தாய்லாந்து பயணம் - கொஞ்சம் நினைவுகள்

சமீபத்தில் (போன மாதம்)தாய்லாந்து நாட்டிற்க்கு போயிருந்தேன்...என்னுடைய மனதில் தாய்லாந்து பற்றி எண்ணியிருந்தது அடியோடு மாறியது...காரணம் சூப்பர் பாஸ்ட் ஹைவேக்களும் சாலையில் அதிவேகத்தில் பறக்கும் கார்களுமாக சிங்கப்பூரையும், மலேசியாவையும் நினைவுபடுத்தியது...நாடு 13 சதவீத வளர்ச்சி அடைந்து இருக்கிறது என்று போர்ப்ஸ் பத்திரிக்கையில் படித்தது எவ்வளவு உண்மை என்று தெரிந்தது..
விசா ஆன் அரைவல் திட்டத்தில் நான் சென்றேன்....இதற்க்கு உங்கள் பாஸ்போர்ட், இரண்டு புகைப்படம் (வெள்ளை பேக்ரவுண்டு), மற்றும் திரும்புவதற்க்கான ரிட்டன் டிக்கெட், மற்றும் 1000 தாய் பாட் ( கிட்டத்தட்ட 1500 ரூ) கொடுத்தால் 14 நாட்கள் விசா தருகிறார்கள் ஏர்போட்டில்..அதனால் சுற்றுலா பயணிகளின் சொர்க்கமாக விளங்குகிறது...

திரும்ப வரும்போது ஏர்ப்போட் டாக்ஸ் என்று ஒரு 500 பாட் ( 750 ரூ) வாங்குகிறார்கள்...சுத்தமான ஏர்போர்ட்..கொடுக்கலாம் என்று தோன்றுகிறது...

நான் தங்கி இருந்த நகரத்தின் பெயர் சோன்புரி..தாய்லாந்தில் இருந்து 50 முதல் 60 கிலோமீட்டர் தூரம் உள்ள சிறுநகரம்..அதனால் யாருக்கும் சுட்டு போட்டாலும் ஆங்கிலம் தெரியாது...நமக்கு தெரிந்த சைகை பாஷையை வைத்து அட்ஜஸ்ட் பன்ன வேண்டியது தான்...

அதுவும் இல்லாமல் நாம் இந்தியாவிலிந்து வந்து இருக்கிறோம் என்றால் தொட்டு பார்த்து மகிழ்வர் இந்த சிறுநகரில்..காரணம் அவர்கள் தெய்வமான புத்தர் பிறந்த நாட்டிலிருந்து வருகிறோம் என்ற உணர்வு...

உணவு பழக்கத்தினை பொறுத்த வரையில் இந்தியர்களுக்கு பிரச்சினையே இல்லை...அதுவும் நான்வெஜ் அப்படின்னா சும்மா புகுந்து விளையாடலாம்..தொம்.யம்.கூங்..இது பிரபலமான நூடுல்ஸ் பெயர்..லெமன் வாசனையோடு கொஞ்சம் இறால் சேர்த்து சும்மா சூப்பரா இருக்கும்...
ரொட்டி என்ற பெயர்ல நம்ம பரோட்டாவ வித்துக்கிட்டு இருந்தான் ரோட்டு கடையில...5 தாய் பாட் (பாட் - தாய்லாந்து காசு) விலையில்...

அப்படியே நம்ம பரோட்டா..அதனை வெண்ணையில தடவி உள்ள தள்ளிக்கிட்டு இருந்தாங்க நிறைய பேர்..மேற்கானும் படம் தாய்லாந்து தோழியொருவரின் திருமணம்இவரும் தோழி தானுங்க....சுனாமி வந்து வாரிக்கிட்டு போன புக்கட் தீவில் எடுக்கப்பட்டது..

மொத்தத்தில் வெளிநாடு எதாவது சுற்றுலா சென்று வரலாம் என்று எண்ணுபவர்கள் தாய்லாந்தினை நிச்சயமாக கணக்கில் எடுத்து கொள்ளலாம்..

Comments

D The Dreamer said…
// சோன்புரி..தாய்லாந்தில் இருந்து 50 முதல் 60 கிலோமீட்டர் தூரம் உள்ள சிறுநகரம்..//

50 km from Bangkok????

BTW,
//விசா ஆன் அரைவல் திட்டத்தில் நான் சென்றேன்....இதற்க்கு உங்கள் பாஸ்போர்ட், இரண்டு புகைப்படம் (வெள்ளை பேக்ரவுண்டு), மற்றும் திரும்புவதற்க்கான ரிட்டன் டிக்கெட், மற்றும் 1000 தாய் பாட் ( கிட்டத்தட்ட 1500 ரூ) கொடுத்தால் 14 நாட்கள் விசா தருகிறார்கள் ஏர்போட்டில்..அதனால் சுற்றுலா பயணிகளின் சொர்க்கமாக விளங்குகிறது...//

I guess you havent got the full picture yet. It is not just the easy visa process that contributes to the tourist inflow. There are lot of other factors, which you will know should you spend a few days in BKK

Cheers
D the D
Unknown said…
ஆமாம் பாங்காக்கில் இருந்து தான்...

அந்த மேட்டர் எனக்கும் தெரியுங்க...சொல்ல வேண்டாமேன்னு நினைச்சேன்...
//தொம்.யம்.கூங்..இது பிரபலமான நூடுல்ஸ் பெயர்..லெமன் வாசனையோடு கொஞ்சம் இறால் சேர்த்து சும்மா சூப்பரா இருக்கும்...//

தொம்.யம்.கூங்.. ஒரு வகை Soupங்கண்ணா. முக்கியமாக கடல் உணவை போட்டு இருப்பார்கள். சிறிது புளிப்பும் காரமாகவும் இருக்கும்.
Unknown said…
ஒரு தாய் பாட் - 1.10 ரூ என்று சரியான தகவல் தந்த வலைபதிவு நண்பருக்கு நன்றி..

நாம எப்பவுமே கணக்கில்லாம செலவு பன்னுறவங்கன்னா...( கம்பேனி காசாச்சே..ஹி ஹி )
Unknown said…
சரிதான் அருள்மொழி...ஹோட்டல் அறையில் சுடுநீர் ஊற்றி செய்த தாய்லாந்து மேகி ( maggy) பெயரும் அதேதான்...Tum Yum Goong..

பலமுறை சூப் வடிவத்திலும் சுவைத்தேன்...

இதே பெயரில் ஆங்கில படம் ஒன்று வந்ததே சரியா..
இரண்டாம் படத்தின் பிண்ணனி அருமை.

மிக அருமையாக சமைத்த தாய் உணவையும் உண்டிருக்கிறேன், மோசமானதையும் கூட..

என்ன, அந்த *வாடை* போக 2,3 நிமிடம் காத்திருந்தால் உணவு சுவையாக இருக்கும்.

அடுத்தவாட்டி ஊருக்குப் போகும்போது ஒரு எட்டு பாங்காக் வழியா போயிட்டு வரணும்.
paarvai said…
ஆனால்;இந்த நாட்டுக்குப் பணம் படைத்த பலர்;வேறு ஒன்றுக்காகப் போகிறார்கள். மிக மலிவாம்.!!
தொலைக் காட்சியில் பார்த்தேன்.
யோகன் -பாரிஸ்
Ram.K said…
பயணக்கட்டுரை நன்றாக உள்ளது.

புகைப்படம் சற்று தெளிவாக இருக்கலாமோ ?
ரவி,

பதிவு நல்லா இருக்கு.

ரூபாய்க்கு ரெண்டு 'பாட்' இருந்த காலத்துலே நான் போயிருந்தேன். தங்கபுத்தர் கோயில்
அட்டகாசமா இருந்துச்சு. அப்பெல்லாம் டூரிஸ்ட்டுகள் ரொம்ப இல்லாததால், தனிக்கார்லேயே
கைடுடன் லோக்கல் டூர்ஸ் போகலாம்.

அப்ப நாங்க இந்தியாவிலே இருந்து திரும்பி பாங்காக் வழியா ஃபிஜி போய்க்கிட்டு இருந்தோம்.
கோபாலும், மகளும் திருப்பதி மொட்டை வேறு. பாங்காக்லே இந்த மொட்டைகளைப் பார்த்த சகலருக்கும்
பரம திருப்தி, புத்தர் ஊரு ஆட்கள்ன்னு:-))

Popular Posts