ஏண்டா சாதீயம் பேசுகிறாய் ?
பள்ளிப்பருவத்தில் சாதீயம் பேசினீங்களா ?
கல்லூரிப்பருவத்தில் சாதீயம் பேசினீங்களா ?
குடும்பத்தாரிடம் சாதீயம், ஆரியம், திராவிடம் பேசினீங்களா ?
பெட்டிக்கடையில், மளிகைகடையில், சந்தைக்கடையில், துணிக்கடையில் சாதீயம் பேசினீங்களா ?
முடிவெட்டிக்கொள்ளும் இடத்தில், உங்கள் துணி அயன் செய்பவரிடம், உடம்பு சரியில்லைன்னா போகும் டாக்டரிடம், பாடம் சொல்லிக்கொடுக்கும் வாத்தியாரிடம் சாதீயம் பேசினீங்களா ?
உங்கள் நண்பரிடம் சாதீயம் பேசினீங்களா ?
ஏன் இணையத்தில் மட்டும் சாதீயம் பேசுறீங்கப்பா ?
ஏன் ஏன் ஏன் ?????
கல்லூரிப்பருவத்தில் சாதீயம் பேசினீங்களா ?
குடும்பத்தாரிடம் சாதீயம், ஆரியம், திராவிடம் பேசினீங்களா ?
பெட்டிக்கடையில், மளிகைகடையில், சந்தைக்கடையில், துணிக்கடையில் சாதீயம் பேசினீங்களா ?
முடிவெட்டிக்கொள்ளும் இடத்தில், உங்கள் துணி அயன் செய்பவரிடம், உடம்பு சரியில்லைன்னா போகும் டாக்டரிடம், பாடம் சொல்லிக்கொடுக்கும் வாத்தியாரிடம் சாதீயம் பேசினீங்களா ?
உங்கள் நண்பரிடம் சாதீயம் பேசினீங்களா ?
ஏன் இணையத்தில் மட்டும் சாதீயம் பேசுறீங்கப்பா ?
ஏன் ஏன் ஏன் ?????
Comments
வெளிவரவில்லை இன்னும்...நம்ம அவசரம் யாருக்கு புரியுது..அதுதான் தனிப்பதிவு..
ஏன் இணையத்தில் மட்டும் சாதீயம் பேசுறீங்கப்பா ?
ஏன் ஏன் ஏன் ?????"
அருமையான கவிதையும் காத்திரமான வரிகளும், பாராட்டுக்கள் ரவி.
ஏன் இணையத்தில் மட்டும் சாதீயம் பேசுறீங்கப்பா ?
ஏன் ஏன் ஏன் ?????"
அருமையான கவிதையும் காத்திரமான வரிகளும், பாராட்டுக்கள் ரவி.
இந்த படித்தாவது திருந்துவானா? கேனப்பய.
ராதா ராகவன்,
நங்க நல்லூர்,
சென்னை.
பதில் கிடைக்குமா என்று பொறுத்திருந்து பார்ப்போம்!
வேற நல்லதா சரக்கு கைவசம் இருந்தா நம்ப மக்களும் இங்க கடைபரப்ப மாட்டாங்களா? வெச்சுகிட்டா வஞ்சனை பண்றாங்க? சட்டில இருக்கறதுதானே அகப்பைல வரும் செந்தழல். ஏதோ இது தான் கேள்வி கேப்பார் இல்லாம வலைல இப்பதைக்கு விலை போகுது. அவங்களுக்கும் பீடம் எல்லாம் வாங்கித் தருது. போறாங்க, விடுங்க. கண்டுக்காம விட்டா, கத்தியே ஓஞ்சுடுவாங்க. (அப்புறம் புதுசா இன்னொருத்தர் இதையே பேசிகிட்டு வருவாருன்னு வைங்க.) நமக்கும் நகைச்சுவை வேண்டியிருக்கே வாழ்க்கைல. என்ன நாஞ் சொல்றது?
இது அவசரம் இல்ல, அவசியம்.
என்ன செய்ய, இந்த ஊடகத்தின் முலம் முகத்தினை யாரும் பார்க்க முடியாது என்பதே காரணம் என்று நினைக்கிறேன்....ஆனால் நீங்கள் கூறிய இடங்களில் முகம் தெளிவாகிடுமே?
ஹி ஹி ...!
இங்கே தானே முகமூடி போட்டு பேச முடியுது ! வாய்ப்பை விட்டுவிட முடியுமா ?
:))
கல்லூரிப்பருவத்தில் சாதீயம் பேசினீங்களா ? //
தம் பதிவுகள் ஒவ்வொன்றிலும் (பின்னூட்டங்களிலும் கூட) ஒரு குறிப்பிட்ட சாதி பெயரைச் சொல்லித் திட்டிக்கொண்டிருப்பவர்கள் கண்டிப்பாகப் பேசியிருப்பார்கள். சொல்லப் போனால், சாதீய விதை முளைத்ததே அங்கே தான்!
// குடும்பத்தாரிடம் சாதீயம், ஆரியம், திராவிடம் பேசினீங்களா ? //
இதற்கு அவசியம் இல்லை, ஏனென்றால் அது குடும்பத்துக்குள்ளேயே ஊறி இருக்கிறது, பல கிராமங்கள் மற்றூம் சிறு நகரங்களில். சமீபத்தில் சேலதில் நடந்த ஒரு கல்யாணத்திற்குப் போனேன். வந்தவர்களில் 97% பேர் ஒரே, அதே சாதியைச் சேர்ந்தவர்களே!
இவைகள் கொஞ்சம் காஸ்மாபாலிடன் ஆகி பெருநகரங்களானால் இதற்கு விடிவுகாலம் உண்டு.
// பெட்டிக்கடையில், மளிகைகடையில், சந்தைக்கடையில், துணிக்கடையில் சாதீயம் பேசினீங்களா ? //
கண்டிப்பாக இருக்காது ! வியாபாரம் மற்றும் செல்வ வேட்கை ஒரு மிகப்பெரிய சமூக சமன்பாட்டு சாதனம். வாழ்க பணம்!
// பாடம் சொல்லிக்கொடுக்கும் வாத்தியாரிடம் சாதீயம் பேசினீங்களா ? //
ஒரு காலத்தில் ஒரு குறிப்பிட்ட சாதிக்காரர்கள் தான் ஆசிரியர் வேலையைச் செய்து வந்தார்கள். அவர்களில் பலர் தங்கள் தன்னலம் கருதாத தன்மைக்காக எல்லா சாதிக்காரர்களாலும் இன்றும் நினைவு கூரப் படுகிறார்கள். சாதீயம் பேசி அவர்களைத் திட்டி ஒழித்தாயிற்று. ம்ம்..?
// உங்கள் நண்பரிடம் சாதீயம் பேசினீங்களா ? //
சில பல ஆசாமிகள் சாதியைப் பார்த்துத் தானே சாமி நண்பர்களையே தேர்ந்தெடுக்கிறார்கள்.. இவர்களை என்ன செய்வீர்கள்?
// ஏன் இணையத்தில் மட்டும் சாதீயம் பேசுறீங்கப்பா ? //
மேலே சொன்ன இடங்களிலேயே பேசும்போது இணையம் எம்மட்டு?
ஆனால் என்ன வித்தியாசம். நீங்கள் இணையத்திற்க்காக மட்டும் கேட்கிறீர்கள். நான் மொத்தமாகவே சாதி வேறுபாடு வேண்டாம் என்கிறேன்.
அதானே.. கேள்விக்கு மேல கேள்வியா கேட்டிருந்தாலும் நியாயமான கேள்விகள்தான்..
பின்னூட்டமா இல்லாம தனிப் பதிவில சொல்லுங்களேன்.. கேப்போம்..
கல்யாணத்துக்கு சொந்தக்காரங்க வருவாங்க...ஒரே சாதிக்குள்ள பெண் கொடுத்து எடுத்து பழகிவிட்ட ஒரு தலைமுறைக்கு பிறகு, சாதிக்காரன் தான் வருவான் என்று ஆகிவிட்டது..
ராஜ் வனஜுக்கு போட்டது...
இதை நான் ஒத்துக்கொள்ள மாட்டேன் ஜடாயு..