தொங்கபாலு பாண்டிச்சேரியில் உண்ணாவிரதம் இருப்பாரா ?

தமிழகத்தில் கள் இறக்குவதை கண்டித்து உண்ணாவிதம் இஎஉந்த தொங்கபாலு ப்பாண்டிச்சேரியில் பல்வேறு வகை சரக்குகளையும், அரசாங்கமே சாராயக்கடை, கள்ளுக்கடை போன்றவற்றை நடத்துவதை காண்டித்து நெல்லித்தோப்பிலோ அல்லது லாப்போர்த் வீதியிலோ உண்ணாவிரதம் இருப்பாரா ?

தமிழக காங்கிரசில் இருக்கும் முப்பந்தைந்து கோஷ்டிகளில் எந்த எந்த கோஷ்டிகள் இந்த உண்ணாவிரதத்தில் கலந்துகொண்டன ?
இவர்களின் இரட்டை வேடத்தை மக்கள் பிரிந்துகொள்ளவேண்டும்..!!!

ஸ்பெல்லிங் மிஸ்டேக் இருந்தால் மன்னித்துவிட்டு எவ்ளோ ஸ்பெல்லிங் மிஸ்டேக் இருக்கிறதோ அதுக்கு தகுந்த மாதிரி ஓட்டை குறைத்துக்கொண்டு மீதி ஓட்டை போடவும்..

கொசுறு நியூஸ் :

பாண்டிச்சேரியில் ஒரு அரசு சாராயக்கடையின் பெயர் "சொர்க்கம்"..
அங்கே முட்டை பொரியல் மிக சிறப்பாக வறுக்கப்படும்..செல்வம் ஊறுகாய் மட்டை விலை ரூ 1 மட்டும். பாண்டிச்சேரி செல்பவர்கள் ட்ரை பண்ணவும்..ஐஸ் பியர் என்று பாண்டிச்சேரியிலேயே தயாராகும் பியர் கிடைக்கும், அது கிங்பிஷ்ர் போல லைட்டாக கசக்காமல் கொக்கோ கோலா போல இனிக்கும்..

கொசுறு கால்குலேட்டர் :

பா.ஜ+ தி.மு.க + பா.ம.க + வி.சி + ம.தி.மு.க = 40

காம்மன் மினிமம் புரோகிராம் நிபந்தனை ரெண்டு.

1. பிரமோஸ் ஏவுகணையை கொழும்பில் பரிசோதிக்கவேண்டும
2. இலங்கையில் அரசியல் தீர்வை எட்டும் உடன்படிக்கையில் அத்வானி கையெழுத்திடவேண்டும்..

கொசுறு எரிச்சல் :

காலையில் சாப்பிட்டுவிட்டு மதியம் லஞ்சு சாப்பிடாமல் இரவு சாப்பிடுவதற்கு பெயர் உண்ணாவிரதமா ? அப்படியென்றால் நான் முப்பத்தேழாவது நாளாக உண்ணாவிரதம் இருக்கிறேன்.

Comments

காங்கிரஸ் கட்சியில் இருக்கும் மாப்பு சஞ்செய் என்ன சொல்கிறார் என்று அறிய ஆவல்
ரெண்டு ஓட்டும் போட்டாச்சு, ஆனா கள்ள ஓட்டு போட முடியலை
பாண்டிச்சேரி மாஸ் ஹோட்டல் அனுபவம் எதாவது உண்டா.?

அன்புடன்
அரவிந்தன்
பெங்களுர்
///பாண்டிச்சேரி மாஸ் ஹோட்டல் அனுபவம் எதாவது உண்டா.?

அன்புடன்
அரவிந்தன்
பெங்களுர்//

சென்ற வருடம் பொட்டீக்கடையோடு ஒரு சந்திப்பு அங்கே..

மனைவி அருகில் இருந்ததால் அரை பீரை கூட பருகமுடியாத நிலை.

கார் வேறு ஓட்டவேண்டியதால்...

அவன் குடித்ததும் அரை பீர் என்பதை இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன்..

இரண்டாயிரத்தின் ஆரம்பகாலத்தில் மாஸ் ஓட்டலை எட்டத்தில் நின்று பார்க்ககூடிய அளவிலும், ஆனந்தா ஓட்டலில் யார் கல்யாணத்திலோ மொய் வைக்காமல் சாப்பிடக்கூடிய அளவிலும் தான் நமது கொம்பேனியின் தகுதி இருந்தது என்பதையும் பெருமிதமாய் பதிவு செய்கிறேன்...
//அராஜக்கரம் ஒழிக தொங்கபாலு வால்க//

என்று அனானியாக போட விரும்பி, அது முடியாமல், சாட்டில் அளித்த பிரான்ஸு நாட்டைச்சேர்ந்த பிரெஞ்சு அதிபர் சார்க்கோஸிக்கு நன்றி
//ரெண்டு ஓட்டும் போட்டாச்சு, ஆனா கள்ள ஓட்டு போட முடியலை//

அனைத்து ஓட்டுகளும் எனக்கே விழுமாறு தமிழிஷ் மற்றும் தமிழ்மணத்தில் செட்டிங் செய்யுமாறு நிர்வாகிகளை கேட்டுக்கொள்கிறேன்
பாண்டிச்சேரி இந்தியாவிலேயா இருக்கு, அது ஏதோ வெளிநாடு இல்ல,அங்கேயெல்லாம் இவங்க தலையிட மாட்டாங்க.சும்மா புரியாம உளரூரீர்
//அராஜக்கரம் ஒழிக தொங்கபாலு வால்க//

என்று அனானியாக போட விரும்பி, அது முடியாமல், சாட்டில் அளித்த பிரான்ஸு நாட்டைச்சேர்ந்த பிரெஞ்சு அதிபர் சார்க்கோஸிக்கு நன்றி///

தோழர் நேர்மையான கேள்விகள்! நல்ல பதிவு.

கூடுமானவரை அனானிகளை விடாமல் இருப்பதே நலம். இப்படியே தொடருங்கள்.
///பாண்டிச்சேரி இந்தியாவிலேயா இருக்கு, அது ஏதோ வெளிநாடு இல்ல,அங்கேயெல்லாம் இவங்க தலையிட மாட்டாங்க.சும்மா புரியாம உளரூரீர்///

சாரி குடுகுடுப்பை. அந்த நாடு இன்னும் ப்ரான்ஸ் தேசத்திலிருந்து விடுதலை அடையவில்லை என்று எட்டாம் வகுப்பு புத்தகத்தில் படித்ததாக நியாபகம். ஒருவேளை இப்போது விடுதலை அடைந்திருக்கலாமோ என்று நினைத்து எழுதிவிட்டேன்...

வேற்று நாட்டு விவகாரத்தில் நாம் எப்படி தலையிட முடியும் ?

எங்க ஊரில் இருந்து பாண்டிச்சேரி 80 கிலோமிட்டர் என்ற வரலாற்று உண்மையையும் இங்கே பதிவுசெய்ய விரும்புகிறேன்..
1 ஓட்டுக்கு மேல் விழாமல் வேண்டுமானால் செட் பண்ணுகிறேன் என்று தமிழஷ் நிர்வாகி ஒருவர் சேட்டில் சொல்லுகிறார்...
///தோழர் நேர்மையான கேள்விகள்! நல்ல பதிவு.

கூடுமானவரை அனானிகளை விடாமல் இருப்பதே நலம். இப்படியே தொடருங்கள்.///

அனானிகளால் கழக ஆட்சிக்கு இடையூறு ஏற்படலாம் என்பது எமது எண்ணம்.

என்னதான் நானே அனானியை ஆதரித்தாலும், என்னுடைய பதிவு என்று வரும்போது அனானியை அடக்கி வைத்தல் நலம்.

அப்புறம் என்னுடைய பதிவு அல்லவா கெட்டுவிடும்...

இந்த கமெண்டை தி.மு.க - விடுதலை சிறுத்தைகளோடு இணைத்து பார்க்கவேண்டா
//1 ஓட்டுக்கு மேல் விழாமல் வேண்டுமானால் செட் பண்ணுகிறேன் என்று தமிழஷ் நிர்வாகி ஒருவர் சேட்டில் சொல்லுகிறார்...//

அநியாயத்திற்கு நேர்மையாக இருக்கிறீர்கள்!
இவர்களின் இரட்டை வேடத்தை மக்கள் பிரிந்துகொள்ளவேண்டும்..!!!

ஸ்பெல்லிங் மிஸ்டேக் இருந்தால் மன்னித்துவிட்டு எவ்ளோ ஸ்பெல்லிங் மிஸ்டேக் இருக்கிறதோ அதுக்கு தகுந்த மாதிரி ஓட்டை குறைத்துக்கொண்டு மீதி ஓட்டை போடவும்..


Ultimate Comedy...


கொசுறு எரிச்சல் :

காலையில் சாப்பிட்டுவிட்டு மதியம் லஞ்சு சாப்பிடாமல் இரவு சாப்பிடுவதற்கு பெயர் உண்ணாவிரதமா ? அப்படியென்றால் நான் முப்பத்தேழாவது நாளாக உண்ணாவிரதம் இருக்கிறேன்.

Total damage :)
ஓவியா said…
//காலையில் சாப்பிட்டுவிட்டு மதியம் லஞ்சு சாப்பிடாமல் இரவு சாப்பிடுவதற்கு பெயர் உண்ணாவிரதமா ? அப்படியென்றால் நான் முப்பத்தேழாவது நாளாக உண்ணாவிரதம் இருக்கிறேன்.//

:)
வாங்க சிரீதர் கண்ணன்.

கொமண்டுக்கு நன்றி
பா.ஜ+ தி.மு.க + பா.ம.க + வி.சி + ம.தி.மு.க = 40

//

காந்தம் காங்கிரஸோட போகுதா.?
அமெரிக்க நாட்டைச்சேர்ந்த அமெரிக்க அதிபர் பராக்கோஸி

/////பிரான்ஸு நாட்டைச்சேர்ந்த பிரெஞ்சு அதிபர் சார்க்கோஸிக்கு////

வெள்ளையனே வெளியேறு! பாரத் மாத்தாக்கீகீகீகீகீகீகீகீகீ ஜேஏஏஏஏஏஏஏஏஏஏ!
Anonymous said…
புதுவையில் இருக்கும் அரசியல்வாதிகளின் கதை மேற்சொன்னவர்களைவிட கேவலமானது.

வெங்கடேஷ்
இதுக்குத்தான் பயபுள்ளைகள பாண்டிச்சேரி, பாண்டிச்சேரி்னு பறக்கிறானுகளா..?

நல்லா இருங்கடே..

தம்பி தொங்கபாலு பாண்டிச்சேரில போய் உண்ணாவிரதம் இருந்தா, அங்க இருக்குற காங்கிரஸ் கட்சிக்காரங்களே அடிச்சு விரட்டிருவாஙக.
Shajahan.S. said…
தம்பி தொங்கபாலுக்கு தொகுதிக்கு எத்தனை காங்கிரஸ் கோஷ்டி உண்டுன்னு தெரியுமா? எங்க ஊருலெ ஏழு கோஷ்டியாக்கும்! இதுலே யாருமே தங்கபாலு கோஷ்டியிலெ இல்ல! இல்லவே இல்ல!
அவர் மாடி வீட்டு ஏழை ஒரு நாள் மத்திய சாப்பாடு சாப்பிடலைன்னா என்ன கொறைஞ்சா போறாரு. ஒரு நாளைக்கு கதர் சட்டை, உஜாலா சொட்டு நீளம், சாயம் போன துவையல், மடிப்புச் செலவு, இஸ்திரி செலவு எல்லாம் நூறு ரூபாய் ஆகுதாம், இதுக்கு நூறு கிலோ ரேஷன் அரிசி வாங்கிக்கச் சொல்லி நாலு ஏழைகளுக்குக் கொடுக்கலாம் இந்த மாடி வீட்டு சுதேசிகள்.
பதிவு கிடக்கட்டும் சகா.. காலைல சாப்பிடாம இருந்தாக் கூட பரவாயில்ல.. மதியம் ஏதாவ்து சாப்பிடுங்கள்..
vinoth gowtham said…
//புதுவையில் இருக்கும் அரசியல்வாதிகளின் கதை மேற்சொன்னவர்களைவிட கேவலமானது.
வெங்கடேஷ்//

100% உண்மை ..

De bussy, Hot & cold, Promende, Sun valley, Ajantha..
இந்த இடம்ல கூட ஓரளவு நல்ல இருக்கும்ங்க COMPARE TO MASS ட்ரை பண்ணி பாருங்க..
பின்னூட்டிய அனைவருக்கும் நன்றி, ஆபீஸ் போய் வந்து எல்லாருக்கும் பதில் சொல்றேன்...
Rajaraman said…
ஆனானப்பட்ட ராமதாஸ் பாண்டிச்சேரி பக்கம் வந்து மதுவிலக்கு அது இது என்று பிலிம் காட்ட முடியாது. தொங்கபாலு எல்லாம் எம்மாத்திரம்.

அப்புறம் இந்தியாவில் எத்தனை காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் மதுவிலக்கு அமலில் இருக்கிறது.

டாஸ்மாக்கில் விற்பது எல்லாம் பன்னீரா.
நான் மதியம் ஒரு மணிக்கும், அதன் பிறகு இரவு பன்னிரெண்டு மணிக்கும் தான் சாப்பிடுகிறேன்.
நீங்கள் சொல்வதை பார்த்தால் நான் 4 வருடமாக விரதம் இருந்து கொண்டிருக்கிறேன்.
moulefrite said…
நான் பாண்டியில் பிறந்து பெற்றோர் மூலம் பிரன்ச் குடியுரிமைப் பெற்றப்
பிரான்ஸ்வாசி.பாண்டிச்சேரியில் அதிகம் ஆட்சி செய்தது(செய்வதும்)காங்கிரஸ் ஆட்சிதான்,காரணம் பாண்டிச்சேரியில்
சற்று படித்தவர்கள் அதிகம் அதனால் கொஞ்சம் டீசன்சி எதிர்ப்பார்பார்கள்.
அதை இன்றுவரை மெயிண்டெயில்
பண்னுபவர்கள் காங்கிரஸ்காரர்கள் மட்டுமே(பாண்டிச்செரியில்)மற்ற கட்சிகளுக்கு ஏனொ இந்த கலை கை
வரவில்லை.மற்றபடி புதுச்சேரியில்
(இன்றைய பெயர்)சாராயமில்லாமல்
ஆட்சி நடத்துவதென்பது ,முடியாத காரியம்,(ஆட்சியாளர்களுக்கு)
காரணம் சாராயம்தான் பிரதான வருமானம். மேலும் புடுச்செரி ஆட்சியாளர்கள் தமிழ்நாட்டின் ஆட்சியின் கேனத்தனங்களைக் காப்பி அடிக்க தவறமாட்டார்கள்.உ-ம் மத்திய உணவில் முட்டை(சத்துண்வு திட்டம்) இலவச அரிசி (20கிலொ)
திட்டம் தற்போது நிறுத்தபட்டுள்ளதாம்,உறுப்பிடியான் திட்டம் குடிச்சை ஒழிப்புத் திட்டம்தான் குடிச்சை வாசிகளுக்கு
ஒரு லட்சம் லோன் கொடுக்கப்படுகிறது (அதை வாங்குவதற்க்கு நீங்கள் கொஞ்சம் லோன்கொடுக்கவேண்டும்,,வேரென்ன லஞ்சம்தான்)குடிச்சையை ஒழித்து கள் வீடு கட்டுவதற்கு.
//இலங்கையில் அரசியல் தீர்வை எட்டும் உடன்படிக்கையில் அத்வானி கையெழுத்திடவேண்டும்..//

இது நல்லா இருக்குது.
பினாமி பெயரில் சீமைச் சாராய கொம்பேனி நடாத்தும் ல...பால் தொங்கபால் மது விலக்கு கோரி உண்ணாவிரதம் நடாத்தியது வேடிக்கையிலும் வேடிக்கைங்கோ....
இந்த உண்ணாவிரதத்தில் குமரி அனந்தனும் குந்திகினு இருந்தது கொடுமைலும் கொடுமைங்கோ...
அவுரு குமரிப் பக்கம் இனிமே தலைகாட்ட முடியாதுனு ஊருக்குள்ள பேசிக்குறாங்கோ...
SanJaiGan:-Dhi said…
இந்த உண்ணாவிரதத்தில் எனக்கு உடன்பாடு இல்லை மாம்ஸ்.. கள் இறக்க அனுமதி அளிக்கனும்.
SanJaiGan:-Dhi said…
ஆனாலும் தினமும் இணையத்தில் காங்கிரசை திட்டி டவுசர் க்ழண்டு அலறும் உங்கள மாதிரி ஆளுங்களை பார்த்தா தான் பாவமா இருக்கும்.. :))

ஹய்யோ.. ஹய்யோ.. ஒரு பழமொழி தான் நினைவுக்கு வருது.. அதுல கூட எதோ மலைனு எல்லாம் வரும் மாமா.. :)
ILA said…
//இந்த உண்ணாவிரதத்தில் எனக்கு உடன்பாடு இல்லை மாம்ஸ்.. கள் இறக்க அனுமதி அளிக்கனும்//
அடிச்சாருல்ல சிக்ஸரு.. இப்ப என்ன சொல்வீங்க?
SanJaiGan:-Dhi said…
//தமிழ்மணத்தில் செட்டிங் செய்யுமாறு நிர்வாகிகளை கேட்டுக்கொள்கிறேன்//

யோவ்.. அதான் ஏறகனவே உங்களுக்கு ஸ்பெஷல் செட்டிங் இருக்கே.. அது பத்தலையா? :))
SanJaiGan:-Dhi said…
//என்று அனானியாக போட விரும்பி, அது முடியாமல், சாட்டில் அளித்த பிரான்ஸு நாட்டைச்சேர்ந்த பிரெஞ்சு அதிபர் சார்க்கோஸிக்கு நன்றி//

அட என்னா இது.. தொழில்நுட்ப அறிவே இல்லாம ஒரு அதிபர்.. பல இடங்கள்ல ஒரு தெருநாய்க்கு பொறந்தது கமெண்ட் போட்டிருக்கும் பாருங்க.. ஐடி இருக்கும்.. ஆனா அந்த சொறிநாய்க்கு பொறந்தது மூஞ்சிய மறைச்சிக்கும்.. அவ்ளோ பெரிய வீரன்.. :)) அதை அதிபரும் பாலோ பண்ணலாமே.. :)
SanJaiGan:-Dhi said…
//தோழர் நேர்மையான கேள்விகள்! நல்ல பதிவு.

கூடுமானவரை அனானிகளை விடாமல் இருப்பதே நலம். இப்படியே தொடருங்கள்.//

அட என்னாக்கா நீங்க? அனானின்னா ப்ளாகர்ல இருக்கிற அனானி வசதியை பயன்படுத்தறவங்க மட்டும் தானா?சில நாய்ங்க பாருங்க ஐடியோட அனானியா வரும்க.. அதுகள எப்டி தடுக்கறது?. மாடுரேஷனு தான் ஒரே வழி.. :)
SanJaiGan:-Dhi said…
//எங்க ஊரில் இருந்து பாண்டிச்சேரி 80 கிலோமிட்டர் என்ற வரலாற்று உண்மையையும் இங்கே பதிவுசெய்ய விரும்புகிறேன்..//

நார்வேல இருந்தா? இல்லை பின்லாந்துல இருந்தா? இல்லை கொரியாவுல இருந்தா மாம்ஸ்? :))
SanJaiGan:-Dhi said…
//காலையில் சாப்பிட்டுவிட்டு மதியம் லஞ்சு சாப்பிடாமல் இரவு சாப்பிடுவதற்கு பெயர் உண்ணாவிரதமா ? அப்படியென்றால் நான் முப்பத்தேழாவது நாளாக உண்ணாவிரதம் இருக்கிறேன்.//

திருமாவளவனை செக்கிங் பண்ண மருத்துவரய்யா சொன்ன தகவலா இது மாம்ஸ்? :))
SanJaiGan:-Dhi said…
ஒன்னு பூரண மதுவிலக்கு அமல்படுத்தனும் இல்லைன்னா கள் இறக்கவும் அனுமதி அளிக்கனும்.. விடிய காலைல ஆரம்பிச்சி நடுசாமம் வரைக்கும் விற்கும் சரக்கைவிட கள் எந்தவகையிலும் கேடு இல்லை.

பூரண மதுவிலைக்கை அமல்படுத்த அரசியல் நடிகர் திருமாவளவன் உண்ணாவிரதம் இருந்தாலும் நான் ஆதரிப்பேன். போயஸ்தோட்டத்து முழு நேரக் வாசல் காவலர் வைகோ இருந்தாலும் ஆதரிப்பேன்.
SanJaiGan:-Dhi said…
கோஷ்டி இல்லாமல் தான் மதிமுக உடைந்ததாக வையகத்துக் கோமாளியின் அடிபொடிகள் அறிவித்திருக்கிறார்கள்.
SanJaiGan:-Dhi said…
கோஷ்டி இல்லாமல் தான் தெருமாவின் செல்வம் பிரிந்து போனதாக நடு ராத்திரி சிலை அவமதிப்புப் புகழ் வீரர்கள் அறிவித்திருக்கிறார்கள்.
SanJaiGan:-Dhi said…
கோஷ்டியை பத்தி பேசனும்னா எல்லா கட்சியில் இருக்கும் கோஷ்டிகளையும் பட்டியல் போடனும். எதோ காங்கிரஸ்ல மட்டும் தான் கோஷ்டி இருக்கிற மாதிரியும் மத்தவன் எல்லாம் கட்டு கோப்பா இருக்கிர மாதிரியும் சீன் போடாதிங்கப்பு..

காங்கிரஸ் தேசிய கட்சி. மாநில அளவுள கோஷ்டிகள் இருப்பது உண்மை. அதே போல் ’பிராந்தி’யக் கட்சிகள்ல மாவட்ட அளவுல எம்புட்டு கோஷ்டி வெங்காயங்கள் இருக்குன்னு நான் சொல்லவா? எந்த கட்சியோட கோஷ்டிகள் பட்டியல் வேணும்னு சொல்லுங்க.. நான் சொல்றேன் ராசாக்களா.. அவனவன் பொச்சிய கழுவுங்கய்யான்னா தூங்கி எழுந்ததும் கைய நீட்டிக்கிட்டு காங்கிரஸ்காரன் குண்டியை கழுவறதே பொழப்பா வச்சிக்கிறிங்க. :)
அடடா... சஞ்சயை உசுப்பி விட்டுட்டீங்களே ரவி... இனி அடங்கமாட்டாரே....
SanJaiGan:-Dhi said…
பரிசலாரே.. கிகிகி..

எல்லாம் சும்மா லுலுலாய்க்கு தான்.. வழியில போகும் போது எவனாச்சும் வம்பிழுத்தா அடி நிச்சயம்.. ஆசை தீர போட்டுத் தாக்கியதும் போய்ட்டே இருக்க வேண்டியது தான்.. :))

தவிர இது நம்மா மாம்ஸ் ஊடு... அதான் ஜாலியா வந்து கடுப்ப எல்லாம் தீத்துக்கிறது.. இன்னும் எத்தனையோ பேர் ரொம்ப கேவலமா எழுதிட்டு தான் இருக்கானுங்க.. அங்க எல்லாம் போறதே இல்லையே.. :))
//
தவிர இது நம்மா மாம்ஸ் ஊடு... அதான் ஜாலியா வந்து கடுப்ப எல்லாம் தீத்துக்கிறது.. இன்னும் எத்தனையோ பேர் ரொம்ப கேவலமா எழுதிட்டு தான் இருக்கானுங்க.. அங்க எல்லாம் போறதே இல்லையே.. :))///

அந்தமட்டில் நன்றி !!!!!
ilangovan said…
யோவ் ரவி, நீர் ஒரு அரசியல் தெரியாத அற்பம், கணக்கு தெரியாத களிமண், பின்ன என்னையா..?நாந்தான் போன்டிசெர்ர்யின் காங்கிரஸ் முப்பத்தி எட்டாவது கோஷ்டியின் தலைவர் ,உறுப்பினர் தெரியுமா உமக்கு ..?நீர் சொல்வது போல வெறும் முப்பத்திஐந்து கோஷ்டிகள் வைத்துக்கொண்டு போன்டிசெர்ரி போன்ற கண்டத்தை ஆட்சி செய்வது எங்கள் கட்சியின் பாரம்பரியம் இல்லை ...தெரிந்து கொள்ளும்.
//அட என்னாக்கா நீங்க? அனானின்னா ப்ளாகர்ல இருக்கிற அனானி வசதியை பயன்படுத்தறவங்க மட்டும் தானா?சில நாய்ங்க பாருங்க ஐடியோட அனானியா வரும்க.. அதுகள எப்டி தடுக்கறது?. மாடுரேஷனு தான் ஒரே வழி.. :)//

என்னது அக்காவா?
ஆளு புதுசா?
காங்கிரசுக்கு சப்போட்டு போல... விளங்கிரும்....!


"காங்கிரஸ் தமிழர்களின் துரோகிகள்."


விளக்கம் ஏதாவது கேட்டுக் கொண்டு வந்தால் 'குண்டி',......
போன்ற இடக்கு மடக்கான லோக்கல் வார்த்தைகளை ஒதுக்கி விட்டு ஒழுங்கு மரியாதையா பேசறதா இருந்தா மேற்கொண்டு பேசலாம்.
SanJaiGan:-Dhi said…
தமிழச்சி,
//என்னது அக்காவா?//
நீங்க என்னைவிட வயதில் மூத்தவர். அதனால அக்கா.

//ஆளு புதுசா?//

இருக்கலாம். ஆனாலும் உங்களுக்கு நானும் எனக்கு நீங்களும் பின்னூட்டமிட்டிருக்கிறோம். :)

//காங்கிரசுக்கு சப்போட்டு போல... //
ரொம்பவே..

//விளங்கிரும்....!//
நன்றி.


//"காங்கிரஸ் தமிழர்களின் துரோகிகள்."//

எனக்கு காங்கிரஸ் எந்த துரோகமும் செய்யலை. நான் பச்சை தமிழன் தான்.

தமிழர்களை அசிங்கமாய் மட்டம் தட்டியவர்கள் எல்லாம் புனிதர்களாக இருக்கும் போது காங்கிரஸ் துரோகியாய் தெரிவதில் ஆச்சர்யமில்லை. அதை பற்றி கவலையுமில்லை.

//விளக்கம் ஏதாவது கேட்டுக் கொண்டு வந்தால் 'குண்டி',......
போன்ற இடக்கு மடக்கான லோக்கல் வார்த்தைகளை ஒதுக்கி விட்டு ஒழுங்கு மரியாதையா பேசறதா இருந்தா மேற்கொண்டு பேசலாம்.//

விளக்கம் கேட்டு வந்தால் அப்படி எதற்கு நான் பேசப் போகிறேன். எனக்கும் நன்றாகவே நாகரிகம் தெரியும். வேண்டுமானால் ஓசை செல்லா, செந்தழல் ரவி, இளையகவி, வால்பையனிடன் கேட்ட்க் கொள்ளலாம்.

தேவை இல்லாமல் சிலர் பேசும்போது தான் அவர்களுக்கு அவர்கள் பாஷையிலேயே பதில் சொல்ல வேண்டி இருக்கு.

நானும் உங்க வலைப்பூவை படித்திருக்கிறேன். அதில் சிலருக்கு பதில் சொல்ல நீங்கள் எது போன்ற வார்த்தைகள் எல்லாம் பயன்படுத்தி இருக்கிறீர்கள் என்று எனக்கும் தெரியும் சகோதரியே. உணர்ச்சிகள் எல்லாருக்கும் பொதுவானது தான்.

மற்றபடி இதில் விவாதம் எல்லாம் செய்யுமளவு நான் வெட்டியாய் இல்லை. ஒருவேளை காங்கிரஸ் தமிழர்களுக்கு துரோகம் செய்திருந்தால் அதை துடைக்கும் பணியும் எனக்கில்லை. எனக்கு எந்த துரோகமும் செய்யவில்லை. உங்களுக்கு செய்திருந்தால் நீங்கள் வழக்கம் போல் எதிர்த்துக் கொள்ளலாம்.
// இருக்கலாம். ஆனாலும் உங்களுக்கு நானும் எனக்கு நீங்களும் பின்னூட்டமிட்டிருக்கிறோம். :)//

இது என்ன புதுக் கதை? உங்களுக்கு இதுவரையில் பின்னூட்டம் நான் செய்ததில்லை.


//நீங்க என்னைவிட வயதில் மூத்தவர். அதனால அக்கா.//


நான் என்ன வருடம் என்ன தேதியில் பிறந்தேன் என்று எல்லாம் தெரியுமோ?


//எனக்கு காங்கிரஸ் எந்த துரோகமும் செய்யலை. நான் பச்சை தமிழன் தான்.

தமிழர்களை அசிங்கமாய் மட்டம் தட்டியவர்கள் எல்லாம் புனிதர்களாக இருக்கும் போது காங்கிரஸ் துரோகியாய் தெரிவதில் ஆச்சர்யமில்லை. அதை பற்றி கவலையுமில்லை.//


உங்கள் கருத்துப்படி உங்களுக்கு துரோகம் செய்யாத எவையும் உங்களுக்கு நல்லதாக தெரியலாம்.அரசியல் என்பது எவை? ஒவ்வொரு மனிதனின் வாக்குரிமையிலும் ஜனநாயக நிலையை கடைப்பிடிக்கும் மக்களாட்சி. ஆனால் இந்திய அரசியல் உலகளவில் மிக மோசமான அரசியல் செய்துக் கொண்டிருக்கின்றது. பெரும்பான்மையான கணிப்பு ஒருவிதம், தனி தனி மனிதர்களின் கருத்துக்கள் ஒருவிதம்.


கருத்து என்பது அவரவர் சிந்தனைக்கு ஏற்றபடி நிகழ்வது. இதில் சார்புநிலையற்று நடுநிலையில் இருந்து சிந்திக்கும் போது நிச்சயம் தெளிவான கருத்தை எடுத்தாள முடியும். நான் காங்கிரசை எதிர்ப்பதால் திராவிட கட்சியின் ஆதரவாளராக நினைக்க வேண்டாம்.
எல்லாமே திருட்டு அரசியல்தான். அயோக்கிய வேடம் தான். எவனிடமும் மக்களைச் சார்ந்து சிந்திக்கும் திறன் இல்லை. இதில் காங்கிரஸ் கட்சி தேசீய மிக மோசமானவை. நீங்கள் தற்போதைய காங்கிரஸ் வரலாற்றை வைத்து விவாதிப்பதற்கு முன்பு காங்கிரஸ் எதற்காக உருவாகியது? அவை எப்படி தமிழர்களை உபயோகப்படுத்தியது என்பதை அறிந்து கொள்ள வேண்டும். நேரமிருப்பின் தந்தை பெரியார் எழுதிய புத்தகமான நான் ஏன் காங்கிரசில் இருந்து வெளியேறினேன் என்னும் புத்தகத்தை படித்து பாருங்கள்.


தமிழச்சியின் பெரியார் இணையத்தில் அப்புத்தகம் முழுவதும் தரவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

இணைப்பு :

http://tamizachiyin-periyar.com/index.php?ssrubrique=203

//நானும் உங்க வலைப்பூவை படித்திருக்கிறேன். அதில் சிலருக்கு பதில் சொல்ல நீங்கள் எது போன்ற வார்த்தைகள் எல்லாம் பயன்படுத்தி இருக்கிறீர்கள் என்று எனக்கும் தெரியும் சகோதரியே. உணர்ச்சிகள் எல்லாருக்கும் பொதுவானது தான்.//

நான் எப்படிப்பட்ட வார்த்தைகளை பயன்படுத்தினேன் என்பதை விட அப்பதிலுக்கான கேள்விகளில் எவ்வளவு ஆபாசமான சொற்கள் இருந்தன என்பதையும் நீங்கள் பார்த்திருப்பீர்கள். உண்மையில் ஆபாமான வார்த்தைகளுக்கு அர்த்தம் என்ன என்று கூட தெரியாது. சில நண்பர்களிடம் அர்த்தம் கேட்டு தெரிந்து கொண்டால் அவற்றை பயன்படுத்த மாட்டேன். செல்லா, இளையகவி, செந்தழல் ரவியிடம் கேட்டுப் பாருங்கள். என்னைப் பற்றி எவ்வளவு ஆபாசமாக பின்னூட்டங்கள் அவர்களுக்கு செய்கிறார்கள் என்று. இதற்கெல்லாம் கவலைபடும் நிலையிலும் நான் இல்லை.


என்னைப் பொறுத்தவரையில் "அனானிகள் காயடிக்கப்பட்ட காளைகள்" தான் என்பதில் இன்னமும் அதே கருத்தை தான் வைத்திருக்கின்றேன். நான் சொல்லவந்த மேட்டர்கள் பலமுறை தவறான திசையில் திருப்பப்பட்டிருக்கின்றன. அதனால் தான் என்னுடைய புதிய இணையதளத்தில் http://tamizachi.com/
பின்னூட்டங்களை அனுமதிக்கவில்லை. திரட்டிகளிலும் சேரவில்லை.

உங்களைப் பற்றிய எந்த அறிமுகமும் இல்லை. எந்த பதிவுகளையும் நான் வாசித்ததில்லை. எதுவும்
தெரியாமல் சட்றென மட்டம் தட்டி நமக்குள் ஒருவித கணிப்பை வைத்துக் கொள்வது முட்டாள்தனமென்று எனக்கும்
தெரியும். ஆனால் இந்த பதிவில் உங்களை யாரும் எதுவும் திட்டாமல் இருந்து குண்டியை உபயோகித்திருப்பதால் உங்களுடன் காங்கிரஸ் பற்றிய கருத்துக்களை
பகிர்ந்து கொள்ள தோன்றிய எனக்கு நாம் ஏதாவது பேசப் போய் நமக்கும் ஏதாவது சொல்லிவிட போகிறாரோ என்பதால் முன்பே சொல்லி விடுவோம் என்று எழுதத் தோன்றியது.

ஓகே!

இனி காங்கிரஸ் பற்றி விவாதிக்கலாமா?
SanJaiGan:-Dhi said…
தமிழச்சி,
இவ்வளவு பொறுமையாய் பதில் சொல்லி இருப்பது மகிழ்ச்சி. என்னைவிட நீங்கள் மிகவும் மூத்தவர் தான். நான் இளையகவியை விடவும் இளையவன். அதை விடுவோம். நான் உங்களை அக்கா என்று அழைப்பது பிடிகக்வில்லை என்றால் பெயர் சொல்லியே அழைத்துக் கொள்கிறென்.

நான் தற்போது இருக்கும் கான்கிரசை பற்றி மட்டுமே தெரிந்துக் கொள்ள விரும்புகிறென். அது எதர்கு உருவாகி இருந்தால் என்ன? இப்போதைக்கு best among the worst என்ற கொளைகதான் அரசிலயிலில். ஒவ்வொருவருக்கும் ஒரு நிலைப்பாடு இருக்கும். எனக்கு காங்கிரஸ் தான் சிறந்ததாகத் தெரிகிறது. அதை மற்றவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று எனக்கு விருப்பம் இல்லை.

பெரியார் எழுதிய புத்தகம் படிக்க முயற்சிக்கிறேன்.அவரை பற்றி எனக்கு பெரிய அளவில் தெரியாது.அவர் கடவுள் மறுப்பாளராக மட்டுமே எனக்குத் தெரியும். அதைத் தவிர மக்களின் வாழ்வாதாரம் மேம்பட ஒரு தலைவராய் என்ன செய்தார் என்று தெரியாது. அப்படி எதும் இருந்தால் சொல்லுங்கள். தெரிந்துக் கொள்கிறென்.

நான் இங்கு ஒரு அநாகரிகமான வார்த்தையை உபயோகித்தது வருத்தமான விஷயம் தான். இங்கே ஐடியுடன் கூடிய அனானியாய் பின்னூட்டம் போட்டிருக்கும் ஒரு நாயை பார்த்து அப்படி உபயோகித்துவிட்டேன். மற்றபடி ஆபாச வார்த்தைகள் உபயோகிப்பதோ அனானியாய் பின்னூட்டம் இடுவதோ எனக்கு பழக்கம் இல்லை.

//உங்களுடன் காங்கிரஸ் பற்றிய கருத்துக்களை
பகிர்ந்து கொள்ள தோன்றிய எனக்கு நாம் ஏதாவது பேசப் போய் நமக்கும் ஏதாவது சொல்லிவிட போகிறாரோ என்பதால் முன்பே சொல்லி விடுவோம் என்று எழுதத் தோன்றியது.//

பெரிய தைரியசாலியாக அறியப் பட்ட நீங்களே இப்படி யோசித்திருபப்து ரொம்ப கஷ்டமா இருக்கு. இனி எந்த சூழலிலும் யார் என்னை கோபப் படுத்தினாலும் தவறான வார்த்தைகளை உபயோகிக்க மாட்டேன். மன்னிக்கவும்.

//இனி காங்கிரஸ் பற்றி விவாதிக்கலாமா?//
வேண்டாமே.. உங்களுக்கும் எவ்வளவோ வேலைகள் இருக்கும். இதிஅ விவாதிப்பதில் யாருக்கும் எந்த பயனும் இருக்க போவதில்லை. பிறகு எதற்கு? மேலும்.. எனக்கும் அவ்வளவு நேரம் எல்லாம் இல்லை.

என்னுடைய எதோ ஒரு பதிவுக்கு பின்னூட்டம் போட்டிருக்கிங்க.. செல்லா சம்பந்தப் பட்ட பதிவென்று நினைக்கிறேன். சீரியசாக எதும் இல்லை. எதோ மொக்கை பதிவு தான்.
தம்பீ சஞ்சய்..

எனது ஆழ்ந்த அனுதாபங்கள்..
ghajini said…
நான் ஒரு சென்னை தமிழன். ராஜபக்சே தனிப்பட்ட முறையில் எனக்கு எந்த தீங்கும் செய்ததில்லை. அதனால் அவர் தமிழின விரோதி கிடையாது. நாளை முதல் நான் அவனுக்கு கொடி தூக்கப் போகிறேன்.
//நான் தற்போது இருக்கும் கான்கிரசை பற்றி மட்டுமே தெரிந்துக் கொள்ள விரும்புகிறென். //

நீங்கள் எதை விரும்புகிறீர்களோ அதையே எடுத்தாள முற்படுகிறீர்கள்.

(இளைய கவியை விட சிறிய வயது என்பதால் உங்களுடைய அபிப்பிராயங்களில் இன்னும் சில வருடங்களில் மாற்றம் ஏற்படலாம். ஏனெனில் உங்கள் வயதில் நானும் அப்படித்தான் இருந்தேன்)

//அது எதர்கு உருவாகி இருந்தால் என்ன?//

தவறான கண்ணோட்டம். அலட்சியமான சிந்தனை.

உங்களைப் போன்ற இளைஞர்கள் இப்படி பேசலாமா?


//ஒவ்வொருவருக்கும் ஒரு நிலைப்பாடு இருக்கும். எனக்கு காங்கிரஸ் தான் சிறந்ததாகத் தெரிகிறது. அதை மற்றவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று எனக்கு விருப்பம் இல்லை.//

இக்கருத்தை நீங்கள் சொல்லும் போது காங்கிரஸ் சார்ந்து சிந்திக்கிறீர்கள்! மக்களை சார்ந்து, சமூக நலன் சார்ந்து சிந்தித்தால் உங்கள் கருத்து நிச்சயமாக மாறுபடும்.


ஆனால், என்னுடைய கேள்வி நீங்கள் ஏன் காங்கிரஸ் அபிமானியாக இருக்கிறீர்கள் என்பதல்ல...


உங்களுடைய கருத்துக்களை பொதுவில் வைக்கும் போது அதற்கு நேர் எதிர்மறையான கருத்துக்களை "கருத்து சார்ந்த விவாதமாக ஏன் உங்களால் ஏற்க முடியவில்லை?"


//பெரியார் எழுதிய புத்தகம் படிக்க முயற்சிக்கிறேன்.அவரை பற்றி எனக்கு பெரிய அளவில் தெரியாது.அவர் கடவுள் மறுப்பாளராக மட்டுமே எனக்குத் தெரியும்.//


தமிழ்நாட்டில் இருக்கும் அனேகருக்கு உங்கள் கருத்துதான் இருக்கின்றது. ஆனால் உண்மை நிலவரம் அறிய வேண்டுமானால் பெரியாரியலை அறிந்து
விமர்சனங்களை வைக்க வேண்டும். பெரியார் என்பவரை கருப்புச் சட்டைகள் புனித பிம்பமாக அடையாளப்படுத்த முற்படவில்லை. நானும் அப்படி செய்யவில்லை என்பதை உங்களால் புரிந்து கொள்ள முடியும் என்று நினைக்கிறேன்.


//மக்களின் வாழ்வாதாரம் மேம்பட ஒரு தலைவராய் என்ன செய்தார் என்று தெரியாது. அப்படி எதும் இருந்தால் சொல்லுங்கள். தெரிந்துக் கொள்கிறென்.//


பெரியார் எழுதிய புத்தகங்களில் சில தரவேற்றம் செய்திருக்கின்றேன். படித்து பாருங்கள் :


இவை "பெண்ணுரிமை குறித்த பெரியாரின் சிந்தனைகள்"


http://tamizachiyin-periyar.com/index.php?ssrubrique=197


http://tamizachiyin-periyar.com/index.php?ssrubrique=175


http://tamizachiyin-periyar.com/index.php?ssrubrique=149

http://tamizachiyin-periyar.com/index.php?ssrubrique=148

000

சாதி என்பவை ஒழிக்கப்பட வேண்டியவை என்று போராடிய போதும் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த செய்த சொற்பொழிவுகள் :


http://tamizachiyin-periyar.com/index.php?ssrubrique=200


http://tamizachiyin-periyar.com/index.php?ssrubrique=179

இவை இரண்டும் புத்தகங்கள். உங்களுக்கு படிக்க அதிக நேரம் எடுக்கலாம். மற்றும் பல கட்டுரைகள் பெரியார் தளத்தில் இருக்கிறது.

0000000

///நான் இங்கு ஒரு அநாகரிகமான வார்த்தையை உபயோகித்தது வருத்தமான விஷயம் தான். இங்கே ஐடியுடன் கூடிய அனானியாய் பின்னூட்டம் போட்டிருக்கும் ஒரு நாயை பார்த்து அப்படி உபயோகித்துவிட்டேன். மற்றபடி ஆபாச வார்த்தைகள் உபயோகிப்பதோ அனானியாய் பின்னூட்டம் இடுவதோ எனக்கு பழக்கம் இல்லை.///

இதே பிரச்சனை எனக்கும் வந்திருக்கிறது. எவனோ என்னை திட்டப்போய் பதிலுக்கு அவனை நான் திட்டி இருக்கிறேன். அச்சம்பவம் நடக்கும் போது அடுத்தவர்கள் பார்ப்பார்களே என்ற எண்ணம் கூட என்னிடம் இல்லை. இவன் என்னை திட்டினான். பதிலுக்கு நான் திட்டுகிறேன் என்றளவிலேயே என் சிந்தனை இருந்தது.


"எதில் இருந்து எதை கற்றுக் கொள்ளக் கூடாது என்பதை அனுபவம் தானே நமக்கு சொல்லிக் கொடுக்கிறது." இதில் என்ன தவறு இருக்கிறது?


//பெரிய தைரியசாலியாக அறியப் பட்ட நீங்களே இப்படி யோசித்திருபப்து ரொம்ப கஷ்டமா இருக்கு.//

இப்படியே சொல்லி சொல்லி என்னை உசுப்பி விடுங்க! :-)

ஆனால் அப்படி நான் நினைத்தால் அது என்னோட முட்டாள்தனம் என்பேன். எல்லாவற்றுக்கும் நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு போக முடியாது. அஞ்சுவதற்கு அஞ்சித்தான் தீர வேண்டும். நம்ப வள்ளுவரு சொல்லிருக்காரு. அதையும் நான் யூஸ் பண்ணிட்டு தான் இருக்கேன்.


//இனி எந்த சூழலிலும் யார் என்னை கோபப் படுத்தினாலும் தவறான வார்த்தைகளை உபயோகிக்க மாட்டேன். மன்னிக்கவும்.//


அட நீங்க வேற நீங்கள் எதை சொல்ல வேண்டும் சொல்லக் கூடாது என்று தீர்மானிக்கும் உரிமை எனக்கில்லை. நீங்கள் உங்கள் இயல்பிலேயே இருங்க!


ஆனால் தேவையானால் நான் செவிட்டில் அறைவிடும் வார்த்தைகளை உபயோகிக்க தயங்கமாட்டேன். தேவையான இடங்களில் கடினமனப்பான்மை தேவை என்பது என்னுடைய அனுபவம் கற்றுக் கொடுத்திருக்கிறது.


//வேண்டாமே.. உங்களுக்கும் எவ்வளவோ வேலைகள் இருக்கும். இதிஅ விவாதிப்பதில் யாருக்கும் எந்த பயனும் இருக்க போவதில்லை. பிறகு எதற்கு? மேலும்.. எனக்கும் அவ்வளவு நேரம் எல்லாம் இல்லை.//


முக்கியமானவைகளுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்துக் கொண்டிருப்பதால் எனக்கு நிறைய நேரங்கள் இருக்கின்றது. விவாதிக்க விருப்பம் இல்லை என்றால் நீங்கள் நேரடியாகவே சொல்லலாம். மறைமுகமான வார்த்தைகள் எதற்கு? அதுவுமில்லாமல் நான் வருவதற்கு முன் இதே பதிவில் எத்தனை பின்னூட்டம் போட்டிருக்கிறீர்கள்.

எதற்கு என்னிடம் பயம்?
SanJaiGan:-Dhi said…
தமிழச்சி,
நீங்கள் வருவதற்கு முன் போட்ட பின்னூட்டங்களுக்கு 10 நிமிடம் போதுமானது. இங்கு மட்டுமில்லை.. அவ்வப்போது நேரம் இருக்கும் போது பலர் பதிவிற்கும் சென்று கும்மி அடித்திருக்கிறென்.

ஆனால் விவாதம் என்று வந்தால் அதற்கு மிக அதிக நேரம்வேண்டும். விவாத்ஞ்களைப் பொருத்தவரையில் யாருமே அவர்கள் நிலையில் இருந்து மாறுவதில்லை. விவாதம் ஆரம்பித்த சற்று நேரத்திலேயே ஈகோவாக அது உருவெடுத்துவிடுகிறது.அதனால் எனக்கு பல சமயங்களில் விவாதத்தில் விருப்பம் இருப்பதில்லை. அதற்கு நேரமும் இல்லை என்பதும் நிஜம் தான்.

//எதற்கு என்னிடம் பயம்? //
ஹாஹாஹா.. :))
உங்க அளவுக்கு அரசியல் அனுபவம் இல்லாததால் கூட பயம் இருக்கலாம்.. அல்லது ப்ளாக் பெல்ட் வாங்கிவர் என்பதாலும் பயம் இருக்கலாம்.. அல்லது ஒரு நாட்டின் பாராளுமன்ற(பாராளுமன்றம் தானே) உறுப்பினரின் மனைவி என்பதாலும் பயம் இருக்கலாம்.. அல்லது தமிழகத்தின் அதிகாரம் வாய்ந்த பெண்மணியின் தோழி என்பதாலும் பயம் இருக்கலாம்.. :)))
//விவாத்ஞ்களைப் பொருத்தவரையில் யாருமே அவர்கள் நிலையில் இருந்து மாறுவதில்லை. விவாதம் ஆரம்பித்த சற்று நேரத்திலேயே ஈகோவாக அது உருவெடுத்துவிடுகிறது.//


அவர்கள் எல்லோரும் ஏதாவது ஓர் கட்சி சார்பு நிலையில் இருந்து பேசுபவர்கள். அதனால் நீங்கள் குறிப்பிடுவது போல் இருக்கும். ஆனால் நான் எந்தக் கட்சியையும் சார்ந்தவள் இல்லை. அரசியல் விமர்சகி என்று கூட வைத்துக் கொள்ளுங்களேன். ஆனால் விவாதத்தை அலட்சியப்படுத்தி விட முடியாது. சரியான நேரத்தில்
சரியான நபர்களோடு விவாதிப்பது நல்லது. இதற்கு தர்க்கவியல் என்பார்கள். சிந்திக்க தெரியாத மக்களின் மத்தியில் முதல் முதலாக தர்க்க விவாதத்தை ஆரம்பித்தவர் சாக்ரடீஸ். விவாதம் மோசமானதல்ல. சரியான வார்த்தைகளால் கையாளப்பட வேண்டும்.


நீங்கள் என்னுடன் விவாதிப்பதை தவீர்ப்பதென்றால் உங்களுக்கு காங்கிரஸ் பற்றி போதிய தெளிவின்மை இருக்க வேண்டுமே தவீர நீங்கள் குறிப்பிட்ட காரணங்களின் பயங்களால் தான் என்றால் அதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. அந்தஸ்துக் குறியீட்டின் மூலமாக விவாதிக்கும் கருத்துக்களை எடை போட முயன்றால் நாம் தெளிவின்மை
இல்லாதவர்களாகி விடுவோம்.


யோசித்துப் பாருங்கள்.
ஆனால் செந்தழல் ரவிக்கு தமிழச்சி என்றால் பயமே கிடையாது என்பதை இங்கே பதிவுசெய்ய விரும்புகிற்றேன்
//ஆனால் செந்தழல் ரவிக்கு தமிழச்சி என்றால் பயமே கிடையாது என்பதை இங்கே பதிவுசெய்ய விரும்புகிற்றேன்//


சீரியசா பேசிட்டிருக்கோம். குறுக்க வந்து 'நக்கல்' செய்கிறீர்களே!

சரி உங்களுக்கு பயம் வராததற்கு காரணங்கள் என்ன என்று அவரிடம் சொல்லுங்கள். கொஞ்சம் தெளிவடையலாம்.
//செந்தழல் ரவிக்கு தமிழச்சி என்றால் பயமே கிடையாது என்பதை இங்கே பதிவுசெய்ய விரும்புகிற்றேன்//

எனக்கு வேற ஒண்ணு இருக்கு!
கார்த்திக் said...

//செந்தழல் ரவிக்கு தமிழச்சி என்றால் பயமே கிடையாது என்பதை இங்கே பதிவுசெய்ய விரும்புகிற்றேன்//

எனக்கு வேற ஒண்ணு இருக்கு!//


தப்பு நடந்து போச்சு!
அது நான் போட்ட கமெண்ட்டு,
தவறுதலா என்னோட பாஸ் ஐடியில வந்துருச்சு!
எனக்கு தான் தமிழச்சி மேல ஒரு இது இருக்கு என் பாஸுக்கு இல்லை!
//எனக்கு தான் தமிழச்சி மேல ஒரு இது இருக்கு என் பாஸுக்கு இல்லை!
//


//எனக்கு வேற ஒண்ணு இருக்கு!
//


கார்த்திக்கும் வாலும் ஒன்னு தானா?
இந்த ஆட்டத்துக்கு நா வர்ல... காங்கிரசுகாரு வந்தா சொல்லி அனுப்புங்க!

Popular Posts