சிங்கபூரில் இருந்து ஒரு இந்தி ஆதரவு பதிவு - என் பதில்

ச்சே கருணாநிதி இந்தி படிக்காம விட்டதால நான் கேவலப்பட்டு போய்டேன் என்று நண்பர்கள் சிலர் புலம்புவது போல சாடமுயல்வது சிலபதிவுகளில் படிக்க நேர்ந்தது.

தமிழர்கள் அனைவரும் காஷ்மிர் முதல் கன்னியாக குமரி வரை நேசனல் பர்மிட் லாரி ஓட்டுவதற்காக தவம் செய்வது போலவும் இந்தி தெரியாததால் அத்தகைய வேலை வாய்ப்புகளை பெற்றோர் சிலர் அவமானப்படுபது போல சொல்ல விழைகிறார்கள். நம் தமிழ்னாட்டிருந்து பஞ்சம் பிழைக்க வட மானிலங்களுக்கு செல்வோர்கள் பலர் அடிப்படையில் இந்தி தெரியாதவர்கள். அவர்களுக்கு படிப்பு அறிவும் கூடக் குறைவே. அத்தகையோர் ஆறே மாதங்களில் நன்றாகவே இந்தியில் வெளுத்து வாங்குகிறார்கள்.

இந்த மெத்தப் படித்த மேதாவிகள் தாங்களுக்கு உள்வாங்கும் திறன் குறைவு என்று ஒப்புக் கொள்ளாமல், கருணாநிதியும், அண்ணாவும் குறுக்கே நின்றார்கள் என்று சொல்லுகிறார்கள். இன்று உலகமயம் பற்றி பேசுகிறோம், எல்லோரும் வேறு வேறு நாடுகளுக்கு சென்று பணியாற்றுகிறோம். வேலை நிமித்தமாக ஜெர்மன் சென்ற ஒருவர் அங்கு தடுமாறினால் தான் இந்தியனாக இருப்பதால்தான் இந்த தடுமாற்றம். அதுவும் இந்தியாவில் ஜெர்மன் சொல்லிக் கொடுக்கப்படவில்லை அதனால் தான் தனக்கு இந்த இழிநிலை என்றும் சொல்லுவாரா ?

யாரோ சிலர் ஏதோ காரணத்தால் வடநாட்டுக்கு வேலைக்கு செல்வதற்காக மொத்த தமிழகத்திலும் இந்தி நுழைய வைத்து தேவையற்றோரும் கட்டாயமாக படிக்க வேண்டுமாம். இந்தி படிக்கவேண்டாம் என்று யாரும் பிரம்பை வைத்துக் கொண்டு நிற்கவில்லை. கட்டாயமாக்கப் படக்கூடாது என்று மட்டுமே சொல்லுகிறார்கள்.

குறிப்பாக தமிழர்களுக்கு அடிப்படையில் எந்த ஒரு மொழியையும் எளிதில் கற்றுக்கொள்ளும் திறன் இருக்கிறது. தமிழ் நாட்டிலிருந்தும், கேரளாவிலிருந்தும் அரபு நாடுகளுக்கு வேலைக்கு செல்வோர்கள் வடநாட்டிற்கு செல்வதைக் காட்டிலும் பல மடங்கு அதிகம். அத்தகையோர் அரபி அறிந்து கொண்டா செல்கிறார்கள்? அல்லது கேரள அரசும், தமிழக அரசும் அரபியை பாடத்திட்டத்தில் வைக்கவில்லை என்று புலம்புகிறார்களா? அரபு தேசத்திலிருந்து திரும்பும் அனைவரும் நன்றாக அரபி பேசுகிறார்கள். பெரும்பாலும் படித்தவர்களாக இருப்பவர்கள் அவர்களுக்கு நடுவில் ஆங்கிலத்தில் உறையாடுகிறார்கள். அவர்களுக்கு அரபியும் தேவை யில்லாமல் போய்விடுகிறது.

இவர்களின் இந்தி பிரேம வாதப்படி தமிழர்கள் அனைவரும் இந்திபடிக்கவேண்டும் என்பது சரியென்றால், தமிழகத்தில் வாழும் சவுக்கார்பேட்டை சேட்டுகளுக்கு மட்டும்தான் அது பயனளிக்கும்குற்றம் குற்றமே...

இது போன்ற சப்பை கட்டுகளை கட்டுபவர்கள் உண்மையில் யார்...

வாழ்க்கையில் சுகமாக செட்டில் ஆனவர்கள்...

அல்லது

அப்பா சம்பாதித்த சொத்தினை கரைப்பவர்கள்..

அல்லது அப்பா வாங்கி கொடுத்த வேலையில் ஜம் என்று அமர்ந்தவர்கள்..

வேலை தேடி தெரு தெருவாக அலைந்தவர்கள் அல்லர்...

பிற மாநிலத்துக்கு வேலை தேடி செல்லும் பாமரனும் படித்தவனும் ஒன்றா ?

ஒரு தலைமுறையை ஹிந்தி படிக்க விடாமல் இருட்டடிப்பு செய்தவர்களின் அடிவருடியாக செயல்படலாம் தப்பில்லை...அதற்க்காக இது போன்ற சப்பைகட்டுகளை ஒத்துக்கொள்ள முடியாது....

ஹிந்தி படித்தால் வேலை என்று கூறவில்லை...அப்படி பார்த்தால் NIIT போன்ற நிறுவனங்கள் கணிணி பயிற்ச்சி கொடுப்பதினை விடுத்து ஹிந்தி டியூஷன் ஆரம்பித்து இருக்கும்...

கட்டாயப்படுத்தவில்லை என்கிறீர்களே..ஹிந்தியின் மீது தார் பூசியது ஏன் ? ஏன் ஆங்கில பலகைகளின் மீது பூசவில்லை ?

சிங்கையில் இருந்து எழுதுவதனால் தான் உங்களுக்கு நாங்கள் சந்திக்கும் REAL TIME பிரச்சினைகள் புரியவில்லை என்று கருதுகிறேன்..

Comments

//சிங்கையில் இருந்து எழுதுவதனால் தான் உங்களுக்கு நாங்கள் சந்திக்கும் றேஆள் TஈMஏ பிரச்சினைகள் புரியவில்லை என்று கருதுகிறேன்..//

ஹலோ, ஹலோ, நான் சிங்கையிலிருந்து எழுதினால் நான் சிங்கப்பூர் குடிமகன் என்று நீங்கள் நினைத்தால் நான் என்ன செய்ய முடியும். உங்களை மாதிரி பொழுப்பு தேடிதான் போயிருக்கிறேம்.

//கட்டாயப்படுத்தவில்லை என்கிறீர்களே..ஹிந்தியின் மீது தார் பூசியது ஏன் ? ஏன் ஆங்கில பலகைகளின் மீது பூசவில்லை ? //

ரூபாய் தாளில் இருப்பது போல அனைத்து மொழிகளிலும் எழுதினால், குறிப்பாக அண்டை மானில மொழிகளை எழுதினால் யார் அழிக்கப் போகிறார்கள்.

//வேலை தேடி தெரு தெருவாக அலைந்தவர்கள் அல்லர்...//

நானும் பெங்களூர், ஹைதாரபாத்தில் வேலைப் பார்த்திருக்கிறேன். கன்னடமும், தெலுங்கும் பேசக் கற்றுக் கொள்ள நாலு மாதம் தான் ஆகியது. டெல்லிக்கு சென்றிருந்தால் நான்கு மாதங்களில் இந்தி கற்றிருப்பேன். சப்பைகட்டுகளல்ல. ஒரு மொழியின் மீது ஆர்வம் இருந்தால் அடிப்படை கல்வியில்லமலே அதை கற்றுக் கொண்டு பேச முடியும்.

//பிற மாநிலத்துக்கு வேலை தேடி செல்லும் பாமரனும் படித்தவனும் ஒன்றா ?//

பாமரனால் முடிந்தது படித்தவனால் முடியவில்லை என்றால் முயலாமையே காரணம்

//ஒரு தலைமுறையை ஹிந்தி படிக்க விடாமல் இருட்டடிப்பு செய்தவர்களின் அடிவருடியாக செயல்படலாம் தப்பில்லை...அதற்க்காக இது போன்ற சப்பைகட்டுகளை ஒத்துக்கொள்ள முடியாது....//

இந்தி படிக்காததால் தமிழ் நாட்டில் இத்தனை லட்சம் பேர் வேலை இழந்துள்ளனர் என்று ஏதாவது புள்ளி விவரம் இருந்தால் காட்டுங்கள். அதே போல் இந்தி தெரிந்ததால் மட்டுமே இவர்கள் இங்கே குப்பை கொட்டுகிறார்கள் என்ற ஒரு கணக்கையும் காட்டுங்கள்
முதலில் தலைபில் ஆதரவு என்பதை மாற்றுங்கள்
ரவி said…
ஆக ஒரு விளம்பர பலகையில் ஏராளமான மொழிகள் இருக்கவேண்டும் அப்படித்தானே...

பீகாரில் பேசப்படும் போஜ்பூரி மொழிக்கி வரி வடிவம் கிடையாதே...அதற்க்கு என்ன பண்னலாம் சொல்லுங்க...

மொழியின் மீது ஆர்வம் மட்டுமல்ல..அதனை பேசவில்லை என்றால் ஆப்பு என்றால் மட்டுமே பேச முடியும்...

இந்தியை ஒழிக்க வேண்டும் என்று அவர்கள் நினைத்தது அவர்களின் நீர்த்துப்போன தனிநாடு கோரிக்கையின் விளைவாகத்தான்...
ஜோ/Joe said…
அய்யா அந்தோணிசாமி,
நல்ல வேளை..உங்களுக்கு தாய் மொழி (தாய்லாந்து மொழி ஐயா!) தமிழகத்தில் சொல்லித்தரவில்லை என்று புலம்பாமல் இருக்கிறீர்களே.. அதுக்கு கோடி நமஸ்காரம்!
Chriswab said…
Hi ich bin Chriswab aus Bottrop !! Viele Grüsse !!
MeenaArun said…
Hi,I am from Muscat.when I came to muscat in 2000 everybody told me to learn hindi inorder to manage everything but till now i don't know even a word in Hindi (although i have many hindi/marathi speaking friends).I am managing with tamil and english only.It is not necessray to learn hindi in order to live in other statres or other countries.please be truthful to your mother tongue,then you can worry about other languages(my mother tongue is tamil)

sorry i am not used to type in tamil.i will download e-kalapai and then i will type in tamil

Mrs.Meena Arun
ரவி said…
இல்லை ஜோ...அது வெறும் தாய் மொழிதான்...என் தாய் மொழி இல்லையே...

தாய்லாந்துல ஒரு அழகான கேள்பிரண்டு இருந்தா 'தாய்' மொழி சரளமா வந்துட்டு போகுது....

இப்பொழுது இருப்பது மலேசியா...

:)
ஜோ/Joe said…
//தாய்லாந்துல ஒரு அழகான கேள்பிரண்டு இருந்தா 'தாய்' மொழி சரளமா வந்துட்டு போகுது....//
அப்புறம் என்னங்க பிரச்சனை..வட இந்தியால கேள்பிரண்டு வச்சிருக்க கூடாதுண்ணு நாங்க தடுத்தோமா என்ன?

மலேசியா தானா? நானும் பக்கத்துல சிங்கப்பூருல தான் குப்பை கொட்டுறேன்.
ரவி said…
பிரச்சனைய சரியான கோணத்துல அனுகறது அப்படிங்கறது இதுதானோ ??

///அப்புறம் என்னங்க பிரச்சனை..வட இந்தியால கேள்பிரண்டு வச்சிருக்க கூடாதுண்ணு நாங்க தடுத்தோமா என்ன?///

வட இந்தியா கேள் பிரண்டுக்கு வட இந்தியா போகனும் இல்ல...அது தான் ப்ரச்சனை ஹி ஹி

நீங்க தடுத்தாலும் தடுக்காம போனாலும் ஒன்னும் மாட்டறாது இல்ல..அந்த வயித்தெரிச்சல் தான்...
ரவி said…
// till now i don't know even a word in Hindi //

இத ஒத்துக்க முடியாதுங்க...ஒரு வார்த்தை கூட தெரியாது அப்படிங்கறது சரி அல்ல...

மே கிர்கயி..
தருமி said…
"கருணாநிதி இந்தி படிக்காம விட்டதால நான் கேவலப்பட்டு போய்டேன் என்று நண்பர்கள் சிலர் புலம்புவது போல சாடமுயல்வது சிலபதிவுகளில் படிக்க நேர்ந்தது."

இவர்களை நினைக்கும்போது - "நெஞ்சு பொறுக்குதில்லையே... இந்த நிலைகெட்ட மாந்தரை நினைத்துவிட்டால்.."
D The Dreamer said…
I dont know if you are really serious in your allegations.

First you said this:
//ஒரு தலைமுறையை ஹிந்தி படிக்க விடாமல் இருட்டடிப்பு செய்தவர்களின் அடிவருடியாக செயல்படலாம் தப்பில்லை...அதற்க்காக இது போன்ற சப்பைகட்டுகளை ஒத்துக்கொள்ள முடியாது//

then in your comment you went on to tell

//வட இந்தியா கேள் பிரண்டுக்கு வட இந்தியா போகனும் இல்ல...அது தான் ப்ரச்சனை ஹி ஹி //

After reading it all, one might be led to think that you wanted to learn Hindi just to woo a North Indian girl.
MeenaArun said…
Yes,thats true.here all omani speak very good english ofcourse they knew hindi also.infact one of the pickup driver in my husband's office speaks very good madras tamil(he is a omani) and because of my daughter(3 yrs old) 2 of my friend started to speak in tamil(they are marathians).hereafter only i have to learn how to speak in hindi
ரவி said…
சும்மா டென்ஷன் ஆகாதீங்க தல...எப்பவுமே சீரியசா பேசிக்கிட்டே இருந்தா,

அதுவும் தமிழ்ம்ணத்தில வருகிற பதிவு எல்லாம் பார்த்து

கீழ்ப்பாக்கத்துக்கு டிக்கெட் போட வேண்டியதுதான்...

கொஞ்சம் விட்டு பிடிப்போம்...

நாம சொல்ல வந்த கருத்தினை சொல்லியாச்சி இல்லையா...

மற்றவர்கள் என்ன நினைப்பாங்கன்னு நினைத்தால் பதிவே எழுதமுடியாது அண்ணாத்தே...
சென்ற ஆண்டு இதே மாதிரி நடந்த ஒரு விவாதம் இங்கே
http://kuzhali.blogspot.com/2005/08/blog-post_13.html

இந்தி எதிர்ப்பு - ஒரு முக்கியமான அலசல் இங்கே
http://kuzhali.blogspot.com/2005/08/blog-post_16.html

சாதகம்

இந்தியாவில் நாம் இரண்டாம் நிலை குடிமகனாக ஆகாமல் இருப்பது

மெட்ராஸ் மாநிலம் தமிழ்நாடு என்றானது

வட மாநில, தேசிய கட்சிகளுக்கு மொத்தமாக சங்கு ஊதியது

திமுக ஆட்சிக்கு வந்தது

வணக்கம்,நன்றி,வேட்பாளர்,பேச்சாளர்,தலைவர் இன்ன பல சொற்கள் இன்னும் தமிழில் அழியாமல் இருப்பது.

இந்தி தெரியவில்லை என்றால் வெட்கப்படும் மற்ற மாநிலத்தவரைப் போலல்லாமல் தனித்துவமாக இருப்பது.

இன்னமும் சென்னையில் இந்தி வாடை அடிக்காமல் இருப்பது.

இந்தி படித்தால் வேலை கிடைக்கும் என ஜல்லியடிக்க உதவுவது

இரண்டு தலைமுறையாக இந்தி படிக்கவிடவில்லை என கருணாநிதியை திட்ட ஒரு வாய்ப்பு.

மதராசி என்று எரிச்சலோடு அழைப்பது

எல்லாவற்றிற்கும் மேலாக தமிழிற்கு சங்கு ஊதாமல் இருப்பது.

பாதகம்

அச்சா,நஹி,கியா,சலோ போன்ற அருஞ்சொற்களை தமிழ் மொழி இழந்தது

சல்மான்கான், அமீர்கான், சாருக்கானிற்கெல்லாம் ஊரெங்கும் இரசிகர் மன்றங்கள் ஆரம்பிக்கப்படாமல் இருப்பது

மீனாட்சி சேஷாத்திரி,கஜோல்கெல்லாம் கோவில் கட்டும் பாக்கியத்தை இழந்தது.

28 நாளில் இந்தி கற்றுக்கொள்வது, ஹி ஹி சாதாரணமாக குறைந்தது 30 நாள் ஆகும், இந்தி அனா,ஆவன்னா ஏற்கனவே பள்ளியில் படித்துவிட்டதால் எப்படியும் குறைந்தது 28 நாளாகும்.

தமிழ் திரைப்படங்களின் பெயர் இந்தியில் இல்லாமல் ஆகிவிட்டது. பாவம் தற்போது ஒன்லி இங்கிலீஷ்.

மதராசி என்று ஏளனத்தோடு அழைத்திருப்பார்கள்

இந்தி சரளமாக பேசமுடியாததற்கு கூனி,குறுகி வெட்கப்படுவது

கருணாநிதியை இந்தி எதிர்ப்பை வைத்து திட்ட முடியாமல் போவது, அதனால் என்ன மேன்ட்ரின் படிக்க விடாமல் செய்தது கருணாநிதிதான் என திட்டலாம்

இந்தி படித்தால் வேலை கிடைக்கும் என்று சொல்லமுடியது, அதனால் என்ன மேன்ட்ரின் படித்தால் வேலை கிடைக்கும் என கூறுவோமே.

இந்தி நடிகர்கள் தமிழ்நாட்டின் முதலமைச்சராகும் வாய்ப்பு இல்லாமல் போனது

திமுக ஆட்சிக்கு வந்தது, இதில் பாதிதான் உண்மை, காங்கிரசின் மீது அப்போதிருந்த எரிச்சலும் தான் முக்கிய காரணம்.

தமிங்கிலந்தி என்ற ஒரு மொழி உலகிற்கு கிடைத்திருக்கும்
D The Dreamer said…
I am speechless
நெத்தியடி அடித்திருக்கிறீர்கள். சவுக்கார்பேட்டைக் காரன் எவனாவது தமிழ் படிக்கிறானா? தமிழ் நாட்டிலேயே வாழ்ந்து கொண்டு, தமிழ் படிக்கத் தெரியாதவனிருக்க இந்திக்கு வக்காலத்து வாங்குவது அறியாமை.

இவண்,
இளஞ்செழியன்
சிங்கைக்குப் பிழைக்க வந்தவன்
ஐயா,
தமிழ்நாட்டில் இந்தியில் பெயர்ப்பலகை வைக்க வேண்டிய தேவையைச் சொல்லுங்களேன்.

உங்களைப் போல நாலுபேர் படிக்க வேண்டுமென்பதற்கா ஏன் ஒட்டுமொத்தப் பிள்ளைகளையும் கட்டாயப்படுத்தி இந்தி படிக்கவைக்க வேண்டுமென்பதுதான் கேள்வி.

இதற்கு ஏதாவது பதிலிருந்தால் சொல்லுங்கள் ஐயா. முடியாவிட்டால் வேறேதாவது சொல்லி கருணாநிதியையும் திராவிடக் கட்சிகளையும் தாக்கலாம். அதற்குததான் நிறைய விசயங்கள் இருக்கின்றனவே. நானும் கூட வருகிறேன்.
அனால் இப்படிப் பொய்யைச் சொல்லித்தான் அவர்களைத் திட்ட வேண்டுமென்பது அவரை எதிர்ப்பவர்களிடமுள்ள வங்குரோத்து நிலைதான்.
ரவி said…
நன்றி இளஞ்செழியன் மற்றும் கம்பன்..

Popular Posts