சமையல் !! (ஒரு பக்க கதை)அடுப்புல ஒரு டீஸ்பூன் நல்லெண்ணை விடுங்க ஸ்வேதா. சரியாய் ஒரு ஸ்பூன் போதும்.

ஸ்வேதா ஏப்ரன் அணிந்திருந்தாள். பக்கத்தில் அற்புதா. அவர்களைப்போலவே அவர்கள் முன் இருந்த மாட்யூலர் கிச்சன் சமயலறையும் நீட்டாக அழகாக இருந்தது. அற்புதா அவளுடைய அழகிய கன்னத்தைவிட கொஞ்சம் சிவப்பாயிருந்த பெரிய மிளகாய் துண்டுகளை கையில் வைத்திருந்தாள்.

கொஞ்சம் எண்ணை காய்ந்தபின்...இப்போ கொஞ்சம் கடுகு, அதன்பின் இந்த மிளகாய் துண்டுகளை போட்டு, அப்புறம் கொஞ்சம் வெங்காயம் தாளிக்கலாம். ஓக்கே ? இந்த நேரத்தில் கொஞ்சம் போல உப்பு சேர்த்துக்கிட்டா வெங்காயம் சீக்கிரம் டீ ஹைட்ரேட் ஆகி டேஸ்ட் கூடும்..

சரி..இது ஸ்வேதா..

அற்புதா தொடர்ந்தாள். இப்போ நாம செய்யப்போற சிக்கன் நாட்டுக்கோட்டை செட்டிநாடு அப்படீங்கற வெரைட்டி. இதுக்கு நாம ஏற்கனவே எடுத்து மஞ்சள் தூளில் ஊற வெச்சிருக்கிற போன்லஸ் சிக்கனை இப்ப எடுப்போம்.

அற்புதா, இந்த வெரைட்டிக்கு நாட்டுக்கோழி இருந்தாத்தால் நல்லா இருக்கும்னு முன்பு சொல்லியிருந்தீங்க இல்லையா ?

ஆமாம் ஸ்வேதா. ஆனா இங்க சிட்டியில நாட்டுக்கோழி கிடைக்கறதில்லை. ஆனால் அதே செட்டிநாடு மசாலா கிடைக்கறதால நாம அதே டேஸ்ட் கொடுக்கமுடியும்..

ட்ர்ர். ஒரு சின்ன வைப்ரேட்டர் சிலிர்ப்புக்குப்பின் தீபாவின் அலைபேசி ஒலித்தது..ராங்கு ரங்கம்மா ரவிக்க எங்கங்கம்மா போலாமா...

ஹல்லோ...

ஹலோ தீபூ...என்ன சமையல் ? லஞ்சுக்கு வரவா ?

இல்லடா...இன்னைக்கு நான் எந்திரிச்சதே பதினோரு மணிக்குத்தான். நீ ஆபீஸ் கேண்டின்ல லஞ்ச் முடிச்சுரு. அப்படியே பிஸ்ஸா ஹட்டுக்கு சொல்லி எனக்கொரு வெஜ் பிட்ஸா ஆர்டர் பண்ணிடு.

ஓக்கேம்மா. என்ன பண்ணிக்கிட்டிருக்க ?

டிவியில ஸ்வேதா / அற்புதா டெலிஷியஸ் செட்டிநாடு சமையல்னு ஒரு ப்ரொக்ராம் பார்த்துக்கிட்டிருக்கேன்....
..
..
..

Comments

கொடுமை :௦)-

அட்லீஸ்ட் படமாவது நல்லதா போட்டு இருக்கலாம் !
ஸ்நேகா ஸ்வேதான்னு என்ன ஒரே கன்ஃப்யூஷன்?

விழித்திருக்க வேணாமோ?:-)
sriram said…
ரவி,
இது கதையல்ல காவியம். இத கல்வெட்டுல வடிச்சு வெச்சுட்டு பக்கத்திலயே உக்காந்திருங்க, பின்னால வரும் சந்ததியினருக்கு உபயோகமா இருக்கும்.

படம் நல்லாத்தானே இருக்கு மணிகண்டன்
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்
Unknown said…
மணி

என்ன கொடுமை ? சமையல் கதைக்கு நமீதா படமா போடமுடியும் ?
Unknown said…
புன்னகை அரசி பெயரை முதலில் வைத்து, என்னவோ தெரியலை, மாற்றிட்டேன். இப்ப திருத்திட்டேன்.

தப்பு மட்டுமே உங்கள் கண்ணில் படுவதால் உங்களை சாப்ட்வேர் டெஸ்டிங் துறைக்கு பரிந்துரைக்கிறேன். ஹி ஹி
Unknown said…
நன்றி ஸ்ரீராம் ஹி ஹி...

கல்வெட்டை வடிச்சுட்டு பக்கத்திலேயே ஏன் குந்திக்கனும் ?
Unknown said…
திட்டுங்க. ஆனா ஓட்டு போட்டுட்டு திட்டுங்க.
திட்டலை. ஆனா ஓட்டு போட்டுட்டேன். இது என்ன புனைவா இல்ல அனுபவமா தல :)
sriram said…
கல்வெட்டை வடிச்சுட்டு பக்கத்திலேயே ஏன் குந்திக்கனும் ?

இந்த காவியத்தில வர்ற சந்தேகங்கள தீர்த்து வைக்கத்தான்...
அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்
///எனக்கொரு வெஜ் பிட்ஸா ஆர்டர் பண்ணிடு.///

:-))0
Unknown said…
சென்ஷி. இப்படித்தான் எல்லா எளுத்தாளருக்கும் ஆவுது. கஷ்டப்பட்டு ரூம் போட்டு யோசிச்சு எதையாவது பொனைஞ்சா, அது பொனைவா இல்லை சொந்த அனுபவமான்னு கேக்குறது.
Unknown said…
நன்றி டிவிஆர் அய்யா.
அவ்வ்வ்வ்.... முடியல ரவி :-)
//அடுப்புல ஒரு டீஸ்பூன் நல்லெண்ணை விடுங்க ஸ்வேதா. சரியாய் ஒரு ஸ்பூன் போதும்//

அடுப்புல எண்னைய விட்டா பத்திக்காது
Unknown said…
நான் ஆதவன், நன்றி.
Unknown said…
ஷாகுல்.

வாணல்லன்னு மாத்திட்டா குமுதம் புக்ல வருமா ?
Nice one Ravi! Keep Trying more! (Not Like True Tamilan, Write More Stories, not More story)
பாவம் தல,

டீவியில தான் இந்த மாதிரி ட்ரடிஷனல் உணவையே பார்ப்பாங்க!
Unknown said…
நன்றி சிபி. அங்கயும் உண்மையாரை இழுத்துட்டீங்களே ?
mokkai said…
sir, i used to read ur blog daily.. kalakkunga....how to vote for this?
Tech Shankar said…
செந்தழல் ரவி
விவேகானந்தர் தெரு, மூன்றாவது குறுக்கு சந்து, Western Sahara
ஆஹா... இப்படியெல்லாமா நடக்குதூஊஊஊஊஊ..........
Unknown said…
thanks tamilnenjam
//டிவியில ஸ்வேதா / அற்புதா டெலிஷியஸ் செட்டிநாடு சமையல்னு ஒரு ப்ரொக்ராம் பார்த்துக்கிட்டிருக்கேன்....//


ம்ம்ம்ம்ம்....
..
VISA said…
கதை அருமை. ஆனா அந்த ரிங் டோன் பாட்டு கதைக்கு பொருத்தமா கச்சிதமா இருந்திச்சு ஹீ ஹீ
VISA said…
//ஸ்நேகா ஸ்வேதான்னு என்ன ஒரே கன்ஃப்யூஷன்? விழித்திருக்க வேணாமோ?:-)//

எனக்கென்னமோ பசித்திருக்க வேண்டுமென்று தோன்றுகிறது.
தப்பா நெனைக்காதீங்கோ நான் சமையல பத்தி சொன்னேன்
Unknown said…
நன்றி பீர், ஆ.ஞா, விசா.
இது கதையல்ல காவியம்
இது கதையல்ல காவியம்
இது கதையல்ல காவியம்
இது கதையல்ல காவியம்
இது கதையல்ல காவியம்
சிறுகதை பட்டறை உங்க ஊர்ல நடத்தணும்னா சொல்லுங்க தல..

அலப்பறை அருமை தல(ழ)
Unknown said…
நன்றி நர்சிம் !!!

பட்டறையா ? யூரோப்ல ??
ரவி... தலைப்பைப் பார்த்ததுமே பிரிஞ்சு போச்சு..//(ஒரு பக்க கதை)// இது எந்த பக்கம்னு சொல்லாமலேயே தெரியுது.. :)


நல்ல முயற்சி.. வாழ்த்துக்கள்!!
Unknown said…
டாங்கியூ பாலாண்ணே...!!!!!
Unknown said…
அதே சமயம், முப்பது பின்னூட்டங்களாகியும் யாரும் கண்டுபிடிக்கவில்லையே என்று நினைத்தேன்...நீங்க இண்டலிஜெண்டலின்னே...
என்ன நம்ம ஊரு சாப்பாடு சாப்ட்டு ரொம்ப நாளாச்சா? :-)

அருமை...
Unknown said…
நன்றி நாகு !!!
//அதே சமயம், முப்பது பின்னூட்டங்களாகியும் யாரும் கண்டுபிடிக்கவில்லையே என்று நினைத்தேன்...நீங்க இண்டலிஜெண்டலின்னே...//

இதுல ஏதும் பாகச குத்து இல்லியே..?

Popular Posts