Tuesday, October 03, 2006

மன்னிக்காமல், நாலுவருடம் பேசாமல்..

பள்ளிப்பருவத்தில் யாரிடமாவது மனஸ்தாபம் அல்லது சண்டை போட்டுக்கொண்டு பேசாமல் இருந்து இருக்கிறீர்களா ? நான் இருந்திருக்கிறேன்...

இப்போது நினைத்தால் இதைவிட முட்டாள்தனமாக ஏதேனும் செய்திருக்கிறேன் என்றால் இல்லை என்றே தோன்றுகிறது...அதாவது முட்டாள்தனங்களிலேயே முதன்மை முட்டாள்தனம்..

இனிமையான ஒரு நன்பனை இழந்து இருக்கிறேன்...ஆண்டுக்கணக்கில்...

விஷயம் இதுதான்....

என் நன்பன் சேவியர் என்பவன், என்னுடன் ஆரம்ப காலத்தில் இருந்தே உள்விடுதியில் படிப்பவன்....ஒன்றாக உணவு, ஒன்றாக விளையாட்டு, ஒன்றாக படிப்பது என்று எல்லா விதத்திலும் தோழன்...

நாங்கள் உயரமாக இருப்பதால் வாலிபால் மற்றும் பேஸ்கட் பால் விளையாட்டை தேர்வு செய்தோம்...அவன் சிறந்த ஹாக்கி வீரன் எனினும் கோச்சிடம் அடம் பிடித்து சண்டை போட்டு உண்ணாவிரதம் இருந்து பேஸ்கட் மற்றும் வாலியில் இனைந்தான்...

மாயவரம் அவன் சொந்த ஊர்.....

ஒரு சிறிய சண்டைதான்...என்ன என்றால், வருடா வருடம் பாதிரியாரின் பிறந்த நாளுக்கு ஒரு திரைப்படம், கேட்டை விட்டு வெளியே சென்று பார்க்கலாம்...

அந்த நாளில், கடலூரில் நீயூசினிமா, கிருஷ்னாலயாவில் ஏதாவது நல்ல புதிய திரைப்படம் ஓடும்...வருடத்துக்கு ஒரு முறை மட்டுமே நிகழும் நிகழ்வு இது...

இந்த நாளுக்காக ஆறுமாதத்துக்கு முன்பே பிளான் செய்வோம்...காசு சேர்த்து வைப்போம்...பாதிரியாருக்கு மாதமொருமுறை பிறந்தநாள் வராதா என்று ஏங்குவோம்....

அந்த நாளும் வந்தது...

எல்லாரும் கிளம்பிக்கொண்டிருந்தார்கள்...நாங்கள் போவதற்க்காக வரிசையில் நின்றோம்....

அப்போதுதான் எனக்கு தெரிந்தது, என் பணத்தை நான் மறந்து வைத்துவிட்டு வந்தது....

நான் வந்துவிடுகிறேன், நீ நில் என்று அவனிடம் சொல்லிவிட்டு, விரைவாக ரேக் ரூம் சென்றேன்....

வந்து பார்த்தபோது யாரும் இல்லை...வரிசை சென்றுவிட்டு இருந்தது...

ஏமாற்றம்...அயற்ச்சி...சினிமா தியேட்டர் வாசலில் தேடினேன்...புலப்படவில்லை...

பிற்பாடு விசாரித்தபோது, எனக்காக காத்திருந்ததாகவும், நான் வரவில்லை என்றவுடன் சென்றுவிட்டதாகவும் கூறினான்...

என்னால் அந்த ஏமாற்றத்தை தாங்கிகொள்ள முடியவில்லை...உன்னுடன் நான் பேசமாட்டேன் என்று கூறிவிட்டேன்...

ஒன்றாக விளையாடுவோம், ஒரே அறையில் அமர்ந்து படிப்போம்...ஒருவருக்கு ஒருவர் பேச்சுவார்த்தை இல்லை....

இருமுறை என்னிடம் பேச முயற்ச்சி செய்தான்...நான் முகத்தை திருப்பிக்கொண்டேன்...

இது உள்ளத்தில் இருந்த தீமையை - வெளிக்காட்டாமல், மன்னிப்பு கோராமல், மன்னித்தாலும் ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் இல்லாமல்....சிறுபிள்ளைக்கு உரிய பிடிவாதத்துடன்....நான்கு ஆண்டுகள் கடந்தன....

+2 முடிந்து பேர்வெல் நடந்தபோது கூட முகத்தை திருப்பிக்கொண்டிருந்தேன்...பிறகு நன்பர்கள் எல்லாம் வற்புறுத்து பேசுமாறு செய்தார்கள்...

பை டா....என்றேன்....

இன்று இந்த நிகழ்ச்சிகளை எல்லாம் நினைத்து பார்க்கும்போது எவ்வளவு பெரிய தவறு செய்துவிட்டோம் என்று புரிகிறது....

நீங்க யாராவது அவனை பார்த்தா நான் ஸாரி கேட்டதா சொல்லுங்களேன்..ப்ளீஸ்....

6 comments:

Anonymous said...

ulkuthu ?

ரவி said...

///ulkuthu ? ////

உள்குத்தா, அப்படீன்னா ?

Anonymous said...

நீ உருப்பட வாய்ப்பு இல்லை.

நிலவன் said...

தலைப்பை பார்த்திட்டு கிளிக் பண்ணினா..திரும்பவும் நம்ம செந்தழல் ரவி..சும்மா கலக்கிறீங்க..

ரவி said...

///தலைப்பை பார்த்திட்டு கிளிக் பண்ணினா..திரும்பவும் நம்ம செந்தழல் ரவி..சும்மா கலக்கிறீங்க.. ///

நன்றி தலை...

Anonymous said...

Good Post, Keep it up.

- BIT Rajesh

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால்

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால் டயபட்டீஸ் / நீரிழிவு / சர்க்கரை நோயை விரட்ட நியான்டர் செல்வனால் ஆரம்பிக்கப்பட்ட இந்த குழுமத்திற்கு ( https://www....