ஒருமரத்து கள்ளு !!!!!

'கள்' உண்ணாமை வேண்டும் அப்படின்னு காந்தி சொன்னதா கேள்வி..ஆனா அவர் கிட்ட கள் பத்தி யாரோ கதை விட்டு இருக்கனும்...கள் ரொம்ம போதை..உடம்புக்கு கெட்டது...அப்படின்னு எல்லாம்...ஆனா உண்மை என்னன்னா...கள், பச்ச புள்ள மாதிரி..அட ஆமாங்க...உண்மைதான்...

என் கல்லூரி இருந்த இடம் ஒரு கிராமம்..அங்க மிஞ்சி போனா கிடைக்கறது இந்த கள்ளு தான்...காலையில கள் இறக்கற இடம் போனா, நல்லா கொத்தும் கொலையுமா இருக்க பானைய இறக்கி, அதுல மப்புல மெதந்துக்கிட்டு இருக்க பெரிய சைஸ் வண்டுகளை எல்லாம் தூக்கி போட்டுட்டு, ப்ளாஸ்டிக் மக்குல அல்லது பெரிய சைசு பானையில ( நமக்கே நமக்கு) கொடுப்பாங்க...

பத்து ரூபா ஒரு மக்கு ( ஜக்குன்னும் சொல்லலாம்)..

அங்கனயே கிடைக்குற சின்ன சைஸ் மிக்சர் பாக்கெட்டுகளையும், ஒரு அரை பாக்கட்டு கோல்டு பில்டர் சிகரட்டும் வாங்கிக்கிட்டு ஓரமா ஒதுங்கிட வேண்டியது தான்...அப்படியே ரவுண்டு கட்டி உக்காந்துக்கிட்டு உள்ளார இறக்க வேண்டியது தான்..கொஞ்சம் புளிப்பா...ஜில்லுனு உள்ளார இறங்கும்...


மேட்டர் என்னான்னா...இந்த கள்ளு எல்லாம் ஒரே பானையில கொட்டப்படும்...அதுல இருந்து சில பல மக்குகளை வாங்கி நம்ம ஒரு பானையில ஊத்திக்கிட்டு வர்ரோம் இல்லையா...


அதை விட காலையிலே கள்ளு இறக்குற இடத்துக்கு போயி, ஒரே பானைய (புல்லா) - ( 100 ரூபா ஆகும் ) வாங்கி அதுல இருக்கற பண்ணாடைய தூக்கி எறிஞ்சிட்டு (
(பண்ணாடை என்பது சல்லடை மாதிரி இருக்கும்...கள் இறக்குறவங்களுக்கு இயற்கை தந்த வடிகட்டி....) வண்டுகளையும் தூர எறிஞ்சிட்டு...

கப்பு கப்புன்னு ஏத்துறது....சும்மா அருமையா இருக்கும்...அது அந்த கள்ள சுவைச்சவங்களுக்கு தான் தெரியும்...

இதெல்லாம் இப்ப எதுக்கு அப்படீங்கறீங்க...புரியுது...

தி.மு.க. ஆட்சியில கள் இறக்க அனுமதி வழங்க போறாங்களாம்...அதுவும் கள்ளை இண்டர்நேஷனல் லெவல்ல ( ஐரோப்பாவுக்கு) ஏற்றுமதி வேற செய்ய போறாங்களாம்...

ஊருக்கு போனா காலையில கெளம்பிற வேண்டியது தான்...பாத்ரூமுக்கு இல்லங்க...ஒருமரத்து கள்ளு அடிக்க...ஹி ஹி...

கள் உண்ண வேண்டும்...ஒருமரத்து கள் உண்ண வேண்டும்...:)

Comments

ஒரு சந்தேகம்.
காலையில் இறக்கி புளிக்கும் முன் குடிப்பது பதநி. இதில் போதை வராது. உடம்புக்கு நல்லதும் கூட.
அதில் சுண்ணாம்பு கலந்து புளித்து (fermenting) அதன் பின் குடித்தால் போதை வரும். இது கள். இதைத்தான் குடிக்க வேண்டாம் என்கிறார்கள்.

இதுதான் நானறிந்தது. என் புரிதல் சரியா?
ரவி said…
ஹய்யோ கொத்ஸ்...பதனி என்பது கள்ளோட நீர்த்து போன வடிவம்..

கள் + தண்ணீர் + சர்க்கரை சேர்ந்தது பதனி...

ஊர்ல இப்ப அது எல்லாம் பாக்கெட்ல வருது...ஆனா ஏதோ சக்கரை தண்ணி குடிக்கிற மாதிரி இருக்கும்...
Unknown said…
ரெண்டுமே தப்பு..

இன்னைக்கு நேரமாச்சு.. நாளைக்கு வந்து விரிவா விளக்கறேன்.. அதுகுள்ள வேற யாரும் சொன்னாலும் சரி :)
பனை மரத்தில் குருத்தை வெட்டி சுண்ணாம்பு தடவாமல் பானை கட்டினால் கிடைப்பது கள்.
குருத்தில் சுண்ணாம்பு தடவினால் பதநீர்.
என்னங்க ராசா சரியா???????????
Unknown said…
சுண்ணாம்பு போட்டது பதநீ(ர்)...
சுண்ணாம்பு போடாமப் புளிக்க வச்சாக்
கள்.. முன்னது உடம்புக்கு நல்லது...பின்னது மனசுக்கு நல்லது :))

என்ன ராசா சரியா?? தப்பா இருந்தா சொல்லுங்க...

அன்புடன்,
அருள்.
யாழ்ப்பாணத்தில் கள் தனித்துவமான ஒரு மதுபானம். ஏனெனில் அங்கு பனைகள் அதிகம், தென்னங்கள்ளும் பிரபலமானதே.

கள் உண்டால் சலரோகம் (சிறுநீரகம் சம்பந்தப்பட்ட வியாதி) அடங்கும் என்பது ஒரு நம்பிக்கை.
எங்களூரில் செய்யப்படும் அப்பம் என்ற உணவு (கேரளாவிலும் கிடைக்கும்) செய்வதற்கு சிறிது கள் சேர்த்தால் சுவை கூடும் என்பது நம்பிக்கை.
This comment has been removed by a blog administrator.
கள்(நாயக்)!

கள் குடித்தல், நமது தமிழ்குடிகளின் தொண்மையான் பழக்கம் நன்பர்களே! காந்தி என்ன கடவுளே சொன்னாலும் மாற்றகூடாது.
ஒரு நாளைக்கு ஒர் ம(ஜ)க்கு அடித்தால் உடல் உழ்ணம் குறையும், ஆழ்ந்த உறக்கம் தரும் இம்மாதிரி பல பல நன்மைகள் உண்டு. ஆதலால் நம்ம அண்ணன் (auto)ரவி சொல்வது போல்
"களுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றோரெல்லாம்
கால்(quarter) உண்டு சாவார்"
ரவி said…
நன்றி இந்தியன் அவர்களே...
Unknown said…
ஏற்க்கனவே அருட்பெருங்கோ சரியா சொல்லிட்டாரு.. இனி நான் சொல்ல என்ன இருக்கு..

நாகை சிவா'வு சரிதான் :)

தென்னையோ இல்லை பனையோ, பாளையில கட்டுற பானையில சுண்ணாம்பு தடவி கட்டி எடுத்தா அது பதனி.. சுண்னாம்பு இல்லாம எடுத்தா அது கள்ளு..

பனங்கள்ளை விட தென்னங்கள்ளு ருசி அதிகம் (என்னை பொருத்த வரை)

ஆனா கடையில கிடைக்கிறது (கேரளாவுல மட்டும் தான் இப்போதைக்கு) கள்ளே கிடையாதுன்னு தான் நான் சொல்லுவேன்..

1:4 ங்கிற அளவுல தண்ணிய ஊத்திடுவாங்க.. அதுகூட இன்னுமொரு வில்லங்கமான சமாச்சாரம் இருக்கு.. இந்த தலவலி, திருகுவலிக்கு போடுற மாத்திரைய வேற கலக்கிவிட்டுருவாங்க.. 'கிக்' கேப்பமில்ல நம்ம :)

காலையில தோட்டத்துல இருந்து கள் எடுத்துட்டு போனா அது அடுத்த நாள் காலையில தான் கடைக்கே வரும்..
சும்மா இறக்கிவச்சாலே பால் மாதிரி பொங்கிவர்ற கள்ளு, கடையில வாங்கி பார்தீங்கன்னா வெறும் நீர்மோர் மாதிரி தான் இருக்கும்..

ஒரு மரத்துக்கள்ளு எப்பவுமே விஷேசம் தான்.. தனி ருசியிருக்கும்.. காய்க்கு காய் இளநி'யில வித்தியாசம் இருக்கிற மாதிரி.. அவ்ளோ தான்.. மத்தபடி ஒருமரத்து கள் நல்லதுங்கிறதெல்லாம் தமாசு தான்.. என்ன பூச்சுமருந்து ஊத்தாத மரமா பார்த்து செலக்ட் பண்ணி நம்ம மட்டும் அடிக்கலாம் :)

எதோ ஒன்னு. கள் இறக்க அனுமதி தந்தா ஒரளவுக்காவது (என்னை மாதிரி) விவசாயிக நிலமை மாறும்..

(தனிமெயில் போட்டு பதில் சொல்ல வர சொன்ன ரவி'க்கு நன்றி)
ரவி said…
கலக்கிட்டீங்க ராசா...இதுவே ஒரு தனிப்பதிவு மாதிரி இருக்கு...

கள் எறக்கும்போது சொல்லிவுடுங்க..:)
தலைவா, நம்ம சென்னைக்கு பக்கத்துலே பள்ளிக்கரணையில் இப்பவும் கள் கிடைக்குது... சூப்பர் சரக்கு.... தொட்டுக்க எறா ஊறுகாய்....
paarvai said…
வட இலங்கையில் பனங்கள்; பிரபலம்!
இங்கே! பின்னூட்டமிட்டசிலர் கூறியது;போல் முட்டியுள் சுண்ணாம்பிட்டால்; நொதியம் என்ற இரசாயன மாற்றம் நடை பெறாததால்;புளிப்புறுவதில்லை. இதை யாழ்ப்பாணத்தில் "கருப்பநி" எனக்கூறுவர்.இந்தியாவில் பதநீர் என்பது போல் எனக் கொள்ளலாம்; இது சூட்டைத் தணிக்குமெனும் நம்பிக்கையுண்டு.பனைகள் கள்ளிறக்க குத்தகைக்கு எடுக்கும் போது; ஒரு ஆண்பனையை ;அந்த பனைகளின் உரிமையாளருக்கு; விரும்பின் "கருப்பநி" யாக்கித் தருவார்கள்.
நான் சிறுவனாக இருந்த போது;எங்கள் வீட்டில் ;எனக்கு கணச்சூடு இருக்கென; இந்த கருப்பநி வாங்கி; அதன் மணத்தால்;நான் குடிக்கமறுத்த போது;மருந்து பருக்குவது போல் வாயை நெரித்துப் பருக்கியது. 40 வருடங்கள் கடந்தும்; மறக்கமுடியவில்லை.
2004 ல் ,திருச்செந்தூர் சென்ற போது; அதிகாலை மொட்டை போட்டு( ஆமாம் செந்தூர் மொட்டை)கடல் நீராடித் திரும்பும் போது;காலை 7 மணிக்கே; பாதையோரம்; கோவிலுக்கு 200 மீற்றர் தூரம் கூட இருக்காது; ஆண்களும்;பெண்களும்; மண்பானைகளிலும்;பித்தளைப் பாத்திரங்களிலும்;வைத்து விற்றுக் கொண்டிருந்தார்கள். என் மனைவியிடம்; கள்ளெனக் கூறிய போது; விற்றவர் ஒருவர் "இல்லை-பதநி" எனத் திருத்தினார்.அவ்விடம்,எம்மை ஆச்சரியப் படித்தியவிடயம்! "காவிகட்டி;தாடி சடாமுடி;நீற்றுப் பூச்சுடன் "(ஆ) சாமியார் ஒருவரும்; சாவதானமாகப் பருகிக்கொண்டு நின்றார். என்ன? சூடோ? யாரறிவார்?,,வட இந்தியச் சாமிமாரும் கஞ்சா புகைப்பதை தொலைக்காட்சியில் பார்த்துள்ளேன்.என்ன? புலனடக்கமோ,,,?
இது வரை இந்த ஆசைகள் தோன்றவில்லை.
யோகன் பாரிஸ்
மகேஸ் said…
ஒரு மண் சட்டியின் உட்புறம் சுண்ணாம்பு தடவி, குருத்தை சிறிதளவு வெட்டி மண் சட்டியைத் தொங்க விடுவார்கள். மறுநாள் காலையில் அதில் சேர்ந்திருக்கும் நீர் பதநீர். உடலுக்கு மிகவும் நல்லது.

பதநீரை ஒரு சட்டியில் வைத்துக் காய்ச்சினால் பனை வெல்லம். அப்போது ஏதோ ஒரு பொருளைச் சேர்ப்பார்கள்(என்ன பொருள் என்று தெரியவில்லை). பின் அது பனங் கற்கண்டு ஆகும்.

சுண்ணாம்பு தடவாமல் இருந்தால் கள்.
இது சிறிது போதை தரும். ஒரு மாதிரி கசப்பாகவும், துவர்ப்பாகவும் இருக்கும். உடலுக்கு நல்லது.

இந்தக் கள்ளை இரண்டு நாட்கள் வைத்திருந்தால் கிடைப்பது கடுங்கள்.
கடுங்கள் மிகவும் போதை தரவல்லது. உடலுக்கு நல்லதல்ல.

ஒரு மரத்தின் குருத்தை பதநீர்/கள்ளுக்கு வெட்டி விட்டால் அந்த மரத்தில் நுங்கு காய்க்காது. அதாவது பனை மரத்தின் பூதான் அந்தக் குருத்து. அப்புறம் எப்படி நுங்கு கிடைக்கும்.

எங்க ஊரைச் சுற்றிலும் பனை மரங்கள் தான். தனியாகப் பனங்காட்டிற்குள் போவது கொஞ்சம் பயமாகத்தான் இருக்கும். தகவல் போதுமா?
ரவி said…
யப்பா....கலக்குறீங்களே அய்யனே...
ரவி said…
அடுத்தது சாராயம் காய்ச்சுவது எப்படின்னு ஒரு பதிவு வருமோ....
paarvai said…
தென்னிலங்கையில்; தென்னங்கள்ளில் சாராயம் தயாரிக்கிறார்கள், இதைவிட கித்துள் எனும் ஈஞ்சுவகை மரத்திலிருந்தும், கள்ளிறக்குவார்கள்; இது இனிப்புக் கூடியது என்று கேள்விப்பட்டுள்ளேன். இதில் இருந்து
கித்துள் வெல்லம் தயாரிப்பார்கள்; சர்க்கரை போல் இருக்கும். கதிர்காமம் செல்பவர்கள்;வாங்கிவருவார்கள்
அடுத்து; எகிப்தில் பேரீச்சம் மரத்தில் இருந்து கள் இறக்குவதை; தொலைக் காட்சியில் பார்த்தேன்.
யோகன்
பாரிஸ்
Amar said…
//அதுவும் கள்ளை இண்டர்நேஷனல் லெவல்ல ( ஐரோப்பாவுக்கு) ஏற்றுமதி வேற செய்ய போறாங்களாம்...
//

பேக்கேஜ் பன்னி பெரிய பில்டப் குடுத்து ஏற்றுமதி செஞ்சா நல்ல ஸ்கோப் இருக்கா?

சொல்லுங்க, நாம் அடுத்த விஜய் மால்யா ஆகிடலாம்.
paarvai said…
தென்னிலங்கையில்; தென்னங்கள்ளில் சாராயம் தயாரிக்கிறார்கள், இதைவிட கித்துள் எனும் ஈஞ்சுவகை மரத்திலிருந்தும், கள்ளிறக்குவார்கள்; இது இனிப்புக் கூடியது என்று கேள்விப்பட்டுள்ளேன். இதில் இருந்து
கித்துள் வெல்லம் தயாரிப்பார்கள்; சர்க்கரை போல் இருக்கும். கதிர்காமம் செல்பவர்கள்;வாங்கிவருவார்கள்
அடுத்து; எகிப்தில் பேரீச்சம் மரத்தில் இருந்து கள் இறக்குவதை; தொலைக் காட்சியில் பார்த்தேன்.
யோகன்
பாரிஸ்
ரவி said…
//சொல்லுங்க, நாம் அடுத்த விஜய் மால்யா ஆகிடலாம். //

அதுக்கு எல்லாம் வேற பிசினஸ் மேன்ஸ் இருப்பாங்க...லக்கி கோச்சுக்க போறார்..:)

ஏதோ விவசாயிகள் பலன் அடைந்தா சரி...
ரவி said…
//சொல்லுங்க, நாம் அடுத்த விஜய் மால்யா ஆகிடலாம். //

சொர்ண மால்யா ஏதாவது கோச்சுக்க போறாங்க... அவரு மல்லைய்யா...ஹும்ம்...சொகவாசிங்க அவரு..
paarvai said…
ஏற்கனவே! ஐரோப்பாவில் போத்தல் கள் இருக்கிறது; தாய்லாந்தில் இருந்து வருகிறது.
யோகன் - பாரிஸ்
ரவி said…
தாய்லாந்து கள்ளுக்கு போட்டியா நம்ம தாய்நாட்டு கள்ளு...

சூப்பரப்பு...
சுண்டக் கஞ்சி அடிச்ச அனுபவம் உண்டா ரவி? அதுவும் பூண்டு ஊறுகாயைத் தொட்டுக்கொண்டு!
ரவி said…
வாய்ப்பு கிடைக்கவில்லை...அதோட சுவை பத்தி விளக்கினா நல்லா இருக்கும்...
Karthik Jayanth said…
கள் பத்தி எற்கனவே எல்லாரும் புளி, உப்பு போட்டு விளக்கிட்டாங்க.. நான் பார்த்தது மகேஸ் சொன்ன மாதிரி.. என்னுடைய தனிபட்ட ஓட்டு தெனைமரத்துகள்ளுக்கே

//சுண்டக் கஞ்சி

இது வெள்ளை கலர்ல இருக்கும்.. அரிசிய வாங்கி நல்ல குழைய வடிச்சி அந்த பானைய உப்பு தண்ணி இருக்குற மண்ணுல 1 வாரம் புதைச்சி வச்சி அப்புறம் எடுத்து எதோ மூல பொருள்களை போட்டு காய்ச்சி அது சுட சுட இருக்கும் போது குடிப்பாங்கன்னு கேள்வி.. அது மிகவும் போதை தரும் என்பது கூடுதல் தகவல்..

செய்முறை அறிந்த வல்லுணர்கள் விளக்கினால் நலம்.. :-)
Rajeshatlantis said…
கள் எத்தனை நாள் வீட்டில் வைத்து குடிக்கலாம்...

Popular Posts