திருடன் திருடன் திருடன்

அலுவலக விஷயமாக ஆன்சைட் வந்து ரெண்டு வாரம் ஆகுது...நேற்று அலுவகத்தில் இருந்து நேரம் கழித்து வந்து டிவிடியில் ரெண்டு ஆங்கிலப்படத்தினை அடுத்தடுத்து பார்த்துவிட்டு களைத்து உறங்கியதில்....

குளிருக்கு இதமாக ஹீட்டருக்கு அருகில் பெரிய போர்வையுடன் படுத்தால் திருடன் வந்தால் கூட...ஆங்...

சன்னல் ஓரம் என்னுடைய படுக்கை....

வெளியே ஏதோ சத்தம்...யாரோ நடப்பது போல , ஓடுவது போல...

என்னுடைய அப்பார்ட்மெண்ட் ரொம்பவே செக்யூர்ட். ஒரு குறிப்பிட்ட எண்ணை உள்ளீடு செய்யவில்லை என்றால் மெயின் டோரையே திறக்க முடியாது...

யாரோ மெயின் டோரை திறக்கும் சத்தம் கேட்கிறது...

அப்படியே திருடன் உள்ளே வந்தாலும் நான் தான் அறைக்கதவை உள்பக்கமாக பூட்டியிருக்கிறேனே ?

என்ன பெரியதாக இருக்கிறது என்னிடம் ? மடிக்கணினி, ஒரு இருமல் மருந்து பாட்டில், சலவை செய்து இஸ்திரி போடப்படாத துணிகள், வேலட்டில் ஒரு க்ரெடிட் கார்ட், யூரோ கார்ட், ஐம்பது யூரோ நோட்டு ஒன்று, ஐநூறு சுவீடிஷ் க்ரோனர் மற்றும் ஒரு ஐந்து யூஸ் டாலர் நோட்டு...அப்புறம் இரண்டாயிரம் இந்திய ரூபாய்கள்...

உண்மையிலேயே கண்ணை திறந்து பார்க்க முடியவில்லை என்பது தான் உண்மை...கொஞ்சம் கஷ்டப்பட்டு முயற்சி செய்தேன்,ம்ஹும்...முடியலை...

எதையாவது எடுத்துக்கிட்டு போங்கப்பா...ஆளை விடுங்க...இந்த குளிரில் தூக்கத்தை கெடுக்காமல் இருந்தால் போதும் எனக்கு...

ஒரு சிறிய க்ளக் சத்தம்...

கார்ப்பெட்டில் யாரோ நடக்கும் சத்தம் கேட்கிறது...அய்யய்யோ...வந்துட்டீங்களாடா...

துப்பாக்கியால ஏதும் சுட்டுத்தொலையாதீங்கடா...

தடக் தடக் என்று இதயம் கூட்ஸ் வண்டிமாதிரி துடிக்க ஆரம்பிக்கிறது...

இப்போது யாரோ நடக்கும் சத்தம், இரண்டு மூன்று பேர் கிசுகிசுக்கும் சத்தம்...

என் அருகில்...என் படுக்கைக்கு மிக அருகில்...

மெதுவாக ஓர கண்ணை திறந்து பார்க்க முயற்சி செய்கையில் ஏதோ முகமூடியணிந்த உருவம் என் முகத்துக்கு வெகு அருகே...ஸ்ஸ்ஸ்ப்ப்ப்ப்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.....

ஏதோ ஸ்ப்ரேயை ப்யீச்ச்சி....நான் அப்படியே செமி ஸ்லீப் நிலைக்கு...

முழுமையாக மயங்குவதற்கு முன், காவல் துறையினர் வந்தால் ஸ்ப்ரேயை அடித்தது வரை சொல்லவேண்டும் என்று நினைத்துக்கொண்

****************
**************
************
**********
********

இது ஒரு சிறுகதை என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்...(அதை நீ சொல்லித்தான் தெரியவேண்டியிருக்கு என்று சலித்துக்கொள்ளாமல் ஓட்டு குத்தவும் )

*******
******
*****
****
***

Comments

தூஉ டென்சன் ஆகிட்டேன். ஏதோ ஹீரோ மாதிரி செவுத்துல கால வெச்சி சுத்தி சுத்தி அடிப்பீங்கன்னு பார்த்தா, இப்படி ப்லாட் ஆகுறதுதான் ஹீரோத்தனமா?
புனைவா!

திரும்பி வர காசில்லைன்னு இங்கே நான் வசூல் பண்ணிகிட்டு இருக்கேன்!

(தமிழ்நாட்டுல வசூல் பண்ரதெல்லாம் போய் சேர்ந்திருதா என்ன?
ரவி said…
ஏவ் இது கதை...சிறுகதை...
ரவி said…
yes thanks for the comment ila
nagai said…
twoooo.... much

Popular Posts