ஆர் யூ எ பேச்சுலர் ?

இது என்னுடைய கம்யூனிகேஷன் கிளாஸில் நடந்த மேட்டர்..

முதல் நாள் வகுப்பறையில் அனைவரும் தங்களை பற்றிய சொந்த அறிமுகம் செய்துகொள்ளுமாறு பணிக்கப்பட்டது...டீச்சர் ஒரு கர்நாடகா பெண்..

அவரவர்கள் அறிமுகத்தை செய்துகொண்டிருந்தார்கள்...நமது நண்பரின் முறை வந்தது...

அவர் அயம் கந்தசாமி, கம்மிங் பிரம் காரைக்குடி என்று ஆரம்பித்தார்...

நம் டீச்சர் இடையில் புகுந்து செய்த ஒரு குட்டிகலாட்டாவால் வந்தது வினை..அந்த கொடுமைய ஏன் கேக்குறீங்க...நான் தொடந்து 2 நிமிடம் சிரித்து, டீச்சரிடம் வார்னிங் பெறும்படி ஆனது...

விஷயம் இதுதான்...

நம் நன்பர் சுய அறிமுகம் செய்துகொ(ல்)ண்டிருந்தபோது...

ஆர் யூ எ பேச்சுலர் (Bachelor) என்று கேட்டுத்தொலைந்தார் டீச்சர்...

என்ன எழவு புரிந்ததோ, நம்மாள்....நோ நோ மேடம்..அயம் செட்டியார்...என்றார்...

நான் அப்போதே சிரிக்க ஆரம்பித்துவிட்டேன்....டீச்சர் என்னை பார்த்து ஒரு முறை முறைத்துவிட்டு...நன்பரை பார்த்து...

வாட் ??? செட்டியார்.. ??? என்றார்...

நம்மாளு மூஞ்சியை சீரியசாக வைத்துக்கொண்டு...

நாட்டுக்கோட்டை செட்டியார் மேடம்...என்றார்...

எனக்கு சிரித்து சிரித்து வயிறு புண்ணாகிப்போச்சு....உங்களுக்கு ??

Comments

enna kodumai saravanan ? hehahaheha
/*************************
எனக்கு சிரித்து சிரித்து வயிறு புண்ணாகிப்போச்சு....உங்களுக்கு ??
*************************/

இன்னும் ஒரு முறை படித்தால் ஆகிவிடும்.
இன்னொருமுறை ??? புரியல்லியே !!
இன்னொரு முறை படித்து இதே போல் சிரித்தால், வயிறு புண்ணாகிவிடும் என்று சொன்னேன்.
எனக்கு ஒரு காமெடி ஞாபகம் வருது.எழுத முடியாது.:))
nalla irukuyya...indha madhiri niraya anubavangal namukum iruku oru nal nanum eludhuraane
Anonymous said…
அடப்பாவி !
உங்களை மாதிரியே உங்க காரைக்குடி நண்பரும் பார்ப்பதற்கு குடும்பஸ்தர் மாதிரி இருப்பாரோ?

:)
Ramdas Iyer said…
எனக்கும் சிரிப்பு வந்ததது. ஆனால் சிரிக்கவில்லை. கவனிக்காமல் நடந்ததால் வாழைப்பழத்தோலில் வழுக்கி விழுந்தவனையும் தமிழ் மட்டுமே கற்றதால் தான் பேச்சுலர் அல்ல செட்டியார் என்று கர்நாடகத்தில் சபையில் எழுந்து நின்று பேசிய கந்தசாமியையும் பார்த்து சிரித்தால் ரவி, திராவிடம் வெல்லலாம், தமிழ் வெல்லாது. செய்தது தப்பானாலும், செய்தவன் தமிழனானால் செய்தது தப்பன்று.
Ramdas Iyer said…
எனக்கும் சிரிப்பு வந்ததது. ஆனால் சிரிக்கவில்லை. கவனிக்காமல் நடந்ததால் வாழைப்பழத்தோலில் வழுக்கி விழுந்தவனையும் தமிழ் மட்டுமே கற்றதால் தான் பேச்சுலர் அல்ல செட்டியார் என்று கர்நாடகத்தில் சபையில் எழுந்து நின்று பேசிய கந்தசாமியையும் பார்த்து சிரித்தால் ரவி, திராவிடம் வெல்லலாம், தமிழ் வெல்லாது. செய்தது தப்பானாலும், செய்தவன் தமிழனானால் செய்தது தப்பன்று.
யார் கண்டா!!
அவுங்க ஊரில் காலையில் இருந்து மாலை வரை கேட்டா இப்படி பதில் சொல்லித்தான் பழக்கமோ என்னவோ??
Hari said…
உங்க நண்பர் "Bachelor"-னு ஒரு ஜாதி உருவாகணும்ணு ஆசை படறார் போல. அப்பிடி ஒண்ணு உருவாணா அது தான் அழிவே இல்லாத ஜாதியா இருக்கும்.

A good hilarious post.
என்னங்க இது நம்ம பின்னூட்டம் மட்டும் ரொம்ப யோசனைக்குப் பிறகு பப்ளிஷ் ஆயிருக்கு போல?

:)))
Divya said…
நகைச்சுவையான பதிவு, அருமை!
mani said…
thala,
teriya thanama - office la paduchittu.... pakkathu seat ambi
mathriya parkiran...

ethukum, konjam kavnama padichi irukalam...

Popular Posts