தேடுங்க !

Tuesday, May 30, 2006

கொரியா நினைவுகள்..


நான் குப்பை கொட்டுவது எல்.ஜி என்று பலருக்கு தெரிந்திருக்கும்..அதனால் கொரியா பற்றி எழுதவேண்டும் என்ற ஆசை...

கொரியர்களை பற்றி சில தகவல்களை சொல்லவேண்டும்...

மேற்க்காணும் படத்தில் இருப்பவர் தோழி ஜங் லீ. பக்கத்தில் இளிப்பது நான்தான் என்று சொல்லவும் வேண்டுமா...

30 சதவீதம் புத்த மதத்தினை சார்ந்துள்ளார்கள்..40 சதவீதம் கிறித்தவம்..மீதி உள்ள 30 சதவீதம் எந்த மதத்தினையும் சாராதவர்கள். நாத்திகர்கள் என்று சொல்லலாம்...

தோழி கூறுகிறார்..அவரது தாயார் அவ்வப்போது சர்ச்சுக்கு செல்வாராம்..இவர் போவதில்லை...(அதாவது கடைசி முப்பதில் இருக்கிறார்..)தலைநகர் சியோல் ( சோல் - soul என்று ப்ரனவுன்ஸ் செய்கிறார்கள்) மேற்க்கத்திய நாகரீகத்தில் மிதக்கிறது..

கிட்டத்தட்ட அனைவரும் புகைப்பழக்கம் மற்றும் மதுப்பழக்கம் உள்ளவராக உள்ளனர்.
மேற்க்கானும் புகைப்படத்தில் உள்ள பாட்டில் சோஜு ( soju) கொரியாவில் உள்ள சுண்டக்கஞ்சி மது. 20 சதவீதம் ஆல்க்கஹால் உள்ளது...சூப்பரா கீதுபா..( தேவைப்படுபவர்கள் தனிமடலில் கேட்கலாம்...என்கிட்ட கொஞ்சம் இருக்கு ஹி ஹி)

போக்குவரத்துக்கு பைக் / கார் இரண்டும் பயன்படுத்துகிறார்கள்...

அபார்ட்மென்ட் வாழ்க்கைமுறை...சிறிய நாடு அல்லவா...

பெண்கள் காதல் மணம் புரிகிறார்கள்...திருமணம் 28 - 30 வயதில் செய்துகொள்கிறார்கள்...திருமணத்துக்கு முன் பலமுறை யோசிப்பார்களாம் பெண்கள்..

உணவுப்பழக்கத்தினை பொறுத்தமட்டில் அரிசி உணவு உண்டு..இறைச்சி கண்டிப்பாக உண்டு..சிறிய டேபிள்..அதனை சூழ்ந்து அமர்ந்து உண்கிறார்கள்..
மேற்க்கானும் படத்தில் உள்ளது கிம்சீ..( Kim Chi ) என்னும் உணவு..

நான் பார்த்தவரை ஆங்கிலத்தில் சற்று வீக்காக இருந்தாலும், கடுமையான உழைப்பளிகள்...பழகிவிட்டால் போதும்..மிக நட்பாக இருப்பர்..அவர்களிடம் இருந்து கற்றுக்கொள்ளவேண்டியது இவை மட்டும்தான் என்று என்று எண்ணுகிறேன்...நம்சமீதா..( நமஸ்காரம்..)

11 comments:

Samudra said...

//திருமணத்துக்கு முன் பலமுறை யோசிப்பார்களாம் பெண்கள்..//

அப்படின்னா என்ன மாதிரி பசங்களுக்கு கலியானமே ஆகாதே!

செந்தழல் ரவி said...

கஷ்டம் தான் சமுத்திரா...வேலை / படிப்பு / சொந்த வீடு இருக்கா / படை / சொறி சிறங்கு இருக்கா எல்லாம் பார்ப்பார்கள்..

கைப்புள்ள said...

நம்சமீதா இண்டோ! முக்கியமான கிம்ச்சீயை லூஸுல வுட்டுட்டியேயா?

செந்தழல் ரவி said...

கிம்சீ...ய கண்டா சீ சீ னு ஓடுறவன் நானு..கட்டதுரைய பாத்து உங்க சங்கத்து ஆளுங்க எஸ்கேப் ஆகுற மாதிரி...

செந்தழல் ரவி said...

கிம்ச்சீய பதிவுல இணைத்துவிட்டேன் கைப்பு..

manasu said...

ஜங் லீ கூட இருக்க படத்த போடுவதற்காக ஒரு பதிவா?

ஜங் லீ க்கு கல்யாணம் ஆச்சா??????

Vajra said...

ரவி,

கொரியர்களைப் பற்றி தமிழ் பார்வைக்கு நன்றி.

நீங்கள் நா. கண்ணன் அவர்களின் பதிவுகளைப் பார்த்ததில்லையா...

அவர் கொரியாவாசி.

வஜ்ரா ஷங்கர்.

வடுவூர் குமார் said...

ssang yong என்ற Companyயில் வேலை செய்தேன்.மகா மோசமான அனுபவம்.Aircon Office உள்ளேயே புகை பிடிப்பார்கள்.நயமாகவும் சற்று கடினமாகவும் சொல்லிப்பார்த்தேன்.வேலை போனது தான் மிச்சம்.இத்தனைக்கும் இங்கு அவ்வாறு புகைபிடிப்பது சட்டப்படி குற்றம்

கானா பிரபா said...

சும்மா, நச்சுன்னு கொடுத்திருக்கீங்க ரவி :-)

செந்தழல் ரவி said...

புகையால் வேலையை விட்டீரா...கொடுமை...

ரோமில் இருக்கும்போது ரோமானியனாக இரு என்பதை மறந்தீரா...

நாம் திரைகடல் தேடி ஓடுவது திரவியம் தேடத்தானே...

சந்தர்ப்பமும் சூழ்நிலையும் நம் விருப்பத்துக்கு மாறாக இருக்கும்போது நாம் நம்மை மாற்றிக்கொள்ள வேண்டும்...

நாணல் வளைவதை போல...

அதற்க்காத தன்மானத்தையும் சுய கவுரவத்தையும் விடவேண்டிய அவசியம் இல்லை...

ம்ம்ம்...:(

செந்தழல் ரவி said...

வருகைக்கு நன்றி பிரபா..