால் ஆரம்பிக்கப்பட்ட இந்த குழுமத்திற்கு ( https://www....