காசிக்கே போலியா..திருப்பதிக்கே லட்டா...

நேதாஜி பற்றி ஒரு பதிவு எழுதி இருந்தேன்...

காசி என்ற பெயரில் "அருமையான பதிவு" என்று பின்னூட்டம் வந்தது...

குமரன் சுட்டி காட்டினார், காசியின் பெயரில் வந்த பின்னூட்டம் அவருடையது அல்ல என்று..புரொபைல் மூலம் வலைதளம் சென்றால் ஆபாச சங்கதிகள் உள்ளன..

பின்னூட்டத்தில் எந்த ஆபாச சங்கதியும் இல்லை என்பதால் தான் அனுமதித்தேன்..

காசிக்கே போலியா..திருப்பதிக்கே லட்டா அப்படீங்கறமாதிரி....

இந்த போலிக்கு இதயமே கிடையாது....சேவை மணப்பான்மையில் செயல்பட்டுவரும் காசி இதனை பொருட்படுத்த மாட்டார் என்று நினைக்கிறேன்..

Comments

Unknown said…
புதிதாக பதிவு ஆரம்பித்து தமிழ்மணத்தில் இனைத்து இருப்பவர்களிக்கு முதல் பின்னூட்டம் இந்த போலி காசியிடம் இருந்து தான்..

நடு வீதியில் வைத்து சாட்டையால் அடிக்க வேண்டும் இந்த இழிவான ஜென்மத்தினை..

என்ன சொல்ல..

கெடுவான் கேடு நினைப்பான்...
Manasatchi said…
காசி பெயரில் என்றோ அந்தப் போலி ஆரம்பித்துவிட்டார். காசி, டோண்டு, மாயவரத்தான், ராஜா, ......... இப்படியே போலி பயன்படுத்திய/தும் பெயர்களை வரிசையாகச் சொல்லிக்கொண்டுபோனால் கிட்டத்தட்ட அனைவரின் பெயரும் வந்துவிடும். நாளை உங்களுக்கே ஒரு போலி வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கிலலை. இதெல்லாம் அவ்வளவு பெரிய விஷயமாய்த் தெரியவில்லை இப்போது. என் சமீபத்திய பதிவில் கூத்தைப் பாருங்கள். போலிக்கு பைத்தியம் முற்றிவிட்டது :-)).
தலைவா.... முதல்ல புரொபைல்லே இருந்து உங்க போட்டோவ தூக்குங்க.... போலி செந்தழல் ரவி உருவாகப் போகிறான்...

இந்தப் போலிங்க கூட மாரடிக்க முடியலைப்பா....
எல்லாம் தான் அடங்கி இருக்கே சில நாளா, எதுக்குங்க புது விளம்பரம் கொடுத்து புதுப் பதிவு போடுறீங்க!!??

என்னவோ போங்க.. !!!
Unknown said…
பொன்ஸ், இந்த புது போலி அனைவரது பதிவிலும் போய் பின்னூட்டம் இடுகிறார்..

இதன் லிங்க் கிளிக் செய்தால் தேவை இல்லாத சில விஷயங்களுக்கு இட்டு செல்கிறது...

தவறு என்று தெரிந்தும் எப்படி சுட்டி காட்டாமல் இருப்பது ??
Unknown said…
தவறை சுட்டி காட்டுறதெல்லாம் சரிங்க ரவி.. அந்த 'லிங்க்'கயும் எடுத்தி விட்டுருக்கலாமில்ல.. அதை வேற இன்னும் எதுக்கு விட்டு வச்சிருக்கீங்க.. அதத்தான் பொன்ஸ் //புது விளம்பரம் கொடுத்து // சொல்றாங்கன்னு நினைக்கிறேன்
//இந்த புது போலி அனைவரது பதிவிலும் போய் பின்னூட்டம் இடுகிறார்..//
ரவி, முதலில், இது மனசாட்சி சொல்வது போல் புதிய போலி அல்ல. கொஞ்சம் பழைய வலைபதிவாளர்கள் எல்லார் பேரிலும் போலிகள் ஏற்கனவே இருக்கிறார்கள். எப்போது தோன்றுகிறார்கள் என்பது தான் மாறுகிறது.

//தவறு என்று தெரிந்தும் எப்படி சுட்டி காட்டாமல் இருப்பது ?? //
சுட்டிக் காட்டுவதும் உரக்கச் சொல்வதும் விளம்பரமாகவும் பெருமைக்குரியதாகவும் நினைக்கப் படுகிறது.. எல்லாருக்கும் தெரியும்.. எல்லாரும் அழித்துக் கொண்டே அடுத்தவேலையைப் பார்த்துக் கொண்டு செல்கிறார்கள்.. உங்களுக்கு வேண்டுமெனில், ரமணியின் Comment Identity Checker-ஐ உபயோகியுங்கள்; பரிந்துரையுங்கள்.. விளம்பரங்கள் இங்கு பிரச்சினைக்குரியதாக இருக்கிறது!!!
Unknown said…
லிங்க் எடுக்க முடியலைங்க... ரமணியின் மென்பொருளை தரவிறக்கம் செய்கிரேன்..

நன்றி..
அய்யா,

நான் ஒரு பின்னூட்டம் இட்டு இருந்தேனே Reject செய்து விட்டீர்களா?

பரவாயில்லை.... முதலில் உங்கள் புகைப்படத்தைத் தூக்குங்கள்... போலி உங்கள் பெயரில் போலியாக ஒரு Blog தொடங்கப் போகிறான்....
ROSAVASANTH said…
If possible first remove this post. Do not give publicity for this issue.
Unknown said…
லக்கி...உங்க பின்னூட்டம் எதுவும் வரவில்லையே...

தேடிக்கிட்டு இருக்கேன்...

நான் ஒரு பாவமும் அறியலியே..என் பேரில போலி வராதுப்பா..த்சொ...த்சொ

லக்கி லூக் படத்தினை புடிச்சி போட்டாச்சா ?

ஏன் சிக்பில் பிடிக்காதா...

இன்று தான் 4 புத்தகத்துக்கு மணியார்ட்ர் அனுப்பினேன் பிரகாஷ் பப்ளிஷர்சுக்கு..

இந்த பதிவினை அழித்து விடலாம் தான்...நாளை முடிவு செய்கிரேன்..
////இன்று தான் 4 புத்தகத்துக்கு மணியார்ட்ர் அனுப்பினேன் பிரகாஷ் பப்ளிஷர்சுக்கு..////

100 ரூபாய்க்கு ஜாலி ஸ்பெஷல் வந்திருக்கிறதே? வாங்கிட்டீங்களா?

சென்னையில் இன்னமும் புக் கடைக்கு வரவில்லை.... அடுத்த வாரம் தான் வரும்.... ஆனாலும் சந்தாதாரர்களுக்கு வந்து விட்டது....
Unknown said…
சென்னை வரும்போது உன்கிட்ட வாங்ப்பேன்...சரியா...

Popular Posts