தேடுங்க !

Monday, May 15, 2006

விஜயகாந்த் பற்றி ஒரு செய்தி...


விஜயகாந்த் பற்றி ஒரு செய்தி...பத்து ஆண்டுகளுக்கு முன் தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ரத்த தானம் செய்வதற்க்காக சென்று இருந்தேன்..

அப்போது அங்கு கிட்டத்தட்ட 200 படுக்கைகளில் விஜயகாந்த் கொடுத்ததாகவும், நன்றி என்றும் எழுதி இருந்தது...

சத்தம் இல்லாமல் செய்து இருந்ததை பார்த்து வியந்தேன்..

அதுவரை பலவாறாக விஜயகாந்த்தினை கிண்டல் செய்துகொண்டு இருந்த நான் அந்த வேலையை அத்தோடு நிறுத்திக்கொண்டேன்..

அதுக்கும் இந்த படத்துக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கிறீர்களா ? இந்த வார குமுதம் பாருங்க.. விளங்கும்...

7 comments:

ENNAR said...

விஜயகாந்த் அதிக ஏழை மாணவர்களுக்கு பணம் கொடுத்து உதவியாதாக நான் நீண்ட நாட்களுக்கு முன் கேள்விப் பட்டிருக்கேன் நல்லவர்

saravanan said...

நீங்கள் சொல்வது மிகவும் சரி விஜயகாந் உதவி செய்து உள்ளதை பார்க்கவேண்டும் என்றால் தஞ்சை மருத்துவ கல்லூரிக்கு சென்று பார்க்களாம்,நான் பிறகு விசாரித்தவரையில் தஞ்சைக்கு மட்டும் இன்றி வேறு பல மருத்துவ கல்லூரிக்களுக்கும் உதவி உள்ளதாக கேள்வி பட்டேன்.

ஒரு தீ பெட்டியை ஒருவருக்கு கொடுத்தால் கூட அதை போட்டோ
எடுத்து மறு நாள் பேப்பரில் விளம்பரம் கொடுக்கும் காலத்தில் யாருக்கும் தெரியாமல் இப்படி உதவி செய்வது பெரிய விசயமாக நினைக்கிறேன்.

அன்புடன்
சரவணன்.இரா

செந்தழல் ரவி said...

வருகைக்கு நன்றி சரவணன் மற்றும் என்னார்...விஜயகாந்த் தவிர்க்க முடியாத அரசியல் சக்தியாக உருவாவதை யாராலும் தடுக்க முடியாது போலவும் தெரிகிறது...

Samudra said...

நானும் கூட கேள்விபட்டதுண்டு.நல்ல மனுஷன் தான்.

நல்ல தைரியமும் கூட.
எத்தனை ரவுடிகளை சமாளித்து தேர்தலில் வென்றார்!

செந்தழல் ரவி said...

வருகைக்கு நன்றி சமுத்திரா அவர்களே...

SK said...

நல்ல செய்திகள் நாலு பேர் நடுவில் செல்வது மகிழ்ச்சியாக உள்ளது!
நன்றி!

Muthu said...

//எத்தனை ரவுடிகளை சமாளித்து தேர்தலில் வென்றார்!//

சமுத்ரா,
ரவுடிகளா?. அவரே ஒரு தனிராணுவம். எந்த ரவுடியும் ஒன்றும் செய்துவிட இயலாது. விஜய்காந்த் படங்கள் பார்த்ததில்லையா? :-))