நான் படித்த பள்ளி (புனித வளனார் / மஞ்சக்குப்பம், கடலூர்) விளையாட்டு மற்றும் கட்டுப்பாட்டுக்கு மிகவும் பிரசித்தி பெற்றது...பரீட்சையில் பிட் அடித்தால் உடனே டி.சி தான்....அது பள்ளியே வைக்கும் சப்பை ரிவிஷன் டெஸ்ட் - பரீட்சையாக இருந்தாலும் சரி....
சரி விஷயத்துக்கு வருவோம். நான் +2 படிக்கும்போது நிகழ்ந்த சம்பவம் இது..
எனக்கு கணித ஆசிறியராக இருந்தவர் பெயர் 'மாவு'. அந்த பள்ளியில் கணிப்பொறி துறை தலைவராகவும் இருந்தார்...
இவர் கையில் பிரம்பு எடுத்தால் கண் மண் தெரியாமல் சாத்துவார்...தான் ஒரு வீராதி வீரன், சூராதி சூரன் என்றும் வாய்க்கு வந்தபடி உளறிக்கொட்டிக்கொண்டிருப்பார்...
நான் என் வாழ்க்கையில் பார்த்த ஆசிரியர்களில் மிகவும் கேவலமானவர் இந்த 'மாவு'. இவரிடமே கட்டாய டியூஷன் படிக்கவேண்டிய கட்டாயத்துக்கு ஆளானோம்..விடுதி மற்றும் உள் விடுதி மாணவர்கள்...
அவர் சொல்வது தான் கணிதம்...அவர் சொல்வது தான் விடை...யாரும் சந்தேகமும் கேட்க கூடாது...எதுவும் கேட்க கூடாது...வகுப்பறை சவக்களை பூண்டிருக்கும், இவர் உள்ளே நுழைந்துவிட்டால்....
மாதம் ஒரு முறை நிகழும் ரிவிஷன் டெஸ்டில் கணிதத்தேர்வு நடந்தது...அதற்க்கு முன்னால் தேர்வுக்காண பாடத்திட்டங்கள் சொல்லப்பட்டது...குறைந்த அளவு சிலபஸ் மட்டும் இருந்ததால், எந்த கேள்விகள் வரும் என்று என்னால் ஓரளவு கணிக்க முடிந்தது...
அதில் ஒன்றுதான் இந்த சைன் தீட்டா ஈக்குவேஷனை டிரைவ் செய்யும் கணக்கும்...இது ஒரு 10 மதிப்பெண் கணக்கு...மொத்தம் 50 மதிப்பெண்க்கு தேர்வு, அதில் இந்த கேள்வி கட்டாயம் இருக்கும் என்று எதிர்பார்த்தேன்...
எங்கள் வகுப்பு மொத்தம் 50 மாணவர்களை கொண்டது..அதில் பதினைந்து பேர் அங்கேயே உள்ள ஹாஸ்டல் மாணவர்கள்...5 பேர் போர்டிங் மாணவர்கள்...(போர்டிங் என்பது கிறிஸ்தவர்கள் மட்டும் பயில்வது)..மீதம் உள்ள மாணவர்கள், தினமும் வந்து செல்பவர்கள்...அவர்களை டேஸ்காலர் என்று அழைப்போம்...
பரீட்சைக்கு முதல் நாள், விடுதியில் என் இடத்தில் அமர்ந்து கணிதப்புத்தகத்தை புரட்டிக்கொண்டிருந்தேன்...சைன் டீட்டா பை டீட்டா ஜீரோ வருமா அல்லது டீட்டா வருமா என்று சந்தேகம் வந்தது...புத்தகத்தில் உள்ள விடைப்படி, அது ஜீரோ...ஆனால் நான் சிறிய அளவில் செய்து பார்க்க, அதை டீட்டா என்றும் நிறுவ முடியும் என்று தோன்றியது...
சரி என்று கிறுக்கி வைத்துவிட்டு, என் நோட்டுப்புத்தகத்தை என் மேசைமேல் வைத்துவிட்டு வெளியே சென்றேன்...
வழக்கமாக என் நோட்டை பார்த்து எழுதும் பிரான்சிஸ் என்ற மாணவர் ( திருச்சி - லால்குடியை சேர்ந்தவர்) அதை எடுத்து சென்றுவிட்டார்...அவர் நான் எழுதிய வகையில் அந்த கணக்கை எழுதிக்கொண்டார், காரணம் அவர் இரண்டு நாட்களாக டியூஷன் வரவில்லை...அவர் அது மாவு போட்ட கணக்கு என்று நினைத்துவிட்டார்...ஆனால் அது ஆப்பு போட்ட கணக்கு என்று யாருக்கும் தெரியவில்லை...
அவர் நோட்டை பார்த்து மேலும் இருவர் ( சபரி மற்றும் எழில்), எழுத, இன்னொருவரும் எழுத, புத்தகத்தில் இல்லாத ஒரு விடையை, 'மாவு' போட்ட கணக்குக்கு நேர்மாறாக உள்ள விடையை அனைவரும் எழுதிவிட்டனர்...படித்துவிட்டனர்...
அடுத்த நான் தேர்வில், எதற்க்கு 'மாவு' இடம் வம்பு என்று நான் 'மாவு' போட்டமாதிரியே கணக்கை போட்டுவிட்டேன்...
ஆனால், விதியின் சதி, மற்ற அனைவரும், நான் எழுதி இருந்தது போல், சைன் டீட்டா பை டீட்டா = டீட்டா என்று எழுதிவிட்டனர்..
'மாவு' பேப்பர் திருத்தும்போது விஷயத்தை கண்டுபிடித்துவிட்டது...
எவன்டா இவன், புதிய ஸ்டெப்புகளில் கணக்கை விரைவாக முடித்தது, மேலும் இது நாம் கொடுத்த விடை இல்லையே என்று கோபம் தலைக்கேற வகுப்புக்கு வந்தார்...
வந்தபோதே கையில் பிரம்போடு வந்தார்...சபரி மற்றும் எழில், மேலும் பிரான்சிஸ் இவர்களை அழைத்தார்...
முட்டி போடவைத்து சாத்து சாத்தென்று சாத்துகிறார்...வகுப்பறையே பேஸ்து அடித்தது போல் நிற்கிறது...
இந்த மூவரும் ஏன் அடிக்கிறான் இவன் என்று கூட தெரியாமல் கதறுகிறார்கள்...
நன்றாக அடித்துவிட்டு கையில் இருந்த வினாத்தாள்களை அவர்கள் முகத்தில் எறிகிறான்...
இந்த கேள்விக்கு விடை எப்படி எழுதினாய் என்று குடைந்து எடுக்கிறான்...
அவனுக்கு, எவனாவது நம்ம டியூஷன் பசங்களை வளைச்சி போட்டிட்டானா என்று வெறி...
என் நன்பர்கள் கதறுகிறார்கள்...
என்னை காட்டிக்கொடுக்க மனம் இல்லை அவர்களுக்கு....ஏதோ ஒரு நோட்டில் இருந்து எழுதினோம், எங்களுக்கு தெரியாது என்று அத்தனை அடியையும் தாங்கிக்கொள்கிறார்கள்...
என்னால் ஒரு கட்டத்துக்கு மேல் பொறுக்க முடியவில்லை...
கடைசி பெஞ்சில் இருந்து எழுந்து சென்றேன்...
நான் தான் அந்த கணக்கை போட்டேன் என்றேன்...
உடனடியாக மற்றவர்கள் அனைவருக்கும் விடுதலை கிடைத்தது...
அது கல்வியாண்டின் முதல் காலாண்டு....
'மாவு' சொல்கிறார்...டேய்...நீ அதை போடலை...எவனோ ஒருத்தன் போட்டது...அது யார் ? எவெங்கிட்ட டியூஷன் போன ? அதை சொல்லும் வரைக்கும் என் வகுப்பில் நீ வெளியே தான் நிற்க்கவேண்டும்...டேய்...எவனும் இவனுக்கு நோட்ஸ் கொடுக்க கூடாது...இவன் கணக்கு பாடத்தில் பெயில் ஆகனும்...இனி நீ டியூஷன் வரக்கூடாது....போர்டிங் தானே...காம்பவுண்டு சுவரை விட்டு வெளியில் போனால் அடுத்த நிமிடம் உனக்கு டி.சி...இப்போ சொல்லு...யார் அந்த கணக்கை போட்டது...எவங்கிட்ட திருட்டுத்தனமா டியூஷன் போனே ? என்னைய விட நல்லா நடத்துறானா ?
நான், இல்லை சார், நான் தான் போட்டேன்...என்றேன்...
அவர் நம்பவில்லை அல்லது நம்ப முடியவில்லை !!!
நீ மண்டியிடு வெளியே என்றார்...
ஆறுமாதம் வனவாசம் போல், 'மாவு' வகுப்பு வந்தால் வெளியே மண்டியிட வேண்டும்...(Kneel Down)
மேலும் மாவு சொன்னார்....நீ இன்னும் பத்தாண்டுகள் ஆனாலும், உன்னை நான் சரியாக அடையாளம் கண்டுபிடிப்பேன்...என்னை ஏமாற்றலாம் என்று நினைக்காதே....
ஆயிற்று...
கணிதப்பாடத்தில் அவ்வளவு அதிகம் இல்லை என்றாலும் 200 க்கு ஒரு 147 வாங்கினேன்...
காலச்சக்கரம் சுழல்வதாக கற்ப்பனை செய்துகொள்ளுங்கள்....
2001 ஆம் ஆண்டு...நான் கல்லூரி இளங்கலை முடித்து (முதுகலைக்கு போகும் முன்பதான இரண்டு ஆண்டுகள்) பாண்டிச்சேரியில் சிறிய வேலை செய்துகொண்டிருந்தேன்...
என் தந்தையார் கடலூரில் காவல் அதிகாரியாக பணி புரிந்துகொண்டிருந்தார்..(திரு சைலேந்திரபாபு ஐபிஎஸ் அவர்களின் தனிப்பட்ட 'செல்ல' இண்டெலிஜென்ஸ் பிரிவு) .நானும் அவரும் போலீஸ் குவார்டர்ஸில் தங்கி இருந்தோம்....
ஒருநாள்...நான் அலுவலகத்துக்கு செல்வதற்க்காக, பஸ் நிலையத்தில் நின்றுகொண்டிருந்தேன்...
அப்பா வேகவேகமாக வந்து என்னை நிறுத்தினார்...ஜீப்பில் ஏறும்படி அழைத்தார்...என்ன விஷயம் என்றேன்...
டேய், நீ படிச்ச ஸ்கூல்ல கம்பியூட்டர் எல்லாம் திருடு போயிருச்சு போனவாரம்... இப்ப ஒரு பய மாட்டி இருக்கான்....நான் ஸ்டேஷன்ல இறங்கி அந்த பயலை கொஞ்சம் தட்டிக்கிட்டிருக்கேன்....அந்த ஹெச்.ஓ.டி இப்போதான் போன் செய்தார்...அந்த கம்பியூட்டர் பார்ட்ஸ்ல எல்லாம் ஏதோ மார்க்கிங் இருக்குமாம்...நீயும் ஏட்டைய்யாவும் போயி பாருங்க...அது என்னா மார்க்கிங்க் அப்படீன்னு சொல்லுங்க...அதுக்கப்புறம் நீ ஆபீஸ் போடா...என்றார்...
போப்பா...உனக்கு வேற வேலை இல்லை...எனக்கு ஆபீஸ் டைம் ஆச்சு...நான் போவனும்...கஸ்டமர் வெயிட் பண்ணுவார் என்றேன்...
அட நான் ஜீப்புல கொண்டு போயி விட்டுட சொல்றேண்டா...நீ கூட உங்க கணக்கு வாத்தியாருன்னு போன மாசம் மார்க்கெட்டுல காட்டுனியே...அவர்தாண்டா ஹெச்.ஒ.டி...
மேற்க்கொண்டு பேசாமல்...ஏட்டைய்யா, வண்டியை ஸ்கூலுக்கே விடுங்க என்றேன்...
ஹெச்.ஓ.டி அறை...
ஏட்டைய்யா யூனிபார்மில் இருக்கிறார்...அதனால் நேராக என்னை அழைத்துப்போகிறார்...
சார்...இது எங்க அய்யாவோட மகன்...கம்பியூட்டரு படிச்சிருக்காரு...என்னா மார்க்கிங் இருக்கும் அப்படீன்னு சொல்லுங்க, ஸ்டேஷன்ல போயி பொருந்துதான்னு பார்ப்பார்...என்றார்...
அட...நம்ம மாவு....ஏழெட்டு வருஷம் ஆனாலும் அப்படியே இருக்காருப்பா...
வாங்க சார்...என்றார்...( அட நம்மளை சார் போட்டு கூப்பிடறார்...)
பாருங்க சார்...இது தான் சார் நம்ம ஸ்கூல் ரேம்...(RAM)...இதுல எச்.ஜே ன்னு போட்டிருக்கு பாருங்க சார்...(அட எத்தனை சாரு...)
ம்ம்ம்..பார்க்கிறேன்...
சார், உங்களை எங்கியோ பார்த்த மாதிரி இருக்கே சார்...நீங்க இங்கேயா சார் படிச்சீங்க...என்றார் மாவு...
இல்லைங்க...பத்தாவதோட நின்னுட்டேன்...கணக்கு சரியா வரலை...என்றேன்..
22 comments:
:)))
மனைவி அமைவது மட்டுமல்ல,
ஆசிரியர்கள் அமைவதும்
இறைவன் கொடுத்த வரம் தான்.
nalla iruka ravi..
neenga 'Rosa'*-vathaan solureengannu nenaikiren...he he...naanum antha aal kitta padichavanthaan....
அருமையாக படைத்துள்ளீர் நன்பரே.
நன்றி அனானி நன்பரே..
பள்ளி நினைவுகளை இவ்வளவு தூரம் நியாபகம் வைத்திருப்பதே அருமையாக உள்ளது.
நீங்க அவரை தனியா பாத்து பேசியிருக்கலாம்...
அவர் ஒருத்தர் மட்டும்னு இல்ல.. எல்லா வாத்தியாருங்களுமே அவுங்ககிட்டதான் டியுஷன் படிக்கனும்னு சொல்லுவாங்க...
கெமிஸ்ட்ரி வாத்தியார் எங்க க்ளாஸ்ல சொன்னது "நீங்க என்கிட்டதான் டியுஷன் படிக்கனும்.. இல்லனா லேப்க்கு 50 மார்க் இருக்கு அதுல முட்டைதான் போடுவேன்... பாதர் வேணாலும் கம்ப்ளைண்ட் பண்ணிக்கோ"...
L'hospital's rule படி
Lt theta -> 0 sin(theta)/ theta = 1 ,
நீங்க எழுதினதும் தப்பு , மாவு சொன்னதும் தப்பு. :-)
சூப்பர்!
இப்பிடித்தான் நான் 7ம் வகுப்பு படிக்கும்போது ஒரு காட்டுமிராண்டி வாத்தியார் இருந்தார். 'Breathes there the man, with soul so dead' என்ற poem மனப்பாடமாக ஒப்பிக்காதவர்களை (of course அடியேனும் அதில் அடக்கம்) சும்மா பின்னிவிட்டார். நாங்கள் எல்லாரும் சேர்ந்து முட்டையை மந்திரித்து வைத்தால் அந்தாளுக்கு கை கால் இழுத்துவிடும் என்று ஆரம்பித்தி, கடைசியில் பயத்தால் அந்த எண்ணத்தை கைவிட்டோம் :D
ரோஸ், லச்சுமி, பெலிக்ஸ் அல்லாரும் ஒரே கேட்டகிரி தான்...
எனக்கு புடிச்ச வாத்திஸ்...அந்து,சகா,ஜிபி...திருமல தாத்தா :))
நல்லா எழுதி இருக்கீங்க ரவி.
பாவம் 'மாவு':-))))
கடைசிவரைக்கும் நீங்க யாருன்னு சொல்லலையா?
///
மனைவி அமைவது மட்டுமல்ல,
ஆசிரியர்கள் அமைவதும்
இறைவன் கொடுத்த வரம் தான்.
///
சரியா சொன்னீங்க வெங்கட்...
///கடைசிவரைக்கும் நீங்க யாருன்னு சொல்லலையா? ////
சொல்லலாம் என்றுதான் நினைத்தேன்..அவர் மனம் கஷ்டப்படுவார் என்று சொல்லவில்லை..
///
ரோஸ், லச்சுமி, பெலிக்ஸ் அல்லாரும் ஒரே கேட்டகிரி தான்...////
பெலிக்ஸ் ஒரு முறை குட்டுனார் பாரு என்னை !! யப்பா ?
லட்சுமி - பயங்கரம்...வகுப்பே நடுங்கும்...ஸ்ட்ரெஸ் பாஸ் சரியா செய்யலைன்னு ஒரு பையனை அறைஞ்சு மூஞ்சி கிழிந்துவிட்டது...
தமிழ் யார்கிட்ட படிச்சீங்க ?
கடைசியா தமிழ் யார்கிட்ட படிச்சேன்னு ஞாபகம் இல்ல...ஆனா கோ.வெ வோட கடைசி வருசத்துல அவர்கிட்ட தான் தமிழ் படிச்சேன்...+2 லேயும் ஒரு தங்கமான மனுசன் தான் ஆனா பேர் ஞாபகம் வரல..சுப்பு?வா இருக்குமோ.11 வருசம் ஆச்சு...ஹ்ம்ம்ம்
இங்லிபிஷ் ராசா கிட்ட...
கலக்கல் ரவி :))
dei, unakkulla oru erumai, chee, ezuthalai olinjurukkan da
- BIT Rajesh,
DUBAI
இதைப்்டித்துக் கொண்டிருக்கும் பொழுதே, நேற்று பார்த்த Pelle, the conqueror என்ற படத்தில் பார்த்த ஆசிரியர் நினைவுக்கு வந்தார்...ஆயினும் கேவலமான என்ற வார்த்தையினை தவிர்த்திருக்கலாம். எனக்கும் இதைப் போன்ற அனுபவங்கள் உண்டு. ஆயினும், இன்று திரும்பிப் பார்க்கையில் அவர்கள் மீது அனுதாபம் கலந்த மரியாதையே ஏற்ப்படுகிறது.
Interesting blogpost Ravi ... Nothing so eventful happened during my school days ... dont know if it for good or bad :-) @sweetsudha1
நீங்கள் சொல்வது சரிதான் ! இப்போது ஏழெட்டு ஆண்டுகள் கழித்து படிக்கும்போது எனக்கே பிடிக்கவில்லை. இப்படித்தான் பதிவு செய்யப்பட்டது 2006 மற்றும் இப்படித்தான் நடந்தேறியது 1996ல் :))
Post a Comment