Thursday, May 18, 2006
நேதாஜி விமான விபத்தில் உயிரிழந்தாரா ?
நேற்று நாடாளுமன்றத்தில் முகர்ஜி கமிஷன் ( தேசிய ஜனநாயக கூட்டணி அரசால் 1999 ம் ஆண்டு அமைக்கப்பட்டது) அறிக்கையை தாக்கல் செய்த மத்திய இணை அமைச்சர் ரகுபதிக்கு கூட அந்த அறிக்கையில் சொல்லப்பட்ட தகவல்கள் ஆச்சர்யத்தினையும் அதிர்ச்சியையும் ஏற்ப்படுத்தி இருக்கும்...
நேதாஜி, விமான விபத்தில் உயிர் இழக்கவில்லை..அவர் தற்போது உயிருடன் இல்லை..இறந்துவிட்டார் என்றும் கூறப்பட்டு உள்ளது அந்த அறிக்கையில்...
அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள மேலும் சில தகவல்கள், ஜப்பானில் ரென்கோஜி கோயிலில் வைக்கப்பட்டுள்ள சாம்பல் நேதஜியுடையது அல்ல..
மேலும் நேதாஜி மரணம் தொடர்பாக ஜப்பான் அரசு அறிக்கை டோக்கியோவிலும் தைவான் தலைநகர் தைபேயிலும் வெளியானது..ஒரே நேரத்தில் ஜப்பான் அரசு முத்திரையுடன் பத்திரிகைகளுக்கு அனுப்பப்பட்ட இந்த தகவல் முரணான விஷயங்களை கொண்டு இருந்தது எப்படி என்று முகர்ஜி கமிஷன் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது...
இந்த விஷயங்களை எல்லாம் தூக்கி சாப்பிடும் ஒரு விஷயம், 1985 ஆண்டு உத்திரபிரதேச மாநிலம் பைசாபாத்தில் உயிரிழந்த பகவான்ஜி குன்னாபி பாபா தான் நேதாஜி என்று பல சாட்சிகள் தெரிவித்ததாக ஆணித்தரமாக தெரிவிக்கிறது...
உண்மை என்ன ? நேதாஜி உயிருடன் வாழ்ந்தது நிஜமா ? ஏன் மறைக்கப்பட்டது ? யாருக்காக ?
புகைப்படத்தினை சேர்க்கிறேன்...
பகவான்ஜி குன்னாபி பாபா இருப்பது வலது புறம்..நேதாஜி இடது புறம்..
கடந்த வாரம் இவர் உயிரிழந்தார். ஆனால் இறப்பதற்க்கு முன், தான் நேதாஜி என்று கிராம நிர்வாக அதிகாரியிடம் கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் அடிக்கடி மர்மமான முறையில் டெல்லிக்கு பயனம் செய்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது..அதனால் இந்த மீள்பதிவு.
Subscribe to:
Post Comments (Atom)
டயபட்டீஸ் ப்ரோட்டக்கால்
டயபட்டீஸ் ப்ரோட்டக்கால் டயபட்டீஸ் / நீரிழிவு / சர்க்கரை நோயை விரட்ட நியான்டர் செல்வனால் ஆரம்பிக்கப்பட்ட இந்த குழுமத்திற்கு ( https://www....
-
நித்யானந்தா விவகாரம் ஆரம்பித்தவுடன் எல்லோரும் எங்கே எங்கே என்று இணையத்தில் தேடியது அந்த வீடியோவைத்தான்...!! ட்விட்டரில், பேஸ்புக்கில்...
-
'கள்' உண்ணாமை வேண்டும் அப்படின்னு காந்தி சொன்னதா கேள்வி..ஆனா அவர் கிட்ட கள் பத்தி யாரோ கதை விட்டு இருக்கனும்...கள் ரொம்ம போதை..உடம்ப...
-
பார்ப்பனீயம் குறித்து நிலவும் பெருங்குழப்பம் காரணமாக ஒரு அனானி டோண்டு ராகவன் சாரிடமே, சில விளக்கங்கள் கேட்டிருக்கிறார்... நிறைய புதிய பதிவர்...
17 comments:
இதுபற்றி டிஸ்கவரி சேனல்ல வந்ததாக தோழி கூறுகிறார்...
எனக்கு என்னமோ இதில் காங்கிரஸ் கம்யூனிஸ்டுகள் சதி இருப்பதினால் தான் எதையும் வெளியிடாமல் பூசி மழுப்புகின்றனர் என்று நினைக்கிறேன்...இந்த கமிஷன் வெளியிட்ட அறிக்கையைக் கூட UPA அரசு தள்ளுபடி செய்யும்.
விமான விபத்தில் இறக்கவில்லை என்பது நிறூபணமாகிவிட்ட நிலையில்...அவர் எப்படி இறந்தார், உயிருடன் எங்கு வாழ்ந்தார் என்பதெல்லாம் புதிராகவே இருக்கும்.
என்றைக்கும் அழியாத ஹீரோ!! நேதாஜி
வஜ்ரா ஷங்கர்
காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்டுகள் ஏன் சதி செய்ய வேண்டும் ? என்ன காரணம் ?
அவர் தனது அடையாளத்தை மறைத்து வாழ அவசியம் ஏன் ஏற்ப்பட்டது என்பதன் விளக்கம் அறிக்கையில் இருக்குமா ?
பல சாட்சிகள் நேரடியாக கமிஷன் முன் ஆஜர் ஆகி வாக்குமூலம் அளித்ததாக அறிகிறேன்...
நல்ல பதிவு ரவி. D the dreamer கொடுத்துள்ள சுட்டியில் இன்னும் பல தகவல்கள் உள்ளன. ஆனால் அவர் சொல்வது போல் அது டுபாக்கூர் என்று நிராகரித்து விடவும் போதிய ஆதாரங்கள் இல்லை. உ.பிரதேசத்தில் இருந்த என் நண்பர்கள் சிலர், அந்த பாபா தான் நேதாஜி என்று அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டிருந்தனர். மேலும் ஹிந்துஸ்தான் டைம்ஸ் கொடுத்துள்ள விபரங்களின் படி அந்த பாபாவிற்கு நேதாஜியைப் பற்றிய பல செய்திகள் தெரிந்திருந்தது.
குன்னாபி பாபா புகைப்படத்தினை இனைத்திருக்கிறேன்...
பின்னூட்டத்தில் எந்த ஆபாச சங்கதியும் இல்லை என்பதால் தான் அனுமதித்தேன்..
ஆனால் புரொபைல் பெயர் டிஸ்ப்பிளே ஆகிறதே...அதனை நீக்குவது எப்படி...
காசிக்கே போலியா..திருப்பதிக்கே லட்டா அப்படீங்கறமாதிரி....
இந்த போலிக்கு இதயமே கிடையாது....சேவை மணப்பான்மையில் செயல்பட்டுவரும் காசி இதனை பொருட்படுத்த மாட்டார் என்று நினைக்கிறேன்..
//காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்டுகள் ஏன் சதி செய்ய வேண்டும் ? என்ன காரணம் ? //
நேருவின் செல்வாக்கை முறியடிக்கும் அளவுக்கு மக்கள் ஆதரவு நேதாஜிக்கு இருந்தது.
மேலும் பிரிட்டிஷ் பிரதமருக்கு "உங்கள் போர் கைதி ரஷ்யாவில் இருக்கிறார்" என்ற ஒரு கடிதம் எழுதினார் பாரத பிரதமர் நேரு.
யாரை பற்றி எழுதபட்ட கடிதம் அது?
//மேலும் பிரிட்டிஷ் பிரதமருக்கு "உங்கள் போர் கைதி ரஷ்யாவில் இருக்கிறார்" என்ற ஒரு கடிதம் எழுதினார் பாரத பிரதமர் நேரு.//
இதுபற்றி மேலதிக தகவல் ஏதும் உண்டா ??
இந்த புது படத்தை பார்த்தல் திரு. மலர்மன்னன் மாதிரி தெரிகிறாரே...
ஐயா, அடிக்க வந்துவிடாதீர்கள்....ஒரு விளையாட்டுக்காகத் தான் சொன்னேன்.!! இந்த மாதிரி தாடியும், கன்னாடியும் உடன் இந்தியாவில் 100 க்கு 40 பேராவது கிடைப்பார்கள்...!!
என்னத்தெச் சொல்ல...
வஜ்ரா ஷங்கர்.
பதிவுக்கு பாராட்டுக்கள்.
உங்களுக்கு இந்த தகவல்கள் எங்கிருந்து கிடைத்தன என்று சொல்ல முடியுமா? ஏனென்றால் பல ஆண்டுகளாக பல பத்திரிக்கைகள் எதிர்பார்க்கிற தகவல் இது. ஆனால் எந்த மீடியாவும் இது பற்றி மூச்சு விட்டதாகக்கூடத் தெரியவில்லை. இதுபோன்ற ஒரு பரபரப்பான விஷயத்தை எப்படி விட்டார்கள்?
ஹிந்துஸ்தான் டைம்ஸில் வந்திருந்ததை நான் ஏற்கனவே படித்திருக்கிறேன்.
தாங்கள் இட்டுள்ள படம் ஹிந்துஸ்தான் டைம்ஸில் வந்த படத்திலிருந்து வேறுபட்டது.
உண்மையில் தாங்கள் இட்டுள்ள படம் நேதாஜியின் படத்திற்கு தாடியும், மீசையும் போட்ட படமே.
நன்றாக உத்து பாருங்கள்...
ராஜாஜி மாதிரி இல்ல...
Post a Comment