கைத்தொலைபேசியை தொலைத்து இருக்கிறீர்களா ?


கைத்தொலைபேசியை தொலைப்பது போன்ற கொடுமையான விஷயம் எதுவும் இல்லையோ என்று தோன்றியது..

தனி தீவாகி விட்டது போல ஒரு உணர்வு...யாரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை..யாரும் என்னை தொடர்பு கொள்ள முடிய வில்லை...அனைத்து தொலைபேசி எண்கள், க்ரெடிட் கார்டு மர்ம எண்கள், அனைத்தும் காற்றோடு போயிற்று...

இந்த பதிவின் மூலம், கைத்தொலைபேசியை தொலைப்பதை தவிர்ப்பது எப்படி, அதனை மற்றவர் பயன்படுத்தாமல் தடுப்பது எப்படி, IMEI எண் என்றால் என்ன, அதனை உபயோகப்படுத்தி எப்படி உங்கள் கைத்தொலைபேசியை மற்றவர் உபயோகிகாமல் தடுப்பது என்பது பற்றி எழுதுவேன்..

மேற்கண்ட படத்தில் - அழகு பெண்கள் அறிமுகப்படுத்துவது தான் நான் தொலைத்தது...

சம்பவம் நிகழ்ந்தது எப்படி என்றால், கடந்த சனிக்கிழமை அன்று, நன்பர்கள் சிலர் இணைந்து ஆடு தாண்டும் காவேரி ( இங்கே பெங்களூரில் அது "மேக்கே"..மேக்கே என்றால் ஆடு - கன்னடத்தில் ) என்ற இடத்துக்கு போகலாம் என்று முடிவானது...

ஒரு கார் மற்றும் இரண்டு பைக் தயாரானது..
நான் ஒரு நாள் ஆபீசுக்கு கட் அடித்து விட்டு ( வழக்கமாக விடுமுறைதான், ராஜ்குமார் கலவர விடுமுறையை ஈடுகட்ட சனி அலுவலகம், பலருக்கு) நன்பர் வீட்டில் மற்றவருடன் இனைந்து கிளம்பினோம்..

காரில் இருந்தது நானும் முகில்வண்ணன் என்ற நன்பரும்..காவேரி நெருக்கத்தில் வர, பைக்கில் பறக்க வேண்டும் என்ற ஆசை அதிகமானது...ஆகவே பைக்கில் வந்த கார்த்திக் இப்பொழுது காரில்..நானும் முகிலும் பைக்கில்...இந்த நேரத்தில் காரில் என்னுடைய கைபேசி...

இடத்தினை அடைந்த பிறகு காரில் தேடினேன்..பறந்துவிட்டிருந்தது....

முதல் வேலையாக அதன் தொலைபேசும் வசதியை பார் செய்தேன்..( அடுத்த நாட்டுக்கு தொலைபேசும் வசதி உண்டு அதில்..என் நிறுவனம் எனக்கு வழங்கிய வசதி அது)

இப்போது என் அலுவலகத்துக்கு வந்த உடன் (திங்கள் அன்று) நான் செய்த முதல் காரியம், நான் முன்பே சேமித்து வைத்திருந்த அந்த கைபேசியின் IMEI எண்னை ( உங்கள் தொலைபேசியில் *#06# தட்டி பார்க்கவும்) சம்மந்தப்பட்ட தொலைவசதி வழங்கு நிறுவனத்துக்கு ( Mobile Service Provider) தெரிவித்தேன்..

இதன்மூலம் அதனை யாரும் உபயோகப்படுத்தாத வகையில் தொலைவசதி வழங்கு நிறுவனத்தின் EIR ( Equipment Identity Registrar)ன் கருப்பு சேமிப்பகத்தில் ( Black Database) சேமிக்கப்படும்...

அன்புடன்
ரவி..

பின் குறிப்பு : EIR எப்படி தமிழ்படுத்தலாம் என்று மண்டை உடைகிறது...

Comments

Unknown said…
தொலைந்து போன என்னுடைய L.G கைபேசியின் மாடல் எண் LG KG800
Radha N said…
இங்கே, சென்னையில், செல்போன் தொலைந்து போனால், தங்களுடைய போனின் IMEI எண்ணைக் குறிப்பிட்டு சென்னைமாநகர காவல்துறைக்கு புகார் செய்தால், அவர்கள் கண்டறிந்தவுடன் தகவல் தருவார்கள். காணமல் போன போனை யாராவது பயன்படுத்தினால், மட்டுமே காவல்துறையால் அவர்களை பிடிக்கமுடியும். புகாரினை நேரிடியாகக்கூட தரவேண்டிய அவசியமில்லையாம், மின்னஞ்சல் அனுப்பினாலே போதுமாம். நல்ல சேவையல்லவா?

Popular Posts