'கள்' உண்ணாமை வேண்டும் அப்படின்னு காந்தி சொன்னதா கேள்வி..ஆனா அவர் கிட்ட கள் பத்தி யாரோ கதை விட்டு இருக்கனும்...கள் ரொம்ம போதை..உடம்புக்கு கெட்டது...அப்படின்னு எல்லாம்...ஆனா உண்மை என்னன்னா...கள், பச்ச புள்ள மாதிரி..அட ஆமாங்க...உண்மைதான்...
என் கல்லூரி இருந்த இடம் ஒரு கிராமம்..அங்க மிஞ்சி போனா கிடைக்கறது இந்த கள்ளு தான்...காலையில கள் இறக்கற இடம் போனா, நல்லா கொத்தும் கொலையுமா இருக்க பானைய இறக்கி, அதுல மப்புல மெதந்துக்கிட்டு இருக்க பெரிய சைஸ் வண்டுகளை எல்லாம் தூக்கி போட்டுட்டு, ப்ளாஸ்டிக் மக்குல அல்லது பெரிய சைசு பானையில ( நமக்கே நமக்கு) கொடுப்பாங்க...
பத்து ரூபா ஒரு மக்கு ( ஜக்குன்னும் சொல்லலாம்)..
அங்கனயே கிடைக்குற சின்ன சைஸ் மிக்சர் பாக்கெட்டுகளையும், ஒரு அரை பாக்கட்டு கோல்டு பில்டர் சிகரட்டும் வாங்கிக்கிட்டு ஓரமா ஒதுங்கிட வேண்டியது தான்...அப்படியே ரவுண்டு கட்டி உக்காந்துக்கிட்டு உள்ளார இறக்க வேண்டியது தான்..கொஞ்சம் புளிப்பா...ஜில்லுனு உள்ளார இறங்கும்...
மேட்டர் என்னான்னா...இந்த கள்ளு எல்லாம் ஒரே பானையில கொட்டப்படும்...அதுல இருந்து சில பல மக்குகளை வாங்கி நம்ம ஒரு பானையில ஊத்திக்கிட்டு வர்ரோம் இல்லையா...
அதை விட காலையிலே கள்ளு இறக்குற இடத்துக்கு போயி, ஒரே பானைய (புல்லா) - ( 100 ரூபா ஆகும் ) வாங்கி அதுல இருக்கற பண்ணாடைய தூக்கி எறிஞ்சிட்டு (
(பண்ணாடை என்பது சல்லடை மாதிரி இருக்கும்...கள் இறக்குறவங்களுக்கு இயற்கை தந்த வடிகட்டி....) வண்டுகளையும் தூர எறிஞ்சிட்டு...
கப்பு கப்புன்னு ஏத்துறது....சும்மா அருமையா இருக்கும்...அது அந்த கள்ள சுவைச்சவங்களுக்கு தான் தெரியும்...
இதெல்லாம் இப்ப எதுக்கு அப்படீங்கறீங்க...புரியுது...
தி.மு.க. ஆட்சியில கள் இறக்க அனுமதி வழங்க போறாங்களாம்...அதுவும் கள்ளை இண்டர்நேஷனல் லெவல்ல ( ஐரோப்பாவுக்கு) ஏற்றுமதி வேற செய்ய போறாங்களாம்...
ஊருக்கு போனா காலையில கெளம்பிற வேண்டியது தான்...பாத்ரூமுக்கு இல்லங்க...ஒருமரத்து கள்ளு அடிக்க...ஹி ஹி...
கள் உண்ண வேண்டும்...ஒருமரத்து கள் உண்ண வேண்டும்...:)
Subscribe to:
Post Comments (Atom)
டயபட்டீஸ் ப்ரோட்டக்கால்
டயபட்டீஸ் ப்ரோட்டக்கால் டயபட்டீஸ் / நீரிழிவு / சர்க்கரை நோயை விரட்ட நியான்டர் செல்வனால் ஆரம்பிக்கப்பட்ட இந்த குழுமத்திற்கு ( https://www....
-
ஆனந்த விகடனில் தி.மு.க / அ.தி.மு.க ரெண்டு கட்சிக்காரங்களும் அயோக்கியர்கள் என்பது போல பேசிய விஜியகோந்துவை பகரைனில் இருந்து சுரேஷ் என்ற வாசகர்...
-
நித்யானந்தா விவகாரம் ஆரம்பித்தவுடன் எல்லோரும் எங்கே எங்கே என்று இணையத்தில் தேடியது அந்த வீடியோவைத்தான்...!! ட்விட்டரில், பேஸ்புக்கில்...
-
வலையுலகில் காமெடியில கலக்கிய / கலக்கிக்கிட்டு இருக்கிற மக்கள்ல எனக்கு தெரிஞ்ச பட்டாசுகள் லக்கிலுக், இளவஞ்சி , கைப்புள்ள , வெட்டிப்பயல் , கொங...
21 comments:
ஒரு சந்தேகம்.
காலையில் இறக்கி புளிக்கும் முன் குடிப்பது பதநி. இதில் போதை வராது. உடம்புக்கு நல்லதும் கூட.
அதில் சுண்ணாம்பு கலந்து புளித்து (fermenting) அதன் பின் குடித்தால் போதை வரும். இது கள். இதைத்தான் குடிக்க வேண்டாம் என்கிறார்கள்.
இதுதான் நானறிந்தது. என் புரிதல் சரியா?
ஹய்யோ கொத்ஸ்...பதனி என்பது கள்ளோட நீர்த்து போன வடிவம்..
கள் + தண்ணீர் + சர்க்கரை சேர்ந்தது பதனி...
ஊர்ல இப்ப அது எல்லாம் பாக்கெட்ல வருது...ஆனா ஏதோ சக்கரை தண்ணி குடிக்கிற மாதிரி இருக்கும்...
ரெண்டுமே தப்பு..
இன்னைக்கு நேரமாச்சு.. நாளைக்கு வந்து விரிவா விளக்கறேன்.. அதுகுள்ள வேற யாரும் சொன்னாலும் சரி :)
பனை மரத்தில் குருத்தை வெட்டி சுண்ணாம்பு தடவாமல் பானை கட்டினால் கிடைப்பது கள்.
குருத்தில் சுண்ணாம்பு தடவினால் பதநீர்.
என்னங்க ராசா சரியா???????????
சுண்ணாம்பு போட்டது பதநீ(ர்)...
சுண்ணாம்பு போடாமப் புளிக்க வச்சாக்
கள்.. முன்னது உடம்புக்கு நல்லது...பின்னது மனசுக்கு நல்லது :))
என்ன ராசா சரியா?? தப்பா இருந்தா சொல்லுங்க...
அன்புடன்,
அருள்.
யாழ்ப்பாணத்தில் கள் தனித்துவமான ஒரு மதுபானம். ஏனெனில் அங்கு பனைகள் அதிகம், தென்னங்கள்ளும் பிரபலமானதே.
கள் உண்டால் சலரோகம் (சிறுநீரகம் சம்பந்தப்பட்ட வியாதி) அடங்கும் என்பது ஒரு நம்பிக்கை.
எங்களூரில் செய்யப்படும் அப்பம் என்ற உணவு (கேரளாவிலும் கிடைக்கும்) செய்வதற்கு சிறிது கள் சேர்த்தால் சுவை கூடும் என்பது நம்பிக்கை.
நன்றி இந்தியன் அவர்களே...
ஏற்க்கனவே அருட்பெருங்கோ சரியா சொல்லிட்டாரு.. இனி நான் சொல்ல என்ன இருக்கு..
நாகை சிவா'வு சரிதான் :)
தென்னையோ இல்லை பனையோ, பாளையில கட்டுற பானையில சுண்ணாம்பு தடவி கட்டி எடுத்தா அது பதனி.. சுண்னாம்பு இல்லாம எடுத்தா அது கள்ளு..
பனங்கள்ளை விட தென்னங்கள்ளு ருசி அதிகம் (என்னை பொருத்த வரை)
ஆனா கடையில கிடைக்கிறது (கேரளாவுல மட்டும் தான் இப்போதைக்கு) கள்ளே கிடையாதுன்னு தான் நான் சொல்லுவேன்..
1:4 ங்கிற அளவுல தண்ணிய ஊத்திடுவாங்க.. அதுகூட இன்னுமொரு வில்லங்கமான சமாச்சாரம் இருக்கு.. இந்த தலவலி, திருகுவலிக்கு போடுற மாத்திரைய வேற கலக்கிவிட்டுருவாங்க.. 'கிக்' கேப்பமில்ல நம்ம :)
காலையில தோட்டத்துல இருந்து கள் எடுத்துட்டு போனா அது அடுத்த நாள் காலையில தான் கடைக்கே வரும்..
சும்மா இறக்கிவச்சாலே பால் மாதிரி பொங்கிவர்ற கள்ளு, கடையில வாங்கி பார்தீங்கன்னா வெறும் நீர்மோர் மாதிரி தான் இருக்கும்..
ஒரு மரத்துக்கள்ளு எப்பவுமே விஷேசம் தான்.. தனி ருசியிருக்கும்.. காய்க்கு காய் இளநி'யில வித்தியாசம் இருக்கிற மாதிரி.. அவ்ளோ தான்.. மத்தபடி ஒருமரத்து கள் நல்லதுங்கிறதெல்லாம் தமாசு தான்.. என்ன பூச்சுமருந்து ஊத்தாத மரமா பார்த்து செலக்ட் பண்ணி நம்ம மட்டும் அடிக்கலாம் :)
எதோ ஒன்னு. கள் இறக்க அனுமதி தந்தா ஒரளவுக்காவது (என்னை மாதிரி) விவசாயிக நிலமை மாறும்..
(தனிமெயில் போட்டு பதில் சொல்ல வர சொன்ன ரவி'க்கு நன்றி)
கலக்கிட்டீங்க ராசா...இதுவே ஒரு தனிப்பதிவு மாதிரி இருக்கு...
கள் எறக்கும்போது சொல்லிவுடுங்க..:)
தலைவா, நம்ம சென்னைக்கு பக்கத்துலே பள்ளிக்கரணையில் இப்பவும் கள் கிடைக்குது... சூப்பர் சரக்கு.... தொட்டுக்க எறா ஊறுகாய்....
ஒரு மண் சட்டியின் உட்புறம் சுண்ணாம்பு தடவி, குருத்தை சிறிதளவு வெட்டி மண் சட்டியைத் தொங்க விடுவார்கள். மறுநாள் காலையில் அதில் சேர்ந்திருக்கும் நீர் பதநீர். உடலுக்கு மிகவும் நல்லது.
பதநீரை ஒரு சட்டியில் வைத்துக் காய்ச்சினால் பனை வெல்லம். அப்போது ஏதோ ஒரு பொருளைச் சேர்ப்பார்கள்(என்ன பொருள் என்று தெரியவில்லை). பின் அது பனங் கற்கண்டு ஆகும்.
சுண்ணாம்பு தடவாமல் இருந்தால் கள்.
இது சிறிது போதை தரும். ஒரு மாதிரி கசப்பாகவும், துவர்ப்பாகவும் இருக்கும். உடலுக்கு நல்லது.
இந்தக் கள்ளை இரண்டு நாட்கள் வைத்திருந்தால் கிடைப்பது கடுங்கள்.
கடுங்கள் மிகவும் போதை தரவல்லது. உடலுக்கு நல்லதல்ல.
ஒரு மரத்தின் குருத்தை பதநீர்/கள்ளுக்கு வெட்டி விட்டால் அந்த மரத்தில் நுங்கு காய்க்காது. அதாவது பனை மரத்தின் பூதான் அந்தக் குருத்து. அப்புறம் எப்படி நுங்கு கிடைக்கும்.
எங்க ஊரைச் சுற்றிலும் பனை மரங்கள் தான். தனியாகப் பனங்காட்டிற்குள் போவது கொஞ்சம் பயமாகத்தான் இருக்கும். தகவல் போதுமா?
யப்பா....கலக்குறீங்களே அய்யனே...
அடுத்தது சாராயம் காய்ச்சுவது எப்படின்னு ஒரு பதிவு வருமோ....
//அதுவும் கள்ளை இண்டர்நேஷனல் லெவல்ல ( ஐரோப்பாவுக்கு) ஏற்றுமதி வேற செய்ய போறாங்களாம்...
//
பேக்கேஜ் பன்னி பெரிய பில்டப் குடுத்து ஏற்றுமதி செஞ்சா நல்ல ஸ்கோப் இருக்கா?
சொல்லுங்க, நாம் அடுத்த விஜய் மால்யா ஆகிடலாம்.
//சொல்லுங்க, நாம் அடுத்த விஜய் மால்யா ஆகிடலாம். //
அதுக்கு எல்லாம் வேற பிசினஸ் மேன்ஸ் இருப்பாங்க...லக்கி கோச்சுக்க போறார்..:)
ஏதோ விவசாயிகள் பலன் அடைந்தா சரி...
//சொல்லுங்க, நாம் அடுத்த விஜய் மால்யா ஆகிடலாம். //
சொர்ண மால்யா ஏதாவது கோச்சுக்க போறாங்க... அவரு மல்லைய்யா...ஹும்ம்...சொகவாசிங்க அவரு..
தாய்லாந்து கள்ளுக்கு போட்டியா நம்ம தாய்நாட்டு கள்ளு...
சூப்பரப்பு...
சுண்டக் கஞ்சி அடிச்ச அனுபவம் உண்டா ரவி? அதுவும் பூண்டு ஊறுகாயைத் தொட்டுக்கொண்டு!
வாய்ப்பு கிடைக்கவில்லை...அதோட சுவை பத்தி விளக்கினா நல்லா இருக்கும்...
கள் பத்தி எற்கனவே எல்லாரும் புளி, உப்பு போட்டு விளக்கிட்டாங்க.. நான் பார்த்தது மகேஸ் சொன்ன மாதிரி.. என்னுடைய தனிபட்ட ஓட்டு தெனைமரத்துகள்ளுக்கே
//சுண்டக் கஞ்சி
இது வெள்ளை கலர்ல இருக்கும்.. அரிசிய வாங்கி நல்ல குழைய வடிச்சி அந்த பானைய உப்பு தண்ணி இருக்குற மண்ணுல 1 வாரம் புதைச்சி வச்சி அப்புறம் எடுத்து எதோ மூல பொருள்களை போட்டு காய்ச்சி அது சுட சுட இருக்கும் போது குடிப்பாங்கன்னு கேள்வி.. அது மிகவும் போதை தரும் என்பது கூடுதல் தகவல்..
செய்முறை அறிந்த வல்லுணர்கள் விளக்கினால் நலம்.. :-)
கள் எத்தனை நாள் வீட்டில் வைத்து குடிக்கலாம்...
Post a Comment