Monday, May 29, 2006

முட்டை - பருப்பு தொக்கு...சூப்பரா இருக்குபா...



பொதுவா பருப்பையும் முட்டையையும் ஒண்ணா சேர்க்கவே மாட்டோம். இந்த டிஷ் வித்தியாசமானது. இதை பாசிப்பருப்பு பயன்படுத்தியும் செய்யலாம்.

தேவையானப் பொருட்கள் :

1 கப் துவரம் பருப்பு
3 முட்டை
1 பெரிய வெங்காயம் பொடியாக நறுக்கியது
3 தக்காளி பொடியாக நறுக்கியது
3 காய்ந்த மிளகாய்
1 ஸ்பூன் மிளகாய்த்தூள்
2 டேபிள்ஸ்பூன் நெய்

சிறிது மஞ்சள் தூள்
சிறிது கடுகு
சிறிது சீரகம்
1 கப் தேங்காய்த்துருவல்
சிறிது பொடியாக நறுக்கிய கொத்தமல்லி
தேவையான உப்பு

செய்முறை :

* துவரம் பருப்பை போதுமான நீரில் வேக வைக்கவும். முக்கால்வாசி வெந்ததும் வெங்காயம், தக்காளி, உப்பு, மிளகாய்த்தூள், மஞ்சள் தூள் ஆகியவற்றைச் சேர்க்கவும்.

* எல்லாம் நன்கு குழைந்து வெந்ததும், முட்டைகளை உடைத்து அதில் ஊற்றவும்.

* சிறிது நேரம் கொதித்ததும் நெய்யில் கடுகு, சீரகம், காய்ந்த மிளகாய், தாளித்துக்கொட்டி, தேங்காய்த்துருவல், கொத்தமல்லி சேர்த்து சிறிது நேரம் கொதிக்க விடவும்.

எம்.எஸ்.என் தமிழ் வலைப்பதிவு ஆரம்பித்து உள்ளனர்..

http://content.msn.co.in/Tamil/Cookery/Recipies/0605-23-2.htm

இங்கே பார்க்கவும்..

7 comments:

Anonymous said...

இப்போது தான் முயற்ச்சி செய்தேன். கொன்சம் தீய்ந்து விட்டது.

:(

ரவி said...

சாப்பிட்டீயளா இல்லையா... ??

Anonymous said...

அறை தோழிக்காக காத்திருக்கு

- சுமா

Anonymous said...

அவங்க தான் சோதனை எலின்னு சொல்லுங்க

ரவி said...

ரொம்ப சரி கதிர்

வஜ்ரா said...

//
பொதுவா பருப்பையும் முட்டையையும் ஒண்ணா சேர்க்கவே மாட்டோம்.
//

காரணம்,

சேர்த்து சாபிட்ட அடுத்த நாள் காலையில் பாத்ரூமில் சிகரெட் பற்றவைப்பது ஆபத்தானது. :))

ரவி said...

விவேக் ஒரு படத்தில் வேட்டிய தூக்கி பிடிச்சமாதிரி ஆகிடும் என்கிறீரா வஜ்ரா( ஷங்கர் ) ???

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால்

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால் டயபட்டீஸ் / நீரிழிவு / சர்க்கரை நோயை விரட்ட நியான்டர் செல்வனால் ஆரம்பிக்கப்பட்ட இந்த குழுமத்திற்கு ( https://www....