தனித்திரு விழித்திரு பசித்திரு

வலைப்பதிவர் பெயர்: செந்தழல் ரவி

வலைப்பூ பெயர் : தனித்திரு விழித்திரு பசித்திரு

வலைமனை முகவரி : http://tvpravi.blogspot.com

ஊர்: திருக்கோவிலூர்

நாடு: தமிழ்நாடு, இந்தியா

வலைப்பூ அறிமுகம் செய்தவர்: கூகுளாண்டவர்

முதல் பதிவு ஆரம்பித்த நாள்,வருடம் : ஏப்ரல் 17 2006

இது எத்தனையாவது பதிவு: 25

இப்பதிவின் வலைமனை முகவரி: http://tvpravi.blogspot.com/2006/05/blog-post_24.html

வலைப்பூ ஏன் ஆரம்பித்தீர்கள்: எல்லாருக்கும் இருக்கே, நமக்கே நமக்கு என்று ஒரு இடம்..சொந்த வீடு மாதிரி என்று என் முதல் பதிவில் கூறி உள்ளேன்

சந்தித்த அனுபவங்கள்: அரசியல், உள்குத்து, மற்றும் சாதி வெறி

பெற்ற நண்பர்கள்: பலப்பலர்

கற்றவை: அன்பும் அமைதியும் வேண்டும்..சாதியும் மதவெறியும் இல்லாத இனிய உலகம் வேண்டும்

எழுத்தில் கிடைத்த சுதந்திரம்: என்ன வேண்டுமானாலும் எழுதலாம்...இது நம் பதிவு என்ற உணர்வு..ஆனால் கொஞ்சமே கொஞ்சம் சமூக அக்கறை இருந்தால் சிறப்பு....பின்நவீனத்துவம், முன்நவீனத்துவம் என்ற போர்வையில் எது வேண்டுமானாலும் எழுதலாம் என்று நினைப்பவர்கள் நாளை அவர்களின் மகளோ மகனோ இதனை படிப்பார்கள் என்ற எண்ணம் சிறிதேனும் கொள்ள வேண்டும்..

இனி செய்ய நினைப்பவை: புதியதாக எழுத வருபவர்களை ஊக்கப்படுத்த வேண்டும்..சாதி மதம் தொடர்பான பதிவுகளிள் பின்னூட்டம் இட கூடாது...

உங்களைப் பற்றிய முழுமையான குறிப்பு: வயது 27. பணிபுரியும் இடம் எல்.ஜி. சுற்றிவந்த நாடுகள் 16. இப்போது இருப்பது பெங்களூர்..

Comments

Anonymous said…
உன் இமைல் முகவரி கொடு
Unknown said…
எத்தனை மைலுங்க போகனும் அதுக்கு ?

அதுதான் பொரபைல்ல இருக்கே..

Popular Posts