Saturday, January 31, 2009

வன்னி முகாங்களில் துன்புறுத்தப்படும் தமிழ்ப் பெண்கள்: செம்மதி




வன்னி முகாங்களில் துன்புறுத்தப்படும் தமிழ்ப் பெண்கள்: செம்மதி

வவுனியா தடுப்பு முகாங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இளம் பெண்களை இரவு வேளைகளில் அங்கு அமைக்கப்பட்டுள்ள சிறுகூடுகளுக்குள் விசாரணை என்று கூறி அழைத்துச் சென்று பலரை பாலியல் சேட்டைகளுக்கு உட்படுத்தியுள்ளனர். பலரை பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தியுள்ளனர். இங்குள்ளவர்கள் வெளியில் சென்றுவரவோ வெளியில் உள்ளவர்கள் உட்செல்லவோ அனுமதி இல்லை. இவ்விடயம் சம்மந்தமாக இங்கு சென்று வரும் வைத்தியசாலைப் பணியாளர்களுக்கு ஒரு முறைப்பாடு கிடைத்துள்ளது. ஏனையவர்கள் வெளியில் செல்லப் பயப்படுகின்றார்கள். இதைத் தடுப்பதற்கு ஏதாவது சட்டநடவடிக்கை எடுக்காவிட்டால் நிலைமை இன்னும் மோசமாகும்.

மேலும் படிக்க, http://keetru.com/literature/essays/semmathy.php

ஈழத்துச் சிக்கலும் தமிழக கட்சிகளின் குழப்படிகளும்: த.வெ.சு.அருள்

இந்த நடுநிலை என்ற சொல்லை அரசியல்வாதிகள்தான் எப்படியெல்லாம் பயன்படுத்துகிறார்கள். நியாயம், அநியாயம் என்ற இரண்டுக்கு நடுவில் நடுநிலை என்பது என்ன? மதில் மேல் பூனையா? எந்தப் பக்கம் அனுகூலம் உளதோ அங்கு குதித்திட ஆயத்தமாகும் தந்திரமா? அப்படித்தான் தோன்றுகிறது நமது தமிழக நிதியமைச்சரின் கூற்று. அதாவது புலிகளை ஆதரிக்கவும் இல்லையாம் எதிர்க்கவும் இல்லையாம். இப்படி வார்த்தை ஜாலத்திலேயே நாட்களை கடத்த நினைக்கிறார்கள் போலும், தி.மு.க. அமைச்சர்கள். இப்படிப் பேசினால் இதுதான் சந்தர்ப்பம் என்று உடனே செயலலிதாவுக்கு ஆதரவு பெருக்க கிளம்பிவிடுகிறார்கள். அப்பப்பா, தமிழன்தான் என்ன செய்வான் இந்த அரசியல் ஆட்டங்களுக்கு நடுவில்.

மேலும் படிக்க, http://keetru.com/literature/essays/arul_2.php

சோதிப்பெரு வெளிச்சத்திற்கு ஒரு சின்னத்திரியின் அஞ்சலி: புதுவை இரத்தினத்துரை

இடையில் கடல்கடந்தும் வருகின்றது
உன் சிரிப்பின் ஓசை.
எமக்காக எரிந்தவனை எரிக்கவா போகின்றீர்?
கடலிலே அனுப்பி வையுங்கள்
அவன் பொன்மேனியை ஒருதரம் தழுவ,
ஈழத்தமிழரை சுமந்த இதயத்தை பார்க்க,
கண்மூடிக்கிடந்தாலும் அவன் காதோடு பேச.

மேலும் படிக்க, http://keetru.com/literature/poems/rathinathurai.php

பற்றி எரிகிறது ஈழம் - மகிழ்ச்சி கொள்ளும் 'இந்தி'யம்: க.அருணபாரதி

தற்பொழுது ஈழத்தில் போர் உக்கிரமடைந்துள்ள நிலையில், 24 தமிழக மீனவர்களை கடத்திச் சென்றுள்ளது சி்ங்களக் கடற்படை. இதனைக் கண்டித்து மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் அறிவித்து நடத்தி வருகின்றனர். இந்த சூழ்நிலையிலும் கூட இந்திய கிரிக்கெட் அணியை இலங்கையுடன் விளையாட அனுப்பி வைக்கிறது 'இந்தி'ய அரசு. நமது நாட்டு மீனவர்களை சுட்டுக் கொல்லும் சிங்கள நாட்டுடன் விளையாடச் செல்கிறோமே என்ற குற்றவுணர்வு இந்திய கிரிக்கெட் அணியில் யாருக்கும் ஏற்படவில்லை; ஏற்படாது. ஏனெனில் தமிழர்களை 'இந்தி'யர்களாக அவர்கள் பார்ப்பதே கிடையாது. நாம் தான் வெக்கமின்றி 'ஜனகணமண' பாடிக் கொண்டு 'இந்தி'ய அடிமைகளாகவே வாழ்ந்து தொலைக்கிறோம்.

மேலும் படிக்க, http://keetru.com/literature/essays/arunabharathi_5.php

விதியே விதியே என்செய் நினைத்திட்டாய் என் தமிழ் சாதியை...: முத்துக்குமார்

தீக்குளிக்கப் போவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு முத்துக்குமார் வினியோகித்த துண்டு அறிக்கையின் விபரம் வருமாறு:

"உங்கள் மத்தியிலிருந்து தலைவர்களை உருவாக்குங்கள். உங்கள் போராட்டத்தை சட்டக்கல்லூரி மாணவர்கள் என்ற இடத்திலிருந்து அனைத்து மாணவர்கள் என்று மாற்றுங்கள். உங்களிடமிருக்கும் வேகமும், மக்களிடமிருக்கும் கோபமும் இணைந்து தமிழக வரலாற்றை அடியோடு மாற்றட்டும். ஆள்பலம், பணபலம், அதிகார வெறியை உடைத்து எறியுங்கள். உங்களால் மட்டுமே இது முடியும். நாங்கள் தமிழ் மாணவர்கள், தமிழ்நாட்டின் உயிரானவர்கள், இங்கு தமிழினம் அமைதிகொண்டிருந்தால் ஏடுகள் தூக்கி படிப்போம். எங்கள் தமிழர்க்கின்னல் விளைந்தால் எரிமலையாகி வெடிப்போம் என்ற காசி அனந்தனின் பாடலை ஓர் அறிவாயுதமாக ஏந்துங்கள்.. என் உடலை காவல்துறை அடக்கம் செய்துவிட முயலும். விடாதீர்கள். என் பிணத்தைக் கைப்பற்றி, அதை புதைக்காமல் ஒரு துருப்புச் சீட்டாக வைத்திருந்து போராட்டத்தைக் கூர்மைப்படுத்துங்கள்."

மேலும் படிக்க, http://www.keetru.com/literature/essays/muthukumar.php

1 comment:

Cable சங்கர் said...

ரவி சார்.. இந்த லிங்க கிரியேட் செய்வது எப்படி.. எப்படி மற்றவர்களீன் பதிவில் நாம் லிங்க் செய்வது என்பதை கொஞ்சம் விளக்க முடியுமா..?

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால்

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால் டயபட்டீஸ் / நீரிழிவு / சர்க்கரை நோயை விரட்ட நியான்டர் செல்வனால் ஆரம்பிக்கப்பட்ட இந்த குழுமத்திற்கு ( https://www....