Tuesday, October 03, 2006

போர்வை போர்த்தினால் குளிரடங்குமா, தருமடி விழுமா?

நான் படித்தது புனித வளனார் உள்விடுதி, கடலூர்...(St.Josephs)

நான் +2 வரை படித்த காலகட்டத்தில் (1990 முதல் 1996) பல அனுபவங்களை சந்தித்தேன்...

நான் இங்கே தங்கி படித்தேன் ( Resident Evil). வருடத்தில் இரண்டு மூன்று முறை மட்டுமே விடுமுறை, சொந்த ஊருக்கு போகலாம்..மற்ற நாட்கள் அனைத்தும், காம்பவுண்டு கேட்டை தாண்டி வெளியே போக முடியாது....

இங்கு பாதிரியார்கள், மிகவும் கண்டிப்பானவர்கள்...

குறிப்பிட்ட நேரத்துக்கு குளிக்க வேண்டும்(5:45 to 5:55), குறிப்பிட்ட நேரத்துக்கு விளையாட வேண்டும்(4:30 to 5:40), , குறிப்பிட்ட நேரத்துக்கு படிக்க வேண்டும்,மேலும் குறிப்பிட்ட நேரத்துக்கு தூங்கி(9:30 to 5:30), , குறிப்பிட்ட நேரத்துக்கு எழும்ப வேண்டும்(5:30)...

பிறகு குறிப்பிட்ட நேரத்துக்கு சர்ச்சுக்கும் செல்லவேண்டும்..

இதில் ஏதாவது தவறிழைத்தோம் என்றால் கடுமையான தண்டனைக்கு ஆட்பட நேரிடும்....

இதே பள்ளியில் மற்ற மதத்தினர் தங்கும் ஹாஸ்டல் இருந்தது...அங்கு இந்த கட்டுப்பாடுகள் எல்லாம் இல்லை...'வெட்டிப்பயல்' போல அங்கு படித்தவர்கள் சொல்வார்கள்...

விஷயத்துக்கு வருவோம்...உள்விடுதி தலைவராக இருந்த ஒரு பாதிரியாரின் அழிச்சாட்டியம் எல்லை மீறியது...

பிரம்புகளை நீளம் நீளமாக வைத்துக்கொண்டு,உணவு முடித்து படிக்கும் அறைக்கு லேட்டாக வருபவை விளாசுவது, படிக்கும் அறையில் பக்கத்தில் இருப்பவருடன் பேசுபவரை பிரித்து மேய்வது என்று கொடுமைமீது கொடுமை செய்தார். அவர் பெயரை வெளியிட விரும்பவில்லை...

எவ்வளவு நாள்தான் பொறுப்போம் நாங்களும்...

அவரை மாணவர்கள் பிரித்து மேய்வது என்று முடிவெடுத்தனர்...

திட்டம் வகுக்கப்பட்டது..

பாதிரியாரை கடுமையாக கண்காணித்தோம்...

இரவு உணவு உண்பது எத்தனை மணிக்கு, படுக்கைக்கு வருவது எத்தனை மணிக்கு, ரவுண்ஸ் வருவது எத்தனை மணிக்கு, வெளியே உலாவுவது எத்தனை மணிக்கு என்று அனைத்தையும் கண்காணிக்க தனி தனி குழு அமைக்கப்பட்டது...

வெளியே இருந்து பள்ளிக்கு வரும் மாணவர்கள் மூலமாக சிறிய விசில்கள் வாங்கப்பட்டன...

திட்டம் இது தான்..இரவு உணவு முடிந்து பாதிரியார் அறைக்கு செல்லும் வழி, மாணவர்களின் நீண்ட படுக்கை அறையை ஒட்டி இருந்தது. அதன் மூலம் கதவை திறந்துகொண்டு அவர் செல்வார்..பத்து மீட்டர் நீளமுள்ள அந்த பாதைக்கு பின் கதவு வருகிறது. அந்த கதவை திறந்துகொண்டு சென்றால் அவரது அறை...

அங்கே சிறிய கயிறுகளால் செய்யப்பட்ட வலையை வைப்பது, அவர் தடுமாறி விழும் நேரம் போர்வையால் மூடி விடுவது..

அவர் வந்த கதவை ஒருவர் மூடிவிடுவது...இதன் மூலம் நீண்ட பால்கணியில் பாதிரியார் விழுந்துகிடப்பார்...உடலெங்கும் சிக்கிய கயிறுகள் எப்படி வந்தன என்று சிந்திப்பதற்க்குள், இரண்டு பெரிய போர்வைகளை கொண்டு மூடிவிடுவது....

பிறகு கையாலோ, பிரம்பாலோ, மனித உடலில் அடித்தால் வலிக்கும் என்று பாதிரியாருக்கு காட்டுவது...

தேங்காய் நார்களை கொண்டு கயிறு தயாரிக்கும் பணி ஒரே நாளில் நிறைவு பெற்றது..

அந்த நாளும் வந்தது...

மணி சரியாக ஒன்பது நாற்பது...

தயாராக காத்திருந்த விழிகள் மொத்தம் பத்து ஜோடி....ஒவ்வொரு விழிகளை தாங்கி இருந்த இளம் உடல்கள், தவறு செய்தோ, செய்யாமலோ, பாதிரியாரால் பிரம்பாலோ, கையாலோ புண்ணாக்கப்பட்டவை...

சிறிய விசில் ஓசை மென்மையாக காற்றை கிழித்துக்கொண்டு வந்தது...

பாதிரியார், மாணவர்களின் அறையை மூடிக்கொண்டு வெளியே வந்தார்...தன் அறைக்கு போகும் கதவை நோக்கி சாதாரண வேகத்தில் நடந்தார்...

வலை அதன் காரியத்தை செய்தது...

பத்து பேர், இரண்டு போர்வைகளோடு பாய்ந்தனர்..முழுவதுமாக மூடப்பட்டார் பாதிரியார்..மங்கென தலையில் விழுந்த அடி, மேற்க்கொண்டு அவர் எதுவும் கத்தாமல் பார்த்துக்கொண்டது...

எல்லாம் நிறைவேறிற்று....

கடந்த மாதம் ஒரு பள்ளித்தோழரை சந்தித்தேன்...அவர் அதே பள்ளியில் ஆசிறியராக பணிபுரிகிறார் இப்போது...

நமது அன்புக்குரிய பாதிரியார்...மாணவர்களை கடுமையாக தண்டிப்பதை நிறுத்தி பதினைந்து ஆண்டுகள் ஆகிறதாம்...

மென்மையாக சிரித்தேன்...

இருக்காதா பின்ன, பசங்க எல்லாம் திருந்திட்டாங்கப்பா....பாதிரியாரும் தான்...என்றேன்...

27 comments:

ரவி said...

அனானி ஆட்டம் ஆதரவு கொடுக்கிறேன்.

Pot"tea" kadai said...

Rev. Fr. Agnel???

Anonymous said...

தர்மஅடி தந்த தானைத் தலைவன் வாழ்க.

செந்தழலார் பேரவை,
அடிலெய்ட்,
அவுஸ்திரேலியா

Anonymous said...

நான் உருப்படமாட்டேன்.
நீங்க எப்படி?

Anonymous said...

//நான் +2 வரை படித்த காலகட்டத்தில் (1990 முதல் 1996) பல அனுபவங்களை சந்தித்தேன்...//

தல நீ +2 6 வருசம் படிச்சியா?

செந்தழல் மாணவர் அணி

Anonymous said...

தல நான் B.E முடிச்சுட்டு வீனாப் போய்ட்டேன்..எனக்கு ஒரு நல்ல ஜாப் ஏற்பாடு பண்ணு தல மைக்ரோசாப்ட் கம்பெனில..

செந்தழலார் ரெகமென்டேசன் கழகம்

Anonymous said...

தல இதுலாம் ரொம்ப கம்மி. என் தம்பி +2 படிக்கும் போது ஒரு வாத்தியார் praticalல 6 மார்க்கு வேணும்னே குறைச்சதுக்காக சட்டைய புடிச்சு கன்னத்துல வச்சுட்டான்.

ரவி said...

///Rev. Fr. Agnel??? ////

இவர் தங்கமுங்க...தங்கத்தை கூட உரசி பார்க்கலாம்...இவரை பார்த்தவுடனே சொல்லிவிடலாம்...

இவரது கணிவான அன்பு வழி மாணவர்களை அழகாக வழிநடத்தியது...

ஒரு செய்தி என்னவென்றால், இப்போது பள்ளி முதல்வராக சென்றமாதம் பொறுப்பேற்றுள்ளார்..

Anonymous said...

தல என்னோட chat செய்ய வரியா?

செந்தழல் சாட்டிங் க்ளப்
லாஸ்வேகாஸ்

Anonymous said...

//கடந்த மாதம் ஒரு பள்ளித்தோழரை சந்தித்தேன்...அவர் அதே பள்ளியில் ஆசிறியராக பணிபுரிகிறார் இப்போது...//

தல, 6 வருசம் படிச்சீங்களே? உங்க நண்பர் உங்களுக்கு பாடமெடுத்தாரா?

ரெட்கோல் இலக்கிய அணி,
டி. புதூர்.

குழலி / Kuzhali said...

தாஸ் தாஸ் அருள்தாஸ் தாஸ்...?!

ரவி said...

//
தல, 6 வருசம் படிச்சீங்களே? உங்க நண்பர் உங்களுக்கு பாடமெடுத்தாரா?
//

ஆறு வருசமும் ஒரே கிளாஸ்ல படிச்சேன்னு சொன்னேனா ?

ஜயராமன் said...

ரவி,

நான் நினைச்சது சரியாத்தான் இருக்கு. அப்பயே நீங்க சரியான தீவிரவாதிதானா?? "-)

சரி, ப்ளஸ் டூ முடிச்சீங்களா? :-)

ரவி, jokes apart, நன்றாக எழுதியிருக்கிறீர்கள்.

ஆனா, ஒரு விதத்தில் அந்த பாதரை நினைச்சா பாவமாத்தான் இருக்கு. பசங்க கிட்ட பாடம் படிச்சிட்டார்.

மறுபடி, ஊர் பக்கம் போனா, போய் பார்த்து மன்னிப்பு கேளுங்க.

நன்றி

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

ரவி!
போர்த்திலால் குளிரடங்குதோ இல்லையோ!; பாதிரியார் கொட்டமடக்கியிருக்குறீர்கள். யாரும் போட்டுக் கொடுக்கவில்லையா??
யோகன் பாரிஸ்

ரவி said...

////நான் நினைச்சது சரியாத்தான் இருக்கு. அப்பயே நீங்க சரியான தீவிரவாதிதானா?? "-)///

நான் தீவிரவாதி அல்ல...தேடறவாதி..

///சரி, ப்ளஸ் டூ முடிச்சீங்களா? :-)//

ஓ...முடிச்சிட்டேனே...

///மறுபடி, ஊர் பக்கம் போனா, போய் பார்த்து மன்னிப்பு கேளுங்க.//

நான் அவரிடம் அடுத்த பாவமண்னிப்பு செசன் அப்போ, " நான் அறியாமல் செய்த பாவங்களை" மன்னித்துக்கொள்ளும் அப்ப்டின்னு சொல்லிட்டேன்..

:)))

ரவி said...

///யாரும் போட்டுக் கொடுக்கவில்லையா??/////

யார் செய்தது என்று மொத்தமாக கேட்கப்பட்டு, நாங்கள் மறுதலிக்க...

வெளியில் உள்ள மாணவர்கள் யாரோ செய்த சதி என முடிவெடுக்கப்பட்டது..

கதிர் said...

//போர்வை போர்த்தினால் குளிரடங்குமா, தருமடி விழுமா?//

நீங்க போர்த்திக்கிட்டிங்கன்னா குளிரடங்கும், மத்தவங்களுக்கு போர்த்திவிட்டிங்கன்ன கொட்டமடங்கும்!

அனுசுயா said...

Aha appave intha attam potru keengla? mm paavam father :(

Anonymous said...

தலை, கலக்குற நீ.

Anonymous said...

நான் மறுபடி ஜெயிச்சிட்டேன் பாத்தீங்களா?

ரவி said...

///நான் மறுபடி ஜெயிச்சிட்டேன் பாத்தீங்களா?///

அலான்ஸோ கூட மறுபடி ஜெயிச்ச்சார்..

நாமக்கல் சிபி said...

//செந்தழல் ரவி said...
///Rev. Fr. Agnel??? ////

இவர் தங்கமுங்க...தங்கத்தை கூட உரசி பார்க்கலாம்...இவரை பார்த்தவுடனே சொல்லிவிடலாம்...

இவரது கணிவான அன்பு வழி மாணவர்களை அழகாக வழிநடத்தியது...
//
சரியாக சொன்னீர்கள். மாணவர்களை சரியாக புரிந்து கொண்டு அவர்கள் தங்கள் தவறை திருத்தி கொள்ள உதவுவதில் அவருக்கு நிகர் அவரே!!!

//
'வெட்டிப்பயல்' போல அங்கு படித்தவர்கள் சொல்வார்கள்...
//
ஹாஸ்டல் மாணவர்களுக்கும் அதுதான் டைம் டேபில் ஆனால் ப்ரேயர் இல்லை.

நீங்க பேஸ்கட் பால் டீம்ல இருந்தீங்களா??? நானும் பேஸ்கெட் பால் டீம்ல தான் இருந்தேன் :-)

நாமக்கல் சிபி said...

//செந்தழல் ரவி said...
///Rev. Fr. Agnel??? ////

இவர் தங்கமுங்க...தங்கத்தை கூட உரசி பார்க்கலாம்...இவரை பார்த்தவுடனே சொல்லிவிடலாம்...

இவரது கணிவான அன்பு வழி மாணவர்களை அழகாக வழிநடத்தியது...
//
சரியாக சொன்னீர்கள். மாணவர்களை சரியாக புரிந்து கொண்டு அவர்கள் தங்கள் தவறை திருத்தி கொள்ள உதவுவதில் அவருக்கு நிகர் அவரே!!!

//
'வெட்டிப்பயல்' போல அங்கு படித்தவர்கள் சொல்வார்கள்...
//
ஹாஸ்டல் மாணவர்களுக்கும் அதுதான் டைம் டேபில் ஆனால் ப்ரேயர் இல்லை.

நீங்க பேஸ்கட் பால் டீம்ல இருந்தீங்களா??? நானும் பேஸ்கெட் பால் டீம்ல தான் இருந்தேன் :-)

Anonymous said...

ம்ம்ம் ஹாஸ்டல்ல படிக்க்லியேன்னு இன்னும் ஏக்கமாத்தான் இருக்கு.

நான் திருச்சி புனித வளனார் பள்ளியில் படித்தேன். மிக அருமையான பள்ளி, என்ன ஒன்றிரண்டு ஹிட்லர்கள் ஆசிரியராக இருந்தது தான் கொடுமை. ஒரு டிராயிங் ஆசிரியர் அடித்து என் நண்பனுக்கு பல்லே உடைந்துவிட்டது! அப்புறம் அவங்கப்பா வந்து பஞ்சாயத்து செய்ததால் அவனுக்கு ஒருவருடம் அடியில்லாமல் தப்பினான்.

ரவி said...

///என்ன ஒன்றிரண்டு ஹிட்லர்கள் ஆசிரியராக இருந்தது தான் கொடுமை. ///

அதுதான் எல்லா பள்ளிகளிலும் நடக்கிறது...

///அப்புறம் அவங்கப்பா வந்து பஞ்சாயத்து செய்ததால் அவனுக்கு ஒருவருடம் அடியில்லாமல் தப்பினான். ///

அவர் நாட்டாமையா ?

ரவி said...

சொந்த பிரச்சினை சில ஆசிறியர்களுக்கு இருக்கும்....

உள்மூலம் , வெளி மூலம் இந்தமாதிரி...அந்த கோவத்தை எல்லாம் பசங்க மேலதான் காட்டுவாங்க :)))))))

Anonymous said...

machhi, kalaukkara da

- BIT Rajesh

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால்

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால் டயபட்டீஸ் / நீரிழிவு / சர்க்கரை நோயை விரட்ட நியான்டர் செல்வனால் ஆரம்பிக்கப்பட்ட இந்த குழுமத்திற்கு ( https://www....