அய்யோ மிஸ்ஸாகிப்போச்சே...

பப்ளிக் எக்ஸாம் - பப்ளிக் எக்ஸாம் என்று பூச்சாண்டி காட்டிக்கொண்டிருந்தார்கள்...

கடைசியில் ஒரு நாள் வந்தேவிட்டது....

நான் அவ்வளவு இண்டலிஜெண்டலி மாணவன் இல்லை என்றாலும் ஏதோ ஒப்பேத்துவேன்....

கெமிஸ்டரி தேர்வு...

பிராக்டிக்கல் மதிப்பெண் ஐம்பது எடுத்தாகிவிட்டது...இனி வெறும் இருபது மதிப்பெண்கள் எடுத்தால் பாஸ்....( நமது டார்கெட் பாஸ் தானுங்கோ எப்போதும்)...

எங்கள் பள்ளியில் பிட் அடிப்பது மிக கடினமான காரியம்...

படித்ததை கொண்டு சுறுசுறுப்பாக எழுத ஆரம்பிக்கிறேன்.....ஒரு ஐம்பது மதிப்பெண் தேறும் அளவில் எழுதிவிட்டேன்....மனது விரைவாக கணக்கு போடுகிறது....பிராக்டிக்கல் 50, இதில் ஒரு 50. ஆக மொத்த மதிப்பெண் 200 க்கு 100...அருமை....

பரிட்சை கிட்டத்தட்ட முடியும் தருவாயில் இருக்கிறது....

என் விடுதி நன்பன் சபரி....கோழித்திருடன் போல் முழிக்கிறான்....

நானோ பேப்பரை கட்டும் தறுவாயில் இருக்கிறேன்....என்னடா என்றேன்...கிசுகிசுப்பாக....

ஒன்னும் எழுதலைடா...பத்து மார்க் தான் வரும் போல இருக்கு....என்று தொப்பலாக நனைந்த சட்டையோடு பேக்கு போல் பார்க்கிறான்....

உடனடியாக ஒரு முடிவெடுத்தேன்....என் அடிஷினல் ஷீட்டை அவனிடம் கொடுத்து கட்டுமாறு கூறிவிட்டேன்....அதி இருபது மதிப்பெண் வரும் வகையில் எழுதி இருந்தேன்....

ஆக...அவனும் பாஸாகிவிடுவான் என்பது என் மனக்கணக்கு.......

தேர்வு முடிவுகள், நான் கெமிஸ்டரியில் இருநூறுக்கு 80....

அவன் இருநூறுக்கு 70....

நாங்கள் இருவரும் பாஸ்......................ஹுர்ரே................

என்ன ஒரு பிரச்சினை...என்னால் பி.இ (Engineering) போக முடியவில்லை....

கெமிஸ்டரியில் மதிப்பெண் குறைவு என்பதாலா....

அடப்போங்க நீங்க வேற....

பி.இ போகவேண்டும் என்றால் எண்டரண்ஸ் (Entrance Exam) எக்ஸாம் எழுதனுமாமே....

நான் அதுக்கு அப்ளை பண்ண மறந்துட்டேங்க.....

Comments

சந்தேகம் இருந்தா கேளுங்க...:)))

சிறிய கயமை..
அய்யா, நீர்தானே போலி?
சொம்பு, ஏன் கிளப்புகிறீர் கிலி ?
Anonymous said…
அருமையாக பதிவு, ரசித்து படித்தேன்.

- வினாயகம், சாஸ்கன்.
////அருமையாக பதிவு, ரசித்து படித்தேன்.

- வினாயகம், சாஸ்கன்.///

வா, வினய்...எப்போ தமிழில் எழுத கற்றுக்கொண்டாய் ?
Anonymous said…
இன்று உன் மெயில பார்த்து தான். பிலாகர் அக்கவுண்டு நாளை.
இப்ப நம்பறோம், நீங்க ரொம்ம்ம்ம்ம்ப நல்லவர் தான்
மங்கை said…
நல்ல வேலை ஒரு engineering கல்லூரி தப்பிச்சது
//எங்கள் பள்ளியில் பிட் அடிப்பது மிக கடினமான காரியம்...//
அதெல்லாம் மன்த்லி டெஸ்ட்ல தான்... பப்லிக்ல தாராளமா அடிக்கலாம். அதுவும் வெளிய இருந்து வர வாதியாருங்க தான் அதுக்கு முக்கிய காரணம். எங்க ஹால்ல இருந்த பையன் ஒருத்தன் Flying Sqadல வர ஒருத்தரோட அக்கா பையன். இதுக்கு மேல எங்க ஹால்ல என்ன நடந்திருக்கும்னு சொல்லனுமா?

அப்பறம் பத்தாவதுல என்னோட 1 மார்க் ஆன்சர் ஷீட் அப்பறம் மேப் ரெண்டும் பக்கத்து எக்ஸாம் ஹால்ல 1 மணி நேரம் இருந்துச்சு. கடைசில நான் டென்ஷன் ஆனது எனக்குதான் தெரியும் :-)
Anonymous said…
நம்ம தல வெட்டிபயல் சொல்லுறது கரெக்ட்டு கண்ணு.
private schoolல எல்லாம் ரிசல்ட் காமிக்குறதுக்கு பிட் அடிக்குறதுக்கு அவுங்களே ஏற்பாடு பண்ணுவாங்க. நான் 10 படிக்கும் போது என் ஹாலுக்கு வந்த teachers எல்லாம் flying squad வந்தா அலர்ட் பண்ணுவாங்க.
வாத்தியாரே,

நீயும் நம்ம கேசு தான் போல.... +2ல மேத்ஸ்ல நான் ஆனந்தராஜின்னு ஒரு பையனை பார்த்து அப்படியே ஈயடிச்சி எழுதினேன். என்னைப் பார்த்து சிவராமன்னு ஒரு பையன் அப்படியே ஈயடிச்சான்.... ரிசல்ட் என்ன தெரியுமா?

ஆனந்தராஜ் : 13/200

நான் : 31/200

சிவராமன் : 70/200

எப்படித்தான் இந்த வாத்திங்க மார்க் போடுறானுங்களோ தெரியலை....

இப்போ ஆனந்தராஜ் ஒரு தனியார் தொலைக்காட்சியிலே இருக்கான் (அவங்க அண்ணன் பிலிம் டைரக்டர்)

நான் ஒரு விளம்பரக் கம்பெனியிலே இருக்கேன்...

பாஸ் பண்ண சிவராமன் கார்ப்பரேஷன்லே குப்பை கொட்டிக்கிட்டிருக்கான்....

எப்படியோ மூணு பேரும் எங்க மேத்ஸ் மாஸ்டர் சொன்னமாதிரி எருமை மாடு மேய்க்கப் போகாம கொஞ்சமா உருப்பட்டு இருக்கோம்....
Anonymous said…
தல லக்கி நீ mathsல பெயிலா.. அய்யகோ... அய்யகோ ...
///இப்ப நம்பறோம், நீங்க ரொம்ம்ம்ம்ம்ப நல்லவர் தான்///

இப்பவாவது நம்பினீங்களே...
இஸ்ரேலியன் said…
arumai.
C.M.HANIFF said…
nallaa iruntathu :)