ஹவுஸ் ஓனர் மற்றும் உருளை சிப்ஸ் ( சிறுகதை)இந்த உருளை கிழங்கு சிப்ஸ் பாக்கெட்டை பிரிக்கிறது மட்டும் ஆவாது எனக்கு...இன்னைக்கு அப்படித்தான்...டர்ருன்னு கிழிச்சதுல அப்படியே எல்லாம் கீழ கொட்டிக்கிச்சு...

அள்ளி ஒரு பீங்கான் பாத்திரத்துல போட்டு வெச்சிருக்கேன்...புது பாக்கெட்...கொட்டவும் மனசில்ல, திங்கவும் முடியல...ஹும்...

*******************

இந்த ஹவுஸ் ஓனருங்க தொல்லை தாங்க முடியல சாமியோவ் என்று கூவலாம் போல் உள்ளது...அதுவும் இன்னும் ஒரு மாசத்துல காலி பண்றேங்க...அட்வான்ஸ் அமவுண்டை தந்திருங்க...என்று சொல்லிவிட்டால் போதும்...

நாம என்னம்மோ அவனுங்க கிட்ட ரெண்டு வட்டிக்கு கடன் கேட்ட மாதிரி ஒரு லுக்கு விடுவானுங்க...என்னுடைய ஹவுஸ் ஓனரும் அப்படித்தான் இப்போதெல்லாம் அப்படித்தான் லுக்குகிறார்...நான் அடுத்த மாசம் காலி பண்ணுறேன்..

நீங்க எல்லாம் கம்பூட்டர்ல வேலையே செய்யாம ஆயிரம் ஆயிரமா சம்பாதிக்கிறீங்க தம்பீ...(இவனை எல்லாம் மூனு மாசம் பெஞ்சுல உக்கார வெச்சு அண்டார்ட்டிக்காவுக்கு ஆன்சைட் அனுப்பினா தெரியும்) நான் படிச்ச காலத்துல கம்பியூட்டர் எல்லாம் இல்லை...(இருந்திருந்தா மட்டும் டீச்சருக்கு லவ் லெட்டர் கொடுத்து டீ.சி வாங்கி ஆட்டோ ஒட்டியிருக்க மாட்டாரு இவரு)

மொக்கையா ரெண்டு ரூமு, மட்டமா ஒரு கிச்சன், ஹால் என்ற பெயரில் ஒரு கற்கால மனிதன் குகை. இதுக்கு எட்டாயிரம் வாடகை, எண்பதாயிரம் அட்வான்ஸ்...

*******************

வீட்டு மோட்டர் ஓடலை...எங்க வீட்டுல தான் மோட்டர் இருக்கு...ஹவுஸ் ஓனர் வெவரமா சுவிட்சை மட்டும் அவங்க வீட்டுல வெச்சிருக்கார்...

நல்லா தூங்கிட்டு இருக்கும்போதுதான் இவனுங்களுக்கு தண்ணி தீரும்...பனியன் போட்ட சனியனுங்க...ங்கொய்யுன்னு மோட்டர் சத்தம் எழுப்புச்சு...

தடக் கரக் முரக்குன்னு ஏதோ சத்தம் மோட்டர்ல...மோட்டர் நின்னுருச்சு...காயில் போயிருச்சுன்னு நினைக்கிறேன்..

*******************

ஹவுஸ் ஓனர் மெக்கானிக்கோட வந்து பெல்லடிக்கிறார்...ஒருவேளை மோட்டரை கழட்டி எடுப்பாருன்னு நெனைக்கிறேன்..

பாவிப்பய...அட்வான்ஸ்ல ஏழாயிரம் புடிக்கப்போறானாம்...பெயிண்டு அடிக்கனுமாம்...இவனுங்க வீட்டை பெயிண்ட் அடிக்க நம்ம தலையில மொளகா அரைக்குறானுங்க...

போலியாக ஒட்டவைத்துக்கொண்ட சிரிப்புடன்...ஹி ஹி வாங்க சார்...

மூனாவது பாஸாகாத கட்டப்பஞ்சாயத்து டோமரை எல்லாம் சார் போட்டு கூப்பிடவேண்டியதா இருக்கு...

இந்தாங்க சிப்ஸ் சாப்பிடுங்க சார்...!!! பீங்கான் பாத்திரத்தை நீட்டினேன்...

**************

Comments

எனக்கு சிப்ஸ் வேண்டாம் உடைக்காத பெப்சி தான் வேணும்
theevu said…
//இவனை எல்லாம் மூனு மாசம் பெஞ்சுல உக்கார வெச்சு அண்டார்ட்டிக்காவுக்கு ஆன்சைட் அனுப்பினா தெரியும்//

தப்பு! அண்டவேர் இல்லாமல் அண்டார்ட்டிக்காவுக்கு அனுப்பினா என்று வரணும்.

எங்க வீட்டு(இந்தியாவில்) ஓனர் டூர் போனால் அவர் நாயையும் நாம்தான் பாத்துக்கணும்(நாய் வாழ்க்கையடா சாமி)

பி.கு வேளைக்கு படுத்தால்தான் வேளைக்கு எழும்பி குளித்து வேலைக்கு நடந்து போகலாம்.:)
Unknown said…
//நாம என்னம்மோ அவனுங்க கிட்ட ரெண்டு வட்டிக்கு கடன் கேட்ட மாதிரி ஒரு லுக்கு விடுவானுங்க...என்னுடைய ஹவுஸ் ஓனரும் அப்படித்தான் இப்போதெல்லாம் அப்படித்தான் லுக்குகிறார்...நான் அடுத்த மாசம் காலி பண்ணுறேன்//
ஆட்டோ ஓட்டுகிற ஆள். அந்த எண்பதாயிரம் எந்த செலவில் விழுந்ததோ. திடீரென்று அடுத்த மாதம் புரட்ட வேண்டுமென்றால்.... உங்களைப் பார்த்தாலே ஆள் திகிலில் உறைகிறார். நீங்க வேற புரியாம.:(
ரவி,

படத்துலே பேக் ட்ராப்????

இவ்வளோ தூரம் வந்துட்டு, இன்னும் ஒரு எட்டு கூட வைக்க மறந்து போச்சா? (-:

எனக்கும் சிப்ஸ் வேணாம்:-)
This comment has been removed by a blog administrator.
Unknown said…
sign in ola ola
ஷாஜி said…
இது நெசம் இல்ல.. கதையா?
இது கதை அல்ல நிஜம்!!!!
Arun Nadesh said…
//theevu said..

//இவனை எல்லாம் மூனு மாசம் பெஞ்சுல உக்கார வெச்சு அண்டார்ட்டிக்காவுக்கு ஆன்சைட் அனுப்பினா தெரியும்//

தப்பு! அண்டவேர் இல்லாமல் அண்டார்ட்டிக்காவுக்கு அனுப்பினா என்று வரணும்.//

Ha ha ha...

அம்மணமா நிக்குற penguin ஞாபகம் வருதுங்கோ..

:-) :-)
Balaji said…
இங்கேயம் அத சோக கதை, பெயிண்ட் அடிக்க ஒரு மாத வாடகை வீண். நம்ப காசுல அவன் விட்டுக்கும் சேர்த்து பெயிண்ட் அடிசிபங்க போல
எல்லா ஹவுஸ் ஒனருகலும் இப்படி தான்!

சிப்ஸ் நீங்க சாப்பிடுங்க!
நான் கேட்ட சரக்க மட்டும் அனுப்பி வையுங்க!
இது கதை அல்ல நிஜம்:)
Unknown said…
nanri theevu for really funny comment
வாழ்த்துக்கள் ஆனந்தவிகடனில் உங்களின் பெயர் வந்ததற்கு.
ரவி தளத்துல கொமென்டு டெலீட்டா?
நம்பவே முடியல...

நான் வாடகைக்கு இருந்த வீட்ட நான் வெளியூருக்கு போன போது லேடிஸ் ஆஸ்டலுக்கு வித்துட்டான் ஓனரு...
திரும்பி வந்தா வாட்சுமேன் உள்ள உட மாட்டேங்கராரு
...
Unknown said…
அது ஒரு பர்சனல் கொமண்டு...

Popular Posts