Wednesday, May 31, 2006

குருவி சுடுவது எப்படி ? வேட்டைதான்...



அட படத்தில இருப்பது நான்தான்...சும்மா பில்டப்புக்காக எடுத்தத்து...இதன் பெயர் நாட்டு துப்பாக்கி ( Mussle loading Gun). நம்ம ஊர்ல ஜெர்மன் நாடோடிகள் (அட நரிக்குறவர்கள் தான் - எங்க அய்யாவோட கண்டுபிடிப்பு இது) வைத்திருக்கும் ரகம்....

லோடு செய்யவேண்டும் என்றால், முதலில் கொஞ்சம் கருப்பு மருந்து ( கந்தகம் + அடுப்பு கரி வைத்து, தண்ணீர் சேர்த்து மைய அரைக்கப்பட்டது - பிறகு காயவைக்க வேண்டும்), போடவேண்டும்...பிறகு சிறிய தேங்காய்பஞ்சு வைத்து கிடிக்க வேண்டும்..அதனை கிடிக்க சிறிய கம்பி ( ஸ்லாக் கம்பி என்று அழைக்கப்படும்) துப்பாக்கியிலேயே அட்டச்மென்ட் ஆக இருக்கும்..

பிறகு, ரவை சிறிதளவு போட்டு சிறிய தேங்காய்பஞ்சு வைத்து கிடிக்க வேண்டும்...உப்புமா செய்ய பயன்படுத்தும் ரவை இல்லைங்க்க..பால்ரஸ்...சிறிய குண்டுகள்..சில ஆண்டுகளுக்கு முன்பு ஈயம் பயன்படுத்தப்பட்டது...ஈயத்தினை காய்ச்சி தண்ணீரில் ஊற்றினால் சிறிய ஈய குண்டுகள் கிடைக்கும்..இப்போது, சைக்கிள் மொத்த விற்ப்பனை கடைகளில் 100 கிராம் 200 கிராம் என்று வாங்கலாம்...அதாவது DEFECTIVE பால்ரஸ்..

இப்போது துப்பாக்கியை தரையில் நன்றாக தட்டி, மருந்து குதிரை பகுதியில் உள்ள பாயிண்டுக்கு வருகிறதா என்று பார்க்க வேண்டும்...அதாவது குதிரை ( Trigger) யை இழுத்தவுடன் வேகமாக சென்று அடிக்கும்...அந்த இடத்தில் கந்தகத்தினை வெடிக்கச்செய்ய தீக்குச்சி மருந்தினை சிகரெட் பேப்பரில் வைத்து பொருத்துவோம்..ஏன் என்றால் சிகரெட் உடன்வரும் மஞ்சள் நிற தாள் எளிதாக மடிக்கவும், மடிப்பு கலையாமல் இருக்கவும் எளிதில் எரிந்து கந்தகத்தினை வெடிக்க செய்யவும் பயன்படும்...

துப்பாக்கி வெடித்ததும் புஜத்தில் ( Shoulder) கும் என்று ஒரு இடி இடித்துவிட்டு நீள சிறிய குழாய் (Barell) மூலம் சிறிய குண்டுகள் பாய்ந்தோடும்...தூரம் செல்ல செல்ல பெரிய அளவில் பரவி, கடுமையாக தாக்கும்...

ஒரு சிறிய பால்ரஸ் பட்டால்கூட பறவை காலிதான்...

சட்ட சிக்கலுக்காக, முயல், மற்றும் குருவிகளை மட்டுமே சுட்டேன் என்று கூறிக்கொள்கிறேன்...மான் சுட்டதே கிடையாது..மான்கறி அருமையாக இருக்கும் என்றும் சொல்லமாட்டேன்...

நீர்பறவைகளை சுடும்போது, ( நீர்கோழி / வக்கா ) அடுத்த வினாடியே தண்ணீரில் பாயவேண்டும்..இல்லை என்றால் எங்காவது தண்ணீருக்கடியில் சென்று செட்டிலாகிவிடும்...பெரும்பாலும் ஏரிகள், வயல்வெளிகள், சிறுகாடுகள் இங்குதான் நமது வேட்டை...

விடுபட்ட விஷயங்களை பிறகு எழுதுவேன்...

அன்புடன்,
செந்தழல் ரவி..

21 comments:

Anonymous said...

Good..

Radha N said...

பாவி மனிதா ஜீவகாருண்யமே கிடையாதா உமக்கு?

ரவி said...

நான் நான்வெஜ்சுங்க..ஜீவம்...காருண்யமா...அப்படீன்னா...

பாஸ் பாஸ் இவங்க இப்படித்தான் அடிச்சிக்கிட்டு இருப்பாங்க..இதெல்லாம் பாத்தா தொழில்பன்ன முடியுமா.. ( வின்னர் காமெடியில்)

:)

Radha N said...

பசித்திரு..தனித்திரு...விழித்திரு என்று பிளாக்கிற்கு தலைப்பிட்டு, உள்ளே வேட்டையாடுதல் குறித்தப் பதிவு. மேற்சொன்ன மூன்றையும் சொன்னவர், இராமலிஙக அடிகளார், அவர் தாவரங்கள் வா டினாலே, மனம் வருந்துவார் (வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என்று பாடியிருக்கிறார்). தயவுசெய்து இந்த பதிவினை வேறொரு பிளாக்கில் போடுங்கள்.

Anonymous said...

அடுதமுறை வேட்டைக்கு போகும்போது என்னையும் அழையுங்க

என்றும் அன்புடன்
சுமா

ஏஜண்ட் NJ said...

கொன்னா பாவம்
தின்னா போச்சு


என்று அதே ஜெர்மன் நாடோடிகள் சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன்!

;-)

Anonymous said...

dont worry kill and eat. i am a muslim.

ரவி said...

இப்ப எல்லாரும் சாப்பிடுறாங்க...ஸ்கூல் பசங்க கொஞ்சம் பயப்படுவாங்க...

நாகு...கோச்சுக்காதீங்க...

லக்கிலுக் said...

குருவிக்காரரே....

கலக்குங்க.... கொக்கு சுடுவிங்களா?

ரவி said...

கொக்கு தான் நம்ம பிரைமரி டார்கெட்டே...ஒரே சமயத்தில் பத்து கொக்குக்குமேல் சுட்டு வீழ்த்திய சாதனைக்கு சொந்தக்காரனாக்கும் நானு..

(வானத்தில் பறக்கும்போது மொத்தமா தட்டினது...)

Anonymous said...

கொக்குக்கறி சூப்பரா இருக்குமுங்க. நாங்க துப்பாக்கிக்குப் பதிலா, தண்ணீர் தேங்குன இடத்துல ராத்திரியோட ராத்திரியா வலை போட்டு வச்சிடுவோம். அப்புறம் காவலுக்கு மறைவான இடத்துல ஒரு ஆள். காலையில பத்துக் கொக்காவது மாட்டும். மசாலா எல்லாம் தயாராக இருக்கும். கொக்க உறிச்சு அதே தண்ணீரில் கழுவி சுத்தியில கிடககிற முள்ளையில்லாம் போட்டு தீ மூட்டிச் சுட்டுத் திங்க வேண்டியது தான். ஒரு கொக்குல குடல் எல்லாம் எடுத்துப் போட்டாச்சுனா 300 கிராம் கறி தேறும். பழச ஞாபகப்படுத்தீடங்களே!!!

ரவி said...

ஒரே கவுச்சி வாடை அடிக்க வச்சிட்டீங்க அனானி..

Gnaniyar @ நிலவு நண்பன் said...

சரி எறும்பு சுடுறது எப்படின்னு சொல்லுங்களேன்.. :)

Radha N said...

ரவி, நானும் சாப்பிட்டுக்கொண்டுதான் இருந்தேன். இரண்டாண்டுகளுக்கு முன்னர், பிற்பாடுதான், புலால் உணவு உண்ணுவதை விட்டுவிட்டேன். உடம்பு கொஞ்சம் குண்டாவதற்காக முட்டையும், கறியும் மீனும் சாப்பிட்டு பிரயோஜனமில்லை. தற்போது வெறும் காய்கறி கீரை அய்ட்டங்கள் மட்டும்தான்.

ஒரு அனானி சொல்லியிருந்தார், கவலைப்படாதீர், கொ ன்று தின்னுங்கள், நான் ஒரு முஸ்லீம் என்று. இதில் எதற்கு மதத்தினை சம்பந்படுத்துகிறார். எனக்கு தெரிந்த எத்தனையோ முஸ்லீம் நண்பர்கள் புலால் உண்ணாமல் இருக்கிறார்கள். எல்லா மதத்திலுமே அடுத்த உயிர்களை வதைத்தல் பாவம் என்று தானே சொல்லியிருக்கிறது!

நானும் எத்தனையோ பாவகாரியங்கள் செய்தி ருக்கிறேன், அறியாத வயதில்...பள்ளிவிட்ட உடன், சா யங்காலவேளையில் மழைக்கு முன்னர் தாழ்வாக பறக்கும் தும்பிகளை, துடைப்பக்குச்சிகளை வைத்து அடித்து கொன்று விளையாடியது... ம்ம்ம்...எவ்வளவு பாவ அக்கவுண்ட் உயர்ந்திருக்கி றதோ தெரியாது. (கொக்குகள் எவ்வளவு வெள்ளை, அழகு, பாவமில்லீங்களா?....ச்சச்சோ....)

ரவி said...

அனானி சொல்வதை எல்லாம் கண்டுகொள்ளாதீர்கள் நாகு....விட்டுத்தள்ளுங்க...

நெஞ்சை தொட்டுவிட்டீர்கள்...

Anonymous said...

சரி, முயல் எப்படிப் பிடிக்கிறதுன்னு தெரியுமா? வேணும்னா அதையும் சொல்லீடுறேன்.

ரவி said...

உங்க முயல் வேட்டை அனுபவத்தினை சொல்லுங்கள்...என்னுடயதினை சொல்கிறேன்..

Anonymous said...

முயல் வேட்டைக்கு நல்ல பவரான டார்ச் லைட் வேணும். அல்லது பழைய மோட்டார் பைக் பேட்டரியோடு சேர்த்த பவர்புல் லைட் வாடகைக்குக் கிடைக்குங்க. அத நெத்தியில கட்டிக்கனுங்க(நம்ம கேப்டன் விசயக்காந்து மாதிரி) நாலு நாலு பேரா கூட்டமாப் போவோம்.
மூன்று பேர்களிடம் லைட் இருக்கும். காட்டுக்குள் நடந்து போகும் போது லைட் வெளிச்சத்தைப் பார்த்து முயல் ஒரு மாதிரி முழிச்சுக்கிட்டே அதே இடத்துல நின்னுடும். நாமளும் அசையாம சத்தம் போடாம நிக்கனும்.
நம்ம கூட்டாளி நாலாவது ஆள் ஒரு கோணியைப் போட்டு முயல அமுக்கிப் பிடிச்சுட வேண்டியது தான். இப்படிக் கத்தியில்லாம ரத்தமில்லாம முயல் பிடிக்கலாம்.

ஒரு பத்து முயல் பிடிசமுன்னா, ஆறு முயலை சுமார் 500 ரூபாய்க்கு வித்துடலாம். லைட் வாடகை போக ஆளுக்கு 70 ரூபாயும் ஒரு முயலும் எடுத்துக்குவோம்.
சரி உங்க அனுபவத்தச் சொல்லுங்க.

Anonymous said...

நான் சொன்னதயெல்லாம் நைட் நேர்துல செய்யனுங்க. பகல்ல நம்ம்லால முயல் கூடப் போட்டி போட்டு ஓட முடியாதுங்க,

Anonymous said...

நான் என் பெயரைப் போடலாம்னுதாங்க நினைச்சேன். நானே 'அந்துமணி' மாதிரி, சைவம்னு சொல்லி வலைப்பதிவு மக்களை நம்ப வச்சுட்டேன்.
இப்ப பெயரைச் சொன்னனா, என் பேர் ரிப்'பேர்' ஆகிறும்.

ரவி said...

அந்துமணி சைவம் இல்லையா ?

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால்

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால் டயபட்டீஸ் / நீரிழிவு / சர்க்கரை நோயை விரட்ட நியான்டர் செல்வனால் ஆரம்பிக்கப்பட்ட இந்த குழுமத்திற்கு ( https://www....